MSG disables the active Children-சுறுசுறுப்பான குழந்தைகளையும் முட&#296

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சுறுசுறுப்பான குழந்தைகளையும் முடக்கும்!


மேகி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகள் மற்ற நிறுவன நூடுல்ஸை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இப்படியாக தன் சுவையால் குழந்தைகளை வசியப்படுத்தியிருக்கும் நூடுல்ஸ் சுவையூக்கிகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூறுகிறார் குழந்தைகள் நல நிபுணர் ஆத்மார்த்தன்...

‘‘மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பு அதிக அளவு சேர்ப்பதுதான் நூடுல்ஸின் மிகுசுவைக்கு காரணமாகும். பன்றியின் குடலில் உள்ள தேவையற்ற அமினோ அமிலங்களில் இருந்து மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பை தயாரிக்கிறார்கள். நல்ல சுவைதான் விற்பனைக்கு அடித்தளமாக இருக்கிறது என்பதால் உணவுப் பொருட்களில் சேர்க்கவே கூடாத இந்த உப்பை 67 சதவிகிதம் வரையிலும் சேர்க்கிறார்கள். இதனால் குழந்தைகளோடு, பெரியவர்களும் கூட இதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக மெழுகுப்பூச்சு செய்யப்படுகிறது. இந்த மெழுகானது உடலை விட்டு வெளியேற குறைந்தது

4 நாட்கள் ஆகும். குறிப்பிட்ட நூடுல்ஸில் 17 பங்குகள் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமான இந்தக் காரீயம் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, கை கால் உதறல், நடுக்கம், மன இறுக்கம் ஆகியவற்றை கொண்டுவரும். இதனால் குழந்தைகளின் இயல்பான சுறுசுறுப்பை பாதித்து முடக்கிப்போடும்.

மோனோ சோடியம் க்ளூட்டோமேட் உப்பானது குழந்தைகளின் உடலில் அதிகம் சேர்ந்தால் நச்சுத்தன்மையை அதிகமாக்கி மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கும். இதயத் துடிப்பை அதிகப்படுத்தி இதய நோய்கள், மிகை ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும்காரணமாகும்.

நூடுல்ஸ் மட்டுமல்ல... பாக்கெட்டிலும் டின்னிலும் அடைத்து வரும் பதப்படுத்தப்பட்ட எந்த உணவு வகைகளையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. வீட்டில் அளவான உப்போடு சமைத்த சத்தான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்...’’

நூடுல்ஸ் மட்டுமல்ல...பாக்கெட்டிலும் டின்னிலும் அடைத்துவரும் பதப்படுத்தப்பட்ட எந்த உணவையும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

ரகசிய வார்த்தைகள் ஏன்?

மேகி நூடுல்ஸில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் குறித்துக் கூறுகிறார் வேதியியல் பேராசிரியர் வெங்கிடுசாமி நாராயணன்...

‘‘உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கிற அளவைவிட பல மடங்கு அதிகமாகத்தான் பெரும்பாலான உணவுப் பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்து விற்பனையாகி வருகின்றன. மேகி மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஒரு நிறுவனம் தயாரிக்கிற பொருளின் தரம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க
வேண்டும்? ஆனால், கேரளாவில் ஒரு அளவும் உத்தரப்பிரதேசத்தில் சோதிக்கப்பட்ட மேகியில் வேறு அளவும் என மாறுபட்ட சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இதுவே ஒரு மோசடிதான்!

அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும் போது 150 டிகிரிக்கும் மேல் பாத்திரம் சூடாகும்போது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு வெளியாவதால், அலுமினியம் கரைந்து உணவுப்பொருளுடன் கலந்துவிடுகிறது. இதனால்தான் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களிலும் மண்பாண்டங்களிலும் சமைக்கச் சொல்கிறார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவு, கார் பேட்டரி, பெயின்ட், டீசல் புகை போன்றவற்றில் இருக்கும் காரீயம் நாம் சாப்பிடும் உணவில் கலந்தால் சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள், மூளை வளர்ச்சியின்மை போன்றவை ஏற்படலாம். பொதுவாக காரீயம், குரோமியம், மெர்க்குரி போன்ற ரசாயனங்கள் சுத்தி
கரிக்கப்படாத தண்ணீரிலிருந்தே உணவுப் பொருளில் கலக்கிறது.

உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்தப்படும்போது இந்த ரசாயனங்கள் கலந்துவிடலாம்.

மோனோ சோடியம் க்ளூட்டோமேட், நிறத்துக்காக சேர்க்கப்படும் சாயங்கள் எல்லாமே புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஆபத்தான ரசாயனங்களை நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணத்துக்கு மோனோ சோடியம் க்ளூட்டோமேட்டை E 621 என்று குறிப்பிட்டிருந்தால்
மக்களுக்கு ரகசிய வார்த்தைகள் புரிய வாய்ப்பில்லை.

‘It contains no fruit’ என்று குளிர்பானங்களில் குறிப்பிடும்போது, ‘இது செயற்கை பானம்’ என்று புரியும். அது போல எல்லோருக்கும் புரிகிற வகையில் வேதிப்பொருட்களின் பெயரை குறிப்பிட வேண்டும் என அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்!’’

உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்தப்படும்போது காரீயம் போன்ற ரசாயனங்கள் கலந்துவிடக் கூடும்.

பாரம்பரியம் இருக்க பயம் ஏன்?

நூடுல்ஸ் ஒன்றும் நமது பாரம்பரிய, அத்தியாவசிய உணவுப் பொருள் கிடையாது. நூடுல்ஸுக்கு மாற்றாக எத்தனையோ சத்தான உணவு வகைகள் இருக்கின்றன

என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்...

‘‘பாரம்பரிய உணவு வகைகளை விடவும், நூடுல்ஸ் போன்ற நவீன துரித உணவுகள்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என பெற்றோர்களே நினைத்துக் கொள்கின்றனர். இதனால் சத்தான உணவுகளை சமைத்துத் தருவதில்லை.

நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் மாவுச்சத்து, கொழுப்பு சத்து ஆகியவை மட்டுமே இருக்கின்றன. காய்கறிகளும் மிகவும் குறைவான விகிதத்தில்தான் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிற குழந்தைகள் பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

கேழ்வரகு தோசை, கம்பு தோசை, ஊத்தப்பம் போன்ற பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

கேழ்வரகு, கம்பு மாவை முதலிலேயே அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படும்போது ஐந்தே நிமிடத்தில் தோசை, ஊத்தப்பம் ஊற்றிக் கொடுக்கலாம். கோதுமை மாவுடன் முருங்கைக்கீரை சேர்த்து அடை செய்து, தொட்டுக்கொள்ள தேங்காய், வெங்காயம், தக்காளி சட்னி அரைத்துக் கொடுக்கலாம்.

இந்த உணவுகளைக் குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பிச் சாப்பிட வேண்டுமெனில், அவற்றின் மீது புதினா இலைகள், சீஸ் தூவி கொடுக்கலாம். ஊத்தப்பத்தில் பட்டாணி கலந்து கொடுக்கலாம்.

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் புரதம், சுண்ணாம்பு, இரும்பு ஆகிய சத்துகள் ஏராளமாக உள்ளன. அதனால் நூடுல்ஸ் போன்ற துரித உணவுக்கு குழந்தைகளை இரையாக்கத் தேவையில்லை.’’

நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிற குழந்தைகள் பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்!

தொடர் கண்காணிப்பு அவசியம்!

தரமான பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பது தொழில் நிறுவனங்களின் கடமை மட்டுமல்ல... நுகர்வோரது உரிமையும் கூட. மேகி நூடுல்ஸுக்கு எதிரான இந்த நடவடிக்கை போல இன்னும் பல உணவுப்பொருட்கள் மீதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் நுகர்வோர் காவலர் தேசிகன்...

‘‘மோனோ சோடியம் க்ளூட்டோமேட் பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை எனக்கு வரவில்லை. ஆனால், உறையில் எம்.எஸ்.ஜி. இல்லை என்று சொல்லிவிட்டு, உள்ளே கலந்திருந்தால் அது நிச்சயம் மோசடிதான். அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக இருந்தால் அது மிகப்பெரிய மோசடி.

மோனோ சோடியம் க்ளூட்டோமேட் என்கிற எம்.எஸ்.ஜி. இயற்கையாகவே காய்கறிகளிலும் பழங்களிலும் கலந்திருக்கும் ஒரு புரதம். இதை செயற்கையாக வேதிப்பொருட்களைக் கொண்டு தயார் செய்கிறார்கள். செயற்கையாக தயாரிக்கப்படும் வேதிப்பொருள் அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாக சேர்க்கப்படும்போதுதான் பாதிப்பு ஏற்படுகிறது.

மேகியில் எம்.எஸ்.ஜி.யைவிட காரீயம்தான் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈயத்துக்கு 2.5 பி.பி.எம். அளவு அனுமதி அளித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், மேகியில் 5 பி.பி.எம். அளவு காரீயம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த காரீயம் ஒரு முறை உடலுக்குள் சென்றுவிட்டால் வெளியேறுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். நெஸ்லே நிறுவனம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு தரமான நூடுல்ஸை தயாரிக்கிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலோ தரம் குறைந்த நூடுல்ஸை தயாரிப்பதிலேயே, அதன் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

மேகி நூடுல்ஸை மட்டுமே கவனிக்காமல், நம் தினசரி வாழ்க்கையில் கலந்திருக்கும் எல்லா உணவுப் பொருட்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். ஒரு உணவுப் பொருளுக்கு அனுமதி கொடுக்கும்போது மட்டும் பரிசோதித்தால் போதாது. தொடர் கண்காணிப்பு அவசியம் என்பது மேகி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் இன்னொரு முக்கியமான பாடம்!’’

உணவுப் பொருட்களின் தரம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இச்சூழலில், நம் தினசரி வாழ்க்கையில் கலந்திருக்கும் எல்லா உணவுப்பொருட்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியது இன்றைய தேவை.

உயிரோடு விளையாட உதவலாமா?
மேகி நூடுல்ஸை தடை செய்ததுமே அதன் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. ‘விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரத்துக்கு நடிகர்கள் எப்படி பொறுப்பாக முடியும்’ என்று கொந்தளிக்கின்றனர் திரைத்துறையினர். விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொருளின் தரம் குறித்து தெளிவும் பொறுப்புணர்வும் அவசியமா? மருத்துவர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.

‘‘சட்டரீதியில் பிரபலங்களுக்கும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரத்துக்கும் தொடர்பில்லை என்றாலும், மனித நெறிமுறைகளின்படி பார்த்தால் நிச்சயம் பொறுப்பு இருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பது தவறல்ல. தான் விளம்பரப்படுத்தும் பொருள் எப்படிப்பட்ட பொருள் என்பதை அறிந்து கொள்வதுதான் அவசியம். குளிர்பான விளம்பரங்களில் இந்தியாவின் மிக முக்கிய நட்சத்திரங்களும் விளையாட்டு வீரர்களும் நடிக்கிறார்கள்.

அவற்றுள் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டறியப்பட்டது. பிறகு ஒரு நடிகை அந்த ஆலையை சுற்றிப்பார்த்தது போலவும் இதன் தயாரிப்பில் எந்தப் பிரச்னையும் கிடையாது எனவும் கூறும் விளம்பரத்தை வெளியிட்டார்கள். அந்த குளிர்பானங்கள் இன்றளவிலும் உடல்நலத்துக்கு
உகந்ததல்ல என்பதுதான் உண்மை.

மேகி நூடுல்ஸ் நிறுவனம் விளம்பரத்துக்கென இந்த ஆண்டில் 445 கோடி ரூபாயை செலவிட்டிருக்கிறது. தரக்கட்டுப்பாட்டுக்கென 19 கோடி ரூபாயை மட்டுமே செலவழித்திருக்கிறது. தரத்துக்கான செலவை விட பன்மடங்கு அதிகமாக விளம்பரங்களுக்குச் செலவிடும்

நிறுவனத்திடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? நகை விளம்பரமாகவோ, கார் விளம்பரமாகவோ இருந்தால் கூட அது தரமற்று இருந்தால் ஒரு நுகர்வோர் பொருளாதார ரீதியில் மட்டும்தான் பாதிக்கப்படுவார்.


உணவுப் பொருள் என்று வரும்போது அது உயிர் சம்பந்தப்பட்டது அல்லவா? உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிந்து தடுப்பதற்காக உணவுக்கலப்படத் தடுப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது. அவற்றை இன்னும் ஊக்குவித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் உணவுப்பொருட்களுக்கான பரிசோதனை மையத்தை தொடங்க வேண்டும்... தரமான உணவைப் பெறுவது நம் எல்லோரது உரிமை என்பதை மனதில் கொள்வோம்!’’

உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருள் என்று தெரிந்தும், அதை தங்களது ரசிகருக்கு பரிந்துரைப்பது துரோகத்துக்கு ஒப்பானது.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: MSG disables the active Children-சுறுசுறுப்பான குழந்தைகளையும் முட&

Thanks for the caution.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.