Naval pazham

Joined
Sep 18, 2011
Messages
47
Likes
17
Location
Chennai
#1


நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழங்கள் விற்பதை பார்த்து ஏதோ தேவையில்லாதை பார்பதுபோல் அலட்சியமாக பார்த்து செல்வார்கள். ஆனால் கிராமங்களில் சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது.

நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு.

பழத்தின் மருத்துவபண்புகள்
 • நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும்.
 • நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும்.
 • மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம்.
 • பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.
 • பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும்.
 • சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும்.
 • பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு.
 • பழத்தை அதிகமாக உண்டால் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
 • பழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.
விதையின் குணங்கள்
 • நாவல் பழ கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது.
 • விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும்.
 • இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.
இலையின் குணம்
 • நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும்.
 • நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.
மரப்பட்டையின் குணம்
 • நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது.
 • நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம்.

நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
 • புரதம் 0.7 கிராம்
 • கொழுப்பு 0.3 கிராம்
 • மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
 • கால்சியம் 14.0
 • பாஸ்பரஸ் 15
 • இரும்பு 1.2
 • தயமின் 0.03
 • நியாசின் 0.2
 • வைட்டமின் சி 18
 • மெக்னீசியம் 35
 • சோடியம் 26.2
 • பொட்டாசியம் 55
 • தாமிரம் 0.23
 • கந்தகம் 13
 • குளோரின் 8
 • ஆக்சாலிக் அமிலம் 89
 • பைட்டின் பாஸ்பரஸ் 2
 • கோலின் 7
 • கரோட்டின் 48

இனி தெருவில் நாவல் பழத்தை பார்த்தால் வாங்கி ருசிப்பார்த்துவிடுங்களேன்! சீசன் முடியும் முன்!!

நன்றி: kaalnadaidoctor
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.