Penmai 6th Anniversary Contest

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு

இனிய வணக்கங்கள்.

பெண்மை, ஆறு வருடங்களை நிறைவு செய்து மே 20-இல் தனது ஏழாவது வருடத்தில் அடியெடுத்து வைக்க போகிறாள். இந்நாளை கொண்டாடும் விதமாக நம் பெண்மையின் சிறப்பு போட்டி இதோ!

பெண்மையில் திறமையாக எழுதுபவர்கள் பலர் உள்ளனர். இங்கே பலரின் எழுத்துத் திறமையைக் கடந்த பல போட்டிகளில் நாம் கண் கூடாகக் கண்டு வியந்து இருக்கிறோம். இந்த முறையும் அப்படிப்பட்ட போட்டியே.

இது ஒரு கட்டுரைப் போட்டி. கொடுக்கப்படும் தலைப்பில் உங்களது கருத்துக்களைக் கட்டுரையாக சொல்ல வேண்டும். உங்களது கட்டுரை முழுதும் தமிழ் அல்லது முழுதும் ஆங்கிலத்தில் இருக்கலாம். இரண்டையும் கலந்து எழுதக் கூடாது.

சிறப்பு பரிசு:

இந்த போட்டியில் வெற்றி பெறும் கட்டுரைக்கு கூடுதல் சிறப்பு பரிசு ஒன்றும் இருக்கிறது. அது மே 20-ம் தேதி அறிவிக்கப்படும்.

கட்டுரைத் தலைப்பு:

தமிழ் - "எல்லாம் நன்மைக்கே"

ஆங்கிலம் - All is Well

குறிப்பு:

  • உங்களுடைய சொந்த கட்டுரையை மட்டுமே பதிவிட வேண்டும்.
  • உங்கள் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு வரம்புகள் இல்லை.
  • கடைசித் தேதி - 17th May​ 2014​, 11.00 PM (IS​T​)
  • உங்களது கட்டுரை முழுதும் தமிழ் அல்லது முழுதும் ஆங்கிலத்தில் இருக்கலாம். இரண்டையும் கலந்து எழுதக் கூடாது.
[HR][/HR][HR][/HR]Dear Friends,

​Our ​Penmai​ Girl​, is gonna celebrate her 7th birthday on coming 20th of this month. Here is a first step of celebrating her birthday with our Penmai's 6th Birthday Contest.

We've a lot of creative talent as we have seen in past contests. So here's yet another opportunity for Penmaities to showcase their creative skills! Yeah We are having an Article Writing contest this month on the topic of "All is Well".

Let's see what creative Articles unfold here at Penmai.

Special Gift:

As you all know, we give gifts for the Best Article. This Time, The winning entry will get Some "Special Surprise & Memorable Prize" along with our gift.

Go ahead Friends!! Think out of the box!!

​Rules

  • Don't Submit Copied Articles. They must be of your Own!
  • No Restriction in no. of words.​
  • Your Article must be written either in English or in Tamil.
  • Last Date of Submission : 17th May 2014, 11.00 PM IST
 
Last edited:

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,277
Location
bangalore
#2
Shakthi Super topic I am ready :thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,485
Likes
148,300
Location
Madurai
#3
Yeah Cutie kku B'day.. ;) Surprise + Special gift lam Kodukkura.. Naama than Gift tharanum :) :)

"All is Well" Semma Topic Caps!! :whistle::whistle: Grain ah thatti Parkkuren Ethathu therumaa nnu ;)

BTW Class..:thumbsup
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#4
சபாஷ் பராசக்தி!
அருமையான தலைப்பு.
வாழ்த்துக்கள் பெண்மை இணையதளம்.

t4402.gif
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#5
Vaahzthukkal Penmai kutti ponnu.

chinnaval aanal pen kulathirke thozhiyanaval engal penmai magal.
engalukku thaayagavum magalagavum vilangubaval.
meendum sandhipom "All is well"
Good Sakthi. vaazhthukkal
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#6
ஆறு வயசுள்ள பெண்மைக்கு, இந்த ஒன்னரை வயசுள்ள தம்பி விசு ஆகிய நான் பெண்மை அக்காக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு கிழே உள்ள கட்டுரையை ஒரு இணையதளத்தில் படித்தேன். நன்றி.

எல்லாம் நன்மைக்கே…

நமக்கு நல்லதைத்தான் செய்வார் பகவான்; நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் இது பகவான் சித்தம் என்று ஆறுதல் பெற வேண்டும்; அது, நல்லதாகவே முடியும்.
ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா. அப்போது, அவரது விரல் ஒன்று கத்திபட்டு, துண்டாகி கீழே விழுந்து விட்டது. பக்கத்திலிருந்த மந்திரி, “எல்லாம் நன்மைக்குத் தான்…’ என்றார். ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. விரல் துண்டாகி விட்டது; இவர், எல்லாம் நன்மைக்குத்தான் என்கிறாரே என்று கோபப்பட்டு, மந்திரியை சிறையிலிட்டார். மந்திரியும் எல்லாம் நன்மைக்குத் தான் என்று சொல்லிவிட்டு, சிறைக்குச் சென்றார்.

ஒரு நாள் தனியாக காட்டுக்குச் சென்றார் ராஜா. அங்கே சிலர் நர பலி கொடுப்பதற்காக ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். ராஜாவைப் பார்த்ததும், அவரை இழுத்துக் கொண்டு தங்கள் தலைவனிடம் சென்றனர். ராஜாவை ஒவ்வொரு அங்கமாக பரிசோதித்தான் தலைவன். ராஜாவுக்கு ஒரு விரல் இல்லாததை பார்த்து, இப்படி அங்கஹீனம் உள்ளவன் நரபலிக்கு பிரயோஜனமில்லை என்று ராஜாவை, “ஓடிப்போ’ என்று விட்டு விட்டான்; ராஜாவுக்கு சந்தோஷம்.

அன்று, “எல்லாம் நன்மைக்கு தான் என்று மந்திரி சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது! நாம் அவரை சிறையிலடைத்தது தவறு. உடனே, அவரை விடுதலை செய்து, மன்னிப்பு கேட்க வேண்டும்…’ என்று எண்ணி, உடனே சிறைச்சாலைக்கு வந்து மந்திரியிடம் விவரம் சொல்லி, அவரை விடுதலை செய்தான்.
அப்போது, மந்திரியை பார்த்து, “உங்களை சிறையிலடைக்கும் போது, வருத்தப்படாமல், எல்லாம் நன்மைக்கே என்று சொன்னீர்களே… அது எப்படி?’ என்று கேட்டான். அதற்கு மந்திரி, “தாங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் நானும், உங்களுடன் காட்டுக்கு வந்திருப்பேன். நரபலி கொடுப்பவர்கள் என்னையும் பிடித்து
போயிருப்பர்.

“எனக்கு அங்கஹீனம் எதுவும் இல்லாததால், என்னை நரபலி கொடுத்திருப்பர். தாங்கள் என்னை சிறையிலிட்டதால், நான் உங்களோடு வராமல் தப்பினேன். அதனால், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினேன். இப்போதாவது புரிந்ததா? எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்றும், எல்லாம் அவன் செயல் என்றும் நினைக்க வேண்டும்…’ என்றார் மந்திரி.
ராஜாவும், “நீங்கள் சொல்வதும் சரி தான்…’ என்றார்.
அதனால், நமக்கு எப்போது என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அப்போது, அது நடந்து விடும்.

:cheer:
:cheer::cheer:
:cheer:
Vayal Via Senthilvayal

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#7
நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்*ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

"ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்" என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக "நொண்டி ராஜா" என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், "நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்", என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், "இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. "எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது" என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

"நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது" என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, "சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்" என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

:typing:
Koodal (FYI)
 

amirtha mks

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
879
Likes
2,936
Location
Srilanka
#8
inthakkathaiya ulta panni than ippa thennaliraman padathile serthirukkaanka..
 

LAKMIL

Friends's of Penmai
Joined
Jun 21, 2012
Messages
181
Likes
26
Location
chennai
#9
Hi,
good one
Bye
Lakmil
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#10
Hi Sakthi, namma PENMAI kku May 20th birthday vaa...superrrrr....naanum annaikku correct aa marakkama vandh wish pannidren.....nalla thalaippu da...:clap2::clap2:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.