Nonstick Cookware and Teflon Dangers - நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர&#3021

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#1



சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.தற்போது, நாண் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம்.ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன,

நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.

அறிவாற்றல் குறைபாடுகள் தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும்.

எலும்பு நோய்கள்:- தொடர்ந்து நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.

புற்றுநோய்:- நாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.

மாரடைப்பு:- ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இனப்பெருக்க பிரச்சனை:- தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#3009

நான்ஸ்டிக் பயன் படுத்துவதே ஆபத்தானது, அதிலும் அதில் கீறல் விழுந்திருந்தால் மிகவும் ஆபத்து. ஏனென்றால் அதில் தான் அந்த வெளி டெப்லான் துகள்கள் உணவில் சுலபமாக கலந்து நமக்கு விஷமாகிறது.
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,540
Likes
40,137
Location
france
#3
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#3009

ஏன் ப்பா இப்படி டிசைன் டிசைனா பயம்புடுத்துரிங்க...
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#4
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#3009

TFS தேனு... ஹாய் 5 Glo... எண்ணெய் கம்மி பண்ணனும்... அதுக்கு நான் ஸ்டிக் உபயோகிக்கலாம்னா புது புது ப்ராப்ளம் வருது...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#5
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#3009

இன்று முக்கால் வாசி எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் நான்ஸ்டிக் தான். அதை உபயோகிக்காமல் இருந்தால் நல்லது.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#6
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#

நான்ஸ்டிக் பயன் படுத்துவதே ஆபத்தானது, அதிலும் அதில் கீறல் விழுந்திருந்தால் மிகவும் ஆபத்து. ஏனென்றால் அதில் தான் அந்த வெளி டெப்லான் துகள்கள் உணவில் சுலபமாக கலந்து நமக்கு விஷமாகிறது.

உண்மை தான் ரதி.... இது தெரியாம நாம போய் அதுல விழுறோம்....!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#7
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#

ஏன் ப்பா இப்படி டிசைன் டிசைனா பயம்புடுத்துரிங்க...

ஹாஹா.... இதுக்கு எதுக்கு பயம்....??
நல்லதை சொன்னா ஒத்துக்கணும்...
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#8
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#

TFS தேனு... ஹாய் 5 Glo... எண்ணெய் கம்மி பண்ணனும்... அதுக்கு நான் ஸ்டிக் உபயோகிக்கலாம்னா புது புது ப்ராப்ளம் வருது...

ஆயில் குறைக்கணும்னு நினைச்சு.., அதைவிட பெரிய ஆபத்துல மாட்டிக்காதீங்க ப்ரியா
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#9
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#

இன்று முக்கால் வாசி எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் நான்ஸ்டிக் தான். அதை உபயோகிக்காமல் இருந்தால் நல்லது.

ஹய்யோ நான் இதை மறந்துட்டேனே...!! தேங்க்ஸ் ரதி, நியாபக படுத்தியதற்கு...!!
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,540
Likes
40,137
Location
france
#10
Re: நான்ஸ்டிக்கில் தயாரான உணவு --- தவிர்க்கவ&#

ஹாஹா.... இதுக்கு எதுக்கு பயம்....??
நல்லதை சொன்னா ஒத்துக்கணும்...
உனக்கு மனச்சாட்சி இருக்க நான் என்ன என்ன செய்றேனோ எல்லாத்துக்கும் ஒரு thread போட்டு ஆப்பு அடிக்கிற... நல்லது நல்லதுன்னு சொல்லி பால்ல ஆரம்பிச்சி நான்ஸ்டிக் வரை வந்துட்ட
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.