Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
விரல்கள் செய்யும் விந்தை!​

நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை !
மது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

எப்படிச் செய்வது?
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.


கட்டளைகள்

தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.

முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

பலன்கள்
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.


அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.

சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.

வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.

எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.

நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.

வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும்.
வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும். மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்.
 
Last edited:

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#2
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

Easy and Healthy sharing sister @chan
 

mahimana

Friends's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
323
Likes
799
Location
kalmunai
#3
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

useful info.. TFS sis:)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

மூலம் குணமாக!-அபான வாயு முத்திரை​
அந்தக் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, உடலைச் சுத்தம் செய்ய, நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதி மருந்து எடுத்துக்கொள்வது எனச் சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தனர்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்ட காலத்திலேயே உடலைச் சுத்தம் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரத்தில் உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும்.

உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

எப்படிச் செய்வது?
கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பலன்கள்
வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.
பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும்.

வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.

மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.
[HR][/HR]
கட்டளைகள்
நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது.

காலை, மாலை இருவேளையும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்னை இருக்கும்போது செய்யக் கூடாது.

கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

சம ஆற்றல் தரும் சமான முத்திரை
மது உடலில் பஞ்சபூதங்களின் ஆற்றல்கள் உள்ளன. விரல்கள் இதன் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. கட்டை விரல் - அக்னி, ஆள்காட்டி விரல் - வாயு, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், சுண்டு விரல் - நீர். இந்த ஐம்பூதங்களின் ஆற்றல் உடலில் சமஅளவில் இயங்கும்போது, உடலிலும் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது. இந்த சமவிகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது நோயாக உருவெடுக்கிறது.
பஞ்சபூதங்களில் மண் அதிகமானால், உடலின் எடை அதிகரித்து மந்தத்தன்மை ஏற்படும். இதுவே குறைந்தால், தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். நீர் அதிகமானால், கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் வரும். இது குறைந்தால், சரும வறட்சி, தாகம், வயதான தோற்றம் ஏற்படும். நெருப்பு அதிகமானால், உடல் வெப்பம் அதிகரிக்கும். குறைந்தால், ஹார்மோன் குறைபாடுகள் உண்டாகும். வாயு மற்றும் ஆகாய பூதங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் வரும். எனவேதான் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி, சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலையாவதால், உடலுக்கு அபரிமிதமான ஆற்றல் கிடைக்கிறது.


பலன்கள்

உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது.

அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக, மூளை சுறுசுறுப்படையும்.


பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர, தெம்பு கிடைக்கும்.


உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால், இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.


தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.


கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும்.


தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து, சுறுசுறுப்பாகத் தயாராக முடியும். தன்னம்பிக்கை, மன உறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும்.


தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.


நீச்சல், ஓட்டப்பந்தயம், பளுத் தூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபவர்கள், தினமும் செய்துவந்தால் மனம் உறுதியாகும். உடல் சோர்வு அடையாது.


வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும்.


எந்த முத்திரை நமக்குச் சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள், சமான முத்திரையை மட்டும் செய்தாலே போதும், நல்ல தீர்வு கிடைக்கும்.

எப்படிச் செய்வது?
ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவேண்டும்.

கட்டளைகள்
சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து, பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்ய வேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது.

முத்திரை செய்யும்போது, உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.


ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.


அனைவரும் செய்யலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

விரல்கள் செய்யும் விந்தை!

‘எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பது பழமொழி. அதாவது, உடலுக்குத் தலை மிகவும் முக்கியம். அந்தத் தலை தொடர்பான பிரச்னைகளுக்குத் சிறந்த தீர்வாக இருப்பது ‘மகா சிரசு முத்திரை’.

‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம். சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

பலன்கள்

நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.

மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல்போதல் பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

படிப்பில் மந்தத்தன்மையுள்ள மாணவர்கள் இந்த முத்திரையைச் செய்வதால் மூளையில் ரத்த ஓட்டம் சீராகி, மூளை செல்கள் புத்துணர்வு பெறும். படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

மன அழுத்தம் குறையும். வயோதிகத்தால் ஏற்படும் சோர்வு நீங்கும்.

பார்வைத்திறன் குறைபாடு, இமைகளில் ஏற்படும் கட்டி, வீக்கம், கண்களின் வெளிபக்க ஓரங்களில் பார்வை மறைதல் போன்ற பிரச்னையைத் தீர்க்கும்.

காது குறுகுறுப்பு, காதில் நீர் மற்றும் சீழ் வடிதல், காது வலி, காதைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் வலி போன்றவை சரியாகும்.

தாடைகளில் ஏற்படும் வீக்கம், கழலைகள், உமிழ்நீர் சுரப்பி வீக்கம் குணமாகும்.

தொண்டை மற்றும் உள்நாக்கில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, அடிக்கடி சளி வெளியேறுதல் ஆகியவை சரியாகும்.

குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.

சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.

 
Last edited:

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#8
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

Useful sharing lakshmi sis ... thank you
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#9
re: Mudras for Health - ஆரோகியதிற்கான விரல் முத்திரைகள்

Very useful details.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.