Parenting should be like a Tamarind fruit -புளியம்பழம் போன்ற உறவு

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம்பழம் போன்றது. புளியம்பழம் பிஞ்சாக இருக்கும்போது அதன் ஓடும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் ஒன்றோடொன்று ஒட்டி, பின்னிப்பிணைந்து நிற்கும். இரண்டையும் எளிதில் பிரிக்கமுடியாது. அதேபோல் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோரும் பிள்ளையும் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாதவர்களாய் இருக்கவேண்டும். பெற்றோர் புளியங்காயின் ஓடுபோன்றவர்கள். பிள்ளைகள் உள்ளிருக்கும் சதைப்பகுதியைப் போன்றவர்கள்.

புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு, சதைப்பகுதியை விட்டு மெல்லமெல்ல விலகும். அதேபோல் பிள்ளைகள் வளரவளர பெற்றோர் பிள்ளைகளின் நெருக்கத்தைக் குறைத்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.

புளியங்காய் நன்றாக முற்றிப் பழமானவுடன் அதன் ஓடு சதைப்பகுதியை விட்டு தனியே விலகி, உள்ளிருக்கும் சுளைப்பகுதியை பாதுகாத்து நிற்கும். அதேபோல், பிள்ளைகள் வாலிப வயதை அடைந்து, வளர்ச்சி பெற்ற முழுமனிதர்களாய் ஆகும் நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகிநின்று, புளியம்பழ ஓட்டைப் போல, பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

புளியம்பழம் பழுத்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஓடு சுளையிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு, புளிச்சுளை பயன்பாட்டிற்குச் செல்லும்போது ஓடு ஒட்டிக்கொண்டே செல்லாது. சுளை விருப்பப்படி பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்படவும் வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி இலக்குப்படி, தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டும். பிள்ளைகள் விருப்பத்தைப் புறக்கணித்து தங்கள் விருப்பத்தை பெற்றோர்கள் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. புளியம்பழ ஓட்டிற்கு உள்ள பெருந்தன்மை பெற்றோருக்கும் வேண்டும்.

புளியம்பழம் _ புளிசாதம் கிளற பயன்படும் புளிக்குழம்பு வைக்கப் பயன்படும்; சாம்பார் வைக்கப் பயன்படும், துவையல் செய்யலாம், மீன் குழம்பு வைக்கலாம். இப்படி எத்தனையோ... அதேபோல் பிள்ளையின் ஆற்றல் தேவைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, திறமைக்கேற்ப பயன்படுத்தப் படவேண்டும். அப்போதுதான் அது சுவையாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் அமையும்.

புளிக்குழம்பு வைப்பதா, மீன்குழம்பு வைப்பதா என்பதை புளியம்பழ ஓடு தீர்மானிக்கக் கூடாது, சுளையை பயன்படுத்துகின்றவர் தீர்மானிக்க வேண்டும். அதேபோல் பிள்ளையின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களைப் பயன்படுத்துகின்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் பயன்பட்டு பயன்தருவர். அப்படிப்பட்ட பயன்பாடே அவர்களுக்கும் நன்மை தரும், அவர்களைப் பயன்படுத்துகின்றவர்களுக்கும் பயன்தரும்.

தங்களுடைய விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிப்பது கூடாது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறத்திற்கும் ஏற்ற துறையில் அவர்கள் செல்வதுதான் சாதனை படைக்கவும், சலிப்பற்ற மனநிறைவு பெறவும் வழிவகுக்கும்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழிக்கு ஏற்ப, பிள்ளைகள் வாலிப வயதை எட்டியதும் அவர்களிடம் நண்பர்களாய் பழகவேண்டிய கடமை பெற்றோருக்கு உரியது.

செடி சிறிதாக இருக்கும்போது அது நேராக பயனுள்ள வகையில் வளர அதனுடன் ஒரு குச்சியை நட்டுக் கட்டுவர். சுற்றிலும் பாதுகாப்பு வைப்பர். ஆனால், அது மரமாக வளரம்போது அந்தக் குச்சி மற்றும் பாதுகாப்பு அகற்றப்படும். பெற்றோர் பிள்ளைகள்மீது விதிக்கும் கட்டுப்பாடு என்பதும் அப்படித்தான் இருக்க வேண்டும். கடைசிவரை கண்டிப்பு, கட்டுக்குள் வைத்தல் என்பது பிள்ளைகளுக்கு எரிச்சல் ஊட்டும் என்பதோடு, பெற்றோர் சொல்வதற்கு எதிர்நிலையாகவும் செயல்படுவர். எனவே, பிள்ளைகள் வளர்ந்தபின் தோழமை உணர்வுடன் பெற்றோர் பழகவேண்டும். அவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைகள் வெற்றிபெற்று சாதிக்கின்றனர். கடைசிவரை பெற்றோரிடம் பிரியமாகவும் வாழ்கின்றனர். மேலும், சமுதாய மாற்றமும் இதையே ஏற்கிறது. பெற்றோர் இவற்றை ஏற்று நடந்தால் பெற்றோர்-_பிள்ளை உறவில் பிரிவும் இருக்காது; பிரச்சனையும் இருக்காது.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
அழகான உவமையுடன் கூடிய அருமையான அறிவுரை, மிக்க நன்றி ஜெயா.
U r most welcome sis......
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.