Pap smear test- பேப் ஸ்மியர் டெஸ்ட்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]இந்த சோதனையும் முக்கியம்![/h]கர்ப்ப காலத்தில் எத்தனையோ பரிசோதனைகளை குழந்தையின் நலனுக்காகப் பெண்கள் செய்து கொள்கிறார்கள். அவற்றுடன் புற்றுநோய் பரிசோதனையையும் பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவரான ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசன். சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகப்பேறு மருத்துவர்களின் கருத்தரங்கின் இடைவெளியில் நம்மிடம் பேசியவர், கர்ப்பிணிகளுக்கான புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

‘‘முன்பு நாற்பது வயதுகளில் பெண்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய், வாழ்க்கைமுறை மாற்றத்தால் இப்போது சின்ன வயதிலேயே வந்துவிடுகிறது. ஆனால், குடும்ப நலனில் அக்கறை காட்டும் பெண்கள் தங்கள் உடல்நலனில் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. அதனால்தான் பல நோய்களை முன்னரே கண்டுபிடிக்க முடிவதில்லை. அதிலும் புற்றுநோயை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கர்ப்பகாலத்தில் குழந்தையின் நலனுக்காக மருத்துவமனை செல்லும் பெண்கள் மற்ற பரிசோதனைகளோடு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும்.

உண்மையில் கர்ப்ப காலம் புற்றுநோயைக் கண்டுபிடிக்க ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மார்பகத்தில் கட்டி ஏற்படுவது, நிறம் மாறுவது, நீர் வடிவது போன்ற மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை சிலர் கர்ப்ப கால மாற்றங்கள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். கர்ப்பப்பை புற்றுநோயால் ஏற்படும் மாற்றங்களையும் சிலர் கர்ப்பகால மாற்றங்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், கர்ப்பத்துக்கும் இந்த புற்றுநோய் அறிகுறிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மார்பகப் பரிசோதனையை தாங்களாகவே கண்ணாடி முன்பு நின்று சுய பரிசோதனை (Self examination) செய்து கொள்ளலாம்.

அப்படி வித்தியாசமான மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் வெளியில் சொல்வதற்குத் தயங்கக் கூடாது. அடுத்த கட்டமாக அல்ட்ரா சவுண்ட், மேமோகிராம் போன்ற பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பை புற்றுநோயை 10 நிமிடத்தில் பாப் ஸ்மியர் பரிசோதனை(Pap smear test) மூலம் கண்டுபிடித்துவிடலாம். கட்டணமும் நூறு ரூபாய்தான் இருக்கும். புற்றுநோய் கொடுமையான நோயாக இருந்தாலும், அதைக் கண்டுபிடிக்கும் வழிகள் இவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். புற்றுநோய் கூட உடனடியாக ஏற்படுவதில்லை. அதற்கு முன்னரே Precancerous condition என்று சில அறிகுறிகளைக் காண்பிக்கிறது.

இது புற்றுநோய் செல்களாக மாறுவதற்குள்ளேயே எச்சரிக்கையாகிவிட்டால் புற்றுநோயை ஜெயித்துவிடலாம். பாப் ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்கிற அளவு பெண்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும். மருத்துவர்களும் கர்ப்பிணிகளுக்கு மற்ற பரிசோதனைகள்செய்யும்போது இந்த புற்றுநோய் பரிசோதனையையும் செய்ய வேண்டும். அதனால், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் ஏற்படுமோ என்று நினைக்க வேண்டியதில்லை. இது மிகவும் அரிதாக உலக அளவில் 2,500 கர்ப்பிணிகளில் ஒருவருக்குத்தான் ஏற்படுகிறது. அப்படியே ஏற்பட்டாலும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்காத வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். அம்மாவுக்கு ஏற்படும் புற்றுநோய் கருவில் இருக்கும் குழந்தையை பாதிப்பதும் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை” என்கிறார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.