passion fruit-பேஷன் ஃப்ரூட்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். – passion fruits


இன்றைய சூள்நிலையில் எவற்றை உண்பது, எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்ப மான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகை யில்லை. இல்லையேல், வரவேற்பு பானமாக செயற்கை எலுமிச்சை வாசனையுள்ள பானத்தை விருந்தினர்களுக்கு தருவதும், கை கழுவுவதற்கு குவளையில் எலுமிச்சைப் பழத்தை வெட்டித் தருவதை யும் நாம் நாகரிகம் என்று கருதுவோமா? உங்களுக்கு இன்னொரு பழத்தை அறிமுகப் படுத்துகிறோம்.
பன்னாட்டு குளிர் பானங்கள் விளம்பரத்தால் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நலம் தரும் பழ பானங்கள் அறியப்படாமலே உள்ளன. அவற்றுள் ஒன்று தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். இதன் தாவர வியல் பெயர்:passiflora edulis. பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழத்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.


பேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது

அமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.


இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும்,சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது. உலகளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது இவ்வகை மதுபானம்.

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. மலைப் பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் வேகமாக வளரும் இந்தக் கொடியின் பழங்கள் பானங்கள் தயாரிக்க ஏற்றது. விதை மூலமாகவும்,போத்து முறை யிலும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மலர்கள் கண்கவரும் வகையில் மிக அழகாக இருக்கும்.
பேஷன் ஃப்ரூட் பழங்கள் தோன்ற 6 முதல் 10 மாதங் கள் வரை ஆகலாம். அதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. வகை, சூரிய ஒளி, வெப்ப அளவு, நாம் அளிக்கும் சத்துகள் என… மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் சாறு ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் என்கிறார்கள்.

அதிக நார்ச்சத்தும், இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் சான்றளிக்கின்றனர். இதன் இலைகளைக் கொண்டு அய்ரோப்பிய நாடுகள் சில மருந்துகள் தயாரிக் கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வணிக நோக்கில் வளர்த்து சாறு எடுத்து விற்பனை செய்கிறார்கள்.

இக்கொடியை வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, பழரசங்களை நாமே தயாரிக்கலாம். இதில் பொதுவாக இரு வகை பழங்கள் உண்டு. கருநீலப்பழம் உண்பதற்கு ஏற்றது… மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும்.

மற்றொன்று மஞ்சள் நிறப் பழம்… பானங்கள் தயாரிக்க ஏற்றது… சமவெளிப்பகுதியிலும் வளர்க்கக்கூடியது. மரங்களின் அருகில் வளர்க்கும்போது கொடியை மரத் தின் மேல் படரவிடலாம்.மொட்டை மாடியில் பந்தல் அமைத்து வளர்க்கும் போது கோடையின் வெப்பத்தை குறைப்பதோடு,விருந்தினரை உபசரிக்கும் வகையில் சத்துமிக்க பழ பானமாகவும் பயன்படுத்தலாம். வீட்டின் சுற்றுப்புறத்தை பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க அதிக பராமரிப்பில்லாத இந்த தாட்பூட் சிறந்தது!
 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
superb sharing da @chan, lakshmi... noted down...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.