Mor Koozh recipe for weight loss - உடல் இளைக்க - மோர்க்கூழ்

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#1
உடல் இளைக்க மோர்க்கூழ்

உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம் ஸ்லிம் ஆகிடுவீங்க.


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
சோயா மாவு – 1/4 கப்
தண்*ணீர் – 2 கப்
மோர் – 2 கப்
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:


* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீ*ர் ஊற்றவும்.


* இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளறவும்.


* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.


* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


* முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.


* சூடாக சாப்பிட்டால் தேவாம்ருதம்தான். உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.


 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
நல்லா இருக்கே.......:goodidea:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.