My son is not speaking...

Joined
Jan 24, 2012
Messages
15
Likes
9
Location
tirupur
#1
எனது மகனுக்கு ஒரு வயது முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. அப்பா என்று மட்டும் சொல்கிறான், அம்மாவோ மற்ற வார்த்தைகளோ அவனுக்கு பலமுறை சொல்லி கொடுத்ததும் அவன் சொல்லவில்லை, ஆனால் நம் சொல்லும் வார்த்தைகளை புரிந்து கொள்கிறான். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சில பேர் மருத்துவரிடம் பரிசோதிக்க சொல்கின்றனர். அவனுக்கு சீக்கிரம் பேச்சு வந்துவிடுமா இல்லை மருத்துவரிடம் அணுக வேண்டுமா
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,749
Location
Bangalore
#2
கவலை படாதீங்க ஜெயபிரபா .

எல்லாக் குழந்தைகளும் 1 வயதிலேயே பேசிவிட மாட்டார்கள் . நிறைய குழந்தைகள் 3 வயதில்தான் பேச ஆரம்பிப்பார்கள் . இதில் எந்தத் தவறும் இல்லை. குறையும் இல்லை.

உங்கள் மகன் எப்போது "அப்பா " என்ற வார்த்தையை சொல்கிறானோ , அவனைப் பற்றிக் கவலையே படத் தேவை இல்லை . கண்டிப்பாகப் பேச்சு வந்து விடும் .

நீங்கள் கேள்வி கேட்டு இப்போது 1 1/2 வருடங்கள் ஆகின்றது . இப்போதே (2 1/2 வயது ) உங்கள் மகன் பேச ஆரம்பித்து இருக்கலாம் .

டாக்டரிடம் சென்றாலும் , இதையேதான் சொல்வார்.
சில குழந்தைகள் , எந்த ஒரு வார்த்தையையும் பேசவே பேசாமல் , திடீரென்று 3 வயதில் பேச ஆரம்பித்து விடுவார்கள் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.