Need a Gift from you for Penmai's 5th Birthday!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,408
Location
Coimbatore
#1
நம் தோழி பெண்மை இணைய உலகில் உயிர்த்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்று இதோ உங்கள் அனைவரின் பேராதரவோடு ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள் (May 20). இந்த இனிய தருணத்தை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இதுவரை பெண்மையின் இணைய பயணத்தில் உறுதுணையாக இருந்த தோழமைகள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். கடந்த ஐந்து வருடங்களாக வேறு வேறு பரிமாணங்களில் உங்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவள், இனி வரும் காலங்களிலும் உங்களோடு கை கோர்த்து, உங்கள் அனைவரின் ஆசியோடும், பேராதரவோடும், இன்னும் புதுப் பொலிவுடனும் பற்பல ஆக்கங்களுடனும் வலம் வருவாள்...

இத்தருணத்தில் பெண்மையின் சார்பில் உங்கள் அனைவரிடமும் சிறு வேண்டுகோள், நம் நாட்டிற்கும், அடுத்த தலை முறையினருக்கும் பயன்படும் விதமாக, பெண்மையின் பிறந்த நாள் அன்று ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எழில் கொஞ்சும் நாடாகத் திகழ்ந்த நம் இந்தியா இன்று மரங்களற்ற பாலை நிலமாக மாறி வருகின்றது. புவி வெப்பம் அடைந்து உயிரினங்கள் அனைத்தும் அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கியக் காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க நம் பெண்மை வாசகர்கள் முன் வர வேண்டும். இது நம் கடமையும் ஆகும்.

இதுவே பெண்மைக்கு பிறந்தநாள் பரிசாக நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது "ஒரு மரமாவது நட்டு வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்". முடிந்தால் நீங்கள் நட்ட மரத்தினை ஒரு புகைப்படம் எடுத்து நம் இணைய பக்கத்தில் இணைக்கவும், அடுத்த ஆண்டு பிறந்தநாளின் போதும் நீங்கள் வளர்த்த மரத்தின் வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டு உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

“The best time to plant a tree is twenty years ago.
The second best time is now.”

Thanks to sumathika for suggesting this idea!
 
Last edited by a moderator:

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,709
Likes
18,670
Location
Salem
#3
wow 5 yrs mudinjutha......... intha varusham nanum iruken nu santhosha padaren.........

my fav num 5 ...... 5th yr la penmai ku nan vanthathu la rombbbbbave happy.......

valthukkal anaivarukum....... penmai a ivlo sirapaaga kondu vanthatharkum .... varaporathukum..........
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,251
Likes
15,957
Location
USA
#4
ஆறாவது ஆண்டில்
ஆரவாரத்துடன் அடியெடுத்து,
எங்கள் அனைவர் வாழ்விலும்
அழகாக இணைந்துவிடட
அன்பான தோழியாம்
"பெண்மை" தளத்திற்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


பொழுதுபோக்கினை கடந்து
சமூக தொலைநோக்கு கொண்டு
பச்சை மரக்கன்றுகள் நட்டு
பசுமை பாரதத்தை படைத்திட
முனைப்புடன் நினைத்திடும் உங்கள்
பண்பட்ட சிந்தனைக்கு
பலப்பல பாராட்டுக்கள்!!


நீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,481
Likes
26,202
Location
Sri Lanka
#7
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,393
Location
Hosur
#10
அருமையான யோசனை இளவரசி.

பெண்மையின் பிறந்த நாளின் போது மரம் நடுவதின் மூலம் நாம் நம் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த பங்களிப்பை அளிப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த சமுதாயத்தில் மூலம் நாம் பல நன்மைகளை பெறுகிறோம்/நுகர்கிறோம். அதற்கு பிரதிபலனாக நாம் என்ன செய்கிறோம்?

பெண்மையின் பிறந்த நாள் அன்று அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி!. இது நம் கடமையும் கூட.

"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்" இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள்
பூமித்தாயின் முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. "நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

"ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு"

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்"
:thumbsup.

உங்களாலும் முடியும். செய்வீங்களா? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.

 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.