PCOD problem's details

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சினைப்பை நீர்க்கட்டி - Poly Cystic Ovarian Disease (PCOD) .

Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.


ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கருமுட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம்நடைபெற்று குழந்தை உருவாகிறது.
ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதேPoly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.
Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome)உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

- குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள்பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சிஅடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள்கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

- ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடையபெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

- ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடையபெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது.

2 - 3மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும்.சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்குமிகுதியாக இருக்கும்.

- முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்குஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாகமுகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது.உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடிவளரலாம்.

- எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல்எடை அதிகரிக்கிறது..

- முகப்பரு வரலாம்.

- நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து,தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம்அதிகரித்து காணும்.

இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும்இருக்கும் என்றில்லை. சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதேகுழந்தைகள் பல
பெற்ற பெண்கள் நிறைய பேர்இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள்வரலாம்
contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Endometriosis - Details & Treatments

தொடர்ச்சி

காரணம்

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

-
நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின்ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன.

-
பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாகபாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்குதற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

-
வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாகஇருக்கிறது.

-
கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும்,சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

ஆய்வக பரிசோதனைகள்
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளைஉறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும்கண்டறியலாம்.

ஆலோசனைகள்

-
உடல் எடையை குறைத்தல் - உடற்பயிற்சி, நடைபயிற்சிமேற்கொள்ளலாம்.

-
உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால்பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில்பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளைகுறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி,கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

-
புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்தபழக்கத்தை அறவே விடவேண்டும்.
மருத்துவம்

மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீனமருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர்.பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள்ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள்உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும்என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள்ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையைபெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்

- 14
வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

-
ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்ஏற்படுகிறது என்றால்.

-
மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.

-
உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்

-
அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.

-
கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமைநிறமாற்றம் காணப்பட்டால். உடனே மருத்துவரை சந்திக்கவும்.
contd..
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: Endometriosis - Details & Treatments

தொடர்ச்சி
சித்தவைத்தியம்என்னசொல்கிறது?

சினைப்பைநீர்க்கட்டி: சித்தமருத்துவம்மாயமாக்கும்

பெண்ணுக்குமாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால்,முதலில் அதைச்சீராக்கசிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பைநீர்க்கட்டிதான் முதல்காரணமாக இன்றுகற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும்ம ருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பைநீர்க்கட்டிகள்(poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதிப யமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது.கருமுட்டையானது கருப்பையைப்பற்றும் நாள்தாமதப்படுவதுதான் ஒழுங்கற்றமாதவிடாய்க்குக்காரணமேத விர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பைநீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலிசிஸ்டிக்ஓவரி”,என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப்பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்துநிறைய உள்ளகீரைகள், லோகிளைசிமிக்(Low Glycemic foods)உணவுகள்அ திகம்எடுத்துக்கொள்வதும்தான்.

இது தவிர பூண்டுக்குழம்பு, எள்ளுத்துவயல், கருப்புத்தொலிஉ ளுந்துசாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்கஉதவிடும். சுடுசாதத்தில், வெந்தயபொடி1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

மாதவிடாய்வரும் சமயம் அதிகவயிற்றுவலி உள்ள மகளிர்எ னில்
சோற்றுக்கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லிபோ ன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம்சா ப்பிட்டு
வரவேண்டும்
.
சிறியவெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிடஉ தவும்.

Opinion 2

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லதுபயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி,மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்குமுழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக்குணப்படுத்த முடியும்.

பிரச்னைக்குக் காரணம் என்ன?
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைஉள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்கவேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின்அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம்காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர்இன்ஸýலினிமியா'வைத்தான்
காரணம் எனக் கருதி சர்க்கரைநோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமானநடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சிஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத்தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மாசிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

உணவு முறை என்ன?

பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல்எடையை
அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்கவேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவேஉயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிடவேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ளகாய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம்,பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவைசினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும்உதவும்.

சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகுஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்தமருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.

மீசை வளர்வது ஏன்?

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண்ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில்சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசைவளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.

சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே,கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதிமருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி -யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம்சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்

.
 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: Endometriosis - Details & Treatments

[h=3]சினைப்பை நீர்க்கட்டிகள் எப்படி உருவாகிறது?[/h]கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1 முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சினைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: Endometriosis - Details & Treatments

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்:

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரும்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும். எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. சிலநேரங்களில் ஹார்மோன் குறைந்து காணும். சிலநேரங்களில் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.
புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை
வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: Endometriosis - Details & Treatments

தொடர்ச்சி
மலட்டுத் தன்மை:

சினைப்பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி:
பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.
குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன் கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.
தோலில் காணப்படும் மாற்றங்கள்
உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.
பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்
ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்:

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்:
தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.
நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக:
சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.
எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.
சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.
புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.
முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.
தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாததாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
நீர்க்கட்டிகள் நோய் அல்ல!


நீர்க்கட்டிகள் என்று சொல்லப்படுகிற பி.சி.ஒ.டி ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. பரபரப்பு நிறைந்த இயந்திரத்தரமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைவு, ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடு, மரபியல் காரணம், எதிர்பாற்றல் குறைதல் போன்ற காரணத்தால் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.


எல்லாப் பெண்களுக்கும் 15 நீர்க்கட்டிகள் வரை உருவாகலாம். அவை மாதவிலக்கு சமயத்தில் மறைந்துவிடும். இது இயல்பான செயல்பாடுதான். மாதவிலக்கு சுழற்சி தடைப்பட்டு ஃபைப்ராய்டு, சிஸ்ட் போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளாக உருமாறினால் மட்டுமே இதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.

லேசான தலைவலி, காய்ச்சல், சளி, அசதி, வயிற்று வலி போன்ற சிறு உபாதைகளுக்கெல்லாம் மாத்திரைகளை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தலாம். வலியை ஏற்கப் பழகுதல் நல்லது. தலைவலிக்கு வெற்றிலை வைத்துக் கொள்ளுதல், சளி தொல்லைக்கு ஆவி பிடித்தல் என முடிந்தளவு எளிய வெளிப்புற சிகிச்சைகளை செய்துகொள்தல் நலம். மருத்துவ ஆலோசனையுடன், அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே ஹார்மோன் மாத்திரைகளை எடுக்கலாம். அதிலும் இரண்டாவது முறையாக, வேறொரு மருத்துவரிடம் கருத்து கேட்க வேண்டியது அவசியம்.

என்ன தீர்வு?
துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடுவதால்கூட, வரும் நோயை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

போதுமான அளவு தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்க் கட்டிகளை குணப்படுத்த, கற்றாழையின் தோல் சீவி அதன் சதைப் பகுதியை 7 முறை ஒடும் தண்ணீரில் (running tap water) கழுவி, அதன் சதைப் பகுதியை மோரில் நன்கு அடித்து குடிக்கலாம். பனை வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை பிரச்னைகள் குணமாகும்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.