Money Matters

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,790
Location
Germany
இலவச உணவு வழங்கும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிச்சலுகை

1527908781640.png

எவ்வித பாகுபாடும் இல்லாமல், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கி வரும் ஆன்மிக தொண்டு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘சேவா போஜ் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய கலாசார அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, இலவச உணவு வழங்கும் ஆன்மிக தொண்டு நிறுவனங்கள், மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து மத்திய அரசின் பங்காக கிடைக்கும் வரியை திரும்பப் பெறலாம். இதனால், அந்நிறுவனங்களின் நிதிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக 2 நிதி ஆண்டுகளுக்கு ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
திருப்பதி கோவிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு - மத்திய அரசு முடிவு

1528015683422.png

திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.

இதனால் திருப்பதியில் தங்கும் விடுதி, திருமண மண்டபத்திற்குரிய கட்டணம் மற்றும் தங்க டாலர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் லட்டு, வடை விலையும் அதிகரித்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. இதனை காரணம் காட்டி மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து பொற்கோவிலுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
விமான நிலையங்களில் உள்ள கடைகளில் சர்வதேச பயணிகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்

விமான நிலையங்களில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும் என்று ஏ.ஏ.ஆர். எனப்படும் ஆணையத்தின் டெல்லி கிளை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, விளக்கம் கேட்டு வருவாய்த்துறைக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “வரிவிலக்கு பெற்ற கடைகள், ஜி.எஸ்.டி. வசூலிக்காது. அந்த கடைகள், தங்களிடம் பொருட்கள் வாங்கும் சர்வதேச பயணிகளிடம் அவர்களது பாஸ்போர்ட் நகலை மட்டும் கேட்டுப்பெற வேண்டும். அதை ஆதாரமாக வைத்து, மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. வரித்தொகையை திரும்பப்பெறலாம். இதுகுறித்த விளக்கத்தை விரைவில் வெளியிடுவோம்“ என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India




தங்கம் விலை நிலவரம்


சென்னை



22 காரட் 1கி்
2970
15(+0.51%)
24 காரட் 10கி்
31190
160(+0.52%)






வெள்ளி விலை நிலவரம்

சென்னை



வெள்ளி 1 கிலோ
43700
100(+0.23%)
பார் வெள்ளி 1 கிலோ
43700
100(+0.23%)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India


அமெரிக்கா
(டாலர்)

67.53​

ஐரோப்பா
(யூரோ)

79.48​

பிரிட்டன்
(பவுண்டு)

90.51​

ஆஸ்திரேலியா
(டாலர்)

51.35​

சிங்கப்பூர்
(டாலர்)

50.6​

ஹாங்காங்
(டாலர்)

8.61​

ஜப்பான்
(யென்)

0.62​

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,790
Location
Germany
கரன்சி நிலவரம்

அமெரிக்கா(டாலர்) 67.46
ஐரோப்பா(யூரோ) 79.54
பிரிட்டன்(பவுண்டு) 90.26 ஆஸ்திரேலியா(டாலர்) 51.35
சிங்கப்பூர்(டாலர்) 50.56
ஹாங்காங்(டாலர்) 8.6
ஜப்பான்(யென்) 0.61
மலேசியா(ரிங்கட்) 16.93
பக்ரைன்(தினார்) 178.72
ஜோர்டான்(தினார்) 95.22
குவைத்(தினார்) 223.62
ஓமன்(ரியால்) 175.28
கத்தார்(ரியால்) 18.53
சவுதி(ரியால்) 17.99
தாய்லாந்து(பாத்) 2.11
ஐக்கிய அரபு எமிரேடு(திர்காம்) 18.37
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
வங்கிக் கணக்கு இல்லாத மக்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றபிறகு, முன்வைப்புத் தொகை எதுவும் இன்றி ஏழைகள் வங்கிக் கணக்கை தொடங்கலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்க வழி வகை செய்யப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் வங்கி கணக்கு தொடங்கினர்.



இந்நிலையில், வங்கிக் கணக்குகள் தொடர்பான உலகளாவிய ஒப்பீடு வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், உலக அளவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2014-ம் ஆண்டு வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 53 சதவீதமாக இருந்தது. அது 2017ல் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், 191 மில்லியன் மக்களுக்கு (19.1 கோடி) வங்கி கணக்கு இல்லை. இது, வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 224 மில்லியன்மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. பாகிஸ்தான் 99 மில்லியன் மக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது
 
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,790
Location
Germany
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வு எதிரொலி!: சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு





பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு சாதகமற்ற நிலவரங்களால் சென்செக்ஸ் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 139 புள்ளிகள் சரிவைக் கண்டது.

டிரம்ப்-கிம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மூன்று தினங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 0.25 சதவீதம் அதிகரித்து 1.75 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயர்த்தியது. மேலும், வரும் காலங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த வங்கி கோடிட்டு காட்டியதையடுத்து உலக சந்தைகளில் அதன் தாக்கம் உணரப்பட்டது.

மேலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளையும் எதிர்பார்த்து சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு நிலவரங்களைப் பொருத்த அளவிலும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமையவில்லை. மே மாதத்தில் பணவீக்கம் 14 மாதங்கள் காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரமும் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண் 1.40 சதவீதம் சரிந்தது.
ஐசிஐசிஐ பங்கின் விலை அதிகபட்சமாக 2.11 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேநேரம், ஸன் பார்மா பங்கின் விலை 2.57 சதவீதம் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 139 புள்ளிகள் குறைந்து 35,599 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 48 புள்ளிகள் சரிந்து 10,808 புள்ளிகளாக நிலைத்தது.
 
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,790
Location
Germany
பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு





மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 4.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 14 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பொதுப் பணவீக்கம் கடந்த 2017-ஆண்டின் மே மாதத்தில் 2.26 சதவீதமாகவும், நடப்பாண்டு ஏப்ரலில் 3.18 சதவீதமாகவும் காணப்பட்டது.

இந்த நிலையில், எரிபொருள்களின் விலை அதிகரித்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பணவீக்கம் 4.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பாக, பணவீக்கம் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில்தான் மிகவும் அதிகபட்சமாக 5.11 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.

முந்தைய ஏப்ரல் மாதத்தில் 0.87 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மே மாதத்தில் 1.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தை எட்டியதையடுத்து உள்நாட்டில் எரிபொருள்களுக்கான பணவீக்கம் 7.85 சதவீதத்திலிருந்து மிகவும் அதிகரித்து 11.22 சதவீதமானது.

மேலும், காய்கறிகளுக்கான பணவீக்கம் 2.51 சதவீதமாகவும், உருளைக்கிழங்கின் விலை உச்சபட்சமாக 81.93 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டன.

பழங்களின் விலை இரட்டை இலக்கம் அளவுக்கு அதிகரித்து 15.40 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. அதேசமயம், பருப்பு வகைகளின் விலை 21.13 சதவீதம் குறைந்ததாக மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.