Medicinal benefits of leafy greens - கீரைகளின் மருத்துவ பலன்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கீரைகளின் மருத்துவ பலன்கள்

முற்றிய காச நோயைக்கூட சிறு கீரையால் குணப்படுத்தலாம்

பெயர் தான் சிறு கீரையே தவிர, மருத்துவப் பயன்கள் அதிகம் கொணட பெருங்கீரையாகும்.வாசமுள்ள சிறந்த கீரை எல்லோரும் விரும்பி உண்ணும் கீரை எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் சத்துள்ள கீரையை தினசரி சாப்பிட்டுவந்தாலும் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது இரும்புச் சத்தும், புது இரத்தமும் உடம்பில் சேரும். இதில் கால்சியச்சத்து அடங்கியிருப்பதால் எலும்பை பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்வந்தால் சிறந்த நினைவாற்றல் பெறலாம். உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றக்கூடியது. வண்டுக்கடி, பூச்சிக்கடி விஷங்கள் இறக்கக்கூடியது. சிறு கீரையால் முற்றிய காச நோயைக்கூட குணப்படுத்த முடியும்


சித்தர் பாடல்:

கண்புகைச்ச நேத்திரநோய் சாசம் படலம்
புண்கிரிச்ச ரஞ்சோலை பொங்குமித்த - மண்பரவு
தாவரவிடங்களும் போம் தாழாத் திருவுமுண்டாம்
கூறுசிறு கீரைதனைக் கொள். - அகத்தியர் குணபாடம்

கண் புகைச்சல் போன்ற கண் நோய்கள், காச நோய், புண்கள், சிறுநீர்க்கடுப்பு, ஆசாகை,பித்த நோய்கள் குணமாகும். உணவால் உண்டாகும் விஷத்தை முறிக்கும்.

100 கிராம் சிறு கீரையில் உள்ள சத்துக்கள்:


நீர்ச்சத்து - 90 சதவீதம்
புரதம் - 2.8 சதவீதம்
கொழுப்பு - 0.3 சதவீதம்
தாதுப்பொருள் - 2.1 சதவீதம்
சர்க்கரைச்சத்து - 4.8 சதவீதம்
சுண்ணாம்புச்சத்து - 397 மி.கி
பாஸ்பரஸ் - 50 மி.கி
இரும்பு - 27.3 மி.கி
கலோரித்திறன் - 30 கலோரி


ஞாபக மறதிக்காரர்களா:

சிறு கீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் அற்புதமான நினைவாற்றல் கிடைக்கும்
.
பித்தநோய்:

சிறு கீரையும் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான பித்த நோய்களும் குணமாகும்

சிறுநீராக கோளாறு:

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாரலயில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

தோல் நோய்:

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

உடல் பருமன்:

சிறு கீரை (2 கை அளவு), பார்லி (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம் நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல வீக்கம், உடல் பருமன் குறையும்.

கண் எரிச்சல்:

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள், சேர்த்து சூப்பாகச் செய்து சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.

கப நோய்:

சிறு கீரையுடன் சிறிது, சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.

உடல் வனப்பு:

சிறு கீரையை குடைமிளகாய், சிறுபருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

முகப்பரு:

சிறு கீரையுடன் முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்தது அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் குணம் பெறலாம்.

விஷக்கடிகள்:

சிறு கீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து அலசி நன்றாக அரைத்து எலுமிச்சை பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருந்தால், வண்டுக்கடி, தேள்கடி போன்ற அனைத்துவிதமான விஷக்கடிகளும் குணதாகும்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில முளைக் கீரை

சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கு ஏற்ற கீரை முளைக்கீரை மட்டுமே.

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் இந்தக் கீரை முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய்களைக்கூட குணப்படு;த்தக்கூடியது. இதன் சுபாவம் குளிர்ச்சியானது.

சித்தர் பாடல்:

தளர்ந்த வர்க்கும் பாலருக்கும் தக்கவய தோர்க்கும்
இளங்கீரை நாவுக் கிதமாம் - கிளம்பு
சுரகாசம் போக்கு தொடர்பசி யுண்டாக்கும்
பிரகாச மாயெடுத்துப் பேசு (அகத்தியர் குணபாடம்)

முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

1. முளைக் கீரைஈ அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்
2. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கரந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.

3. முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
4. முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசிpயன்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.
5. முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.
6. முளைக் கீரையைத் தொடர்ச்து 40 நாள்களுக்குத் குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்
7. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.

8. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
9. முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு உண்டாகும்.
10. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்

முளைக்கீரையில் அடங்கியுள்ள சத்துக்ள்:


100 கிராம் முளைக்கீரையில்

சுண்ணாம்புச் சத்து - 400 மி.கி
மெக்னீசியம் - 250 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம் - 770 மி.கி
மணிச்சத்து - 80.5 மி.கி
இரும்புச் சத்து - 26.0 மி.கி
சோடியம் - 230 மி.கி
பொட்டாசியம் - 340 மி.கி
தாமிரச்சத்து - 0.33 மி.கி
கந்தகச் சத்து - 60 மி.கி
குளோரின் சத்து - 85 மி.கி
தயாமின் - 0.20 மி.கி
ரைபோஃபிளேவின் - 0.10 மி.கி
நிகோடினிக் அமிலம் - 1;0 மிகி
வைட்டமின "ஏ" - 9000 ஐரு (அனைத்துலக அலகு)
வைட்டமின் "சி" - 98 மி.கி

இவ்வளவு மருத்துவப் பயன்கள் கொண்ட இக்கீரையை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்குத்தான் பெரும் நஷ்டம் என்பதை உணர வேண்டும்.

இக்கீரையில் வைட்டமின் ஏ, பி, பி 1, பி 2, சி நிரம்பியுள்ளன. மேலும் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மணிச்சத்து, தாதுஉப்புகள் என உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கலந்துள்ளன.

சாப்பிடும் பக்குவம் வந்த ஏழு, எட்டு மாத குழந்தைகளுக்கு இக்கீரையை நன்கு மசியல் செய்து, ஊட்டிவந்தால் மூலை வளர்ச்சி நன்கு பெருகும். அறிவில் ஓங்கி வளருவார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்தை தரும் இக்கீரையை நமது உணவில் அவ்வப்போது இடம்பெறச் செய்வோம். வலுவான உடலைப் பெறுவோம்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
பல வியாதிகளைப் போக்ககும் சக்தி கொண்ட அரைக்கீரை

பெயருக்குத்தான் இது அரைக்கீரையை தவிர இக்கீரை எல்லா சத்துக்களும் கொண்ட முழுக்கீரை ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை இது.

தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் அருமையான கீரை.எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான- உன்னதமான கீரை இது. பல வியாதிகளைப் போக்கக்கூடிய சக்தி கொண்டது எந்த வியாதி கொண்டவர்களும் தாராளமாக தைரியமாக இக்கீரையை சாப்பிடலாம்.

அரைக்கீரையை தினம் தினம் சாப்பிட்டு வந்தால் தேகத்தில் வெப்பம் ஏறும் என்பார் சிலர். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு, பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது அரைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு கொண்டது.


அரைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

1. வாயு நீங்க:

இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

2. உடல்வலி போக:

சிலர், சிறிதளவில் வேலை செய்தாலும் உடம்பெல்லாம் வலி எடுக்கிறது என்பார்கள். இவர்களுக்கு உதவுகிறது அரைக்கீரை, மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு இவைகளை அரைக்கீரையோடு சேர்த்து பொரியல் செய்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டுவந்தால் உடல்வலி போகும்.

3. சளி, இருமல் குணமாக:

கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கடைந்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மட்டுப்படும்.

4. வாய் ருசிக்கு:

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு ருசியே தெரியாது. எதைச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரியாக மண்ணைத் தின்றதைப் போலவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு, புளியையும் சேர்த்துக் கடைந்து ஒரு வாரத்திற்கு மதிய வேளையில் சாப்பிட்டுவந்தால் நாளடைவில் ருசி தெரியவரும்.

5. பசி எடுக்க:

பலருக்கு பசியே எடுக்காது. மூன்றுவேளைகள் சாப்பிடவேண்டும். என்ற கட்டாயத்திற்காக ஏதோ சாப்பிடுவார்கள்.
இ;ப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு சீரகத்தைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டுவந்தால் நாளடைவில் பசியெடுக்கும். கடைந்த கீரையை சாப்பிட்டிற்கு முன் சாப்பிடுவது நல்லது.

6. பிரசவித்த பெண்களுக்குப் பலம்பெற:

பிரசவித்த பெண்கள் பலமிழந்து காணப்படுவது இயற்கை, நெய் விட்டு, கீரையை வதக்கியோ, கடைந்தோ சாப்பிட்டுவந்தால் தேகத்தில் பலம் ஏறும். குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும்.

7. வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்கவும். புத்திசாலித்தனத்துடன் பயிலவும். உடல் பலத்துடன் வளரவும், அரைக்கீரை அருமருந்தாகப் பயன்படுகிறது
இக்கீரையை வாரத்திற்கு மூன்று நாட்கள் எனத் தொடர்ந்து கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

8. மலச்சிக்கல் தீர:

அரைக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

9. ஆண்மையை இழந்தவர்களுக்கு:

எதிலும் அளவு வேண்டும் என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இன்றைய நவ நாகரிக யுகத்தில் திருமணமாகாத இளைஞர்களம், சரி, திருமணமானவர்களும் சரி, அளவுக்கு மீறிய உடல் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட சக்தியினை இழக்கும் ஆபத்திற்கு ஆளாகின்றனர்.
இப்படிப்பட்பவர்களுக்கு சஞ்சீவினியாகக் கை கொடுக்கிறமு அரைக்கீரை, இழந்த சக்தியைர.மீட்டுத் தரும் ஆற்றல் கொண்டது இக்கீரை
அரைக்கீரையை நெய்யில் வதக்கி தொடர்ந்து நாற்பது நாட்கள் மதிய வேளையில் (உப்பு, புளி, காலம் சற்று தவிர்த்து ) சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி நீங்கி நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். தாம்பத்தியத்தில் சோர்வு ஏற்படாது
அரைக்கீரையில் வைட்டமின் 'ஏ"வும் "சி"யும் உள்ளன. அரைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்கள் அடிக்கடி மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்களாவன:

1. மலச்சிக்கல் தீரும்
2. குளிர்காய்ச்சல் நீங்கும்
3. ஜலதோஷம் போகும்
4. நரம்புத் தளர்ச்சி நீங்கும்
5. ஆண்மைக்குறைவு நீங்கும்
6. உடல்வலி தீரும்
7. உடல் பலவீனம் போகும்
8. வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும்
9. பிடரிவலி, நரம்புவலி ஆகியன நீங்கும்
10. பிரசவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்
11. காய்ச்சல் நீங்கும்.

அரைக்கீரையைப் பற்றி -அதன் பெருமையைப் பற்றி அகத்தியர் பாடிய பழம்பாடல் ஒன்று:

காய்ச்சற் குளிர்சந்நி காயநோய் பலபிணிக்கும்
வாய்ச்ச கறிந்தானாய் வழங்குமே - கூச்சமில்லா
தெல்லா வற்கும் நல்லவித மியமுமா மென்றே
சொல்லு மரைக் கீரைச்சுவை.

இதன் பொருள் வருமாறு:

1. காய்ச்சல்ஈ குளிர்காய்ச்சல், ஜன்னி, காசம், வாத பித்தநோய் மற்றும் பல நோய்களை இந்த அரைக்கீரை தீர்க்கும்.
2. இக்கீரையை கூடுமானவரை பகலில் மட்டும் சாப்பிடுங்கள், இரவில் வேண்டாம்.
3. மூல நோயாளிகள் தவிர்ப்பது நல்லது
4. அரைக்கீரை விதையை சிறிதளவு எடுத்துக்கொண்டு, இதை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி சூடு பொறுக்கும் பதத்தில் எடு;த்து வடிகட்டி தலைக்குத் தடவிவந்தால். முடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும். நரையும் போகும்.
5. நோயின்றி வாழ தினமும் அரைக்கீரையை பயன்படுத்துங்கள்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
[h=1]கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி[/h]நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி நம் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நம்மில் பலருக்கும் இன்றுவரை தெரிவதில்லை. ஏதோ சமையலில் பயன்படுத்துகிறோம் என்று பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பயன்கள் பற்றி நமது மதுரை தோழி ரோகிணி விளக்கமாக கூறியுள்ளார்.

கொத்தமல்லியின் பயன்கள்
வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். மூல நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும்.

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கம், மன அமைதி, உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாய் நாற்றத்தைப் போக்கி, பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் – 5,
மிளகு – 10,
சீரகம் – 2தேக்கரண்டி,
பூண்டு – 5 பல்,
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
1 கொத்து கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு
ஆகியவைகளை எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, தேனீர் கோப்பியிற்குப் பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா(mint), சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி – 300 கிராம்,
சீரகம் – 50 கிராம்,
அதிமதுரம் – 50 கிராம்,
கிராம்பு – 50 கிராம்,
கருஞ்சீரகம் – 50 கிராம்,
இலவங்கப்பட்டை – 50 கிராம்
சதகுப்பை anethumsowa – 50 கிராம்
ஆகியவைகளை இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!
- கடலூர் அரங்கநாதன்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
[h=1]அகத்தி[/h]
மூலிகையின் பெயர் – அகத்தி
தாவரவியல் பெயர் – SESBANIA GRANDIFLORA
தாவரக் குடும்பம் – FABACEAE
பயன் தரும் பாகங்கள் – இலை, பூ, வேர், பட்டை மற்றும் மரம்.
வளரியல்பு – அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப்படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது. நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும். இலைகள் 15 – 30 செ.மீ. நீளம் உடையது 10 -20 சதையாக இருக்கும். ஒரு இலையில் 40 – 80 சிறு இணைக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 – 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்துவார்கள். இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும். விதை 8 mm நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா. பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. பூவின் நிறத்தைப் பொறுத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.

அடங்கியுள்ள பொருட்கள் – ஈரப்பதம் 73 %, புரதச்சத்து 83 %. தாதுஉப்புக்கள் 3.1 %, நார்ச்சத்து 2.2 %, மாச்சத்து 12%, கொழுப்புச்சத்து 1.4 % என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பொஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. விட்டமின் A, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், விட்டமின் C போன்றவை அடங்கியுள்ளன.

“மருந்திடுதல் போகுங்காண் வன் சிரந்தி – வாய்வரம்
திருந்த வசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியா”
அகத்திக் கீரையை உண்ண இடு மருந்து நீங்கும். கிரந்தி வாய்வு உண்டாகும். மருந்தை முறிக்கும் தன்மையுண்டு. புழுவை வெளியேற்றும்ம். எளிதில் சீரணம் தரும். அகத்தி, செவ்வகத்தி, சாழையகத்தியென வேறு இனமும் உண்டு. செவ்வகத்தியின் வேரைத் தண்ணீர் விட்டு அரைத்து வாத வீக்கங்களுக்குப் போம்.
‘அகத்திக்குப் பெரும்பாடு தீரும்’

‘அகத்திக்கு வேக்காடுதனை யகற்றும்.’ (போ.நி.1500)
பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிள்ளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காப்பபி டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையும், வேர் பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்கடுப்பு, நீர்தாரை எரிவு, அம்மைசுரம், ஆகியவை தீரும்.

இலைச்சாறும் நல்லெண்ணையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.


தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். அகத்திக் கீரை சுவையானது, பல சத்துக்களையும் விட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது .
துக்கவீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக்கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல் இருப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!

உடலின் உள்காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷமுறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி!

contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
அகத்தி கீரை

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்.

இலை: அகத்தி இலையைக் கீரை என்பார்கள். இதன் சாற்றை எடுத்து ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் குணமாகும்.
அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் விலகும். சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த வயிற்று வலி தீரும்

அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் விட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்.
அகத்திக் கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர, நாள்பட்ட வயிற்று வலி குணமாகும்.

இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது.

அகத்திக் கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். பித்த நோயை நீக்கும்.
வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.
செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன்கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்.

பூ: அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண்வலி குணமாகும். சாறெடுத்து நெற்றிப்பொட்டில் பூச தலைவலி நீங்கும். பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். பூவை சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்

மரப்பட்டை: குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும். மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

வேர்ப் பட்டை: அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.

வேர்ப்பட்டையை அரைத்து வாத வலி மேல் பூசி வர, வலி மாறும்.
அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.
அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.

இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும். மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும். இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.

பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும். கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது.
அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒருவகை நார் மீன்பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது.

 

Attachments

Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
Very useful information about கீரைகளின் மருத்துவ பலன்கள்!!!!!!!! Thank you!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
நாம் அலட்சியப்படுத்தும் கீரைகளின் மருத்துவக்குணங்கள்

கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:- நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.


கற்பூர வல்லி-ஓமவல்லி):- மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.

வல்லாரை:- நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளி கீரை:- இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம்.

தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.