need guidance

rajeswaripalani

Friends's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
349
Likes
441
Location
Bangalore
#1
Dear all,

I am working in Chennai and resign my job and go to bangalore in next month .My husband is working in Bangalore IT company. But he ask me to find the job in Bangalore. .I am working in foreign bank .He ask me to search job and another time ask me to stay in home. Bangalore also new to me. I don't have friends in Bangalore .i worked for six years if i simply sit in home at all i will become mad.After your marriage my husband spent few hundreds for me.If i sit in home i don't know he will spent for me are not.

I Don't know what can i do?
 
Joined
Aug 4, 2011
Messages
52
Likes
39
Location
Kuwait
#2
You should have got a job in B'lore and resigned... Your bank must have a branch in Blr.. Why dont you try???
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Hi @rajeswaripalani

உங்க பிரச்சினை புரியுது .

உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு ?
நீங்க உங்க கணவரோட இதுவரை ஒண்ணா சேர்ந்து இருக்கலையா ?

அதனாலதானோ என்னவோ ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன் .

90%கணவர்கள் , தங்களோட மனைவி வேலைக்குப் போகலைன்னாலும் , கண்டிப்பா மனைவிக்குத் தேவையானதை , தன்னுடைய சம்பாத்தியத்தைக் கொண்டுதான் கவனம் எடுத்து செய்வாங்க .

ஒரு சில சுயநல , சோம்பேறிக் கணவர்கள் மட்டுமே , நீங்க பயப்படுவது போல நடக்கலாம் . மற்ற யாருமே அப்படி இருக்க மாட்டாங்க .

ஆக , உங்களோட பயம் அர்த்தமற்றது .

நீங்க சொல்லி இருக்கறதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா , உங்க கணவருக்கு , அவர் வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் , நீங்க வீட்ல இருந்து , அவருக்கு நல்லபடியா சமையல் செய்து போட்டு , வீட்டையும் அவரையும் நல்லா கவனிச்சு நடத்தணும் என்கிற எண்ணம்தான் மேலோங்கி இருக்கறதா தெரியுது .

அவர் அந்த மாதிரி ஒரு வாழ்க்கைக்கு , வேலைக்குப் போகும் இந்த சில வருஷங்களா (ஊரிலிருந்து வந்து தனியா இங்கே தங்கி இருக்கலாம் ) ஏங்கிப் போய் இருக்கலாம் . அதனால இந்த எண்ணம் உள்ளவரா இருக்கலாம் .

இதுல , அவர் உங்களை தன்னோட வீட்டுக்கு வந்து தங்கி இருக்கும்படி , வேலையை ரிசைன் பண்ணிட்டு வரச் சொன்னதுக்கு , நீங்க ஒருவேளை அப்ஜெக்ட் பண்ணி இருந்தா , உங்களால வேலை பார்க்காம இருக்கவே முடியாதுன்னு சொன்னதுனாலையும், சில சமயம் அதையும் யோசிச்சு , 'சரி நீ இங்க வந்து வேலைக்கு போ' அப்படின்னு சொல்லி இருக்கலாம் .

இதுதான் விஷயமா இருக்கணும் .

சோ, இதைப் போட்டு நீங்க குழப்பிக்காதீங்க .

நீங்க இப்போ என்ன பண்ணலாம்ன்னா ,

உங்க கணவர் ஆசைப்படியே , சென்னையில் உள்ள வேலையை விட்டுட்டு , பெங்களூர் வந்து , உங்க கணவரையும் வீட்டையும் நல்லா கவனிச்சுக்கிட்டு , கொஞ்ச நாள் (மாசம் ) இருங்க .

உங்க கணவரோட விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு , அதையெல்லாம் செயல் படுத்துங்க .

சமையல் எல்லாம் கத்துக்கிட்டு (தெரிலைன்னா ) (நிறைய வெப்சைட்ஸ் லேர்ந்து கூட தெரிஞ்சுக்கலாம் ), வீட்டை எல்லாம் நல்லா அலங்காரம் பண்ணி , நீட்டா வச்சு , எல்லா வேலைகளையும் நீங்களே செஞ்சுக்கிட்டு இருந்தா , பொழுது போறதே தெரியாது . நிஜத்துல நேரமே கிடைக்காது .

அதனால , உங்களுக்கு வேற விதமா திருப்தி கிடைக்கும் . வேலைக்குப் போகாம பைத்தியம் பிடிக்கும்ன்னு நினைக்க வேண்டாம் .

மொதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க .

அதுக்கப்புறமும் உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் போல இருந்தா , இப்போ ஆன்லைன்ல நிறைய JOB SITES இருக்கு .....naukri.com, amazon.com இதுபோல இன்னும் நிறைய நிறைய . ஆனா நம்பகமான இடத்துல மட்டும் அப்பளை செஞ்சு , உங்களுக்கு உள்ள எக்ஸ்பீரியன்ஸ் பத்தி எல்லாம் சொன்னா , கண்டிப்பா உங்களுக்கு உரிய வேலை சீக்கிரமே கிடைக்கும் .

இதுக்கெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் .

நியூஸ்பேப்பர் ல பார்த்தும் அப்பளை பண்ணலாம் .

உங்க கணவருக்குத் தெரிஞ்ச இடங்களிலும் அப்பளை பண்ணலாம் .

இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை .

ஒருவேளை , நீங்க உடனே குழந்தை உண்டாகிட்டா , நீங்க வேலை தேடுறதையும், வேலைக்குப் போகுறதையும் சில வருஷங்களுக்கு தள்ளியும் வைக்கலாம் .

குழந்தை வந்துட்டா , உங்களுக்கு நேரமே போதாது .

நீங்க வீட்லேர்ந்து செய்யக்கூடிய வேலைகளையும் எடுத்து செய்யலாம் . இதனால , உங்க திறமையையும் வேஸ்ட் செய்ய வேண்டாம் . வீட்டையும் திறமையா கவனிச்சார் போலவும் இருக்கும் .

அதனால உங்க பயங்கள் எல்லாமே தேவையற்றது .

All the best.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#5
ஜெயந்தி சிஸ் ( @jv_66)அருமையா ஆலோசனை சொல்லி இருக்கீங்க. ராஜி நீங்க ஒன்ன புரிஞ்சிக்கணும்.

ஜெயந்தி சிஸ் சொன்னது போல உங்க கணவர் ஒரு emotional சப்போர்ட் தரக்கூடிய அவருடைய துணையை தேடறார். சில பேர் அப்படி தான்... ஏன் நானே, என் கணவர் குழந்தைகள் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறப்போ, நான் வேலை காரணமா இங்கு தனியா இருக்குறப்போ, வீட்டுக்கு வரவே கஷ்டமா இருக்கும். வெறிச்சோடி கிடக்குற வீட்டுக்கு வரவே ஆவலா இருக்காது. எனக்கே இப்படின்னா, சில கணவர்கள், வீட்டுக்கு வந்தவுடனே, மனைவி காபி போட்டுத்தந்து, கொஞ்ச நேரத்துக்கு பிறகு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டு, அரட்டை அடிச்சிக்கிட்டு, டிவி /படம் பார்த்துக்கிட்டு பொழுத போக்குறதுக்கு ரொம்ப விரும்புவாங்க. அடுத்த நாள் அருமையான காபில ஆரம்பிச்சு, சூடான காலை உணவு, சுவையான லஞ்ச் பாக்ஸ், வண்டி சாவிய காணோம், ID கார்டு காணோம்னு டென்சன்ல இருக்குறப்போ, எடுத்து தர மனைவி.......இதெல்லாம், stressful லைப்ல சின்ன சின்ன சந்தோஷங்கள்.


இத உங்க கணவர் எதிர்பார்க்கிறது தப்பே இல்ல. உங்களுக்கு காசு தரமாட்டார்னு பயப்படாதீங்க. இல்லைனா குடும்ப நிர்வாகத்துக்கும் /செலவுக்குன்னு மாசா மாசம் ஒரு தொகை குடுத்திட சொல்லுங்க. சீக்கிரம் குழந்தைக்கு பிளான் பண்ணுங்க.


விரைவில் உங்கள் கணவரோடு சேர்ந்து, அழகான வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Thanks and welcome Rathi.

yes dear....as you have told, everyone will long for these simple and sweet happiness.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
And one more thing @rajeswaripalani

வீட்டை திறமையா நிர்வகிக்கறது அப்படி ஒண்ணும் ஈசியான வேலை இல்லை .

பண வரவு செலவுகளை திறமையா கையாண்டு , பணத்தை சேமிச்சு , எதிர்காலத்துக்கு எல்லா வசதிகளையும் செஞ்சுக்கிட்டு , கணவர் , புகுந்த வீட்டினர் எல்லாருக்கும் பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சு , எல்லார் கிட்டயும் நல்ல பேர் வாங்குறதே ஒரு கை வந்த கலை தெரியுமா ....அது எல்லாருக்கும் திறமையா செய்ய வராது .

அதனால அதை மிகவும் எளிதாகவும் யாரும் நினைச்சுடக் கூடாது .
 

rajeswaripalani

Friends's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
349
Likes
441
Location
Bangalore
#8
Thanks for both of u Jayanthy and rathi mam.I can't get any advice for my parents,because the will feel very much . we married in FEB 2015.I am not think like your point of view.Thank you very much for a timely guidance.Thanks lot again and again.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#9
Thanks for both of u Jayanthy and rathi mam.I can't get any advice for my parents,because the will feel very much . we married in FEB 2015.I am not think like your point of view.Thank you very much for a timely guidance.Thanks lot again and again.
புதிதாக திருமணமானவர்களா, அப்படியென்றால் அதற்குரிய சந்தோஷங்களை அனுபவியுங்கள். காலம் உங்களுக்காக காத்திருக்காது. வாழ்க்கை ஓட்டத்தில் இழந்த இந்நிமிடங்கள் திரும்ப கிடைக்காது. முடிந்தால், கூடிய விரைவில், விடு முறை எடுத்துக்கொண்டு எங்காவது தேனிலவு/சுற்றுலா சென்று வாருங்கள். போய் வந்த பிறகு கண்டிப்பாக உங்களுக்குள் அன்யோன்யமும், புரிதலும் கொஞ்சம் கூடி இருக்கலாம். அது வரை இந்த ப்ரெச்சனையை சிறிது ஒத்திப்போடுங்கள் . பிறகு தெளிவாக சிந்தித்து இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள்.

Long distance relationship oruththarukku pidikkalanaalum adhu iruvarukkum stress thaan. So nalla mudiva rendu perum edunga.

Best wishes, my friend.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.