Most Innovative and Interestimg Business Leaders

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#31
“Intuition will tell the thinking mind where to look next.” - Jonas Salk

[h=1]ரூபா புருஷோத்தமன்[/h]


இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணராக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2006-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை எவர்ஸ்டோன் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.


இதே நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்கு தலைவராகவும் இருந்தவர்.
இண்டிவிஷன் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். மேலும் இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
இங்கிலாந்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் கல்லூரியில் அறிவியல் மற்றும் மேம்பாட்டு பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
சீனா பொருளாதாரம், உலக வர்த்தகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் அதிக ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டவர்.
கோல்டுமேன்சாக்ஸ் நிறுவனத்தில் சர்வதேச பொருளாதார நிபுணராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#32
“Security is mostly a superstition. Life is either a daring adventure or nothing.” - Helen Keller

[h=1]மார்டின் ஷ்ரோடெர்[/h]


உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.



இதே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.





2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிறுவனத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.



அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் பிஎஸ் பட்டமும் கார்னகிமெலன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.



ஐபிஎம் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா பிரிவின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



கேபிடல் மார்க்கெட்ஸ், அந்நிய முதலீட்டு சந்தை, முதலீடுகள் போன்ற துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.



1992-ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.
ஐபிஎம் நிறுவனத்தின் பொருளாளராக இருந்தவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#33
If you don’t make things happen then things will happen to you. ~ Robert Collier

[h=1]கிரெக் கிளர்க்[/h]


$ சிமென்டெக் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.



$ பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான புளூ கோட் (Blue Coat) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இந்த நிறுவனத்தை சிமென்டெக் கையகப்படுத்தியது.





$ 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை மின்காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றினார்.



$ சங்கிலி தொடர் நிறுவனங்களுக்கான மென்பொருளை அளிக்கும் இ2ஓப்பன் நிறுவனத்தை நிறுவியவர். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தார்.



$ டாஸ்காம் சைபர் பாதுகாப்பு மென்பொருளை உருவாக்கியவர். 1999-ம் ஆண்டு ஐபிஎம் இதனை கையகப்படுத்திய பின்னர் ஐபிஎம் நிறுவனத்தின் டிவோலி சிஸ்டம் மென்பொருள் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.



$ சைபர் பாதுகாப்பு துறையில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர். பிரிஸ்பனில் உள்ள கிரிபித் பல்கலைக் கழகத்தில் கணித அறிவியல் பட்டம் பெற்றவர். நியுமெக்ஸிகோ பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் உயர் கல்வி முடித்தவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#34
There’s no shortage of remarkable ideas, what’s missing is the will to execute them. – Seth Godin

[h=1]தகேஷி நினாமி[/h]


$ உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான சண்டோரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.



$ 2010-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை லாவ்சன் குழுமத்தின் சர்வதேச தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.





$ அமெரிக்காவில் உள்ள லாவ்சன் பல்கலைக்கழகத்தில் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.



$ நைண்டிநைன் பிளஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.



$ யுனிசான் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.



$ 2006-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை ஓரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.



$ கெயோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் முடித்தவர்.
$ சண்டோரி நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
$ மிட்சுபிஷி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#35
Everyone is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will spend its whole life believing it is stupid – Einstein

[h=1]பஜ்ரங் குமார் செளத்ரி[/h]


பாரத் ரோட் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனமான எஸ்ஆர்இஐ நிறுனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.





துறைமுகம், சாலை, குடிநீர் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் முதலீடுகளை நிர்வகிக்கும் அனுபவம் கொண்டவர்.



பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்திய வர்த்தக சபையின் உள் கட்டமைப்பு நிபுணர்கள் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.



உள்கட்டமைப்பு நிதி மேலாண்மையில் 20 ஆண்டுஅனுபவம் கொண்டவர். திட்ட மேம்பாடு, நடைமுறைப்படுத்துதல், மூலதனம் திரட்டல், இணைப்பு மற்றும் கையகப்படுத்துவதில் வல்லுநர்.



நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதில் முக்கிய பங்காற்றியவர். விரைவில் ஐபிஓ மூலம் ரூ. 600 கோடி திரட்ட உள்ளது.



புதுடெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றவர். இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி முடித்தவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#36
"There are two types of people who will tell you that you cannot make a difference in this world: those who are afraid to try and those who are afraid you will succeed." -- Ray Goforth



[h=1]ஸ்காட் ஸ்நெகல்[/h]


உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான இபே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.



2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இபே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.





2005-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை ஜெனரல் எலெக்ட்ரிக் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



2001-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை ஜெனரல் எலெக்ட்ரிக் பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.



விர்ஜினியா கல்வி நிறுவனத்தில் நிதித்துறையில் இளநிலை பட்டமும் பாம்பின் மாகாண கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் நிதி மேலாண்மை திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#37
[h=1]"I find that the harder I work, the more luck I seem to have."[/h]-- Thomas Jefferson

[h=1]RIL chairman Mukesh Ambani becomes Asia's richest person[/h]



RIL on Wednesday became the first Indian company to hit the market capitalisation of Rs 6 lakh crore.

Reliance Industries Chairman Mukesh Ambani on Wednesday overtook China's Hui Ka Yan to become Asia's richest person with a total wealth of $42.1 billion.

According to Forbes' real time billionaire's list, Ambani's personal wealth rose by $466 million, thanks to 1.22 per cent rise in shares of Reliance Industries to Rs 952.30 on Wednesday.

Globally, Ambani stood at the 14th spot on Forbes' real time billionaire's list, which is based on the value of person's stock holding and assets on a real time basis.

Ambani has seen a huge jump in his personal wealth in 2017, as the shares of Reliance Industries have jumped over 75 per cent year-to-date. Last month, RIL had churned out another billion dollar profit in the September quarter thanks to robust growth in gross refining margins and petrochemical revenues.

Consolidated net profit of the company had increased 12.48 per cent year-on-year (YoY) to Rs 8,109 crore for the quarter ended September 30, 2017 against Rs 7,209 crore in the corresponding quarter last year.

RIL on Wednesday became the first Indian company to hit the market capitalisation of Rs 6 lakh crore.

Ambani's telecom rival Sunil Mittal also saw a huge jump in personal wealth on Wednesday. Mittal's real time net worth according to Forbes surged by $751 million to $10.9 billion.

Shares of Bharti Airtel, had surged by 8.19 per cent to Rs 538.40 on Wednesday.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#38
[h=1]போ்ப்ஸ் பத்திாிகை பட்டியலில் இடம்பெற்ற சென்னை பெண்[/h]


30 வயதிற்குட்பட்ட கண்டுபிடிப்பாளா்கள் மற்றும் தொழில் முனைவோாின் பட்டியலில் சென்னையைச் சோ்ந்த அக்ஷ்யா சண்முகம் என்பவரும் இடம்பெற்றுள்ளா்ா.

போ்ப்ஸ் பத்திாிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சென்னையை சோ்ந்த அக்ஷ்யா இடம் பெற்றுள்ளாா். Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான இவா் புகைப்பழக்கம் உள்ளிட்ட பழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்ததை பாராட்டும் வகையில் இவரது பெயா் 30 வயதிற்குட்பட்டவா்களுக்கான புதிய கண்டுபிடிப்பாளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக அக்ஷ்யா சண்முகம் பேசுகையில், போதை பழக்கம், அதனால் நடத்தையில் ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியில் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். இதன்மூலம் தனிநபா்கள் தங்கள் வாழ்வியல் முறை குறித்து தெளிவை பெற முடியும் என தொிவித்துள்ளாா்.

இதற்கான மருத்துவ சாதனத்தையும் அக்ஷ்யா சண்முகம் கண்டறிந்துள்ளாா். இந்த சாதனம் அடுத்தாண்டு சந்தைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் இரண்டு வாரங்களுக்கு பயனாளா்கள் ஸ்மாா்ட் வாட்ச் போன்றிருக்கும் இந்த சாதனத்தை அணிந்துகொண்டு தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இந்த சாதனம் அவருடைய நடத்தை, புகைபிடிக்கும் முறைகள், எந்த சமயங்களில் அவருக்கு புகைபிடிக்க வேண்டும் என தோன்றுகிறது என்பதை ஆராயும். அதன்படி அவருக்கு எப்போது புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னா் அந்த சாதனம் அவருக்கு எச்சாிக்கை செய்யும். இந்த சாதனம் அறிவியல் ரீதியாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டு 95 சதவீதம் சாியாக செயல்பட்டு வருகிறது என்று தொிவித்துள்ளாா்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#39
[h=1]மைக்கேல் ஸ்ப்ரேக்[/h]



ஆட்டோமொபைல் துறை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.



இதற்கு முன் இதே நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் நிர்வாகத் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.


ஆர்தர் அண்ட் ஆண்டர்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.



2013-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட சிறந்த தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி பட்டியலில் இடம்பிடித்தவர்.
ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் உத்திகள் வகுக்கும் பிரிவில் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.



கீப் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.



மஸ்டா மோட்டார் நிறுவனத்தில் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.