moral stories

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
#1
ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.
பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.
தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.
எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
#2
ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.

வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை..

ஆனால்,

கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்.....!!

மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்....!!

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்..

அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.

மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம்.....!திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.......!!காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்......!! சில நாள்களில் மாலையில் போகிறான்.......!! இரவில் வீடு திரும்புகிறான்......!!

ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ..? என நினைத்தார்....!!


இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது......!!


தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்......!!


காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.


அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.


ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்......!!


ஆனால்,


'அவன் அப்பாவி'..

'அவன் ஒரு டிரைவர்தான்' என்பது நிருபணம் ஆனதும்,

அவனை விடுவித்து விட்டார்கள்.....!!ஆனால்,

அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது.....!!'நான் என்ன திருடனா....? என்னைப் போய் கைது செய்து விட்டார்களே'....!!எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது’ என்கிற.....கோபமும் ஆற்றாமையும் எழுந்தது......!!அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்.....!!வழக்கு விசாரணைக்கு வந்தது.நீதிபதியிடம் முதியவர் சொன்னார்...

"நான் யாரையும் காயப்படுத்தவில்லை.

வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்..

அவ்வளவு தான் ...!!"டிரைவரோ,

"போலீஸால் தான் அலைக்கழிக்கப்பட்டதை ...,

அந்த அவமானத்தால் மனது பாதித்ததை..

பெரியவர் பரப்பிய வதந்தியால் தான்..!! " என்பதை எடுத்துச் சொன்னான்.நீதிபதிக்கு டிரைவரின் நிலையும்.......,பெரியவரின் வீம்பும் புரிந்தது.......!!

முதியவரை அழைத்து ...,

" நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்.....!!

உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும்


ஒரு காகிதத்தில் எழுதி....,

அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து....,

போகிற வழியெல்லாம்

ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்......!!


நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.....!!அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.நீதிபதி... முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா".......?


"ஆமாம் ஐயா.’’


"நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்......!!

அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.....!!


"அது எப்படி ஐயா முடியும்..?

அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்..!!

அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது....?""முடியாதில்லையா.....!!""அப்படித் தான்...

நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை......!!

ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை.....!!

நம் வாய்க்கு நாம்தான் எஜமானாக இருக்க வேண்டும்....!!அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு....நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்......!!உண்மையில்,வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது......!!

ஏனென்றால்,

அது ஒரு மனிதனின் மதிப்பு,

மரியாதை,

கண்ணியம்,

நல்ல குணம்

அனைத்தையும்

களவாடிவிடுகிறது.அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது......!!"முடிவு:

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்.....!!நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை..

இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்...
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
#3
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
இறைவன் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்!
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
#4
எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
#5
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.
ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.
மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஆறுமாதம் சென்றது.
குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.
""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.
""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.
""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.
""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.
ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.
""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.
நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.
பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.
அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.