Patti Vaithiyam in Tamil

Parasakthi

Registered User
Blogger
#1
தோழிகளே இந்த இழையில் உங்களுக்கு தெரிந்த பாட்டி அல்லது கை வைத்திய முறைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களது பாட்டி, கொல்லுபாட்டி சொல்லி கொடுத்த பாட்டி வைத்திய முறைகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.
 
Last edited:

Parasakthi

Registered User
Blogger
#2
உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.


Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Parasakthi

Registered User
Blogger
#3
Poondu Maruthuvam


 • [*=left]குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
  [*=left]கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
  [*=left]தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
  [*=left]உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
  [*=left]இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
  [*=left]பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
  [*=left]பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
  [*=left]பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
 

Parasakthi

Registered User
Blogger
#4
அடிக்கடி தும்மலா? தும்மலுக்கான பாட்டி வைத்தியம்

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, நறுக்குமூலம், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இவற்றை வாங்கி காயவச்சு, சம எடை சேர்த்து இடிச்சி பொடியாக்கி வச்சிக்கிட்டு, காலை, மாலைன்னு ரெண்டு வேளையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் குணமாயிடும்
 
#5
Thanks for sharing sakthi. I cant post in tamil sorry yar. Silaruku winter timela thondai kattikum adhuku konjam seeragathai 2 chinna vengayathoda sethu arachu thondaila thaduvuna sari aidum
 
#7
Whenever u get soar throat, cold, dry cough or any other respiratory trouble take a small piece of ginger smash it to get its thick juice and add one teaspoon honey. Drink this juice in empty stomach and is very effective when u add some 'panangalkandu'(englishla ennapa) . after making ginger juice keep it for some time to separate the calcium precipitated under the juice.avoid this precipitate as it will lead to ulcer.
 

Parasakthi

Registered User
Blogger
#8
சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.


சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்.
Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.

தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.


பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.


முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
 
Last edited by a moderator:

Parasakthi

Registered User
Blogger
#9
மஞ்சள்

மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

ஏலக்காய்:

ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

இலவங்கம்:

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.


சோம்பு (பெருஞ்சீரகம்):

சோம்பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

வெந்தயம்:

அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
 
Last edited:

Parasakthi

Registered User
Blogger
#10
பெருங்காயம்

பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

மிளகு

மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

சீரகம்

சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

வெங்காயம்

வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
 
Last edited:

Parasakthi

Registered User
Blogger
#11
பித்தம் நீங்க:-

கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.

தலைவலி நீங்க:-

சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.

வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

பல்வலி நீங்க:-

சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

mahis

Registered User
Blogger
#12
இன்னும் இன்னும் நிறைய உங்கள்ட்டருந்து எதிர்பார்க்கிரோம் ஷக்தி !
 

swaga2008

Registered User
Blogger
#14
hey sakthi, superb , useful tips ma..of course sakthi yaru patti vaithiyam solrangalo avanga patti thanea..:lol::lol:.. just kidding ma..but jokes apart, enga sakthi intha tips collect panea..very useful ma..

patti vaithiyam s really precious ma..but generation gap la elamea poiduchu ma.. so thanks a lot sakthi..innum neriya post panuma.. especially inga abroad la irukaravagaluku ithu romba useful a irukum..:cheer::cheer::cheer:

hey sakthi, intha collections la, periods stomach pain ku remedy iruntha pathu post panuma...
 

Parasakthi

Registered User
Blogger
#16
hey sakthi, superb , useful tips ma..of course sakthi yaru patti vaithiyam solrangalo avanga patti thanea..:lol::lol:.. just kidding ma..but jokes apart, enga sakthi intha tips collect panea..very useful ma..

patti vaithiyam s really precious ma..but generation gap la elamea poiduchu ma.. so thanks a lot sakthi..innum neriya post panuma.. especially inga abroad la irukaravagaluku ithu romba useful a irukum..:cheer::cheer::cheer:

hey sakthi, intha collections la, periods stomach pain ku remedy iruntha pathu post panuma...
Swathi thanks for your words da. Ithellam google search la than da kidaichathu, sure da innnum neraya post panren, Period painkum remedy post panren swathi...
 

Parasakthi

Registered User
Blogger
#18
hey sakthi, superb , useful tips ma..of course sakthi yaru patti vaithiyam solrangalo avanga patti thanea..:lol::lol:.. just kidding ma..but jokes apart, enga sakthi intha tips collect panea..very useful ma..

patti vaithiyam s really precious ma..but generation gap la elamea poiduchu ma.. so thanks a lot sakthi..innum neriya post panuma.. especially inga abroad la irukaravagaluku ithu romba useful a irukum..:cheer::cheer::cheer:

hey sakthi, intha collections la, periods stomach pain ku remedy iruntha pathu post panuma...
Swathi Dear Check out the link below

Home Remedy for Painful Periods
 

Parasakthi

Registered User
Blogger
#19
பித்தம் நீங்க:

மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:

முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.

அம்மை நோயைத் தடுக்க:

10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
HERE.

குஷ்டநோய் குணமாக:

வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும்.

சர்க்கரை நோய்:

ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

யானைக்கால் நோய் குணமாக:

பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது.
 
Last edited by a moderator:

Parasakthi

Registered User
Blogger
#20
உடல் வலி குணமாக:

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

உடற் சூடு அகல:

கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும்.

மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

மூளை நல்ல நிலையில் இயங்க:

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்க:

வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும். பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஞாபக சக்தி பெருகும்.
 

Important Announcements!