Must know things Before visiting new born - குழந்தையை காண செல்பவர்கள் யோசிக்

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
ஒரு குடும்பத்தில் குழந்தை வரவு என்பது மகிழ்ச்சி தரும் தருணம்... அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துக்க நம் சுற்றம், நட்பு, உறவினர்கள் மிகவும் ஆசையுடன் குழந்தையை காண வருவார்கள்... குழந்தையை பார்க்க வரும் நமது அன்பிற்குரியவர்கள் முதலில் நேராக வந்து குழந்தையை தூக்குவார்கள்(தொட்டிலில் தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைகளை எழுப்பியும்), அவர்கள் வாயில் கை வைத்து கொஞ்சுவார்கள், கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள்... சிலர் குழந்தைக்கு புத்தாடைகள் வாங்கி வந்து உடனே அதை குழந்தை அணித்து இருக்கும் ஆடைகளை களைந்து தாங்கள் கொண்டு வந்த ஆடைகளை போட்டு அழகு பார்ப்பார்கள்... இன்னும் சில பேர் தாங்கள் வாங்கி வந்த இனிப்பை கூட பிட்டு கொஞ்சமாய் ஓடியும் விடுவார்கள்...


யோசிக்கலாமே.....


  • குழந்தையை பார்க்க வரும் அன்பிற்குரியவர்களே, முதலில் குழந்தை பார்க்க வீடு வந்தவுடன் கை, கால்களை நன்கு அலம்பிய பின் வீட்டினுள் செல்லுங்கள்...அல்லது குழந்தையை தூக்கும் முன்பாகவாவது கை கால்களை நன்றாக கிருமி நாசினி சோப்பு வைத்து கழுவி விட்டு குழந்தையை தூக்குங்கள். அப்படி செய்தால்.. நீங்கள் வெளியில் இருந்து எடுத்து வரும் கிருமிகள் குழந்தையை அண்டாமல் சிறிது தவிர்க்கலாம்..
  • தூங்கும் குழந்தையை எழுப்புபவர்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்... குழந்தையின் தூக்கம் எவ்வளவு முக்கியம்... ஒரு தாய் குழந்தையை தூங்க வைக்க குறைந்தது 45 நிமிடம் பால் குடுக்க வேண்டும்...அதன் பின்பும் ஒரு 45 நிமிடம் அக் குழந்தை தூங்கும்.. அந்த நிமடங்கள் தாயின் தூக்கத்திற்கு மிகவும் முக்கியமானவை... அப்படியே அந்த தாய் தூங்க வில்லை என்றாலும், அமைதியை நேரம் செலவழிக்க விரும்புவாள்.. ஆதலால்.. தூங்கிட்டு இருக்கும் குழந்தையை தயவு செய்து எழுப்பி அதை கொஞ்சாதீர்கள். ஒரு ௨௦ நிமிடம் அல்லது ௨௫ நிமிடத்தில் ஆண்ட குழந்தையே எழுந்து விடும்... அதன் தூக்கமும் கெடாது.. அந்த தாயின் பொறுமையும் போகாது.... ஆகையால் யோசியுங்கள்...
  • குழந்தையை கொஞ்சும் பொது தயவு செய்து வாயில் கைவைத்து கொஞ்சாதீர்கள். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி முதல் மாதங்களில் மிகவும் குறைவு... ஆதலால் நீங்க இவ்வாறு முகத்தில் கை வைத்து, முகம் வைத்து கொஞ்சும் பொது உங்கள் மூலமாக கிருமிகள் குழந்தையிடம் பரவ வாய்ப்புள்ளது... எனவே யோசியுங்கள்...
  • குழந்தைக்கு உங்கள் அன்பை காமிக்க உடனே நீங்கள் வாங்கி வந்ததை போட்டு அழகு பார்த்தல் தான் ஆகும் என்று அடம் பிடிக்காதீர்கள்... பிறந்த குழந்தைக்கு எப்பொழுதும் கொஞ்சம் உபயோகித துணிகளை தான் முதலில் போடுவார்கள்..புது துணிகளாக இருந்தாலும் அதை ஒரு முறை துவைத்து அதன் பின்பு தன அதை போட வேண்டும்.. இல்லை என்றால் அந்த துணிகளில் உள்ள கிருமிகள், ரசாயனங்கள், dye இவை எல்லாம் குழந்தையின் உடலை உறுத்தும்... அதனால்... யோசியுங்கள்...
  • பிறந்த குழந்தைக்கு தயவு செய்து... கடையில் வாங்கி வந்த திண்பண்டங்களை ஒரு துளி அளவேனும் அவர்கள் நாக்கில் வைகாதிர்கள்... குழந்தைக்கு தாய் பால் தவிர எதுவும் நல்லதல்ல என்பது உங்களுக்கே தெரியும்.. எனவே யோசியுங்கள்...


இவை அனைத்தும் தங்கள் குழந்தைகள் என்று வரும் பொழுது நியாபகம் இருக்கும்.. மற்ற குழந்தையை பார்க்க செல்லும் பொழுது மறந்து விடும்... எனவே...இதை குழந்தையின் தாய் சொன்னாலும்.. தவறாக எடுத்து கொள்ளாமல்... உங்களை அவமதித்ததாக எடுத்து கொள்ளாமல்... குழந்தையின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி யோசித்து செயல் படுங்கள்....
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#2
re: Must know things Before visiting new born - குழந்தையை காண செல்பவர்கள் யோசிக&#3

எல்லாமே சரியான யோசனைகள்தான். இதைவிட கொடுமை, தூங்கும் சிசுவை எழுப்பி கண்ணை திறக்க வைத்து, அது அழ ஆரம்பிக்கும் போது தாயின் கைகளில் “ ரொம்ப கத்தறா பாரு, இந்தா உன் பொண்ணு” என்று கொடுப்பதுதான். சிலருக்கு தானாகவும் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
re: Must know things Before visiting new born - குழந்தையை காண செல்பவர்கள் யோசிக&#3

ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள்...! எல்லா தாய்மார்களின் உள்ளக் கிடங்கை அப்படியே பிரதிபலித்தாற்போல் உள்ளது. நன்றி!

சுமதி ஸ்ரீனி
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#4
re: Must know things Before visiting new born - குழந்தையை காண செல்பவர்கள் யோசிக&#3

yenna panrathu shaalam... maatram ore naalil vandhuraathu... innum naam veetuku vandha vargalukku ketaamale cofee thane kalanthu kudukurom.. sakkarai avungalukku othukuma othukaathanu kooda ketka thavaridurom... innum kodi sutri piranthaal maamanukku ennaiyil thaane kuzhandhaiyai kaamikirom... Kodi sutri piranthathukku anda kuzhandhai enna seiyum, maaman enna seivaar, thaai enna seivaal. Ithu muzhuvadhumaaga kuzhandhai vayirukkul irukum podhu athoda movements poruthu, athoda positions poruthu...... Aaana athuku oru kathai solli naam namallae vathachikirom... yosikka vendiya vishayathil ithuvum onru....
Namakku mundhaya thalaimuraiyai maatra Mudiyavillai endral.... nam thalaimurai maara muyarchipom!!!:)
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
re: Must know things Before visiting new born - குழந்தையை காண செல்பவர்கள் யோசிக&#3

Nanri Sumathi....Thaayaga irupathaal than inda kashtam ellam pagirnthukuren... Athuvum...Veli naatil pirantha pillaigal indiavirukku vandhu Thevaiaana noi ethirppu sakthi illamal kashata paduvathai paarthu, anubavithu, indha karuthai pagirnthu kondhu irukiren....:)

Ella pengalum vera vera maathiri kunam udayavargala irupargal.. Aanal athe pengal, thaayaga irukum podhu,kuzhandhaiyin nalam endru varum pozhuthu ore ennam padaithavargal...:)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.