Neer Kaduppu - நீர் கடுப்பு

Joined
Jan 30, 2012
Messages
6
Likes
8
Location
abudhabi
#1
நீர் கடுப்புக்கு என்ன பன்னலாம் 2 நாள இருக்கு தயவு செய்து உதவுகள்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
மறந்துபோன எலுமிச்சை சோடா

நாம் மறந்துவிட்ட எலுமிச்சை +உப்பு +சோடா இது ஒரு இயற்கையான வெயில் கால குளிர் பானம் ஆகும். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து விட்டு உடலுக்கு தீங்கு இளைக்ககூடிய கூல்ட்ரிங்க்ஸ் ( அதாவது வெளிநாட்டு குளிர் பானங்கள் ) சாப்பிடுகின்றனர்.

அதுவும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற பகட்டுக்காக தான். இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் பல தீங்கு உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக தேவையற்ற குளிர் பானம் அருந்துவர்.

ஆனால் நாம் மறந்து போன எலுமிச்சை சோடாவின் பயன்கள் தெரிந்தால் இதெயெல்லாம் அறவே வெறுத்து விடுவோம். எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது இந்தியா தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்ககூடியது. சரி இப்போது நாம் எலுமிச்சை சோடாவின் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

எலுமிச்சம் பழம்

உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும்.

வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

நரம்பு தளர்ச்சிக்கு

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

குழந்தைகளுக்க

மற்ற எந்தப் பழத்தையும் விட எலுமிச்சம் பழம் தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

உணவுடன் சேர்த்து

எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். பித்தம் குறையும்.மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சை ஊறுகாய் உணவை ஜீரணிக்க உதவும்.

முக அழகிற்கு

எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.

வெயில் காலத்திற்கு

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாட்களில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சம் பழத்தை சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

தேநீரில் ஒரு அரைஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில
் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து குளித்தால் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்


முக்கிய குறிப்பு

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

- டாக்டர். ஆர்.பாரத் குமார், BHMS.,MD. , மதுரை.

courtesy: webduniatamil.com
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
நீர் கடுப்புக்கு இளநீர் மிகச் சிறந்த மருந்தாகும் .

இதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அமிலத்தன்மை அதிகரிக்கும் .

எதாவது உணவு எடுத்த பிறகு 2 டம்ளர் இளநீர் அருந்தினால், 1 மணி நேரத்துக்குள் சிறுநீர் சிரமமின்றி பிரியும் .

ஆகவே, இந்தப் பிரச்சினை இருக்கும் வரை, தினமும் இளநீர் அருந்தி வரவும் .

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#5
Good Tips SSSS & JV!
smileys-applause-014530.gif
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#6
Oh my god..
Sis, Nan daily morning, empty stomach la than kudickkiren (for almost more than a month :( )... :pray1:..


நீர் கடுப்புக்கு இளநீர் மிகச் சிறந்த மருந்தாகும் .

இதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அமிலத்தன்மை அதிகரிக்கும் .

எதாவது உணவு எடுத்த பிறகு 2 டம்ளர் இளநீர் அருந்தினால், 1 மணி நேரத்துக்குள் சிறுநீர் சிரமமின்றி பிரியும் .

ஆகவே, இந்தப் பிரச்சினை இருக்கும் வரை, தினமும் இளநீர் அருந்தி வரவும் .

 
Joined
Aug 31, 2011
Messages
8
Likes
6
Location
delhi
#7
take pley of water. take sapoot methi immediately. early in the morning take methi regularly for 2/3 days. you will be alright. but regularly take plenty of water. that is the permanent solution
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.