paintings shows whats wrong in today's society

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#1
ஒரு செய்தியை எப்படி பகிர்கிறோம் என்பதை விட எப்படி பார்க்கப்படுகிறது எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதில் தான் விஷயமே
அடங்கியிருக்கிறது.எழுத்தாக செய்தியாக மட்டுமே ஒரு விஷயத்தினை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை மாறாக ஓவியமாக நாம் சொல்லும் போது எழுத்தை காட்டிலும் ஓவியம் மிகத் தீவிரமாக பிறரது மனதில் பதியும் என்பது உண்மை.

இங்கே ஜெர்ஹார்டு ஹாடேரர் என்பவரின் சில ஓவியங்களை கொடுத்திருக்கிறோம். அந்த ஓவியம் அன்றாடம் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது, அது தவறு என்பதையே மறந்து என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய தொடர்ந்து
வாசியுங்கள். அதற்கு முன்னால் யாரிந்த ஜெர்ஹார்டு ஹாடேரர் என்பதைப் பற்றியும் தெரிந்து கொண்டு விடலாம்.ஜெர்ஹார்டு லைஃப் ஆஃப் ஜீசஸ் என்ற புத்தகத்தை எழுதுகிறார். அது கிறிஸ்துவ மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கிறது. 2005 ஆம் ஆண்டு, கிரீஸில் மதத்தை புண்படுத்தியதாக கூறி ஆறு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கிறார்கள். தண்டைக் காலம் முடிவடைந்ததும் வெளியே வந்தார் ஜெர்ஹார்டு.

ஆரம்பத்தில் இவர் கிராபிக் டிசைனராக ஒரு விளம்பர நிறுவனத்தில் இருந்திருக்கிறார்.

செல்ஃபி மோகம்இன்றைக்கு பெரும்பாலனோரிடத்தில் நிரம்பியிருக்கும் ஒர் குணாதிசயம் செல்ஃபி எடுப்பது, எங்கு, எந்த சூழ்நிலை என்றெல்லாம் பார்ப்பதல்ல செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுப்பது அதிகரித்து விட்டது. அது ஆபத்தான இடங்களில் எடுக்கும் தருணங்களில் நம் உயிரையும் பறித்து விடுகிறது என்பதை பல முறை செய்திகளில் படித்திருப்போம். அதோடு முடிந்ததா?

ஒரு ஆபத்தில் இருக்கிறார் என்றால் அந்த நேரத்தில் உடனே சென்று உதவி செய்யாமல் அதனையும் வீடியோ பதிவு செய்யவே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை ஓவியத்தில் காட்டியிருக்கிறார்.


சிரி சிரி


சுயநலமிக்க இந்த உலகத்தில் எல்லாரும் தனக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் . அதே போல எந்த விஷயத்திலும் ஓர் நிறைவு அவர்களுக்கு இருப்பதில்லை. ஒரு குறை, ஏக்கம்,கவலை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஒருவர் இன்னொருவரிடத்தில் சிரித்து பேசி நட்பு பாராட்டுவதில்லை என்பதை நாசூக்காக எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பாருங்கள்...
 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#2
தாளில்....அன்றாட செய்தித்தாள் படிக்க வேண்டும் என்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள். இன்றைய காலத்து குழந்தைகளிடத்தில் சொன்னால் நம்மை ஏற இறங்க பார்த்து விட்டுச் செல்வார்கள். எல்லாமே டிஜிட்டல்ல, ஆப்ஸா இருக்கும் போது ஏன் இன்னும் பேப்பர் படிக்கணும்?

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நம்மை பரிணாமித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய பொருளாகிவிடுவோம்.

கேமரா பின்னால்

உதிக்கும் சூரியனை பார்க்க கூட்டம் அலைமோதும். அப்படி வருகிறவர்கள் எல்லாம் அந்த நேரத்து மகிமையை உணர்வார்கள். சரியான வியூ பாய்ண்ட்டில் நின்று இயற்கை காட்சியை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால்..... இந்தப் படத்தை பாருங்கள்.இது இந்த இடத்தில் மட்டுமல்ல, நம் வாழ்வில் நடக்கும் முக்கியமான விஷயங்களில் கூட அந்த தருணத்தை ரசிக்காமல் இப்படி கேமரா பின்னால் ஒளிந்து கொள்கிறோம்.
 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#3
இது யாருக்காககுழந்தைங்க அது பாட்டுக்கு விளையாடும்.... டிவி ஆன் செஞ்சு விட்டா போதும், போன கையில கொடுத்தா போதும் இருக்குற இடம் தெரியாது அமைதியா இருப்பான் என்று சொல்லி எத்தனைப் பெற்றோர் இது போன்று கையில் ஒரு கேட்ஜெட்டை கொடுத்து குழந்தைகளை முடக்குகிறீர்கள்?

இது அதற்கான நேரமல்ல.... குழந்தை அந்த பருவத்தில் ஓடியாடி விளையாட வேண்டும்,வாழ்க்கையை வாழ விடாமல் நாமே அவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறோம் என்பது உணர்த்தவே இந்த படம்.


டைம் பாஸ்

அலுவலகமோ, நிர்வாகத்தினர் கூடும் இடமோ அவரவர் இஷ்டத்திற்கு எதோ ஒன்றினை செய்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமாக இருக்கிறோம் என்று தான் பெயர் ஆனால் ஒவ்வொருவரும் சிறு சிறு குழுக்களாக இணைந்து குருட்டாம்போக்கில் நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#4
டிவி மேன்இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டு வைத்திருக்க எந்த வில்லனோ துப்பாக்கி ஏந்தியோ அல்லது கத்தியை காட்டியோ மிரட்ட வேண்டிய அவசியமில்லை. டிவியை ஆன் செய்து விட்டால் போதுமானது. நேரம் காலம் போவதே தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருப்பார்கள்.

போதாகுறைக்கு நொறுக்குத் தீனிகளும் உள்ளே தள்ளிக் கொண்டேயிருந்தால் வாழ்நாள் குறைந்து கொண்டே வருவதை உணர்வதில்லை.


வெளிநாட்டு மோகம்யாருக்குமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள் என்று சொன்னால் அதற்கு மவுசு அதிகம் தான். மக்களிடையே வரவேற்பு அதிகமிருக்கிறது என்பதை அறிந்து, அதுனுடைய விலையை பன்மடங்கு அதிகமாக்கி கொள்ளை லாபம் பார்ப்பார்கள். உள்ளூரில் கிடைக்கக்கூடிய அதே பொருளை வாங்க ஒரு ஆளும் இருக்க மாட்டார்கள்.
 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#5
பண மிருகம்


அதிகமாக பணம் வாங்குபவரிடத்திலும், கண்டிப்பான முறையில் வசூலிப்பவரிடத்திலும் பணத்த என்ன திங்கவா போற என்று கேட்டிருப்போம். இதனை நேரடியாக அப்படியே புரிந்து கொள்ளாமல் வீண் செலவு செய்வது, ஆடம்பர செலவு செய்வது என்று புரிந்து கொண்டு பாருங்கள். விஷயம் தெள்இவாக புரிந்திடும்.

கோழி முட்டைசிறு வயதில் தங்க முட்டை போடும் வாத்து கதையை பலரும் கேட்டிருப்பீர்கள். வாத்து ஒவ்வொரு நாளும் போடுகிற தங்க முட்டைக்கு காத்திருப்பது பதிலாக வயிற்றை அறுத்து உள்ளேயிருக்கும் அத்தனையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த வாத்தை இரண்டாக பிளந்து பார்த்தால் உள்ளே ஒன்றுமிருக்காது . இனி தங்கமுட்டையும் கிடைக்காது பேராசையினால் இருந்ததும் போச்சு என்ற ரீதியில் அந்த கதை முடியும்.

அதே தான் இங்கேயும், இந்த இடத்தில் நாம் கோழிக்கு பதிலாக மனிதர்களை வைத்துப் பார்க்கலாம். குறிப்பாக மாணவர்களை நிறுத்திப் பாருங்கள். அவர்களது, விருப்பம் குணாதிசயம் எல்லாம் ஒரு பக்கம் இழுத்துச் செல்ல அதையெல்லாம் நிறுத்திவிட்டு மதிப்பெண்களுக்காக அவர்களை பிழிந்தெடுப்பார்கள்.
 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,989
Location
chennai
#6
காப்பாற்ற....ஒரு பக்கம் லட்ச லட்சமாக சொகுசு வாழ்க்கைக்கு செல்வழிக்கும் செல்வழித்துக் கொண்டிருக்கிறோம், அதே நேரத்தில் இன்னொரு பக்கம் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் காய்ந்து கிடக்கிறார்கள்.

கடற்கரைக்கு பொழுது போக்க சென்றவர்கள் ஒரு பக்கம் என்றால் அதற்கு எதிர்திசையிலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரையே தெரியவில்லை ஆனால் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கழிவரையிலுமா?நிறுவனங்கள் எப்படி தங்களது பணியாட்களை இயந்தரத்தனமாக பார்க்கிறது என்பதை சொல்லும் படம் தான் இது. நீ எங்கிருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி என் நிறுவனத்திற்காக உழைத்துக் கொண்டேயிரு. பணத்தை வாரி இறைக்க.... இவர்களும் கண்ணை மூடிக் கொண்டு சிறிதும் யோசிக்காமல் செய்கிறார்கள். சில நேரத்தில் சரியான பணமும் கொடுக்கப்படுவதில்லை என்பது தான் யதார்த்தம்.
 

Attachments

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,157
Likes
142,226
Location
Madras @ சென்னை
#7
Goundamani - koncha yochika visayam.jpg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.