Neem flower soup - வேப்பம் பூ சூப்'

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
''வேப்பம் பூ சூப்''

செய்யத் தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 4 டீஸ்பூன்,
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப், எலுமிச்சைச் சாறு & 2 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும்.

இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.

பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது.


‘‘வேப்பம்பூ வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. முன்பெல்லாம் வேப்பம்பூ, வெல்லம் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவார்கள்.

அதில் சுவை மட்டும் அல்லாமல் சத்தும் நிறைந்திருக்கும்.

நோயற்ற வாழ்வு வாழ இது போன்ற பழக்கங்களை மீட்டெடுத்தல் நல்லது.’
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really wonderful soup out of neem flowers you have given Sir. Thank you very much for having shared such a useful soup idea.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.