PCOD Remedies - பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வே&#29

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#1
வணக்கம் தோழிகளே.......
நானும் ஒரு pcod Problem உள்ள பெண்.உங்களில் ஒருத்தியே....எனக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஒரு மாதங்களே ஆகின்றன, ஆனால் அதற்குள் நான் நிறைய வேதனைகளை பட்டுவிட்டேன்.மிகவும் வேதனையோடு கிட்ட தட்ட செத்து விடலாம் என்ற அளவுக்கு மனம் பாதித்து விட்டது.எனக்கு இந்த பிரச்சனை என்பதே எனக்கு திருமணம் முடிந்து 6 மாதத்திற்கு பிறகே தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் என் அம்மாவோடு 15 நாட்கள் இருந்தேன் என் அம்மா ஒரு சித்த வைத்திய விரும்பி.அவர் என்னை ஜீ தமிழ் தொலைகாட்சியில் காலை 8 . 30 மணிக்கு ராஜமாணிக்கம் அய்யாவின் நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்கள்...ஏற்கனவே நான் கொஞ்சம் பார்ப்பேன் தான்.ஆனால் என்னை முழு மூச்சாக கவனிக்க வைத்தார்கள்.அதில் நான் கண்ட சில மருத்துவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.உண்மையில் அவர் சொல்வது அனைத்தும் உண்மையே.நான் பலன் பெற்றேன் நீங்களும் பலன் பெறவே உங்களிடமும் பகிர்கிறேன்.இந்த திரியினை நான் ஆரம்பிப்பது அவருடைய மருத்துவங்களை உங்களிடையே பகிர்வதற்காக மட்டுமே......வேறு எந்த எண்ணமும் இல்லை

இதன் முழு உரிமையும் அய்யா அவர்களுக்கே......இதனால் நிறைய பேர் பலன் அடைய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.......அவருடைய குறிக்கோலும் அதுவே....உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் அவரை பற்றி தெரியாதவர்கள் இனி தினமும் காலை 8.30 மணிக்கு பார்த்து பயன் பெறுங்கள் தோழிகளே.....
 
Last edited:

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#2
Re: பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வேண்&a

என்னை போல இன்னும் நிறைய பெண்கள் இந்த பிரச்சனையால் அவதி படுபவர்களுக்காக பலனடையவே இந்த என் முயற்சி...........
 

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#3
Re: பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வேண்&a

கர்ப்பபை குற்றங்கள் :-
கருப்பை குற்றங்கள் என்றால் என்ன?
ஒழுங்கற்ற மாதவிடாய் , கர்ப்பபையில் கட்டிகள் புண்கள் வீக்கங்கள் கருக்குலாயில் அடைப்பு , இவை அனைத்துமே கருப்பை குற்றங்கள்.....
இதை சரி செய்ய :-
தேவையான பொருள்கள் :

மலைவேம்பு இலை ( இளம்தளிர் ) – 10 g
நிலவேம்பு - 1g ( இது நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே கிடைக்கும் )
கிராம்பு - 4 ( பொடி செய்தது )
ஏலக்காய் - 1 ( பொடி செய்தது )
கலச்சிக்காய் – 1 ( இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) ( நாம் பொடித்து கொள்ள வேண்டும் )
கருப்பட்டி / பனை வெல்லம் – தேவையான அளவு
செய்முறை:
மலைவேம்பு மற்றும் நிலவேம்பு ஆகிய இரண்டும் கசப்பு தன்மை உடையது.இதை நீக்கவே கருப்பட்டி சேர்கிறோம்.மலைவேம்பை எடுத்து அரைத்துக் கொள்ளவும் அதனுடன் நிலவேம்பு கிராம்பு ஏலக்காய் கலச்சிகாய் பொடி கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாக சாப்பிட கருப்பை குற்றங்கள் நீங்கும் .இயற்கையாகவே குழைந்தப்பேறு கிட்டும்.
எப்போது சாப்பிட வேண்டும் :
இதை மாதவிடாய் நேரங்களில் 7 நாட்கள் தொடர்ந்து 3 வேளை சாப்பிட வேண்டும் இது போல 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.இவ்வாறு குழந்தை பேறு கிட்டும் வரையிலும் சாப்பிடலாம்.
 
Last edited:

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#4
Re: பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வேண்&a

கருமுட்டைகள் வளர்ச்சிக்கு :
தேவையான பொருட்கள் :-
ஆப்பிள் – 1
பாதாம் - 10 g
பிஸ்தா - 10 g
முந்திரி - 10 g
கிஸ்மிஸ் பழம் ( உலர்ந்த திராட்சை) -10 g
நீர்முள்ளி விதை – 2 g (( இது நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவே கிடைக்கும்)
நாட்டு மாட்டு நெய் - தேவைக்கேற்ப
முருங்கை பூ – 100 g
கல்கண்டு - தேவைக்கேற்ப
செய்முறை :
அப்பிளை தோல் நீக்கி கூலாக அடித்து கொள்ளவும் . உலர் திராட்சை பாதம் பிஸ்தா முந்திரியை முறையே தனித்தனியே நெய்யில் பொரித்து எடுத்து அதை பொடி செய்து வைத்து கொள்ளவும். கல்கண்டையும் பொடி செய்து கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி ஆப்பிள் கூலை ஊற்றி பின் தனி தனியே அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.கல்கண்டையும் நீர்முள்ளி பொடியையும் கடைசியாக சேர்க்கவும்.கடைசியாக நெய் மேல தெரியும் போது அல்லது அல்வா பதம் வரும் வரை கிண்டி ஆற வைத்து ஒரு கண்ணாடி பாத்திரத்திலே போட்டு வைத்து தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர வேண்டும்.இதை தொடர்ந்து 6 மாதங்கள் வரை சாப்பிட்டால் உடல் பலம் பெற்று கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஒரு முறை இதை செய்தால் 6 மாதம் வரை கெடாது.
 

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#5
Joined
Nov 22, 2013
Messages
16
Likes
29
Location
Australia
#6
Re: PCOD Remedies - பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வே

preethi natural medicine peoples ku helpful. even my sister conceived with natural siddha only.
 
Joined
Apr 14, 2015
Messages
7
Likes
8
Location
chennai
#7
Re: PCOD Remedies - பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வே

preethi very helpful for me.

mine is unexplained infertitliy. there is no reasons doctor told. she said me and my husband side every thing is perfect.

what can i do ?
 

preethi.aarthi

Friends's of Penmai
Joined
Nov 25, 2011
Messages
382
Likes
821
Location
trichy
#8
Re: PCOD Remedies - பெருந்தவம் செய்து குழந்தை வரம் பெற வே

preethi very helpful for me.

mine is unexplained infertitliy. there is no reasons doctor told. she said me and my husband side every thing is perfect.

what can i do ?
if it is all perfect means then calculate your ovulation and during those days keep in touch daily.This will surely make you pregnant.Then add atthi pazham padam pista mundiri and also all types of dry fruits.This will surely assit you.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.