Medicinal Benefits of Fruits - பழங்களின் மருத்துவ பலன்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வாழைப்பழத் தோல்களில் சில மருத்துவம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன.

வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும்.


வாழைப் பழத்தோலை பாலுண்ணிகளின் மீது பழச் சதைப்பகுதியை கட்டிவைக்க நாளடைவில் சுருங்கி உதிர்ந்து விடும். கொசுக் கடியால் நமைச்சல் கண்டபோது கடிவாயில் வாழைப்பழத் தோலின் சதைப்பகுதி கொண்டு சிறிது நேரம் தேய்ப்பதால் அரிப்பு அடங்குவதோடு தடிப்பாக வீக்கம் காணுவதும் மறையும்.

வாழைப்பழத் தோல்களை காயவைத்து எரித்துப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேற்பூச்சு மருந்தாகப் போடுவதால் புண்கள் விரைவில் ஆறிவிடும். வலிகண்ட இடத்தில் வாழைப்பழ தோலை சிறிது நேரம் கட்டி வைப்பதால் வலி சீக்கிரத்தில் குறைவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

ஒரு செல்லுக்கும் இன்னொரு செல்லுக்கும் இடையே ஆன மின்சாரத் தொடர்பு அறுபடுவதோ அல்லது தடைபடுவதோ தான் வலிக்குக் காரணம் என்றும் வாழைப்பழத் தோலை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுவதால் துண்டிக்கப்பட்ட தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வலி குறைகிறது.

வாழைப்பழத் தோலை தோல் நோய் மற்றும் ரத்தக் கசிவு கண்ட இடத்தில் மேல் வைத்துக் கட்டுவதாலோ அல்லது லேசாகத் தேய்த்து விடுவதாலோ விரைவில் குணம் ஏற்படும். வாழைப்பழத் தோலில் வீக்கத்தை கரைக்ககூடிய சக்தியும் அரிப்பைப் போக்க கூடிய சக்தியும் நுண்கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தியும் அடங்கியுள்ளன.

வாழைப் பூச்சாற்றுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுப்பதால் ரத்தக் கசிவு, வெள்ளைப் போக்கு வயிற்றுக் கடுப்பு மாத விடாய்க் கால வலி ஆகியன தணியும்.

இளம் வாழைப் பூவை எடுத்து பாத்திரத்தில் இட்டு பிட்டவியலாக்கிச் சாறு பிழிந்து போதிய சுவைக்கான பனங்கற் கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்கப் பெரும்பாடு என்னும் அதிரத்தப் போக்கு கட்டுக்குள் வரும். இதனால் ஏற்படும் வலியும், ரத்த சோகையும் குணமாகும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும்.மேலும் இதயத்துக்கு ஒரு தூண்டு சக்தியாகவும் செயல்படுகிறது. வாழைப்பழமும், தோலும் மலச்சிக்கலைப் போக்கவும், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் ஒரு வாய்க்கு முன் உள்ள ``கோலான்'' என்னும் பகுதியில் வரும் நோய்களைப் போக்கவும் உதவுகின்றன.

வாழைப் பழத்தில் விட்டமின் மேங்கனீஸ், விட்டமின், பொட்டாசியம், நார்ச்சத்து, புரோட்டின், மெக்னீசியம் மைக்ரோகிராம், நிபோப்ளேவின், நியோசின் ஆகியன அடங்கியுள்ளன. லண்டன் `இம்பீரியல் காலேஜ்' நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு தினம் ஒரு வாழைப்பழம் கொடுத்ததில் 34 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

ரத்தப்புற்று வராமல் தடுக்கக் கூடியது என்பதால் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அளவுக்கு மீறி கொடுக்காமல் சீரண சக்திக்கு ஏற்ப சிறிது சிறிதாக கொடுத்து அதிகப்படுத்திக் கொள்ளலாம். வாழைப் பழத்தில் விட்டமின் சி சக்தியுள்ளதால் புற்று நோய்களுக்குக் காரணமான செல்களைத் தடுத்து நிறுத்த கூடியதாகும்.

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்த்து பெருங்குடலின் கீழ்ப்பகுதி (கோலான்) மற்றும் ஆசன வாய்ப்பகுதி (ரெக்டம்) ஆகிய இடங்களில் புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு துணையாக அமைகின்றன.

வாழைப்பழத்தில் மிகுந்திருக்கும் பொட்டாசியம் சத்தானது பாரிசவாயு, கக்குவான், முகவாதம், ஆயவற்றில் இருந்து காக்கிறது. மேலும் தசை நார்களுக்கும், எலும்புகளுக்கும் ஊட்டத்தைக் கொடுப்பதோடு சிறுநீரகக் கற்கள் தோன்றுவதும் தவிர்க்கப்படுகிறது.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் மிகவும் சோர்ந்து போவதும் இளைத்து மெலிந்து போவதும் இயற்கை ஆகும். நீர்ச்சத்துக்களான பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வயிற்றுப்போக்கால் இழக்க நேரிடுகிறது. இந்நிலையில் வாழைப்பழம் சோர்வை போக்குவது மட்டுமின்றி தேவையான பொட்டாசியம் சத்தை ரத்தத்தில் சேர்க்கிறது.


வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் மருந்துப் பொருள் ஞாபக சக்தியையும், நல்ல மனோநிலையையும் உண்டாக்கக் கூடியது. அமெரிக்காவின் உணவியல் வல்லுநர்கள் அன்றாடம் 21-25கிராம் வாழைப்பழத்தை பெண்களுக்கும் 30-38 கிராம் ஆண்களுக்கும் உணவாகக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள்.

வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் `எ' சத்து கண்பார்வையை கூர்மைப்படுத்துவதோடு உடலில் உள்ள சளித்தன்மையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன.

ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் மாத்திரைகளுக்கு பதிலாக சில வாழைப்பழங்களை அன்றாடம் சாப்பிடுவது மாற்று மருந்தாகும். வாரம் முழுவதும் தினம் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்த சிருக்கு 10 சதவீதம் ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் மாதவிலக்கின் போது நன்கு கனிந்த வாழைப்பழங்கள் இரண்டு எடுத்துக் கொள்வதால் வலி குறையும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
குழந்தை பிறப்பதில் பிரச்சனையா? அப்ப துரியன் பழம் சாப்பிடுங்க

தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம் மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதிலும் பழங்கள் ம்டுமின்றி இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்கடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது.


உண்டையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியம் பழம் சாப்பிடுவதால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொரஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர். இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.


ஏனெனில் துரியன் பழத்தின் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சரி, இப்போது தூயன் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

மஞ்சள் காமாலை:
துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞசள் காமாலை நோயை குணப்படுத்தலாம்.

நகங்களில் நோய்த்தொற்று:
நகங்களில் பிரச்சனை இருக்கும் போது துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

நீரழிவு:

துரியன் பழத்தின் மாங்கனீசு அதிகம் இருப்பதால் அதனைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

காய்ச்சல்:

துரியன் மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.

ஆரோக்கியமான மூட்டுகள்:

துரியன் பழத்தின் உள்ள வைட்டமின்கள் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

கொசுக்கடி:
துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும்.

இரத்த சோகை:

துரியன் பழத்தின் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால் இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

முதுமை தோற்றம்:

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அரில் உள்ள வைட்டமின் சி சத்தால் முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்:


மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுன் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

தைராய்டு:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

குறைந்த இரத்த அழுத்தம்:


இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது அதிகரிக்கும்

ஒற்றை தலைவலி:

ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.

பல் பிரச்சனைகள்:


துரியன் பழத்தின் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்:

துரியன் பழத்தின் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

பலவீனமான கருப்பை:

பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

விந்தணு குறைபாடு:

ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பசியின்மை:

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும்.

சொறி சிரங்கு:

சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்
எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.


இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி எலுமிச்சை சாறு பருகுவதால் காய்ச்சல் விரைவில் தணிகிறது என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள். எலுமிச்சை சாற்றை ஒன்றுக்கு 4 பங்கு என நீர் சேர்த்து கலந்து பெண் உறுப்பைக் கழுவுவதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்பட்டு ஆரோக்கியம் உண்டாகும்.

இது கடைத் தெருவில் விற்கும் ரசாயனக் கலவைகளான மருந்தை விட பாதுகாப்பானது. மேலும் நம்பகமானது. ஏனெனில் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி எரிச்சலை உண்டாக்காததும் கூட. வயிற்றுக் கோளாறு, சீரணக்கோளாறு, என்பது அனைவருக்கும் மிகப் பொதுவான ஒன்றாகும்.

அந்நிலையில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் சர்க்கரையும் சேர்த்துப் பருகுவதால் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளுக்கும் விடிவு ஏற்படுகின்றது. நம் உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கின்றது.

அடிபட்டதாலும் உராய்வதாலும் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வெளியாகும் போது சில துளிகள் எலுமிச்சை சாற்றை காயங்களின் மேல் விடுவதால் உடனடியாக ரத்தம் வீணாக வெளியேறுவது தடுக்கப்படும். எலுமிச்சைசாற்றை நேரடியாக காயங்களின் மேல் ஊற்றாமல் ஒரு பஞ்சு உருண்டையில் நனைத்து காயங்களுக்கு மேல் வைத்து கட்டுப் போடலாம்.

இதனால் ரத்தம் நிற்பது மட்டுமின்றி தொற்றுக் கிருமிகள் தாக்காமல் விரைவில் ஆறிவிடும். பல்வேறு மருத்துவங்கள் செய்தும் பலன் அற்ற நிலையில் பரிதவிக்கும் பாலுண்ணி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலுமிச்சை ஒரு வரப்பிரசாதமாகும்.

ஒரு குச்சியில் பஞ்சைச் சுற்றி காது சுத்தப் படுத்தப்பயன்படும் பட்ஸ் என்னும் குச்சியை எலுமிச்சை சாற்றில் நனைத்து பாலுண்ணிகளின் மேல்படும் படி மேற்பூச்சாகப் பூசிவர நாளடைவில் பாலுண்ணிகள் எலுமிச்சை சாற்றில் கலந்துள்ள அமிலச் சத்தால் கரைந்து விடும்.

இடைவிடாமல் தொடர்ந்து சிலநாட்கள் இப்படிச் செய்வதால் நிச்சயமான பலன் உண்டாகும்.

ஆஸ்துமா நோயாளிகள் ஒத்துக் கொள்ளாத உணவுப் பண்டங்களைத் தவிர்த்து அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் ஆஸ்துமா என்னும் கொடிய இரைப்பு நோயினின்று விடுதலை பெறலாம். பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகள் உணவு உண்பதற்கு முன் இரண்டு மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறு பருகுவதோடு படுக்க போகும் முன்னும் இதுபோலப் பருக வேண்டும்.

ஒரு புழுவினுடைய பயணத்தைப் போல இருந்து நம் குடல் உண்ட உணவைத் தாம் சுருங்கி விரிவதால் செரிமானம் செய்து கழிவாக வெளித் தள்ளுகிறது. இந்த சுருங்கி விரியும் செயலை ஊக்குவிப்பதாக எலுமிச்சை சாறு விளங்குகிறது. முறையான செரிமானத்துக்கும் அழுக்குகள் வெளியேற்றத்துக்கும் அன்றாடம் காலையில் எழுந்ததும் ஒரு சிறு எலுமிச்சம்பழச் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் மேற்சொன்ன நன்மைகள் ஏற்படும்.

எலுமிச்சை சாறு ஈரலின் செயல்பாட்டை செம்மைப்படுத்த வல்லது. மேலும் ரத்தத்தில் உள்ள அமில உப்பை (யூரிக் ஆசிட்) இது கரைப்பதோடு தேவையற்ற நச்சுக்களையும் போக்கவல்லது. ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் ஈரலிலுள்ள நச்சுக்கள் வெளியாகி விடும்.

எலுமிச்சை சாற்றில் மிகுந்துள்ள விட்டமின் சி சத்து மற்றும் ப்ளேவனாய்ட்ஸ் குளிர்க்காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கக் காரணமான நோய்க் கிருமிகளை எதிர்த்து தடுத்து நிறுத்துகிறது. எலுமிச்சை சாறு தொடக்கத்தில் ஒரு அமிலத்தைப் போல தோன்றிடினும் அது ஆல்க லைன் சத்தாக செயல்பட்டு உடலினுடைய நீர்ச்சத்தை சமப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை சாற்றில் கலந்துள்ள சிட்ரிக் அமிலம் பித்தப்பையிலுள்ள கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக கற்களையும் கரைக்க உதவுகிறது. மேலும் உடலில் பல பகுதிகளிலும் சுண்ணாம்புச் சத்து படிவத்தை தடுக்க உதவுகிறது. எலுமிச்சை சாற்றிலுள்ள விட்டமின் சி சத்து நோய் ஏற்படுவதற்கும் வயது முதிர்வதற்கும் காரணமான சில இரசாயன மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளியேற்ற வல்லது. போதிய பிராண வாயு இல்லாத போதும் மூச்சு விட சிரமமாக இருக்கும் போதும் மிக உயர்ந்த மலை மீது ஏறும் போதும் எலுமிச்சைச் சாறு அதை ஈடு செய்யும் வகையில் புத்துணர்வு தருகிறது.

இமயத்தின் உச்சியில் கால் பதித்த முதல் மனிதரான எட்மண்ட் ஹிலார் தன்னுடைய வெற்றிக்குக் காரணம் எலுமிச்சம்பழத்தையே சேரும் என்று சொல்லியுள்ளது குறிப்பிட்டுள்ளார். எலுமிச்சை சாறு மிக வலிய நோய்க் கிருமிகளை தாக்கி அழிக்க வல்லது. மரணத்தைத் தரக்கூடிய மலேரியா, டீப்தீரியா டைபாய்டு, காலரா போன்ற நோய்க்குக் காரணமான கிருமிகளை எளிதில் வெளியேற்றி ஆரோக்கியத்தை நிலைநிறுத்த வல்லது.

எலுமிச்சை சாற்றில் விட்டமின் பி சத்து நிறைந்து உள்ளது. ரத்த நாளங்கள் இதனால் பலப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து கசிகின்ற ரத்தம் தடை செய்யப்படுகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் இதனால் குறைக்கப்பட்டு சமநிலை கொண்டு வரப்படுகின்றது. எலுமிச்சை சாறு கண்களுக்கும் ஆரோக்கியம் தரவல்லது.

பல கண்நோய்களை இது போக்க வல்லது. குறிப்பாக சர்க்கரை நோயால் கண் நரம்புகள் மற்றும் விழித்திரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகின்றது. எலுமிச்சை சாற்றில் உள்ள ரூட்டின் சத்து இதற்கு உதவுகிறது. எலுமிச்சை சாறு புற்றுநோயைக் கூட தடுக்க வல்லது. அல்லது குணப்படுத்தவும் வல்லது.

எலுமிச்சையில் 22 விதமான
மருத்துவ தத்துவங்கள் அடங்கியுள்ளன. இவை புற்று நோயை குணப்படுத்த உதவுபவை. குறிப்பாக எலுமிச்சை சாற்றிலுள்ள லிமோனின் என்னும் எண்ணெய் சத்துவம் புற்றுநோய்க்குக் காரணமான செல்வளர்ச்சியை தாமதப்படுத்தக் கூடியது எனலாம். உலகில் உள்ள உணவுப் பொருள்களிலேயே எலுமிச்சையில் தான் செல்களுக்கு போதிய சக்தியைத் தரும் வகையில் எதிர் ஊட்டச்சத்து அமைந்துள்ளது.

இது ஆரோக்கியத்தை நிலைபெறச் செய்வது. எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து உள்ளது. இச்சத்து பெருங்குடலின் ஒரு பகுதியை நன்கு செயல்பட உதவுகிறது. மேலும் பலமான நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. எலுமிச்சை சாறு ஜீரண உறுப்புகளுக்கு பலம் தருவதோடு பித்த நீர் உற்பத்திக்கு துணையாக நிற்கிறது.

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
நட்சத்திர பழத்தின் மருத்துவகுணங்கள்

பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.
நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறதுஇதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் நட்சத்திரப்பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கலைப் போக்க
நட்சத்திரப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

மூல நோயின் பாதிப்பு குறைய
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூலநோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திரப் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

சரும பாதுகாப்பு
மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். நட்சத்திரப் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்புகள் பலப்பட
நட்சத்திரப் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், இரத்த ஓட்டம் சீர்படும்.

10 கிராம் ஸ்டார் பழத்தில்

கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்
சர்க்கரை – 3.98 கிராம்
கொழுப்பு – 0.33 கிராம்
புரோட்டீன் – 1.04 கிராம்
பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %
போலேட் – 12 கிராம்
வைட்டமின் சி – 34.4 கிராம்
பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்
பொட்டாசியம் – 133 மிலி கிராம்
துத்தநாகம் – 12 மிலிகிராம்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
பிளம்ஸ்: மருத்துவ குணங்கள்

மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பிளம்ஸ் பழம் நல்ல சிவப்பாக அல்லது கருஞ்சிவப்பாக இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும்.


நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ்,ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும். பிளம்ஸ் பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் விட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், விட்டமின் சி யின் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் விட்டமின் சி-க்கு உண்டு.

விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. விட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித் தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் விட்டமின் ஏ-விற்கு உள்ளது.

லுடின், கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை நீக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஸி-சாந்தின், கண்களின் ரெட்டினா பகுதியை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புத்தாது மிக அவசியம். பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.
பி-காம்ப்ளக்ஸ் விட்டமின்களான நியாசின், விட்டமின் பி6, பான்டோ தெனிக் ஆசிட்போன்றவை உள்ளன. காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் இந்த விட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது.

பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு விட்டமின் கே, உள்ளது. இது இரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது.
பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு விட்டமின் கே, உள்ளது. இது இரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது


நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.
இரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்தத்தை சுத்திகரிக்க பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும். பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. பழத்தில் உள்ள சார்பிட்டல், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.

சாப்பிடும் முறை

பிளம்ஸ் பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.

சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு.
பிளம்ஸ் பழத்தில் ஜாம், ஜெலி தயாரிக்கப்படுகிறது.
இறைச்சியுடன் பழ வகைகள் சேர்த்து செய்யப்படும் pieவகை உணவுகளிலும், வேறு பல உணவு வகைகளிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.

கேக், ஐஸ்கிரீம்களிலும் பிளம்ஸ் பழங்கள் சேர்க்கப்படுகிறது.
பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம் உலர்த்தப்பட்ட பழங்கள் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது.

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
அல்சர் குணமடைய விளாம்பழம்

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.


விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
Thank you for sharing such a detailed information regarding Medicinal Benefits of Fruits!!!!!!!!!!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
பழங்களின் மருத்துவம் - தாய்ப்பால் சுரக்க முலாம் பழம்

குளிர்ச்சியைத்தரும் பழங்கள் முலாம் பழம்

பழங்கள் நேரடியாக சத்துக்கள் உடலுக்குக் கொடுக்கக்கூடியது உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களை கொடுப்பது பழங்களே, முலாம் பழத்தின் மருத்துவத் தன்மை பற்றி அறிந்து கொள்வோம். முலாம் பழம் சிறிய பூசணிக்காய போல் பழுப்பு நிறத்துடன் இருக்கும். கோடைக் காலத்தில் அபரிமிதமாக அப்பழம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் பழங்களில் இதுவும் ஒன்று. அதில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து உள்ளன. அவை வெள்ளரி இனத்தைச் சார்ந்தது.


தந்தம் விழுந்திடுமே தாது மெலிந்திடுமே
விந்தைமிகுங் காந்தி விலகிடுமோ - சந்ததமும்
வாதம் மிகுந்திடுமே வந்துகபஞ் சேர்ந்திடுமே
ஒதுகுமட் டிக்காயல் உன் - அகத்தியர் குணபாடம்

குளிர்ச்சியுண்டாக்க:
அதிக வெயிலிலும், உஷ்ணம் தரக்கூடிய இடங்களில் வேரை செய்பவர்களின் உடலானது அதிக உஷ்ணத்தினால் பாதிக்கப்படும். இந்த சூட்டை தணிக்க முலாம் பழத்தை காரல, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம். கோடைக் காலங்களில் ஜீஸ் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

சிறுநீர்ப் பெருக்கி:

மனித உடலானது சீராக இயங்க இரத்த ஒட்டம் நன்றாக இருக்க வேண்டும். சாதாரணமாக மனிதனுடைய சிறுநீரகம் ஒரு நாளைக்கு 160 லிட்டர் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதில் 1 முதல் 11ஃ2 லிட்டர் வரை சிறுநீரகம்வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படும். உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும்.இக்குறையைப்போக்க முலாம் பழத்தை ஜீஸ் செய்து அடிக்கடி அருந்தி வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க:

தற்போது நிறைய தாய்மார்கள் தங்கள் பிள்ளைக்குத் தேவையான தாய்ப்பால் சுரப்பின்றி அவதியுறுகிறார்கள். எத்தனையோ மருந்து சாப்பிட்டும் தாய்ப்பால் சுரக்காதவர்கள் முலாம் பழம் மூலம் சுரக்கச் செய்யலாம்.
முலாம் பழத்தை தினசரி காலைஈ மாலை என இருவேளையும் ஜீஸாகவோ அல்லது பழமாகவோ சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

வாயுத் தொல்லை நீங்க:

வாயுத் தொல்லை இருந்தாலே சரியாக சாப்பிட முடியாது பசி எடுக்காது. வாய்ப்புண், குடல்புண், உண்டாகும். அந்த வாயுத்தொல்லை நீங்க முலாம்பழம் சிறந்த மருந்து.

மலச்சிக்கல் தீர:

மலச்சிக்கல் தவிப்பவர்கள் முலாம் பழத்தின் துண்டுகளை மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட மலங்களை வெளியேற்றும். மலக்கசடுகள் நீங்கும்.

உடல் பலமடைய:

உடல் பலவீனமடைந்தவர்கள், நோயின் தாக்கத்திலிருந்து மீண்டவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்படும். அதுபோல் சிலர் நோஞ்சானாக காணப்படுவார்கள். இவர்கள் முலாம் பழத்தை ஜீஸ் செய்து அதனுடக் தேவையான அளவு சர்க்கரை கலந்து மதிய உணவுக்குப்பின் அருந்தி வந்தால் உடல் பலமடையும்

இரத்த விருத்திக்கு:
உடலில் இரத்த ஒட்டம் சீராக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதன் மூலம் இரத்தம் அசுத்தமமைகிறது. இந்த பித்த நீரினை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு. முலாம் பழத்தை ஜீஸ் செய்து அருந்தினால் இரத்தம் விருத்தியாகும்.

பெண்களுக்கு:

கர்ப்பப் பை வலுவில்லாத பெண்கள் முலாம் பழத்தை கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பி;ட்டு வ்நதால் கருப்பை பலம் பெறும்.
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் இந்தப் பழத்தை அடிக்கடி வாங்கி உண்டு பயனடையலாமே.

 

Attachments

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.