Padithathil Pidithathu - நான் படித்ததில் பிடித்த வரிகள்

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#1
"ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் வெளியிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பாரதப்போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகம் உள்ள அளவும் இது நடந்துகொண்டுதான் இருக்கும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொருவர் மேலோங்கி நிற்பார்கள். சிலரிடம் தருமன், சிலரிடம் பீமன், சிலரிடம் விசயன், சிலரிடம் துரியோதனன், சிலரிடம் கண்ணன் மேலோங்கி நிற்கலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட மனிதனிடமே சமயத்திற்கேற்றவாறு சிற்சிலர் மாறி மாறி ஆட்சி செலுத்துவதுமுண்டு.

மனிதனிடமுள்ள மனிதத் தன்மைக்கும் மனிதனிடமுள்ள விலங்குணர்ச்சிகளுக்கும் நடக்கும் போர் நிரந்தரமான ஒன்று. "
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#2
-

சொர்க்கமும் நரகமும் நம் மனதில்தான் இருக்கிறது.
அன்பு, இனிமை என்ற உணர்வுகள் வளர்ந்தால் சொர்க்கம்.
பொறாமை, கோபம், சினம் என்ற நோய் உள்ளே புகுந்தால் நரகம்.
 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#3
-
"ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் இனிமையான வேளைகள் சிலவேதான்.
எஞ்சிய வாழ்க்கை எல்லாம் அந்த நினைவின் பிரதிபலிப்பு மட்டும்தான்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#4
-
"உரிமை இருக்கிறது என்கின்ற தைரியதில் யாருக்கும் எந்த விசயத்திலும் அவசப்பட்டு அறிவுரை சொல்ல முயலாதீர்கள்.
அறிவுரை கூறும் விசயத்தில் உரிமையை விட தகுதிதான் மிகவும் அவசியம்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#5
-

"நேற்று கிடைத்த மகிழ்வையும்
நாளை கிடைக்கப்பொகின்ற மகிழ்வையும்
நினைத்து
இன்றைய துக்கத்தை
எளிதாய் வெல்வோம்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#6
-

"சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியாது.
ஆனால் அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#7
-

"கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்"
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#8
-

"தனக்குத்தானே மனிதனை அறிமுகப்படுத்துவதே
பிரச்சனைகளும் துன்பங்களும் தான்.
துன்பத்தைப்போல் சரியான கல்வி ஏதுமில்லை."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#9
-

"சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம்தான்
சாதிக்கப் பழகிவிட்டால் தடைகளும் சவால்தான்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#10
-

"ஒரு வருட பலனுக்கு நெல்லை நடுங்கள்.....
முப்பது வருட பலனுக்கு மரங்களை நடுங்கள்....
நூற்றாண்டு பலனுக்கு கல்வியைக் கொடுங்கள்..........."
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.