Natural ways to get rid of Mosquito - கொசுக்களை விரட்ட ஒரு இயற்கை வழி !!

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
991
Location
Switzerland
#1
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு கொசு வரவே வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்.

வேம்பு இலையை எரித்து வீட்டில் காட்டினால் ஈ மற்றும் கொசுக்கள் அண்டாது.
மேலும் கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்,ஹார்ஸ்மின்ட் எனும் தாவரங்களை வீட்டு தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.

வெங்காயச் சாற்றைப் படுக்கையை சுற்றித் தெளித்து விட்டால் கொசுக்கள் வராது.
தேங்காய் நார்களை வாங்கி வந்து மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி அனைத்து அறைகளிலும் அந்த புகையை காண்பித்தால் சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது கொசுக்கள் வராதது தெரியும் .

இந்த டிப்ஸ் யாவும் இணையத்தில் கிடைத்தவை !!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.