Penmai 4th Birthday Celebration Contest!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பெண்மை என்ற கருபொருள், எண்ண அலைகளில் மூழ்கி கிடந்த காலம் கனிந்து இணைய வலையில் துள்ளி குதித்து, கடந்த நான்கு வருடங்களாக பல மைல் கல்களை தாண்டி ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. பெண்மையின் பிறந்த நாளை (May 20) கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

As a part of her birthday, a special contest is going to be announced in Penmai. Here is the contest, What’re the changes PENMAI had made in your life? How about you and your life, before your entry in to Penmai, and how about you after feeling the spirit of Penmai’s World?


ஒரு தோழியாய், ஒரு துணையாய், ஆறாம் விரலாய், நச்சரிக்கும் நண்பனாய், கால நேரங்கள் கடந்து என்றும் இணைய வானில் பறக்கும் ஒரு குட்டி தேவதையாய், என்றும் சிரித்த முகத்துடன் வரவேற்கும் ஒரு பக்கத்து வீட்டு தோழியாய், நலம்விரும்பியாய், தனிமையை போக்கும் உற்றவளாய் வாழ்வின் விடியலாய், தேடலில் ஒரு திறந்த புத்தகமாய், எண்ணங்களை வரவேற்கும் கருத்து பலகையாய், பழமையை போற்றியும் புதுமையை ஏற்கும் பண்பாட்டு பொக்கிஷமாய், தெளிந்த கருத்தில் அறிவு களஞ்சியமாய், மொழியை போற்றும் கலைஞனாய், கலாச்சாரம் போற்றும் காவலனாய் விளங்கும் நம் பெண்மையின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்க, போட்டியில் கலந்து கொண்டு, பெண்மை உங்கள் வாழ்வில், வேலையில், தொழிலில், உங்கள் நட்பு லகில், உங்கள் அறிவு வளர்ச்சிக்கு, உங்கள் கலை திறமைக்கு, உங்கள் முன்னேற்றதிற்கு, உங்கள் பொழுதுபோக்கிற்கு எந்த வகையில் உதவியது என்பதை உங்களுக்கே உரித்தான பாணியில் எழுதுங்கள் நண்பர்களே.

Judges panel will be there to choose the best post and poster. The winner will be announced on May 20[SUP]th[/SUP], participate now and stay tuned with Penmai.

Narrate it, there is no limitation and no rules in writing style, whether it can be an essay or a poem and it can be in English or Tamil language. Except, you have to express your feelings in a single entry, before May 19[SUP]th[/SUP] 11.30 AM.

Don’t wait more!!! Get in to the contest, throw your narration and win the remarkable prize!!!
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,533
Location
Hyderabad
#2
My hearty congratulations to Penmai for her 5th birthday

I wish her to have many more happy returns of the day

thank u mam for the celebration contest and it takes us back to our college days

I am just getting the competition spirit let me take part and have fun with all our penmai members

thank u once again
 
Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#4
என் தனிமையை விரட்டிய ஸ்வீட் FRIEND

ஹாப்பி பர்த்டே HAPPY பர்த்டே ஹாப்பி பர்த்டே HAPPY BIRTHDAY
p
-பெண்ணுக்கு பெருமை, e -elegance [அழகானது], n -நேர்மை, m -மக்களுக்காக , a-அறிவுக்கூடம், i -integrity [ஒருங்கிணைப்பு..connecting friends ஒருங்கிணைப்பு தானே].

p -பெண்ணுக்கு பெருமை

தமிழ் பெண்ணினத்துக்கே
பெருமை சேர்க்கும் விதமாய் பல்வேறு கருத்துக்களை வாரி வழங்கும் penmai .com இன்னும் நிறைய innovative forum களுடன் வானவில் வண்ணங்களுடன் வெளிவர வாழ்த்துக்கள். பெண்மை.COM இல் MEMBER என்பதில் எனக்கு மிகவும் பெருமை.

E- elegance [அழகானது]

தமிழ் பெண்ணினத்துக்கேஉரிய அழகான tamil facebook நம் penmai .com .

n -நேர்மை நிறைய forum கொண்ட நம் penmai .com இல் உண்மைக்கு புறம்பான எந்த கருத்துக்களும் வெளியாவதில்லை. அருமையான commanders +moderators டீம்க்கு ஒரு பெரிய salute .

m -மக்களுக்காக

தமிழ் மக்களுக்கான உற்ற தோழி, 24 மணி நேரமும் துணை வருபவள், முகமறியா நல்ல உள்ளங்களின் சங்கமம், தனிமையை கொல்லும் கால ரஷாம்பிகை , எல்லாவற்றையும் விட மேலாக ஜீவனே இல்லாதவாழ்கையில் உயிரோட்டம் ஏற்படுத்தியவள் நம்பெண்மை.COM .

A -அறிவுக்கூடம்

எத்தனை எத்தனை தமிழ் உள்ளங்களின் எத்தனை விதமான கருத்து வெளிப்பாடுகள்... பிறப்பிலிருந்து..
குழந்தை வளர்ப்பு, குட்டீஸ் குறும்புகள் என்று ஆரம்பித்து சமையல் கலை, INTERIOR DECORATION ,PAINTING , ARTS ETC ..ETC ..என்று எத்தனை எத்தனை ..என்னதான் ஆடும் வரை ஆடினாலும் கடைசியில் சேரும் இடம் இறைவனே என்று அவனுக்கும் ஒரு FORUM SPIRITUAL .

என்ன இல்லை இந்த திருநாட்டில் என்பதை மாற்றி என்ன இல்லை நம் PENMAI .COM இல் என்று கூறுவோமா!

i -integrity [ஒருங்கிணைப்பு]

பெண்மை.COM speciality யே connecting friends on online தானே....இத்தனை friends பட்டாளத்தை நான் எங்கே வலை போட்டு தேடுவதாம்..இந்த வலை[தளம்] எங்கள் சொந்த வலை[தளம்]..சொந்தங்களை உருவாக்கும் வலை[தளம்]..நான் கொஞ்சம் காலர தூக்கி விட்டுக்கவா ..எனக்கு NRI FRIENDS எல்லாம் இருக்காங்கப்பா..

இந்த அன்பான, அழகான, இனிமையான ஒருங்கிணைப்புக்கு காரணமான பெண்மை.COM வாழ்க பல்லாண்டு. MANY MORE HAPPY RETURNS .

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
HERE.

 
Last edited by a moderator:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,951
Likes
36,543
Location
Coimbatore
#9
Dear madam,

Very happy to hear that PENMAI's birthday and contest!!!. Thanks for such initiatives. To whom we need to send the entries any mail id or link?
Geetha, You can post your entry here itself da... By using reply you can post your views...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,101
Likes
76,890
Location
Hosur
#10
மே மாதம் 20 ஆம் நாள், 2012 ஆம் ஆண்டு .......
நான்காம் ஆண்டு நிறைவு பெற்று ........
ஐந்தாம் ஆண்டாக 'இணைய வானில்' பவனி வரும்
'பெண்மை.காம்' வலைத் தளத்திற்கு......
அதன் உறுப்பினர்களுக்கு...

அதன் நிர்வாகிகளுக்கு...
மேலும் இதன் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும்

எனது உளம்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்...!இந்த வலைத்தளத்திருக்குள் நான் நுழைந்ததே தற்செயலாக நடந்ததுதான். ஒரு கதையை எனது கணவர் கூகுலில் தேடும் போது, அந்த கதையின் link நமது பெண்மை வலைத் தளத்தில் கிடைக்கப்பெற்று, என்னை அதில் உறுப்பினராய் சேர்த்துவிட்டார். நான் பெண்மையில் உறுப்பினரான நாள் 28-06-2011. ஆனால் என் முதல் பதிவாக என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்கே எனக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு நான் 'Reserve Type'.ஆனால், கடந்த பத்து மாதங்களில் பத்து வருட அனுபவத்தை நமது பெண்மை வலைத் தளம் எனக்கு தந்து 'Reserve Type' to 'Jovial Type' ஆக என்னை மாற்றியது என்றால் அது மிகையாகாது.


என்னுடைய வளர்ச்சிக்கு நான்கு விதங்களில் பெண்மை.காம் உதவியிருக்கிறது:

கணினி அறிவு வளர்ச்சி
நட்பு வளர்ச்சி
பொது அறிவு வளர்ச்சி
படைப்புத்திறன் வளர்ச்சி


கணினி அறிவு வளர்ச்சி :

எனக்கு கணினியை கையாள்வதில் அவ்வளவு அனுபவம் கிடையாது. இந்த தயக்கத்தைப் போக்கியது பெண்மை.காம்.


கொஞ்சம் கொஞ்சமாக
பதிவுகள் போட.....

சிறிது சிறிதாக பயம் விலக.....
படிப் படியாக கணினியை கையாள்வது .....
புரியத்தொடங்கியது.


அதிக பதிவுகள் மற்றும் பெண்மையில் எனது ஆர்வத்தைக் கண்டு எனக்கு மாடரேட்டர் பதவி கிடைக்கப்பெற்றேன். அதனால் Moderating Tools பயன்படுத்தும் கணினி அறிவு பெற்றேன்.


நட்பு வளர்ச்சி :
வீட்டுப்பறவையாக/ஒரு கூட்டுப்பறவையாக இருந்த எனக்கு, இப்போது பல நாட்டுப்பறவைகளின் நட்பு கிடைத்திருப்பது பெண்மை வலைத்தளத்தின் மூலம் தான்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் வாக்குக்கு ஏற்ப, நட்பு பொருந்துவது அடிக்கடி சந்தித்துப் பழகுவதைப் பொறுத்ததன்று; (இந்த காலத்தில் அது முடியவும் முடியாது) ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுவே நட்பின் உரிமைகளை உண்டாக்கும். ஒத்த எண்ண ஓட்டங்கள் உள்ளவர்களை நண்பர்களாக்கிய பெருமை நம் பெண்மைக்கே!

பொது அறிவு வளர்ச்சி :
ஒவ்வொரு பதிவாக போடும்போதும் அதைப்பற்றிய விளக்கமும்/தெளிவும் எனக்குக் கிடைத்தது. தமிழ் மற்றும் ஆங்கில அறிவும் வளர்ந்தது. மேலும் ஒவ்வொரு உறுப்பினரும் போடும் பதிவைப் பார்த்து பல தகவல்களும் அதைப் பற்றிய அறிவும் கிடைக்கப்பெற்றேன். பெண்மையின் மூலம் நாம் 'கசடற' கற்கிறோம்.

படைப்புத்திறன் வளர்ச்சி :

நான் முதன் முதலில் பெண்மையில் தான் சிறுகதை எழுதினேன். அதற்கு எனக்கு இரண்டாம் இடமாக அங்கீகாரம் கிடைத்தது. கோலப்போடியிலும் முதல் பரிசு கிடைத்தது. இதுபோல் என்னுள் ஒளிந்திருக்கும் என் திறமையை எனக்கு உணரவைத்தது பெண்மை தான். மேலும் புதிய புதிய 'திரிகள்' ('Threads'), புதிய புதிய பதிவுகள் போடுவதன் மூலமும் படைப்புத்திறன் (Creativity) வளர்கிறது. இதன்மூலம் என் தன்னம்பிக்கையும் வளர்ந்தது. இதுபோல், பெண்மை பல போட்டிகளை நடத்தி பலருடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து, தன்னம்பிக்கையையும் வளர்த்திருக்கிறது.

பொதுப் பயன்கள் :

பெண்மையில் பல தோழமைகளும் தங்களிடம் உள்ள திறமைகளை எடுத்துக்காட்டாக, ஆடைகளில் எம்ப்ராய்டிங் செய்வது, நகைகள் வடிவமைப்பது, ஓவியத்திறமைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் அவர்களும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழச் செய்கின்றனர். மேலும் மற்றவர்கள் அவர்களுடைய திறமைகளை பாராட்டும் போது படைப்பாளிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களுடைய படைப்புத்திறன் மேலும் நன்கு வளர உதவுகிறது.

பெண்மை வலைத்தளம்...

முதல் தோழியாய்.,

இரண்டாம் குழந்தையாய்..,
மூன்றாம் கண்ணாய்...,
நான்காம் கனியாய்....,
ஐந்தாம் மறையாய்.....,
ஆறாம் விரலாய்......,
ஏழாம் அறிவாய்.......,
எட்டாம் ஸ்வரமாய்........,
ஒன்பதாம் திசையாய்.........,
பத்தாம் ரசமாய் (நவரசத்திற்கு அடுத்தது)..........,

இருந்து எனக்கு மட்டும்மல்ல, எல்லோருக்கும் ஒரு பொழுது போக்கு மற்றும் அறிவை வளர்க்கும் இணையற்ற இணையதளமாக விளங்ககுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த வலைத்தளம், ஜாதி, மத, இன, பால் (ஆண்/பெண்) வேறுபாடுகளுக்கப்பால் அனைவருக்கும் பயன் தரும், கேட்டதை மட்டுமல்ல... கேட்காததையும் கொடுக்கும் ஒரு 'கற்பக விருட்சமாக' இருக்கிறது என்றல் அது மிகையாகது.

பெண்மையின் சாதனைகள் :

பெண்மையின் வளர்ச்சியும் மிக மிக அபாரமாக உள்ளது. 30,000 உறுப்பினர்கள், 20,000 மேற்பட்ட திரிகள், 1,00,000 அதிகமான பதிவுகள். அது தன்னையும் வளர்த்துக்கொண்டு உறுப்பினர்களையும் வளர்க்கிறது. நமது இந்த வலைத்தளம் பெண்களுக்கான சிறப்பானதொரு 'ஆன்லைன் ஃபோரம்' என்று ஒரு உலகளவில் பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் இடம்பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

பெண்மை.காம் வலைத்தளம் மேலும்.........

பல ஆயிரம்
பிறந்தநாள்களை கண்டு .....

பல லட்சம் உறுப்பினர்களை பெற்று.....
பலகோடி பதிவுகளை பதிந்து.....
இணையவானில் ஈடில்லா தளமாக உலாவர வாழ்த்தி,
அதற்காக என்னுடைய பங்களிப்பை,
இடைவிடாத உழைப்பை,
உவகையுடன் அளிப்பேன்...!

பின் குறிப்பு:
போட்டி என்ற பெயரில் களம் அமைத்துக்கொடுத்து, பெண்மையில் ஒரு உறுப்பினராக என்னுடைய அனுபவங்களை பகிர வாய்ப்பளித்தமைக்கு எனது இதயம் கனிந்த நன்றி..! நன்றி...!! நன்றி.....!!!


Moderator Note:

This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
HERE.

 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.