Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&#2980

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அன்றாட சமையலுக்கு பயன்படுத்து மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்

கடுகு

நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண் டு நோய்நொடியின்றி வாழலாம்.



கடுகில் இரண் டு வகை உண்டு. அவை கருங்கடுகு மற்றும் வெண்கடுகு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‚… என்ற பழமொழிக்கேற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.


கடுகு சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிரடப்படுகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படுகிறது. இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

கடுகு குளிர்ந்த நீருடன் சேரும் போது அதன் மேல்தோல் அப்புறப்படுத்தப்பட மைரோஸினேஸ் எனப்படும் என்ஸைம் வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணமாக இருக்கிறது. நம் நாட்டு சமையலில் சூடான எண்ணெயில் கடுகை பொரிக்கின்றோம். அப்போது அதன் மேல்தோல் அகலுகிறது. அதனால் மணமும் கார சுவையும் நம் சமையலில் சேர்க்கின்றது.

கடுகின் சத்துக்கள் :

கடுகில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும். இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆறறல் கிடைக்கிறது. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கடுகு நொதிகளில் செய்பாடு நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நியாசின் கடுகில் அதிக அளவில் உள்ளதால் இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

செரிமானத்தைத் தூண்ட :

செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண!டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

இருமல் நீங்க :

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண!டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண!டாக்கும். இந்த இருமல் நீங்க கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலியுடன் உண!டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

வயிற்றுவலி குணமாக :

அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண் டாக்கும். கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இந்த வயிற்றுவலி நீங்கும்.

நஞ்சு உண்டவர்களுக்கு :

தெரிந்தோ தெரியாமலோ சிலர் நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுக்க வேண!டும். இவ்வாறு கொடுப்பதால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகை அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

இருமல் இளைப்பு நீங்க

கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரி பாதியாக எடுத்து வெந்நீரில் கலந்து களி போல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண!டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் பெருக்கி :

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கை, கால்கள் விரைப்பு சீராக :

கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.

இரத்தக் கட்டு, மூட்டு வலி குறைய :

கடுகை அரைத்து பற்று போட்டால் இரத்தக் கட்டு, மூட்டு வலி போன்றவை குறையும்.

கடுகு எண்ணெய் :

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

* கடுகு எண்ணெய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

* கூந்தல் வளர்ச்சிக்கும், சரும பாதுகாப்பிற்கும் கடுகு எண்ணெய் உதவுகிறது.

* கொழுப்பு சத்து அதிகமில்லாத கடுகு எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

* கருப்பை கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும் பங்கு வகிக்கிறது. கடுகு பெண!களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கடுகை நம் அன்றாட உணவில் சேர்த்து நம் உடல் ஆரோக்கியத்தை பெருக்கிக்கொள்வோம்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

[h=1]சோம்பு -பெருஞ்சீரகம்[/h]Pimpinella Anisum
சோம்பு பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது. இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்
போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரை
சேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்
மூக்குநோ யில்லை மொழி
– அகத்தியர் குணபாடம்

செரிமான சக்தியைத் தூண்ட- எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற - சாப்பிட்ட உணவினால் குடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

வயிற்றுவலி, வயிற்று பொருமல்- அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்



கருப்பை பலம்பெற - கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க - உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல் இரைப்பு மாற - நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

சுரக் காய்ச்சல் - அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட - பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.
சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.

சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.

சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.


 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

கிராம்பு /இலவங்கம் CLOVES


மூலிகையின் பெயர் - கிராம்பு /இலவங்கம்
Botanical name – Syzygium aromaticum
English – cloves tree
வேறுபெயர்கள் - அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்

பயன்படும் பாகங்கள் – மொட்டு, இலை, தண்டு
இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும் பெருவாரியாக இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

கிராம்பு ஒரு நறுமணம் மிக்க ஒரு மருத்துவ மூலிகையாகும். சமையல்களில் சுவை
சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன்படுகிறது. அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது.
நாம் பயன்படுத்தும் கிராம்பு என்பது செடியின் மொட்டுக்களாகும். அது பார்ப்பதற்கு நகம் போல் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்கள் நகம் என்ற பொருளில் கிளாவ் என்று பிரெஞ்சு மொழியில் அழைத்தார்கள். ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன் மொழிகளிலும் ‘கிளாவ்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்தியில் இதனை ‘லவங்கம்’ என்று அழைக்கிறார்கள்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், விட்டமின் C மற்றும் A போன்றவை உள்ளன.

கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

இது மூலிகை வகையில் சாதுர் சாதம் எனப்படும். சாதுர் சாதம் என்பது ஏலம் இலவங்கம் இலவங்க பட்டை சிறு நாகப்பூ எனும் நான்கு மணமுள்ள பொருள்களைக் குறிக்கும்.
contd..​

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

கிராம்பு /இலவங்கம் CLOVES

இதன் செய்கைகள்

இசிவகற்றி
அகட்டுவாய்வு அகற்றி
பசித்தூண்டி

பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்
சுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த
இலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்
மலமங்கே கட்டுமென வாழ்த்து.
சுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்
சிக்கல்விடாச் சர்வா சியப்பிணியுமக்குக்குட்
டங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்
வங்கப்பூ வோடுரைத்து வா-அகத்தியர் குணபாடம்
பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் (Hcl) சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதைமாற்றப் பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.
வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்றுவேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.
கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும். ரசனையுள்ள தஞ்சைகாரர்கள் வெற்றிலையுடன் கிராம்பையும் சேர்த்து போட்டுக் கொள்வார்கள். பாடகர்களுக்கும் தொண்டை கரகரப்பை நீக்கும் உடனடி நிவாரணி கிராம்பு.

பெயரிலேயேத் தெரியும் இது ஒரு பூ கிராம் பூ!
ஆனால் தலையில் வைக்க முடியாத தலை சிறந்த பூ!

 

Attachments

Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

arumai..arumai.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

Wonderful information you have shared about Medicinal Benefits of Spices !!!!!! Thank you!!!!!!!!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

வயிற்றுக் கடுப்பு நீங்க இலவங்கப் பட்டை

சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டிஅருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.

சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாடஉணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.


தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதைபாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது.

கருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த இலவங்கப்பட்டை செடியானது இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளாபகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. இலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது.இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்திசெய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.

இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

Tamil - Lavangapattai

English - Cinnamon

Malayalam - karuvapatta

Telugu - Lavangapatta

Sanskrit - Twak

Hindi - Dalchini

BotanicalName - Cinnamomum verum
[TABLE]
[TR]
[TD]தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்

பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்

ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

ஓட்டுமில வங்கத் துரி

சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்

இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்

உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்

கந்தமிகு பூங்குழலே! காண்
- அகத்தியர் குணபாடம்
[/TD]
[/TR]
[/TABLE]

லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமானதுர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண்,குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

இலவங்கப் பட்டை

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை,குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில்லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில்புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்குஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம்அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காகவற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்புமேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலிஉண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன்தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவைகுணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில்சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும்இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு

தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத்தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில்சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.


இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப்பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.
 

Attachments

vaisri02

Commander's of Penmai
Joined
Jun 1, 2012
Messages
2,030
Likes
2,134
Location
Madurai
#9
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

Thank you Chan
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Re: Medicinal Benefits of Spices - அஞ்சறைப் பெட்டி பொருட்களின் மருத்&a

செரிமான சக்தியைத் தூண்ட அன்னாசிப் பூ

ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர்.


ஆனால் இன்றைய அவசர (பாஸ்ட் புட்களில் ) உணவுகளில் இத்தகைய பொருட்கள் சேராமல் இருப்பதால் செரிமான சக்தியின்றி அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இதனால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல், வாயு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்த சீர்கேடு அடைந்து மேலும் பல நோய்களை உருவாக்குகிறது. நோயின்றி வாழ உணவின் மூலமே மருந்தை உட்கொள்ளச் செய்தனர் நம் முன்னோர்கள். இதனை மறந்ததன் விளைவுதான் நோய்களின் தாக்கம்.

இது இந்தியா முழுவதும் காணப்படும். சைனா, கொச்சின் சைனா முதலிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இது இனிப்பு சுவையுடன் சுறுசுறு தன்மையுடன் இருக்கும். இதன் இதழ்கள் அனைத்தும் நட்சத்திரம்போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும்.

பசியைத் தூண்ட


சிலர் பசியின்றி அவதிப்படுவார்கள். சாப்பிட தோணவில்லை என்பார்கள். மிகக் குறைந்த அளவு உணவைக்கூட கடமைக்கு சாப்பிடுவதுபோல் சாப்பிடுவார்கள்.

இத்தகைய பசியின்மைக்குக் காரணம் வாயுக் கோளாறுகளே. இந்த வாயுவுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒருவித மந்தத் தன்மை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப் பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும்.

செரிமான சக்தியைத் தூண்ட

சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம், உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு.

இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும்போதும், அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். குடலின் உட்புறச் சுவர்கள் பலப்படும்.

புளிஏப்பம் மாற

செரிமானமின்மையால் சிலருக்கு புளித்த ஏப்பம் அடிக்கடி உண்டாகும். இவர்கள் அன்னாசிப் பூவை பொடி செய்து 1/2 கிராம் அளவு எடுத்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சாப்பிட்டு வந்தால் புளி ஏப்பம் உண்டாகாது.

உடல் வலுவடைய

உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே. இந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்க செய்யும் தன்மை அன்னாசிப் பூவிற்கு உண்டு. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசிப் பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.

அசைவ உணவு சமைக்கும்போது அதில் மறக்காமல் அன்னாசிப் பூ சேர்ப்பது நல்லது. இதனால் அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் நல்ல சுவையுடன், நறுமணமும் கிடைக்கும்.

அன்னாசிப் பூவின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல்பூச்சாகப் பூசுகிறார்கள்.
 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.