Neeya Naana - April 2018

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,920
Likes
76,727
Location
Hosur
#1
அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்!

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குத் தேர்வுகள் முடிந்து கோடைக்கால விடுமுறை துவங்கும் நேரமிது.

வருடந்தோறும் பாடம், படிப்பு என்று இருந்த குழந்தைகள் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டு சுற்றுலா அல்லது உறவினர்கள் வீடு என்று களிக்கும் நோக்கத்தோடு விடப்பட்ட விடுமுறை இன்றைய காலக்கட்டத்தில் கோடைக்கால வகுப்புகள் (Summer Camp) என்ற பெயரில் தொடங்கப்பட்ட பயிற்சி மையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் நிலைமை தான் தற்போது நிலவுகிறது.

இந்த மாத நீயா நானாவின் தலைப்பும் இதைக் குறித்தே விவாதிப்பதாக உள்ளது.

பள்ளிச் செல்லும் குழந்தைகளைக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்ட கோடைக்கால வகுப்புகள் (Summer Camp) உண்மையில் குழந்தைகளுக்கு குதூகலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளதா? அல்லது மேலும் ஒரு சுமையாகக் கருதப்படுகிறதா?



PS: If you have any suggestions for Neeya Naana Topic Titles, Pls Post it HERE.
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
#2
Enna poruthavarai,
குழந்தைகளுக்கு குதூகலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

:typing:

Thx u SS for tagging.

 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#3
கோடைகால வகுப்புகள் குழந்தைகளுக்கு சுமை என்று நான் கருதுகிறேன்.
தேர்வுகள் முடிந்து விடுமுறையை களிப்பதற்கு திட்டமிடும் நேரம் மீண்டும் வகுப்புகள் எனும்போது குழந்தைகள் சோர்ந்து விடுவார்கள். படிப்பின் மீது வெறுப்பே வந்துவிடும்.
விடுமுறையில் பாதி நாட்களாவது ஓய்வாக அவர்கள் விருப்பப்படி இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

விடுமுறை வகுப்புகள் குழந்தைகளுக்கு சுமையாக அல்லது குதூகலமாக இருக்கிறதோ இல்லையோ, பெற்றோர்களுக்கு ஒரு தலைவலி இல்லாமல் போவது நிச்சயம்.
விடுமுறை காலங்களில் குழந்தைகளை வீட்டில் வைத்து எப்படி சமாளிப்பது என்று தவிக்கும் பெற்றோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் :bigsmile:.

நன்றி சுமதி :).
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
723
Likes
2,026
Location
Chennai
#4
என்னையும் இணைத்தமைக்கு நன்றி சுமதி!

என்னைப் பொருத்தவரை, கோடைகால பயிற்சி வகுப்புகள் குழந்தைகளுக்கு நிச்சயம் பெரும் சுமைதான்!

இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகள் நம்மைவிட அதிக சுமையுள்ள பாடத்திட்டத்தில் அதிகமான பாடங்களைத்தான் படிக்கிறார்கள்! அவர்களுக்கு கோடை விடுமுறையின் போதாவது இந்தச் சுமைகளிலிருந்து விலக்கு அளிப்பதுதான் சிறந்தது! அவர்களை நன்றாக விளையாட விட வேண்டும்!

ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்! என்றார் கவிஞர்!

அதற்கு படிப்போடு கூட விளையாட்டும் இருந்தால்தான் சீரான வளர்ச்சியாக இருக்கும்!

மேலும் கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் குழந்தைகளாக நாமும் சேர்ந்து விளையாடும்போது நம் குழந்தைகள் நம்முடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்! நம் பிள்ளைகளின் மனதை அவர்களின் விருப்பு வெறுப்பை அவர்களின் குணாதிசயங்களை கணிக்க நம்மால் முடியும்!

எந்த விஷயத்தை எப்படிச் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்; எந்த விஷயம் அவர்களுக்கு கடினமாக இருக்கிறது; எது அவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை! தன் நண்பர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்; எதற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கிறார்கள்; எதையெல்லாம் விட்டுக் கொடுக்கிறார்கள்; மற்றவர்களிடம் நன்னடத்தையுடன்தான் நடந்து கொள்கிறார்களா; என்றெல்லாம் நாம் தெரிந்து கொள்ள இந்த மாதிரி அவர்களுடன் கோடை காலத்தில் விளையாடும் போது எளிதாகிறது!

நமக்கும் நம் குழைந்தைகளுக்கும் நடுவே நெருக்கம் அதிகமாகிறது!

எனவே, குழந்தைகளை கோடைகால பயிற்சி முகாமுக்கு அனுப்புவது அவர்களுக்கு சுமைதானேயொழிய கண்டிப்பாக சுகமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து!
 
Last edited:

anbupurush

Friends's of Penmai
Joined
Jul 4, 2011
Messages
298
Likes
587
Location
coimbatore
#5
Thanks for tagging me!I think kids enjoy summer camps, if it is relating to their interesting category.When I was having summer holidays, we use to play all sorts of games in the street, from around 4Oclock, in the evening till 10 O clock, can the children play in the street now?And school friends would live nearby surroundings, and they all will get together to play. Now the friends with neighbour kids has also become impossible.So the kids get bored, and naturally they rely on digital devices for their time pass and fun.Summer camps will help them to pass their time usefully. But it mustn't related to subjects. It must teach them some games and they should have some fun, if it so it is definitely not a burden to them. They can learn lot games involving their physical activities.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,545
Location
chennai
#6
பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டது.நீண்ட கோடை விடுமுறையில் நம் தலைமுறையில் இருந்தவர்கள்.நம் உறவுகள் வீட்டிற்கு போவது தெருவில் விளையாடுவது என்று நம் பொழுதை களித்தோம்.வெளியில் விளையாட செல்லாவிட்டாலும் நல்ல கதை புத்தகங்கள் வாசித்து மகிழ்ந்தோம்.குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 3 குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் 1 அல்லது 2 குழந்தைகள் தான் இருகின்றன.முன்பு போல் இப்போது கூட்டு குடும்பம் அல்லது தாத்தா பாட்டி உடன் வசிப்பது மிகவும் அரிது ஆகி விட்டது. அதனால் குழந்தைகள் விடுமுறையில் வீட்டில் இருந்தால் டிவி அல்லது இன்டர்நெட் தான் அதிகம் பார்கிறார்கள்.கொளுத்தும் வெயில் இல் வெளியில் சென்று விளையாடுவது என்பது சிறிது சிரமம் தான்.அடுத்தது நாம் வெளியில் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி யோசிக்க வேண்டும்.முக்கியமாக கோடைக்கால வகுப்புகள் (Summer Camp) சொல்லுவதலால் குழந்தைகள் electronic device use செய்யும் நேரம் குறைகிறது.பள்ளி காலத்தில் அவர்கள் படிக்க மட்டும் தான் நேரம் கிடைக்கிறது.இது போல் கோடை விடுமுறை வகுப்பில் அவர்களுக்கு பிடித்த வகுப்பில் நாம் போட்டால் அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.உதாரணமாக நீச்சல் ,நடனம்,art n craft,ஓவியம்,டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் ஆகியவற்றில் அவர்களுக்கு பிடித்தமானதை நாம் தேர்வு செய்து அவர்களை அதில் போட்டால் .என்ஜாய் செய்வார்கள் என்பது உறுதி.கோடைக்கால விடுமுறையில் பாட சம்பந்தப்பட்ட வகுப்பில் போட்டால் தான் குழந்தைகளுக்கு சுமையாக இருக்கும்.விளையாட்டு ,நடனம் ,யோகா போன்ற வகுப்பில் போட்டால் அவர்களுக்கு உடல் பயிற்சி ,மட்டும் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.சில குழந்தைகள் இசையில் விருபமாக இருக்கும் அவர்களை அதில் சேர்த்து விடலாம்.ஆக மொத்தம் நல்ல தரமான Summer Camp இல் குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான வகுப்பில் சேர்த்து விட்டால் அவர்கள் புதிதாக கிடைக்கும் நண்பர்கள் உடன் மகிழ்ச்சியாக கோடையை கொண்டடுவார்கள்.
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,920
Likes
76,727
Location
Hosur
#7
அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

சென்ற மாத நீயா நானாவின் தலைப்பு:

பள்ளிச் செல்லும் குழந்தைகளைக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்ட கோடைக்கால வகுப்புகள் (Summer Camp) உண்மையில் குழந்தைகளுக்கு குதூகலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளதா? அல்லது மேலும் ஒரு சுமையாகக் கருதப்படுகிறதா?

கோடைக்கால விடுமுறை ஆரம்பமானதும் ஆங்காங்கே குழந்தைகளைக் குறிவைத்து நிறைய வகுப்புகளும் ஆரம்பமாகிவிட்டது. குழந்தைகள் படிப்பின் சூழலிருந்து விடுபடட்டும் என்றும், கோடையில் வெயிலில் மூளைக்கு ஓய்வு கொடுக்கவும் விடுமுறை விடப்பட்டுள்ளது எனவும் கொண்டால் கோடைக்கால வகுப்புகள் குழந்தைகள் மேல் ஏற்றப்பட்ட ஒரு சுமையே.

அதே சமயம் அக்காலம் போல் பாட்டி வீடு, அத்தை வீடு, பெரியம்மா உறவுகளும் குறைந்து விட்டது. அவர்களும் இன்றைய கால மாற்றத்தால் வேலைக்குச் செல்லும் நிலை. அப்படியே அங்கே சென்றாலும் மாற்றங்களை உள்வாங்கி இயைந்து போகாத ஒரு தலைமுறை ஆகியவை வேலைக்குச் செல்லும், ஏன் வீட்டில் இருக்கும் பெற்றோருக்கும் ஒரு இடர்பாடாய் இருக்கிறது இந்த கோடைக்கால விடுமுறைகள். குழந்தைகள் ஆர்வமாய் கற்க விரும்பும் கலைகளையோ, விளையாட்டுகளையோ கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகளைத் தேர்ந்தெடுத்து சேர்த்துவிட்டால் அது அவர்களுக்குச் சுமையாகத் தெரியாது.

மேலும் இந்தத் தலைப்பு சார்ந்த நம் பெண்மை தோழமைகளின் கருத்துக்களைக் காண்போம்.

Sriramajayam

என்னைப் பொருத்தவரை, குழந்தைகளுக்கு குதூகலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

Gowrymohan

கோடைகால வகுப்புகள் குழந்தைகளுக்கு சுமை என்று நான் கருதுகிறேன்.

தேர்வுகள் முடிந்து விடுமுறையை களிப்பதற்கு திட்டமிடும் நேரம் மீண்டும் வகுப்புகள் எனும்போது குழந்தைகள் சோர்ந்து விடுவார்கள். படிப்பின் மீது வெறுப்பே வந்துவிடும்.

விடுமுறையில் பாதி நாட்களாவது ஓய்வாக அவர்கள் விருப்பப்படி இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

Annapurani Dhandapani

என்னைப் பொருத்தவரை, கோடைகால பயிற்சி வகுப்புகள் குழந்தைகளுக்கு நிச்சயம் பெரும் சுமைதான்!

இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகள் நம்மைவிட அதிக சுமையுள்ள பாடத்திட்டத்தில் அதிகமான பாடங்களைத்தான் படிக்கிறார்கள்! அவர்களுக்கு கோடை விடுமுறையின் போதாவது இந்தச் சுமைகளிலிருந்து விலக்கு அளிப்பதுதான் சிறந்தது! அவர்களை நன்றாக விளையாட விட வேண்டும்!

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் குழந்தைகளாக நாமும் சேர்ந்து விளையாடும்போது நம் குழந்தைகள் நம்முடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்! நமக்கும் நம் குழைந்தைகளுக்கும் நடுவே நெருக்கம் அதிகமாகிறது!

எனவே, குழந்தைகளை கோடைகால பயிற்சி முகாமுக்கு அனுப்புவது அவர்களுக்கு சுமைதானேயொழிய கண்டிப்பாக சுகமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து!

Anbupurush

I think kids enjoy summer camps, if it is relating to their interesting category. Now the friends with neighbor kids has also become impossible. So the kids get bored, and naturally they rely on digital devices for their time pass and fun. Summer camps will help them to pass their time usefully. But it mustn't related to subjects.

Chan

கோடைக்கால வகுப்புகள் (Summer Camp) செல்வதால் குழந்தைகள் electronic device உபயோகிக்கும் நேரம் குறைகிறது. பள்ளி காலத்தில் அவர்கள் படிக்க மட்டும் தான் நேரம் கிடைக்கிறது. இது போல் கோடை விடுமுறை வகுப்பில் அவர்களுக்கு பிடித்த வகுப்பில் நாம் போட்டால் அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். உதாரணமாக நீச்சல், நடனம், ஓவியம் மற்றும் கைவேலை, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் ஆகியவற்றில் அவர்களுக்கு பிடித்தமானதை நாம் தேர்வு செய்து அவர்களை அதில் போட்டால் என்ஜாய் செய்வார்கள் என்பது உறுதி. கோடைக்கால விடுமுறையில் பாட சம்பந்தப்பட்ட வகுப்பில் போட்டால் தான் குழந்தைகளுக்குச் சுமையாக இருக்கும். விளையாட்டு, நடனம், யோகா போன்ற வகுப்பில் போட்டால் அவர்களுக்கு உடற்பயிற்சி, மற்றும் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும். சில குழந்தைகளுக்கு இசையில் விருப்பமாக இருக்கும். அவர்களை அதில் சேர்த்து விடலாம். ஆக மொத்தம் நல்ல தரமான Summer Camp-ல் குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான வகுப்பில் சேர்த்து விட்டால் அவர்கள் புதிதாகக் கிடைக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையைக் கொண்டாடுவார்கள்.

இந்தத் தலைப்புச் சார்ந்த விவாதத்தில் பங்கு கொண்ட நம் தோழமைகளின் கருத்துக்கள் அனைத்தும் அருமை. இதில் சிறப்பாக தன் கருத்துக்களை வலியுறுத்திய தோழி @chan
அவர்களுக்கு பரிசினை வழங்குமாறு பெண்மை குழு பரிந்துரை செய்கிறது.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
#8
z-graphics-congratulations-382319.gif

friend
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.