Newborn's tips - குழந்தை வளர்ப்பு

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.
பிறப்பு முதல் ஒரு வயது வரை:
பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.
குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.
பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்’ பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்’ மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்’ கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்’ தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.
குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.
சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.
பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.
ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்’ கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.
சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.


-பெண்ணுலகம்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.