need good suggestions for superstitious beliefs

#1
hi all,


i was very much sad to share my store here. i need good advise. my wife gave birth to baby boy before a month. soon after baby's birth my brother and his business was complete loss. my brothers wife and his parents saying that it was due to my new born baby.


now my parents went to pilgrimage trip and met with accident god's grace there is no death but every one had fractures etc.


now again all are blaming my son. my wife was very much sad with all this and crying all day because of this.


i am very much upset with my parents and my brothers family behaviour.


how to make them understand about this and make love to my son.


need good replies


thank you
 

Aruna.K

Penman of Penmai
Blogger
#2
Hi [MENTION=222846]k.shivanand[/MENTION],
Sorry to hear about your misfortunes..Yes these are all misfortunes and perfectly there is nothing to blame anyone.
Can I ask you something? Why should you make people understand?
அவங்களுக்கு புரியனும்னு என்ன அவசியம். ஒன்னும் தெரியாத சின்ன குழந்தை மேல பழி சொல்லறவங்களை என்ன பேசியும் மாத்த முடியாது ப்ரதர்.
so, please dont try to make them understand. உங்க மன ஆறுதலுக்கு வேண்டும்னால், ஒரு முறை உங்கள் மனதை சொல்லிப் பாருங்க. புரிஞ்சுகிட்டால் மகிழ்ச்சி, இல்லையேல்

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே!ன்னு நிம்மதியா இருங்க ப்ரோ...
ஆல் இஸ் வெல்..
 
#3
Dear shiva bro,
i feel very very bad for you, how you also blindly believe all this things? Its glad moment to u have new born in ur life.. And also try to understand, god given to u dat baby, it means u wil protect u lovely.. Jst come out ds beliefs..
 
#4
Bro, aruna sis also well said in her reply.. Am poor in english, let explain u my own experience bro..
Am also suffrd many years, nearly 16yrs without kids, all are indirectly blamed me only, aftr dat god's grace, i gave birth to twin female babies.. Ds time i expected all are loved my babies, bt nt did.. Me and my hubby come out from our family, we living happily with our babies..
 
#5
First unga kid ah neenga full ah nesiyunga, neengale sona madiri unga parents ku entha perabathum erpadala, adavadu apadi uyir pilaichadu unga kid nala nu kuda nenaikalame, naladu ketadu nama kaigal la ila bro.. Itha neengalum unga wife um fst clear ah purinjikangapa.. Silaper kuraigalaye solradula arvama irupanga, avangaluku niraigalai parata teriyadu..
 
#6
Bro, finally one request, unga wife um aludutu iruka kudadu, bcs avanga health badicha papaku feed pana mudiyama pogirum, remember ds, edu nadandalum athu naladuku nu.. Mum hapy ah feed pana dan baby um healthy ah valarvan.. Kalapokil elam sariagirum, unga relatives and parents elarume, papa va muzhu manadoda ethupanga.. Porumaiya irunga.. Ungaluku nanbargala nanga elam irukom.. Take care bro..
 

jv_66

Super Moderator
Staff member
#7
Hi [MENTION=222846]k.shivanand[/MENTION]

Welcome to Penmai.com



Sorry to hear about the happenings in your family.

But more than this, I would like to Congratulate you for the new arrival of your cute little kid.

This should be the happiest moment/period in your and your wife's life . So, leave about all the other unwanted thoughts and enjoy the precious moments with your wife and son.

Hope you know to read Tamil. If you need, I can suggest the below in english also.

ஆமாம் . நிறைய குடும்பங்கள்ல இது போன்ற மூடநம்பிக்கைகள் பரவலா இருக்கு . கண்டிப்பா இதை முறியடிக்கணும். இது எல்லாமே இப்போ உங்க கையில மட்டுமே இருக்கு .


நீங்கதான் இப்போ உங்க மனைவிக்கு மிகவும் ஆறுதலா இருக்கணும் . உங்க குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் உங்க மனைவியின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்காதவாறு காப்பாற்ற இப்போ உங்களால் மட்டுமே முடியும் .

கண்டிப்பா உங்க மனைவியின் எதிரில் உங்க மகனை நல்லா கொஞ்சுங்க . அதைப் பார்க்கற உங்க மனைவிக்கு மனக்கலக்கம் கண்டிப்பா மறையும் .

அடுத்ததா , உங்க மனைவிகிட்ட ,
"யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் . இந்த மூடநம்பிக்கைகளை நான் கொஞ்சம் கூட நம்புறதில்ல . நீயும் கண்டிப்பா நம்பக்கூடாது .குடும்பம்னா அப்பப்போ கஷ்டங்கள் நஷ்டங்கள் வரத்தான் செய்யும் . அதுக்கெல்லாம் புதுசா பிறந்த குழந்தையை குற்றம் சாட்றது எந்த வகையிலும் நியாயமேயில்லை. நான் இதை கண்டிப்பா மனசுல வைக்கவே மாட்டேன் . எனக்கு நீயும் , நம்ம குழந்தையும் தான் ரொம்ப முக்கியம் . அதனால நீ கண்டிப்பா அழவே கூடாது . அந்த மனநிலையில் நீ குழந்தைக்கு பால் கொடுக்கறது எல்லாம் பாதிப்பு அடையலாம் . உன்னோட உடல்நிலை பாதிப்பு அடைஞ்சா , குழந்தையை நல்லா பார்த்துக்கவே முடியாது . அதனால யார் என்ன சொன்னாலும் காதிலேயே வாங்காதே"

இதை அடிக்கடி உங்க மனைவிகிட்ட சொல்லிட்டே இருங்க . அப்போதான் அவங்களுக்கு உங்கமேலேயும் நம்பிக்கை வரும் . தன்னம்பிக்கையும் வரும் .

அடுத்ததா , உங்க குடும்பத்தினர் கிட்ட , "கஷ்ட நஷ்டங்கள் என்கிறது ஒவ்வொரு குடும்பத்திலும் எதாவது சில காலங்களில் வரத்தான் செய்யும் . அதுக்கு, பிறந்த குழந்தை என்ன செய்யும் . அதை நாம வெறுத்துட்டா சரியா போய்டுமா ? அதை யார் பார்த்துப்பாங்க ? குடும்ப வாரிசை நல்லபடியா பார்த்துக்க வேண்டாமா ? தவிர, அப்பா அம்மாவுக்கு , பெரிய ஆக்சிடென்ட் நடந்தும் வெறும் fracture ரோட போச்சே , இதுவே ஒரு நல்ல சகுனமா எடுத்துக்கலாமே , அதுவும் தவிர இதெல்லாம் இப்படித்தான் நடக்கணும் என்கிறதெல்லாம் கடவுள் ஏற்கனவே தீர்மானிச்சது . இதுல குழந்தை என்ன செய்யும் ?" அப்படின்னு , அவங்க உங்க குழந்தையை குற்றம் சாட்டும் போதெல்லாம் கேட்டுட்டே இருங்க .

ஒருவேளை இதனால உங்க அம்மா மனசு கொஞ்ச நாட்கள்ல மாறலாம் . யோசிச்சு பார்க்கலாம் .

அதனால நீங்க அடுத்து செய்ய வேண்டியது , இப்போ உங்க மனைவியை அவங்க அம்மா வீட்லேர்ந்து (பிள்ளை பிறப்புக்கு அவங்க வீட்டுக்குத்தானே போயிருக்காங்க ?) உங்க வீட்டுக்கு 3ம் மாசம் கொண்டு விட பிளான் பண்ணுவாங்க . இல்லைன்னா உங்க அம்மா அப்படிச் சொல்லலாம் .

ஆனா இப்போ நீங்க என்ன செய்யுங்க , உங்க மனைவி வீட்ல சொல்லி , உங்க வீட்டினரின் மனநிலை கொஞ்சம் சகஜமா ஆகட்டும் . அதனால 5வது இல்ல 6வது மாசம் (எது வழக்கமோ அதுபடி ) , உங்க மனைவி ,குழந்தையை கொண்டு விடும்படி ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க .

உங்க அம்மாகிட்டயும் இதே விஷயத்தை அப்படியே சொல்லுங்க . அப்போ கூட உங்க அம்மா யோசிக்கலாம் .

இந்த நேரத்துல , உங்க குடும்பத்தில எதாவது சுப நிகழ்ச்சி அல்லது வேற எதாவது நல்லது நடந்துட்டா , உங்க குழந்தை மீதான குற்றச்சாட்டு மறந்தும் போய், நீங்கலாம் .

அதே சமயம் , ஒருவேளை 5 மாசத்துக்குப் பிறகும் உங்க வீட்டினரின் மனநிலை மாறலை என்றால் , நீங்க அடுத்து செய்ய வேண்டியது ,(இதை நான் சொல்றதுக்காக என்னை தப்பா நினைக்காதீங்க . அவசியம் கருதிதான் சொல்றேன் ) நீங்க , உங்க மனைவி , குழந்தையுடன் தனியாகப் போய் குடித்தனம் செய்ய வேண்டியதுதான் .

இதை ஏன் சொல்றேன்னா , ஒருவேளை உங்க மனைவி வேலைக்குப் போகாம வீட்ல இருப்பாங்கன்னா, நீங்க வேலைக்குப் போன பிறகு , உங்க அம்மா மற்றும் வீட்டினர் , உங்க மனைவி , குழந்தையை ரொம்பவும் பாடுபடுத்தலாம். ஒரு சின்னக் குழந்தையை எல்லாரும் தூற்றிக்கிட்டே இருந்தா , அது எந்த மனநிலைல வளரும் ? இதைத் தவிர்க்கத்தான் இந்த யோசனை .

உங்க வீட்டினர் கிட்ட , ஒண்ணு இல்ல ரெண்டு வருஷம் இப்படி தனியா இருந்து பார்த்தா அவங்க மனநிலை மாறிச்சுன்னா, அதுக்கப்புறம் திரும்ப ஒண்ணா இருக்கலாம் அப்படின்னு சொல்லிடுங்க .

ஆனா அதே சமயம் , வாரக்கடைசி , பண்டிகைகள் எல்லாத்துக்கும் , கண்டிப்பா உங்க பெற்றோர் இருக்கும் வீட்டுக்கு வந்து அவங்களோட பொழுதை கழிக்கலாம் . இதையும் அவங்ககிட்ட சொல்லிடுங்க .

இப்படி அடிக்கடி உங்க குழந்தையை உங்க பெற்றோர் பார்க்கும்போது , குழந்தையின் மழலைல அவங்க மனசு மாறி , நல்ல நினைப்புகள் வரலாம் . அதனால அவங்க நல்ல முடிவு எடுப்பாங்க .

We sincerely pray for the welfare of you and your family.

Happy Parenting!!:thumbsup
 

Important Announcements!