Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&#300

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
சமீபத்தில் , நான் சந்திக்க நேர்ந்த இரு சம்பவங்கள் இவை . என் மனதை மிகவும் வருந்தச் செய்தன . இந்தக் காலத்துப் பெண்கள் சிலர். எப்படிப் பொறுமையின்றி , தன் வாழ்வை நகர்த்துகின்றனர் என்பதை எடுத்துச் சொல்கின்றன . ஆண்களும் விதி விலக்கல்ல .

முதல் சம்பவம்

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக ஊரைக் கூட்டி , நன்றாக நடந்தது . பெண் இந்தியாவிலும் , பையன் வெளிநாட்டிலும் இருக்கின்றனர் .

பையன் 6 மாதம் கழித்துத்தான் , இந்தியா வர முடியும் என்பதால் , 6 மாதம் கழித்தே திருமண நாளைக் குறித்து , எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன .
இதற்க்கிடையில், அந்தப் பெண்ணும் , பையனும் , தினமும் ஃபோனில் பேசிக்கொண்டு , ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளும் விதமாகவும் , புதிதாகக் கல்யாணம் செய்யப் போகும் நபர்களுக்கே உரிய விதமாகவும் பேசிக் கொண்டு இருந்தனர் .

கல்யாணத்துக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் சமயத்தில் , அந்தப் பெண் , “இந்தப் பையனைத் தனக்குப் பிடிக்கவில்லை “ என்று திடீரென்று கல்யாணத்தை நிறுத்தி விட்டாள்.

அந்தப் பையன் செய்த தவறு என்னத் தெரியுமா ?

அவ்வளவு நாட்கள் இல்லாமல் , சமீபமாக அவனுக்கு அலுவலகத்தில் ப்ரமோஷன் கிடைத்தால் , பணிச்சுமை காரணமாக , 2 வாரங்கள் தொடர்ந்து , அந்தப் பெண்ணுடன் , ஃபோனில் பேச முடியவில்லை .

உடனே இந்தப் பெண் கோபித்துக்கொண்டு, அவனுக்கு மெயில் அனுப்பி விட்டாள் . “கல்யாணத்துக்கு முன்னரே , இப்படி என் மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பதால் , உன்னைக் கல்யாணம் செய்ய விரும்பவில்லை “ என்று .

பதறித் துடித்த அந்தப் பையன் காரணத்தை விளக்கி , எவ்வளவோ கெஞ்சியும் , ஒன்றும் நடக்க வில்லை . கல்யாணம் நின்றே போய்விட்டது.

பெண்ணின் பெற்றோர், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

ஆனால், பையனும் , அவன் பெற்றோரும் , ஒரு பக்கம், இப்படி ஒரு பெண் தங்கள் வீட்டுக்கு வரவில்லையே என்று சந்தோஷப் பட்டாலும் , மனதளவில் கஷ்டமும் படுகின்றனர் .

இதில் இரண்டு பக்கமுமே , நட்பு மற்றும் சுற்றத்தாரின் கேலிப் பார்வைக்கு ஆளாவார்கள் தானே .

இதை ஏன் அந்தப் பெண் நினைத்துப் பார்க்கவில்லை ?
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

அடுத்த சம்பவம் :

இவர்கள் தம்பதிகள் . 2 வயதுக் குழந்தையும் உண்டு .

அந்தக் கணவனுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு வர , அவர் மட்டும் சென்று , அந்தப் பெண்ணின் அண்ணன் வீட்டில் (மைத்துனன் ) தங்கிக்கொண்டு , படித்துக் கொண்டு இருக்கிறார் . மனைவி , இங்கு வேலைப் பார்த்து வருகிறார் .

இன்னும் சில மாதங்களில் , அதே இடத்திற்கு , மனைவியும் தன் வேலையை மாற்றிக்கொண்டு சென்றுவிட இருக்கிறார் .

அந்தக் கணவன் , அந்த ஊரின் சிம் கார்டு கிடைக்கும் வரை , தன் மைத்துனன் ஃபோனிலேயே , தினமும் , தன் மனைவியிடம் பேசி வந்து இருக்கிறார் .

ஒரு நாள் முழுவதும் பேசாமல் , SMS மூலம் , “என்னால் இன்று பேச முடியாது “ என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார் .

அப்படியும் அந்த மனைவி , அன்று முழுவதும் , கோவம் கொப்பளிக்க , முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டு, ஆபீஸில் இருந்திருக்கிறார் .அவருடைய நெருங்கிய தோழிகளும் , எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல , “இந்த ஆண்கள் எல்லாருமே இப்படித்தான் , மனைவிகள் மேல் அவர்களுக்கு என்றுமே அக்கறை இருப்பதில்லை . தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்றால்தான், நம்மிடம் பேசுவார்கள் “ என்றெல்லாம் நன்றாக அவரின் கோபத்துக்கு தூபம் போட்டு இருக்கிறார்கள்.

ஒரு 2 அனுபவஸ்த ஆண்கள் மட்டும் , “அவருக்கு ஏதேனும் உரியக் காரணம் இருக்கலாம் , அதனால் , பொறுமைக் காக்கவும். அந்தப் பெண்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம் “ என்று எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை .

மறுநாள் , அந்தக் கணவர் பேசும்போது , இவள் சரியாகப் பேசவில்லை .அவர் தூண்டித்துருவிக் கேட்டபோது , இவள் ஒருவழியாகக் காரணத்தைச் சொல்லவும் ,

அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா ?

“என்னதான் உன் அண்ணன் குடும்பம் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் , அவர்களுடைய ஃபோனிலிருந்து செலவழித்து , உன்னுடன் பேசுவது , என் மனதை உறுத்தியது .

அதனால் , நான் சொந்தமாக சிம்கார்ட் வாங்கிய பிறகு உன்னுடன், உறுத்தல் இல்லாமல் பேசலாம் , என்பதாலேயே நேற்றுப் பேசவில்லை . இன்று சிம்கார்ட் வாங்கிவிட்டேன் “ என்று கூறி இருக்கிறார் .

இதற்குள் அந்த மனைவி , கேட்பார் பேச்சைக் கேட்டு , இன்னும் சில நாட்கள் , கணவர் பேசாமல் இருந்து இருந்தால் , டிவோர்ஸ் வரை யோசித்து இருப்பேன் என்று பிறகு சொல்கிறார் , தனக்கு ஆறுதல் கூறிய அலுவலக நண்பரிடம் . .

இந்த இரண்டு சம்பவங்களிலிருந்தும் , புரிய வருவது இவைதான் .

மேற்க்கத்திய நாடுகளில் எவ்வளவோ தம்பதிகள் பல வருடங்கள் , மனமொத்து வாழ்வதை எடுத்துக் கொள்ளாமல் , இவர்கள் இந்தியப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் , மேற்கத்திய வேண்டாத கலாச்சாரமான , பொறுமையின்மையைக் கடைப்பிடித்து , தங்கள் வளமான வாழ்வை எப்படிக் கெடுத்துக் கொள்கின்றனர் , என்று மிகவும் ஆதங்கமாக இருக்கிறது .

தினமும் ஃபோனில் பேசா விட்டால், அது அப்படி என்னக்குற்றம் ?பேச முடியாத சந்தர்ப்பமாக இருந்தால் , குடியா முழுகி விடும் ?

இதற்காக , அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு, அன்பே இல்லை என்று ஆகிவிடுமா என்ன ?

இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , வாழ்நாள் முழுவதும் , ஏற்படக்கூடிய பற்பல சவால்களை எப்படி எதிர் கொள்வார்கள் ?

இப்போதெல்லாம் , இதே ரீதியில் பல திருமணங்கள் , நிச்சயத்துடன் , “not compatible “ என்று நின்று விடுகின்றன .

அப்படியே திருமணம் ஆகி விட்டாலும் , உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக ,ஒரு சில வருடங்களிலியே டைவோர்ஸ் ஆகி விடுகின்றன .

கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டாம் .

ஆனால் , பொறுமையாக , விட்டுக்கொடுத்து , ஒத்துப் போதல் மட்டுமே வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் தத்துவம் என்பதை , அனைவரும் இந்தக் காலத்தில் உணர்ந்து செயல் பட வேண்டும் .

ஆகவே , சில நாட்கள் ஃபோனில் பேச முடியாமல் போனாலோ , நேரில் சந்திக்க முடியாமல் போனாலோ , இல்லை இதைப் போன்ற காரணங்களுக்காக, அனாவசியக் கோபம் ,திருமண முறிவு,போன்ற விபரீத முடிவுகளுக்குப் போகாமல் இருக்க , பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே பேசித் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் .

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் ஆயிரம் சொன்னாலும் , அதை எல்லாம் அப்படியே மனதில் ஏற்றுக்கொள்ளாமல் , தீர யோசித்து , நல்லவர்களின் யோசனைகளை ஏற்று , அதன் படி நடந்தால்தான் திருமண வாழ்க்கை சிறக்கும் .
 
sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#3
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

ஹாய் ஜெயா,
படித்ததும் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனால் ஆச்சர்யமாக இல்லை. ஏன் தெரியுமா, நானும் இதை போல சில பல சம்பவங்களை பார்த்தேன்... சமீப காலமாக இதைப் போன்ற விஷயங்கள் தெருவுக்கு ஒன்று என நடந்கின்றன.

இதிலானும் கல்யாணம் இன்னமும் நடக்கவில்லை, பையன் பிழைத்தான், இப்படி ஒரு பெண்ணுடன் காலம் முழுவதும் அவதி படாமல்.

இங்கே ஒரு தம்பதி கல்யாணமாகி நான்கு வருடங்கள் குடித்தனமும் நடத்திய பின்னர் இதைப் போன்ற சண்டையிட்டு விவாகரத்தும் ஆகிவிட்டது.

காரணம்:

பெண்ணுக்கு நட்புகளின் வீட்டில் பார்டி என குடி அரட்டை சினிமா என ஊர் சுற்ற பிடித்தது, அதை ஆண் கண்டித்தான். ( ஆச்சர்யமாக உள்ளதல்லவா... வழக்கமாக இது உல்டாவாக நடந்துதான் நாம் பார்த்திருப்போம்)
அவன் வேளையோடு வீட்டிற்கு செல்ல வேண்டும், தனக்கென ஒரு குழந்தை வேண்டும், அமைதியாக குடித்தனம் செய்ய வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தான்.

அவளோ இதில் எதுவும் நாட்டமில்லாமல். நைட் இஸ் சொ யங், இப்போவே வீட்டுக்கு போகணும்னு ஏன் பிடுங்கறே, ரொம்ப குறுகிய மனப்பான்மை உனக்கு... பத்தாம்பசலி, பழங்காலம்னு அவனை கிண்டலும் கேலியுமாகவே செய்துகிட்டு இருந்தா. விரைவிலேயே இருவருக்கும் பிடிக்காமல் போனது.

அவள் இவனை விட்டு விலக கோரினாள். அவனும் மனமின்றியே ஆயினும் ஒத்துக்கொண்டான். பிரிந்துவிட்டனர்.

தனியே ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தான் நினைத்தது போன்ற வாழக்கையை அவள் வாழ்ந்து வருகிறாள். கூடிய விரைவில் மனதுக்கு பிடித்த வேறு ஒருவனுடன் மறு மணம் நடக்கப் போவதாக பேச்சு.
உறவுகள், உணர்ச்சிகள், திருமணம், எல்லாமே கேலிகூத்தாக போய்விட்டதோ எனத் தோன்றுகிறது.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

ஜெயந்தி & சுதா,

நீங்கள் இருவர் கூறுவதும் மிகவும் சரி. இன்றைய தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை நீங்கள் இங்கு குறிப்பிட்ட சம்பவங்கள் தெளிவாக விளக்குகின்றன.

ஜெயந்தி கூறியவாறு நிச்சயம் முடிந்து, திருமணம் வெகு சமீபத்தில் என்ற நிலையில் நின்று போன திருமணம் என் உறவு வகையிலும் உண்டு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற நிலையில் தான் இன்றைய தலைமுறையினரின் மணவாழ்க்கை அமைந்துள்ளது.

திருமண வாழ்க்கை என்பது ஒரு குறுகிய கால ஒப்பந்தமாகவே பலரால் பார்க்கப்படுகிறது. அதில் இருக்கும் பவித்திரத்தை அவர்களால் உணர முடிவதில்லை. விட்டுக் கொடுத்து, குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து வாழும் வாழ்க்கை என்றும் வீண் போனதில்லை. மாறாக அவை குடும்பத்தாரிடமும், சுற்றத்தாரிடமும், அன்பையும், மரியாதையையும், கெளரவத்தையுமே நமக்கு பரிசாகப் பெற்றுத்தரும் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர்வார்கள்.
 
Last edited:

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#5
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

சுமி,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... ஆனால், அதை புரிந்துகொள்வோர் யார்??
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,300
Location
Madurai
#6
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

//ஆனால், அதை புரிந்துகொள்வோர் யார்??//

Sud, Naangale athu Naangale.. Ha ha ha.. Inga Comments tharama apadiye Odidalam nnu Ninachen.. :) But Engala Pathi Konjam Sollikalam nnu Vanthutten.. :crazy:

Agreed Sumii Kaa.. Sattu nnu React Pannidranga(drom) thaan.. But Sud & Aunty Sonna Incidents Pola Kandippa Naanga Panna Mattom :)

Neenga Sonna விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் Ithai Nerayave Valarththukanum thaan.. But Amma - Appa kkaga neraya Purunju nadanthukirathu illaiya.. Athu Pola Future lla um Engala Change Pannippom ndra thought nerayave irukku.. Lets see!! ;)

இன்றைய தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் மிகவும் குறைவாகவே உள்ளது

Read more: http://www.penmai.com/forums/married-life/67958-patience-300-a.html#ixzz2wrIO89MZ
Amen Akka!! Neenga Sonnathu romba Sari,,, Ithu Romba Mukkiyam Enakkum :)
மாறாக அவை குடும்பத்தாரிடமும், சுற்றத்தாரிடமும், அன்பையும், மரியாதையையும், கெளரவத்தையுமே நமக்கு பரிசாகப் பெற்றுத்தரும்

Read more: http://www.penmai.com/forums/married-life/67958-patience-300-a.html#ixzz2wrJJQUMv
Many Thanks Jay Aunty.. Athu Enna Mayamo theriyalai Manthiramo theriyalai,, Correct time lla ipadiyoru Nach Thread pottu thalai lla thattidringa.. :love:

And Thanks to you too Sud & Sumii Kaa.. :hug:
 
sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#7
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

//ஆனால், அதை புரிந்துகொள்வோர் யார்??//

Sud, Naangale athu Naangale.. Ha ha ha.. Inga Comments tharama apadiye Odidalam nnu Ninachen.. :) But Engala Pathi Konjam Sollikalam nnu Vanthutten.. :crazy:

Agreed Sumii Kaa.. Sattu nnu React Pannidranga(drom) thaan.. But Sud & Aunty Sonna Incidents Pola Kandippa Naanga Panna Mattom :)

Neenga Sonna விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மையும், பொறுத்து போகும் குணமும் Ithai Nerayave Valarththukanum thaan.. But Amma - Appa kkaga neraya Purunju nadanthukirathu illaiya.. Athu Pola Future lla um Engala Change Pannippom ndra thought nerayave irukku.. Lets see!! ;)Amen Akka!! Neenga Sonnathu romba Sari,,, Ithu Romba Mukkiyam Enakkum :)

Many Thanks Jay Aunty.. Athu Enna Mayamo theriyalai Manthiramo theriyalai,, Correct time lla ipadiyoru Nach Thread pottu thalai lla thattidringa.. :love:

And Thanks to you too Sud & Sumii Kaa.. :hug:
ஹை கார்த்தி,

நிஜத்தில சொன்னா உன் போஸ்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நீயே சொன்னதுபோல இந்த வளர்ந்து வரும் இளைய தலைமுறைன்னு ஒரு பிரதிநிதி நீ. உங்களைப்போன்றவர் உள்ளும் இதைப் போன்ற நல்லெண்ணங்கள் புரிதல் விட்டுக்குடுத்தல் எல்லாமும் நிறைந்திருக்குன்னு தெரிய வரும்போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதல். இன்னமும் நம்ம சமுதாயம் அவ்வளவு மோசமாகவில்லைன்னு ஒரு நம்பிக்கை.
வாழ்த்துக்கள் செல்லம்ஸ்
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#8

இதில் இந்த தலைமுறையினர் என்று நான் குறிப்பிட்டது, சரியான வழிநடத்துதல் இன்றி, தன் மகன்/மகள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று கண்மூடித் தனமாக நம்பும் பெற்றோர்களும் இந்த அவசர யுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். மணவாழ்வில் பிரச்சனை எழும்போது, அங்கே கோப உணர்சிகளுக்கு இடம் கொடாமல், சிறிது அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து, சிந்தித்து தவறு யார் மீது என்பதை அறிந்து, அந்தத் தவறு எதிர்காலத்தில் நிகழாமல் எப்படி தடுக்கலாம் என்பதை இருவருமே கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்தால் பல மணவிலக்குகள் தடுக்கப்படும். முக்கியமாக ஈகோ பார்க்காமல் இருக்கவேண்டும்.

இரண்டு குடும்பங்கள் இணைந்து புது உறவு முறைகளை ஏறபடுத்திக் கொள்ளும் பொருட்டு ஏராளமான பொருள் செலவு செய்து நடத்தப் படும் திருமணங்கள் தோல்வியில் முடிவது எல்லோருக்கும் வேதனையைத் தானே ஏற்படுத்தும்.

சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி கார்த்தி.
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,300
Location
Madurai
#9
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

Aiiii Sud :) :) Kandippa Enna Pola Innum Neraya iruppanga nnu Naanum Namburen Sud ;) Thanks for your Wishes as Well :hug:

ஹை கார்த்தி,

நிஜத்தில சொன்னா உன் போஸ்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நீயே சொன்னதுபோல இந்த வளர்ந்து வரும் இளைய தலைமுறைன்னு ஒரு பிரதிநிதி நீ. உங்களைப்போன்றவர் உள்ளும் இதைப் போன்ற நல்லெண்ணங்கள் புரிதல் விட்டுக்குடுத்தல் எல்லாமும் நிறைந்திருக்குன்னு தெரிய வரும்போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதல். இன்னமும் நம்ம சமுதாயம் அவ்வளவு மோசமாகவில்லைன்னு ஒரு நம்பிக்கை.
வாழ்த்துக்கள் செல்லம்ஸ்
Yeah Yeah I Know Kaa.. Kandippa Neenga Soldra Points - apadi Illainaalum Pathiya vachukanum.. Many Thanks Kaa... Akkkkaaa Nanga than Thanks Sollanum Kaa :) Neenga Yen Seppureenga????

இதில் இந்த தலைமுறையினர் என்று நான் குறிப்பிட்டது, சரியான வழிநடத்துதல் இன்றி, தன் மகன்/மகள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று கண்மூடித் தனமாக நம்பும் பெற்றோர்களும் இந்த அவசர யுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். மணவாழ்வில் பிரச்சனை எழும்போது, அங்கே கோப உணர்சிகளுக்கு இடம் கொடாமல், சிறிது அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து, சிந்தித்து தவறு யார் மீது என்பதை அறிந்து, அந்தத் தவறு எதிர்காலத்தில் நிகழாமல் எப்படி தடுக்கலாம் என்பதை இருவருமே கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்தால் பல மணவிலக்குகள் தடுக்கப்படும். முக்கியமாக ஈகோ பார்க்காமல் இருக்கவேண்டும்.

இரண்டு குடும்பங்கள் இணைந்து புது உறவு முறைகளை ஏறபடுத்திக் கொள்ளும் பொருட்டு ஏராளமான பொருள் செலவு செய்து நடத்தப் படும் திருமணங்கள் தோல்வியில் முடிவது எல்லோருக்கும் வேதனையைத் தானே ஏற்படுத்தும்.

சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி கார்த்தி.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#10
Re: Patience - பொறுமையே மணவாழ்க்கையின் மந்திரச் சாவ&

ஹாய் ஜெயா,
படித்ததும் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனால் ஆச்சர்யமாக இல்லை. ஏன் தெரியுமா, நானும் இதை போல சில பல சம்பவங்களை பார்த்தேன்... சமீப காலமாக இதைப் போன்ற விஷயங்கள் தெருவுக்கு ஒன்று என நடந்கின்றன.

இதிலானும் கல்யாணம் இன்னமும் நடக்கவில்லை, பையன் பிழைத்தான், இப்படி ஒரு பெண்ணுடன் காலம் முழுவதும் அவதி படாமல்.

இங்கே ஒரு தம்பதி கல்யாணமாகி நான்கு வருடங்கள் குடித்தனமும் நடத்திய பின்னர் இதைப் போன்ற சண்டையிட்டு விவாகரத்தும் ஆகிவிட்டது.

காரணம்:

பெண்ணுக்கு நட்புகளின் வீட்டில் பார்டி என குடி அரட்டை சினிமா என ஊர் சுற்ற பிடித்தது, அதை ஆண் கண்டித்தான். ( ஆச்சர்யமாக உள்ளதல்லவா... வழக்கமாக இது உல்டாவாக நடந்துதான் நாம் பார்த்திருப்போம்)
அவன் வேளையோடு வீட்டிற்கு செல்ல வேண்டும், தனக்கென ஒரு குழந்தை வேண்டும், அமைதியாக குடித்தனம் செய்ய வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தான்.

அவளோ இதில் எதுவும் நாட்டமில்லாமல். நைட் இஸ் சொ யங், இப்போவே வீட்டுக்கு போகணும்னு ஏன் பிடுங்கறே, ரொம்ப குறுகிய மனப்பான்மை உனக்கு... பத்தாம்பசலி, பழங்காலம்னு அவனை கிண்டலும் கேலியுமாகவே செய்துகிட்டு இருந்தா. விரைவிலேயே இருவருக்கும் பிடிக்காமல் போனது.

அவள் இவனை விட்டு விலக கோரினாள். அவனும் மனமின்றியே ஆயினும் ஒத்துக்கொண்டான். பிரிந்துவிட்டனர்.

தனியே ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தான் நினைத்தது போன்ற வாழக்கையை அவள் வாழ்ந்து வருகிறாள். கூடிய விரைவில் மனதுக்கு பிடித்த வேறு ஒருவனுடன் மறு மணம் நடக்கப் போவதாக பேச்சு.
உறவுகள், உணர்ச்சிகள், திருமணம், எல்லாமே கேலிகூத்தாக போய்விட்டதோ எனத் தோன்றுகிறது.

ஹாய் சுதா ,

என்ன மாதிரி ஒரு பெண் அவள் ......இந்த it கலாச்சாரம் இந்த அளவுக்கா போகணும் ?

நல்லவேளை குழந்தையாவது பிறக்காம இருந்ததே ....அப்புறம் அதுவும் சேர்ந்து அல்லாடணும்.

இந்த மாதிரி விருப்பு வெறுப்புகள் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிக்கிட்டா , அப்போ ரெண்டு பேருக்கும் சரி வராதுன்னு தெரிஞ்சா விட்டுடலாம் .

அப்படியே ரெண்டு பேரும் ஆப்போசிட் குணமா இருந்து சமாளிக்கிறது இந்தக் காலத்துல கஷ்டம் தான் .

இந்தக் காரணத்துக்காக , திருமணம் நின்னா கூட பரவாயில்லை. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப்புறம் டைவோர்ஸ் பண்ணாம இருக்கலாம் .

ஆனா , ஒரு ஃபோன் பேசலைன்னு , வெத்து ரீசன் சொல்லி கல்யாணத்தை நிறுத்தறது , அதையும் அந்தப் பெண்ணோட பெற்றோர் கண்டிக்காதது , எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது .
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.