Osteoporosis -எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும், அத&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்[/h]
எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும்.உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&#29

பலவீனமடையும் எலும்புகள்
ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் "d" குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

மெனோபாஸ் பருவம்
மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் "மெனோபாஸ்" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கல்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

வைட்டமின் "d" குறைபாடு
கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

கல்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

வருமுன் காப்போம்

குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகம். பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கல்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகின்றனர்.

மனிதன் முதுமை அடையும் போது உடல் உறுப்புகளின் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் எமக்கு ஏற்படும் பக்க வீளைவுகளில் இருந்து உணர முடியும். வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாக நோயின் தீவிரம் ஆளைக் முடக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றது. நோய்க்கான காரணங்களை அறிந்து அவற்றிக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதன் மூலம் முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

எலும்பு தேய்யமானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கல்சியம் என்ற தாது உப்பு.அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத் தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கல்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:

1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8. அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பலரும் தமது சிரமத்திற்குள்ளாகிறார்கள்

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதன் நீட்டம், ஒடுக்கமே ஒருவரின் உயரம், பருமன் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது. ஒருவரை நகர வைப்பதும், செயல்பெறச் செய்வதும், உறுதியான தோற்றத்தைக் கொடுப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப்பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.
எலும்புகள் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய இரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந் துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.
மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது

மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

எலும்பில் கல்சியம், பொஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கல்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்பெறுகின்றன. இந்த கல்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு"மூட்டுகள்" என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன. தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையாமூட்டுகள் ஆகும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.
* பந்துக்கிண்ண மூட்டு
* கீழ் மூட்டு
* வழுக்கு மூட்டு
* செக்கு மூட்டு

இந்த நால்வகை அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழு வழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.
எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள "ஏந்தி" என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு "தொடை எலும்பாகும்". மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக முள்ளந்தண்டுடன் இணைக்கப்பெற்று ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இக்கூட்டினுள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கப்பெறுகின்றன.
சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.
தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
மண்டையறை எலும்புகள் – 8
முக எலும்பு – 14
காது எலும்புகள் – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண் – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில் – 8
கால்களின் கீழ் பகுதியில் – 52
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

இவ் நோய் வராது தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது?

1 . எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.

2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.

3 . நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.

4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.

6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.

8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

9 . காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

10 . மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.
11 . புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.

13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.


முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே கூறப்பெற்ற அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்த்து மகிழ்வாக வாழலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

மனித எலும்புகள்

மனித உடலில் எலும்புகள் இரண்டு பகுதிகளைக் கொண்டவை.

நீண்ட கால், தோள் எலும்புகள் கடினமானதாகவும், கனமானதாகவும் இருக்கும்.

உட்புறம் பஞ்சு போன்றிருக்கும். அதனால், இந்த எலும்புகளின் மேற்புறம் ரப்பர் போன்ற குருத்தெலும்புகளால் மூடப்பெற்றிருக்கும்.

சிறுவர், சிறுமியரின் வளர்ச்சி குறிப்பிட்ட வயதில் நிறைவடையும். உடற்பயிற்சி செய்வது எலும்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.

உடலுக்குத் தகுந்த பயிற்சி அளிக்காவிட்டால், எலும்பிலுள்ள தாதுக்கள் குறைந்து, எலும்பு பலவீனமடைந்து விடும்.

உடலிலேயே கால் தொடைப் பகுதி எலும்புதான் மிகவும் நீளமானதாகவும், வலிமையாகவும் காணப்படுகிறது.

மார்பெலும்பு
மார்பு எலும்பு மார்பின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது குருத்தெலும்புகள் வழியாக விலா எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, நுரையீரல், இதயம், முக்கியமான இரத்தக் குழாய்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

மனித மண்டையோடு
மனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.

மூளையையும், மூளைத் தண்டையும் சுற்றி அமைந்த பாதுகாப்புக் கவசமான மண்டை அறை எட்டு எலும்புகளைக் கொண்டது. முகத்தைத் தாங்கும் எலும்புகள் பதினான்கு ஆகும். நடுக்காதுச் சிற்றெலும்புகள் ஆறு, பொட்டு எலும்புகளினால் மூடப்பட்டுள்ளன. பிற மண்டையோட்டு எலும்புகளுடன் பொருத்தப்படாது இருப்பதனால், குரல்வளையைத் தாங்கும் எலும்பு பொதுவாக மண்டையோட்டின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுவதில்லை.

மண்டையோட்டில், மூச்சுத் தோலிழைமங்களால் மூடப்பட்டனவும், வளி நிரம்பியனவுமான குழிப்பைகள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் நிறையைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற ஒத்ததிர்வுக்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Re: எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அ&amp

தோள் எலும்பு

உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.

தொண்டை எலும்பு
தொண்டை எலும்பு அல்லது நாவடி எலும்பு என்பது மனிதரின் கழுத்தில் காணப்படும் எலும்பு ஆகும். எலும்புக்கூட்டில் வேறெந்த எலும்புடனும் இணைக்கப்பட்டிராத ஒரே எலும்பு இதுவாகும். இது கழுத்திலுள்ள தசைகளால் தாங்கப்பட்டு, நாக்கின் அடிப்பகுதியை இது தாங்குகின்றது.

தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது.

தொடை எலும்பு (Femur)
தொடையெலும்பு (Femur) இடுப்பெலும்புடன் இணைப்பு கொண்டிருக்கும் மேற்கால் எலும்பு. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் தொடை என்று பெயர்.

தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 செமீ (0.92 in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது.

நடக்கவல்ல, குதிக்கூடிய, பாலூட்டிகள், பறவைகள் போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும், பல்லி போன்ற ஊர்வன இனங்களிலும் தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal) கால் அமைப்புப் பகுதியாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.