Mother is the 1st Role Model of her child-குழந்தையின் முதல் ரோல் மாடல்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]குழந்தையின் முதல் ரோல் மாடல்![/h]‘‘பனிக்குடத்தில் சிறகு விரித்து வளரத் தொடங்கும் செல்லத்தின் குணநலன்களை தாயின் நடவடிக்கைகளே கட்டமைக்கின்றன. அதுமட்டுமல்ல... குழந்தை எவ்வளவு வளர்ந்தாலும், தாய்க்கும் பிள்ளைக்குமான உறவில் ‘தி எண்ட்’ கார்டு போடவே முடியாது. அடுத்தடுத்த தலைமுறையிலும் அது பாட்டியை பற்றிய நினைவுகளாகத் தொடரும்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அருணா விண்ணரசி.




‘‘தாய்மையின் போது பெண்ணுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கியமானவை. ‘லவ் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘ஆக்ஸிடோசின்’ குழந்தையின் மீதான பிணைப்பைப் பலப்படுத்துகிறது. ‘மதரிங் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘புரோலாக்டின்’ பால் சுரக்கும் தன்மையை உருவாக்குகிறது... குழந்தைக்கான ஏக்கத்தை உண்டாக்குகிறது. கருவுற்றிருக்கும்போது தாய் எதிர்கொள்ளும் உணர்வுகளின் அழுத்தமும் அதற்கான தாக்கமும் குழந்தைக்குள் பதிவாகிறது.

பால் குடிக்கத் தொடங்கும்போது பசி தீர்வதுடன், குழந்தைக்கு டென்ஷனும் குறைகிறது... பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறது. அள்ளிக் கொள்வது, முத்தமிடுவது, தாலாட்டித் தூங்க வைப்பது, அழுதால் தேற்றுவது போன்ற உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் குழந்தைக்குள் அன்புக்கான வெளியை விரிவுபடுத்துகிறது. மூளையின் ‘ஹிப்போ கேம்பல்’, ‘அமைடலா’ பகுதிகளை தாயின் அன்பான அணுகு முறை விரிவடையச் செய்கிறது. கருவிலேயே மூளையின் செல்கள் உருவாகிவிட்டாலும், அதற்கான இணைப்புகளை அதிகப்படுத்துவது வெளியில் குழந்தைக்குக் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் வளர்ப்பு முறையும்தான்.

முதல் வருடத்தில் தாய்ப்பால் குடித்திருந்தாலும் குடிக்காமல் இருந்தாலும் அன்பு செலுத்தும் முறையை தாயின் வழியாகவே குழந்தை தெரிந்து கொள்கிறது. தாயின் அன்புதான் மற்ற மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் பழகுவதற்குமான மனநிலையை, சமூகத்தின் மீதான நம்பகத் தன்மையை உருவாக்குகிறது. தாயிடம் அன்பு கிடைக்காத குழந்தையால் மற்றவர்களின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாது. அன்பை செலுத்தவும் வாங்கிக் கொள்ளவும் சிரமப்படும். மற்றவர்களுடன் கலந்து பழகத் தெரியாமல் கெட்ட பெயருக்கு ஆளாகும். பிடிக்காதது நடக்கும் போது மூர்க்கத்தனமாக வன்முறையில் ஈடுபடும். சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், பாலியல்ரீதியான குற்றங்களில்
ஈடுபடுதலுக்கு அன்பான குழந்தைப் பருவம் அமையாமல் போவதும் காரணம்.

அம்மாக்களில் பல வகை. ‘அத்தாரிட்டேரியன்’ வகையைச் சேர்ந்தவர்கள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்பவர்கள்... குழந்தைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க மறுக்கிறவர்கள்... குழந்தையின் உணர்வுகளை, நியாயங்களை புரிந்து கொள்ளாமல் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் விருப்பத்தையும் உணர்வையும் வெளிக்காட்ட பயப்படுவார்கள். சார்ந்து வாழும் மனோபாவத்தைப் பெறுவார்கள். தனக்குப் பிடித்ததையோ, இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதற்கோ கூட தயங்குவார்கள். முடிவெடுப்பதிலும் பிரச்னைகளை எதிர்கொள்வதிலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டே நடப்பவர்களாக வளர வாய்ப்பிருக்கிறது. சுயசார்பில்லாத குழந்தைகளால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியாது.

‘அத்தாரிடேட்டிவ்’ என்பது இரண்டாவது வகை. இந்த அம்மாக்கள், குழந்தை இங்கே, இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்கள். அதே நேரம் அதில் சிரமத்தை சந்தித்தால், தன் கருத்தைச் சொல்ல குழந்தையை அனுமதிப்பார்கள். குழந்தையின் விருப்பத்தையும் நடைமுறைச் சிக்கலையும் புரிந்து கொண்டு மனம் புண்படாத அளவில் மாற்றங்கள் செய்வார்கள். இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தாலும் திணிப்பதில்லை. இவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்லது கெட்டதை வகை பிரித்து பார்க்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். வெளியிடங்களில் சூழலுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு சாதிப்பவர்களாக வளர்வார்கள். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் பக்குவம் இவர்களுக்குக் கிடைக்கிறது. இதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறை.

மூன்றாவது வகை ‘பர்மிசிவ்’. குழந்தைக்கு அதிகபட்ச சுதந்திரம் அளிப்பார்கள். எது கேட்டாலும் வாங்கித் தருவார்கள். இந்த சூழலில்தான் குழந்தைகள், பெற்றோரை ஆட்டுவிப்பவர்களாக மாறுகிறார்கள். தான் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தும் பண்பு உருவாகிறது. இவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரே இடத்தில் பணியாற்ற மாட்டார்கள். தனக்காக எல்லாவற்றையும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திறமை இருந்தாலும் அவற்றை சரியாக வெளிப்படுத்தி, வெற்றியை எட்டுவதற்கான வழியை இவர்கள் தேடுவதே இல்லை. எப்போதும் பிரச்னைகளின் பின்னால் அலைவார்கள்.

‘அன் இன்வால்வ்டு பேரன்டிங்’ நான்காவது வகை. குழந்தையை வயிற்றில் சுமப்பதையே இவர்கள் பெரிய பிரச்னையாக நினைப்பார்கள். குழந்தையை வளர்ப்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். குழந்தையின் பசி, தூக்கம், துக்கத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் நம்பிக்கையின்றி, பயத்துடன் வளர்வார்கள் குழந்தைகள். தனக்குக் கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கிறதே என்ற பொறாமை முளைவிடத் தொடங்கும். திருடுதல், பொய் பேசுதல் போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். பெற்றோருக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதை வீரம் என்று நினைப்பார்கள். சுற்றி இருப்பவர்களிடம் பய உணர்வை ஏற்படுத்துவார்கள். பின்னாளில் சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபடவும் அக்கறையற்ற வளர்ப்பு முறையே காரணம் ஆகிறது.

குழந்தையின் முதல் ரோல் மாடல் ‘அம்மா’. அம்மாதான் உறவுகளையும் உணர்வுகளையும் அறிமுகம் செய்கிறார். தாயின் நடத்தையே குழந்தை கற்றுக் கொள்ளும் முதல் பள்ளி. தாயின் அன்பு, நல்ல மனிதர்களை இனம் கண்டுகொள்வதற்கான வழியமைத்துக் கொடுக்கிறது. தாயின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள் கூட குழந்தையை செதுக்கி உருவாக்குகின்றன. தாய்மை எனும் மந்திரம் ஒரு குழந்தையின் மனதுக்குள் இவ்வளவு மாயங்கள் செய்கிறது. ஒவ்வொரு தாயும் இவ்வளவு பொறுப்புகளையும் உணர்ந்து குழந்தையை வளர்க்க வேண்டும். அப்போதுதான் மழை கண்டு விரியும் மயில் போல சக மனிதரின் வலியுணர்ந்து உதவும் மனிதர்கள் இந்த சமூகத்துக்கு கிடைப்பார்கள்!’’
 

Aarushi

Citizen's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
533
Likes
1,322
Location
Sri Lanka
#2
Re: குழந்தையின் முதல் ரோல் மாடல்!

Great Article!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவே&

பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் !!!

உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்று தான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும் .

தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார் குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது .

எனவே தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் வழிகளை பட்டியலிட்டு உள்ளனர் குழந்தை தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பெற்றோர் அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர் இது குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும் எனவே குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள், இது உறவை வலுப்படுத்த உதவும்.

தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம். தன்னார்வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.

மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். எனது முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள், நானும் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள்

குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். அவர்களை இப்படித்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனைகளை மட்டும் வழங்குங்கள்.

தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள். சைக்கிளிலிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். சைக்கிளை தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள். முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள். பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள், தனியாக விளையாட விருப்பமின்றி, ஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். எனவே, பெரிய அளவிலான விளையாட்டுக்களைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக
அமையவில்லை. இப்படியாக புலம்பாதீர்கள். கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாது. அப்போதுதான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும்.

ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போது, அதனை பொறுமையாகவும், கவனமாகவும் கேளுங்கள். இது குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும். அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுதலித்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும். முன்னேற்றத்துக்கு தடையாக அமையும்.

குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படிப் பட்ட நேரத்தில், குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக பேசி வேதனைக்கான காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும்.

குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைக ளுக்கு ஊக்கம் அளிக்கும்.

குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அவர்களுடைய திறமையையும் விருப்பத் தையும் அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.

குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களு டைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள்.

இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள். அவர்களுடைய தவறுகளையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங்குங்கள். பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள். குழந்தையிடம் கோபமாக பேசினால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும்.








 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.