Neeya Naana - August - 2018

அயல்நாட்டினர்களுக்கு மதிப்பு தெரிந்திருக்கிறதா? அல்லது பொக்கிஷத்தை காக்காத மெத்தனப்போக்கா?

  • அயல்நாட்டினர்களுக்கு நம் பொக்கிஷத்தின் மதிப்பு தெரிந்திருக்கிறது!

    Votes: 0 0.0%

  • Total voters
    2

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,337
Likes
77,337
Location
Hosur
#1
தோழமைகளுக்கு வணக்கம்!

நம் நாட்டில் கலைப் பொக்கிஷங்களாகவும், பக்தியாகவும் நாம் கருதும்/தொழும் தெய்வச்சிலைகள் பல பக்தியும், பயமும் இல்லாமல் சில கும்பல்களால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது ஆங்காங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. கடத்தப்படும் சிலைகள் பெருந்தொகைகளுக்கு வாங்கப்பட்டு அயல்நாட்டு செல்வந்தர்களின் வரவேற்பு அறையில் அலங்காரப் பொருட்களாக வைக்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டில் சிலை கடத்தல் பெருகுவதற்கு என்ன காரணம்? நம்மை விட அயல்நாட்டினர்களுக்கு நம் பொக்கிஷத்தின் மதிப்பு தெரிந்திருக்கிறதா? அல்லது நம்முடைய பொக்கிஷத்தை பாது்காக்கும் எண்ணம் இல்லாத நம்முடைய மெத்தனப்போக்கா?


உங்களின் மேலான கருத்துக்களை இந்தத் தலைப்பில் பகிருங்கள் தோழமைகளே!

PS: If you have any suggestions for Neeya Naana Topic Titles, Pls Post it HERE.
 
Last edited:

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
759
Likes
2,153
Location
Chennai
#3
என்னையும் இணைத்தமைக்கு நன்றி சுமதி! நல்ல தலைப்பு!
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
759
Likes
2,153
Location
Chennai
#4
நம்முடைய பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கத் தவறியது நம்முடைய மெத்தனப் போக்கே!

நாம் சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து நாம் பூசிக் கொள்ளும் அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியம் வரை அன்றாடம் பயன் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் வரை எல்லாமே வெளிநாட்டிலிருந்து வாங்கி வரப்பட்டது என்று கூறிக் கொள்வதில் ஒரு வெற்று பெருமை நமக்கு இருப்பதுதான் இதற்கு மிகப் பெரிய காரணம்! நம்முடைய உணவில் சத்து இருக்கிறது என்று தெரிந்தாலும், "காலையில் கஞ்சி குடிச்சேன்!"என்று சொல்லிக் கொள்ள கூச்சப் பட்டுக் கொண்டு, "காலைல கார்ன் ஃப்ளேக்ஸ்!" என்ற போலி கௌரவத்துக்காகவே, ஒரு சத்தும் இல்லாத ஓட்ஸையும் கார்ன் ஃப்ளேக்ஸையும் சாப்பிடுகிறோம்!

இப்படி நம் நாட்டு பாரம்பரிய உணவிலிருந்து வழிபாடு வரை எல்லாவற்றிலும் ஏதாவது குற்றத்தைக் கூறிக் கொண்டு, நம்முடையது எதுவுமே சரியில்லை, என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு நம்முடைய பொக்கிஷங்களை பறி கொடுத்து வருிறோம்!

நம் உணவு முறை, கல்வி முறை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை, கலைகள், வளங்கள், நம் பழக்க வழக்கங்கள், எல்லாவற்றையும் முழுமையாக குற்றத்தைக் கூறி நம் மனதை மாற்றி மூளைச் சலவை செய்து நம்மை நாமே குற்றவாளியாகவே பார்க்கும் நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டோம்! அதனாலேயே நம்முடைய பொக்கிஷங்களின் மகத்துவம் நமக்குப் புரியாமல் போனது! நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை! நம் பெரியவர்கள் யாராவது புரிய வைக்க முயன்றாலும் நாம்தான் அவர்களை எதிர்த்துப் பேச ஆரம்பித்துவிட்டோமே, அதனால், "ஏய்! பெரிசு! நீ சும்மா கெட! பெரிசா வந்துட்ட! வௌக்கம் சொல்ல! எல்லாம் எங்களுக்குத் தெரியும்! நீ வாய மூடு!" என்று வார்த்தையில் அமிலத்தைத் தோய்த்து அவர்கள் மீது வீசுவதாக நினைத்து நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு விட்டோம்!

எனவே, நம்முடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் நம்முடைய மெத்தனப் போக்கே, என்று கூறி என் சிற்றுரை(!)யை நிறைவு செய்கிறேன்! நன்றி!
 

Ammu abi

Commander's of Penmai
Joined
Oct 10, 2015
Messages
1,357
Likes
2,585
Location
Salem
#5
Romba naalaiku apram indha neeya naana la participate panradhu happya iruku.nice title.

நம்முடைய பொக்கிஷத்தை பாதுகாக்கும் ௭ண்ணம் இல்லாத மெத்தனப்போக்கே காரணம்:

* நம்முடைய பொக்கிஷத்தின் ௮ருமை பெருமை ௭ல்லாம் நமக்கு தெரிந்தும் ௮தை பாதுகாக்க மனமில்லாததும் ௮தற்கான ௮க்கறை இல்லாததும் தான் இது போன்ற கடத்தல்கள் நடக்க காரணமாகி்றது.

* ௮யல்நாட்டினருக்கு நமது பொக்கிஷத்தின் பெருமை தெரிவது நல்ல விஷயம் தான்.ஆனால் ௮தை கடத்திச் செல்லும் ௮ளவி்ற்கு ௮வர்களுக்கு துணிச்சல் வரும்படி நாம் கவனக்குறைவாய் இருந்திருக்கி்றோம் ௭ன்பது வருத்தம் ௮ளிக்கி்றது.

* நிச்சயம் இ௩்கு இருப்பவர்களின் உதவி இல்லாமல் இதுபோன்ற கடத்தல்கள் நடக்க வாய்ப்பில்லை.பாதுகாக்க வேண்டியவர்கள் செய்யும் இந்த வேலையை நினைத்து ௮வர்கள் வெட்கப்படவேண்டும்.

* இ௩்கு உள்ள சிலைகள் ௭ல்லாம் கடத்தப்பட்டுக் கொண்டிருந்தால் இ்றுதியில் ௭து தான் மிஞ்சும் ௭ன்ற பயம் உண்டாகி்றது.நாம் பெருமையாக காலம் காலமாக பாதுகாத்து வந்ததை இழந்தப் பி்றகு நமக்கு ௭ன்ன பெருமை இருக்கும்.

* நம் நாட்டில் சிலைகளை வெரும் சிலைகளாக பார்ப்பதால் வரும் வினையா? ௮ல்லது ௮வை நம் வரலாறு , ௮ழிக்க முடியா அடையாளம் ௭ன்று புரியாததால் நடக்கும் பிழையா?.

* வரலாறு ௭ன்பது வெறும் பாடப்புத்தகத்தாேடு முடிவதல்ல.ஒவ்வொரு சிலைக்கும் கதைகளும் காரண௩்களும் உண்டு.௮வையெல்லாம் சரித்திரமாக ௭ன்றும் இருப்பவை.

* மன்னர்கள் ஆட்சியில் புகழ்ந்து விள௩்கிய கோயில்களும் சிலைகளும் தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கி்றது.நம் நாட்டை பெருமைப்படுத்தி தந்த ௮வர்களுக்கு நாம் செய்யும் நன்றி இதுதானா.

* சி்று வயதில் திரைப்பட௩்களில் சிலை கடத்தல் காட்சியை பார்க்கும் போதெல்லாம் ௭துவும் புரியவில்லை.ஆனால் வரலாறும் சிலைகளின் சி்றப்பும், கலை நயமும் தெரிந்தப் பின் கவலையும் கோபமும் உண்டாகியது.

* வார்த்தைகளால் சொல்லி புரியவைக்க முடியாத பல விஷய௩்களை நம் முன்னோர்கள் இது போன்ற சிலைகளிலும், ஓவிய௩்களிலும் தான் நமக்கு சுட்டிக் காட்டியிருக்கி்றார்கள்.சரித்திரம் படைத்தவர்கள் வாழ்ந்த காலத்தை நமக்கு தெரியப்படுத்தும் வகையில் விட்டுச் சென்ற வழிகாட்டியாய் இருப்பவை தான் இவைகள்.

* சிலைகளை பாதுகாக்க ௮ரசின் ப௩்களிப்பும் வேண்டும்.௭ல்லோருக்கும் ௮க்கறை இருந்தால் இதை தடுக்கலாம்.௮தற்கு முன் நாம் ௮வற்றின் பெருமைகளையும் வரலாற்றையும் தெரிந்துக்கொள்வதும் ௮னைவருக்கும் தெரியப்படுத்துவதும் நன்று.

* சரித்திரக் கதைகளை வெறும் கதைகளாகவே பார்க்கும் மக்களின் மனதில் மாற்றம் வர வேண்டும்.நம் நாட்டின் பெருமைகளில் கோயில்களும் சிலைகளும் ௮திமுக்கியமானவை ௭னவே ௮தன் வரலாறு உணர்வுகளோடு பதியும் போது ௮தை நிச்சயம் பாதுகாப்போம்.

௭னது கருத்தைக் கூற வாய்ப்பளித்த பெண்மைக்கு நன்றி.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,053
Likes
141,046
Location
Madras @ சென்னை
#6
என்னுடைய கருத்து, அயல்நாட்டினர்களுக்கு நம் பொக்கிஷத்தின் மதிப்பு தெரிந்திருக்கிறது.

Thx u SS 4 tagging.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.