Padithathil Pidithathu - நான் படித்ததில் பிடித்த வரிகள்

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"குறைகளை தன்னிடம் தேடுபவன் தௌிவடைகின்றான்.
குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்."


"மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது, எனவே நல்லதையே சிந்தியுங்கள்."


"உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.
அது தௌிவாக இருக்கும் வகையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை."


"தர்மம் தவறி குறுக்கு வழியில் சம்பாதிக்கப்படும் பணம் அந்த வழியிலேயே போய்விடும்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"நீ தாமதிக்கும்போது நேரம் வேகமானது.
நீ காத்திருக்கும்போது நேரம் மெதுவானது.
நீ சலிப்பாக இருக்கும்போது நேரம் நீளமானது.
நீ சந்தோஷமாக இருக்கும்போது நேரம் குறைவானது.
நீ வலியோடு இருக்கும்போது நேரம் முடிவில்லாதது.

ஒவ்வொரு நேரமும் உங்களுடைய உணர்வுகளாலும் மனநிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது தவிர கடிகாரத்தால் அல்ல. அதனால் எல்லா நேரத்தையும் சந்தோஷமாக கழியுங்கள்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"
தந்தைக்கு...

* தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.

* தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்.
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

* தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்.

* தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்.
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது.

* தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்.
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்.

* தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்.

"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
பாதுகாக்க கூடியவர் ஆவார். அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம். அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம். "
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது,
1. பசி வயிற்றைக் கிள்ளும்போது
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும்போது
3. போதையில் இருக்கும்போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது,
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது
2. மிகவும் துக்கத்தில் இருக்கும்போது
3. மிகவும் கோபத்தில் இருக்கும்போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்கவேண்டும்,
1. நம்மைப்பற்றி உணராதவர்கள்
2. நம்மைக் கண்டு பொறாமைகொள்பவர்கள்
3. நமக்கு ஈடாக செயற்படமுடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக்கூடாது,
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்
2. நம் குறைகளை பெரிதுபடுத்தாதவர்கள்
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒருபோதும் நம்பவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்தபின் அவர்களை விட்டு ஒதுங்கிப்போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்திவிடுவார்கள்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
" வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவுபெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"எத்தனையோ துன்பங்களையும் சின்னச் சின்ன அவமானங்களையும் தாண்டித்தான் வாழ்க்கையில் உயர முடியும்."


"வாழ்க்கை ஒரு புள்ளி போலத்தான்.
கவலையை மறந்து முன்னேறுபவனுக்கு அது தொடக்கப் புள்ளி.
கவலையிலேயே மூழ்கிக் கிடப்பவனுக்கு அது முற்றுப்புள்ளி."


"சாதாரண விஷயத்தைகூட சதா நினைத்துக்கொண்டே இருந்தால், அதுவே வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றுகிறது."


"தன்னைவிட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்கின்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"
கர்ம வினை என்றால் என்ன?

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.
அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.
கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?
கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல்
இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது.

அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.

காரணம்,

மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.
"
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"யாரொருவன் தனக்குள் மரியாதையும் கௌரவமும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்"


"வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் உன்னிடமிருந்து தோன்றாதவரை உன்னை யாராலும் வெற்றிபெறவைக்க முடியாது."


"வாழ்க்கை என்பது புல்லாங்குழல்போல் காயங்கள் நிறைந்ததுதான்.
காயங்களை மறைக்கின்றபோது தானே ராகங்கள் பிறக்கின்றன."
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
-
"உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.
அது தெளிவாக இருக்கும்வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை."


"பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்றிருக்கலாம்.
ஆனால் அவசரத்தால் நீ ஒரு முறைகூட வெற்றிபெற முடியாது."


"செய்யும் உதவியை பெருமையாக நினைத்தால் அது உதவியே இல்லை."
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.