Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

May Month is undoubtedly Ours Month. Yes! We are completing 7 years of Success & Growth. Our Beautiful Girl is gonna turn 8 on May 20. While Cheerfully lighting the 8th candle & blowing out the 7 that gone before, We come here with pride & pleasure to meet you all. We are very Much happy to inform you that Our Penmai is celebrating her birthday with her valuable members.

Here's an exciting writing contest for Penmaities! Come & share the Pure joy that Penmai brings to our lives and celebrate with her...

  • Did Penmai Change any of your Character? If So, Pen Down here...
  • How does Penmai succour & help you to evolve your Skills?
  • Write Down a few lines about your Journey in Penmai!
  • How can Women across Our Penmai Globe follow Precautionary measures for their own Protection? OR What are Safety Precautionary measures to be followed by Women across Our Penmai globe?
  • What changes in Penmai do you expect? - Technical features or General changes if any, Pen down here...

Winners never stop trying!! Looking forward and very Much excited to see all your Entries! Surprises are Awaiting.. :)

Rules:
No rules except copy cat & submission before 31st May 2015.
Your entries must be either in English or in Tamil.
 
Last edited by a moderator:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#2
பெண்மை தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள்...

பெண்மை தனது இனிய 7ம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்து மே 20ம் தேதியுடன் 8ஆம் ஆண்டில் நுழைகிறாள்! இந்த இனிய தருணத்தில் பெண்மை சிறப்பு போட்டியுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...


  • உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா? ஆம் எனில் அதை இங்கே எழுதுங்கள்!
  • எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?
  • பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!
  • பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?
  • நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.

குறிப்பு:
  1. உங்களது பதிவை மே 31ம் தேதிக்குள் சமர்பிக்கவும்.
  2. உங்களால் பதிவுகள் அனைத்தும் உங்கள் சொந்த கருத்தாக இருக்க வேண்டும்.
  3. உங்களின் போட்டிக்கான பதிவுகள் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கவேண்டும்.
 
Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,507
Likes
140,712
Location
Madras @ சென்னை
#3
உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா? ஆம் எனில் அதை இங்கே எழுதுங்கள்!


ஆம், எனக்கு நிறைய விஷயங்கள் இந்த பெண்மை அக்கா கற்றுக் கொடுத்துள்ளது. இதனால் எமது குணாதிசயம் மாறி விட்டது.


எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?


ஏராளமாக சொல்லலாம். உதாரணமாக சொன்னால், பெண்மையின் நீயா நானாவின் பல முறை எமது பேச்சுக் கருத்துக்கள் பதிவு செய்து உள்ளேன். அதில் மூன்று மூறை நான் வெற்றி பெற்றேன். இதனால், தமிழில் எமது திறமைகள் வந்தது. எனக்கு அணைத்து நண்பர்கள் ஆதரவுகள் மற்றும் விருப்பம்கள் (Likes) கொடுத்தார்கள்.


பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!


எனது பெண்மை பயணம் சீனா உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில் தொடங்கியது. முதலில் எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன்யென்றால் எனது மனைவி, எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரனின் இணையளத்தில் பார்க்க சொன்னார். அப்போதுதான் இந்த பெண்மை அக்காவை கண்டு பிடித்தேன் (சீனா உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில்). அன்று (19-09-2012)சீனாவில் தொடங்கிய எமது பெண்மை பயணம், இன்று (இந்தியாவில்) வரை தொடர்க்கிறது. எனது பெண்மை பயணம் இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஓமன், துபாய், ஸ்பெயின், போர்ட்துகல் மற்றும் கத்தார் ஆகிய நாட்டில் வந்து உள்ளது.
(அன்று சாதரணமா உறுப்பினரா சேர்ந்து, வழியில், நண்பர், படைத்தலைவர், அமைச்சர், குரு, யுவா, அரசர் ஆகிய பதவி இருந்து, இன்று வெள்ளி அரசராக இருக்கிறேன், உங்கள் மற்றும் அணைத்து நண்பர்கள் ஆதரவில்.)




பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?


இங்கு நான் சொல்வது, சிலருக்கு பிடிக்காது, பலருக்கு பிடிக்கும்.
பெண்களே, உங்களின் தனி புகைப்படங்கள் முகநூலில் அல்லது வேறு இணையதளத்தில் போடவேண்டாம். அப்படி போடணும் நினைத்தால், உங்க கூட நண்பர்கள் அல்லது உங்க வீட்டுக்கார் இருக்கிற மாதிரி புகைப்படங்கள் போடுங்கள். இதுமட்டுமல்ல, தங்களின் மின் அஞ்சல் (Email) மற்றும் கைபேசி எண்களை முகநூலில் அல்லது வேறு இணையதளத்தில் போடவேண்டாம். இதனால் பலவிதமான தேவையல்லாத பிரச்சனைகள் விட்டு விடலாம்.


நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.


ஆம், சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். முக்கியமாக, இந்த பெண்மை இணையதளம் நமது கைபேசி பதிப்பில் (Mobile Version) கொண்டு வரவேண்டும். அதைப்போல ஒவ்வொரு மாதமும் சூப்பர் ஸ்டார் யார் யாருன்னு வாங்குகிறார்கள் என்று பெண்மையில் ஒரு தலைப்பில் பெயர்கள் போட்டு உள்ளீர்கள் (செல்வி. ஜி. கார்த்திகா மூலமாக). இந்த மாதிரியை ஒவ்வொரு மாதமும் நீயா நானாவின் வெற்றியாளர்களின் பெயர்களை, தாங்கள் எதாவது தலைப்பில் போடுமாறு நான் வேண்டிகொள்கிறேன்.


பெண்மை இணையதளம் வாழ்க!
பெண்மை இணையதளம் வளர்க!


நன்றி பற்பல.


வணக்கம்.

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,507
Likes
140,712
Location
Madras @ சென்னை
#4
நண்பர்களே, முன்பு சொன்ன வார்த்தையில் ஒரு சிறிய பிழை வந்து உள்ளது. அடியேனை மன்னிக்கவும்.


பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!


எனது பெண்மை பயணம் சீனா உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில் தொடங்கியது. முதலில் எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன்யென்றால் எனது மனைவி, எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரனின் கதையை இணையளத்தில் பார்க்க சொன்னார். அப்போதுதான் இந்த பெண்மை அக்காவை கண்டு பிடித்தேன் (சீனா உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில்). அன்று (19-09-2012)சீனாவில் தொடங்கிய எமது பெண்மை பயணம், இன்று (இந்தியாவில்) வரை தொடர்க்கிறது. எனது பெண்மை பயணம் இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஓமன், துபாய், ஸ்பெயின், போர்ட்துகல் மற்றும் கத்தார் ஆகிய நாட்டில் வந்து உள்ளது.
(அன்று சாதரணமா உறுப்பினரா சேர்ந்து, வழியில், நண்பர், படைத்தலைவர், அமைச்சர், குரு, யுவா, அரசர் ஆகிய பதவி இருந்து, இன்று வெள்ளி அரசராக இருக்கிறேன், உங்கள் மற்றும் அணைத்து நண்பர்கள் ஆதரவில்.)

 

Attachments

S.B.Chaithanya

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 21, 2015
Messages
946
Likes
3,301
Location
trichy
#6
போட்டிக்கான பதிவுகளில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை
எனவே பிழை இருப்பின் பொருத்தருள்க தோழமைகளே...


பெண்மை என் குணாதியத்தை மாற்றியிருக்கிறது எப்படியென்றால்.....

கோபத்தில் குழப்பத்தில் இருக்கும் போது நான் அதிலிருந்து வெளியே வர ரொம்பவும் தவிப்பதுண்டு, கடவுளே என்னை மறந்திருக்க ஒரு புது உலகை கொடு எனக்கேட்பதுண்டு.
அப்படி எனக்கு கடவுள் தந்த ஒரு உலகம் தான் பெண்மை...
இங்கே கிடைக்காத விஷயமே இல்லை கதை, கவிதை, நட்பு , ஆன்மீகம், வேலை என அனைத்திற்கும் மேல் இங்கே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த முகமூடியும், எந்த பாரபட்சமில்லாமல் பழகும் தோழியர்.
எவ்வளவு பிரச்சனைகள் இருப்பினும் நான் பெண்மையிலிருந்து வெளியேறி கண்ணுறங்கும் போது என் இதழ்களில் புன்னகையும், மனத்தில் தெளிவும் தொற்றிக்கொள்கிறது. இதை தர தற்சமயம் பெண்மையை தவிர வேறு யாருமில்லை எனக்கு.....

எனக்குள் இருந்த இதுவரை எனக்கே தெரியாத ஒரு திறமை ”கவி புனைதல்”

கண்டுகொண்டாள் பெண்மை
தூண்டிவிட்டாள் என்னை
எழுதினேன் கவிதை
சந்தேகத்துடன்
வரவேற்றாள், வாய்ப்பளித்தாள்,
பிழை பொருத்தாள்
விருப்பம் தந்தாள்
தட்டிக் கொடுத்தாள்
கைப்பிடித்துச் செல்கிறாள்
தமிழ் பயணத்தில் என்னை
கவிதாயினியாய்...
நீ என்றும் வரவேண்டும் என் தோழியாய்.....

கத்துக்குட்டியாய் கதை எழுதுகிறேன்... தளம் தந்திருக்கிறாய்... நன்றி....

பெண்மையில் என் பயணம்...

நாவல் தேடி வந்தேன் என்னையே எழுத வைத்துவிட்டாள்...
தினமும் வராவிட்டால் பிடித்துவிடும் பைத்தியம்
வந்தாரை வரவேற்று,வாழவைப்பத்தில் தமிழகத்திற்கு
அடுத்து இணைய உலகில் பெண்மைக்கு தான் முதலிடம்...

பெண்மையில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்பு கருதி
தங்களின் சொந்த தகவல்களை பகிராதிருத்தல் நன்று.

சில மாற்றங்களை எதிர்பார்கிறேன்

சுயதொழிலில் சாதித்த சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களின் வெற்றிக் கதைகளை “கடந்து வந்த பாதை” எனும் தலைப்பில் கொடுக்கலாம்.
தொழில், அதன் மூலப் பொருட்கள், முதலீடு, சந்தைப் படுத்துதல்
என அதன் அம்சங்களை விரிவாக ஆராய்ந்தல்,
எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் அதனை அணுகும் முறைகள் என
விரிவான தகவல்களாக தரும் பொழுது
பெண்மை என்பவள் அவள் திறமையை கதை,கவிதை, ஓவியம், சமையல், பிள்ளை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு, ஆன்மீகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கடந்து சுயதொழில் தொடங்கவும் அதனை திறம்பட நிர்வகிக்க, சாதிக்கவும் செய்வாள்.
இது அடியாளின் தாழ்மையான கருத்து, ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன்.
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#7
[*]உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா? ஆம் எனில் அதை இங்கே எழுதுங்கள்!

நிச்சயமாக ஆமாம் .

நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல விரும்பாதவள் , போனில் கூட அதிகம் பேச மாட்டேன் . என் குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் முன் நான் அமைதியாக தான் இருப்பேன் . பெண்மை எனக்குள் இருக்கும் நல்ல தோழியை வெளிக்கொண்டு வந்துள்ளது .

மனம் வருந்தும் சமயத்தில் கணவர் வேலைக்கு ,பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதும் , நம்மை ஆறுதல் படுத்த யாரும் இல்லையே என்று நீண்ட நேரம் அதையே நினைத்து கொண்டு இருப்பேன் , இப்போ சிறிது நேரத்தில் மனம் அமைதியாகி விடுகிறது

வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை என் மிகப்பெரிய குறையாக நினைத்திருந்தேன் , பெண்மை அதை மாற்றி இருக்கிறது ...




[*]எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?


வீட்டில் கணவர் , பிள்ளைகளுக்கு சமைப்பது மட்டுமே நம் வேலை என்று எண்ணி இருந்த நான் , அப்படி சமைத்தும் யாரிடமும் பாராட்டு வாங்காத நான் , பெண்மையில் என் சமையலை பாராட்டி வந்த விமர்சனங்கள் மூலமாக நமக்கும் ஒரு திறமை இருக்கிறது என்று அறிந்தேன் .


கதைகளை படிப்பது பொழுதுபோக்க என்று நினைத்த தான் , விமர்சனங்கள் மூலமாக , நமக்கு சிந்திக்கவும் தெரிகிறது என்று அறிந்து இருக்கிறேன் .




[*]பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!


ரமணி சந்திரன் அம்மா கதைகளை தேடி வந்த நான் , இங்கு பலர் , பல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை கேட்பதை பார்த்து நானும் கேட்டேன் , அப்பறம் தொடர்கதைகள் பக்கம் என் கவனம் திரும்பியது , அதோட அங்கே வரும் விமர்சனங்கள் பார்த்து எனக்கும் அதில் விமர்சனம் எழுதி , அப்படியே நட்பை பெற ஆசைப்பட்டு , இப்போ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ..





[*]பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?


விசு அண்ணா சொன்னது போல யாரும் தங்களை பற்றிய முழு தகவல்களையும் , மெயில் ஐடி , புகைப்படம் எதையும் போடாமல் இருப்பது நல்லது .





[*]நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.



என்னை பொறுத்தவரை எல்லாம் நல்ல விதமாக தான் போகிறது ,...

ஒரு கோரிக்கை .

பெண்மை ஒரு நம்பகமான தளம் , இதில் பல வெளிநாட்டினர் , உள்நாட்டவர் எல்லோரும் வாசகர்களாக இருக்கின்றனர் , அவர்களை இணைப்பது போல ஒரு ஆன்லைன் ஷாப்பிங் ஒன்று ஆரம்பிக்கலாம் , அமெரிக்காவில் நைட்டி இன்னும் சில பொருட்கள் கிடைக்காது , அப்படி உள்ள பொருட்களை இந்தியாவில் வாங்கி அல்லது ஏதாவது ஒரு ஷாப்பில் கநெக்ட் பண்ணி , ஏற்றுமதி செய்து , இப்படி ஏதாவது செய்யலாமா ???

 
Last edited:

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
அன்பு தோழமைகளே,

இதோ போட்டியில் கலந்து கொள்ள வந்துவிட்டேன்..........

(உங்க மைண்ட் வாய்ஸ் :எப்பா.......இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா சாமி........)


எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டி உற்சாகபடுத்துங்க பார்க்கலாம்........

( இது வேறயா......)

உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா?

(உங்க மைன்ட் வாய்ஸ்: உனக்கெல்லாம் குணம் இருக்கிறதே பெரிய அதிசயம்.......இதுல குணாதிசயம் பத்தி பேசுறியா .......கொடுமைடா.......)

இன்றைய இளைய தலைமுறை பெண்ணாக நிறைய தேடலும் .....விடை காணும் ஆர்வமும் உங்களை போலவே எனக்கும் அதிகம் உண்டு. எல்லாத்தையும் எல்லார் கிட்டயும் கேட்கவும் முடியாது. சொல்லவும் முடியாது. அதிலும் யாராவது என்னோட உணர்வுகளை அலட்சியப்படுத்தும்போது........எள்ளி நகையாடும் போதும்.......வெளியில் காண்பித்து கொள்ளவில்லை என்றாலும் , என் மனதின் வலி .......என்னை பலவீனப்படுத்துவது போல எனக்கு தோணும்....

இதை கையாள கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இதற்கான வழி நானே எதிர்பார்க்காத வகையில் பெண்மை செலிப்ரெட்டி டாக் ஷோவில் எனக்கு கிடைத்தது . வரலொட்டி ரங்கசாமி சாரோட பேட்டியில் ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் ....(நன்றி கார்த்தி சிஸ்.....)

"criticism அதை முழுவதுமாக ஒதுக்கிவிடவும் கூடாது. அதே சமயத்தில் அதில் தொய்ந்துவிடவும் கூடாது.
நம்மை விமர்சிக்கத் தகுதியுள்ளவர்களுடைய விமர்சனத்தை மட்டும்தான் கேட்க வேண்டும். அவர்களிலும் நம் மேல் அன்புள்ளவர்கள் விமர்சனத்தை மட்டும்தான் காது கொடுத்துக் கேட்க வேண்டும். கேட்டு முடிந்தவரை நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். முடியாவிட்டால் நான் அப்படித்தான் என்று மனதிற்குள் தெனாவட்டாகச் சொல்லிக்கொண்டும் வெளியில் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி நழுவிவிட வேண்டும்".

சும்மா நச்சுன்னு இருக்குல்ல.........சட்டென்று எனக்கு ஒரு புள்ளியில் தெளிவு கிடைத்து விட்டது. அந்த தெளிவு எனக்கு உறுதி கொடுத்தது. அந்த உறுதி என்னோட எண்ணங்களை வடிவாக்கும் தைரியத்தை கொடுத்தது. என்னோட அலுவலில் அது சிறப்பாக வெளிப்பட்டது.
எதை பற்றியும் கவலை படாமல் கொடுத்ததை சிறப்பாக செய்ய ஆரம்பித்து தொடர்கிறது. கூட்டு புழுவாய் இருந்தவள் ........இன்று வண்ணத்துப்பூச்சியாய் ............சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பெண்மை......

இதில் இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். எதைப்பற்றி பேசும்போதும் பிடித்த மாதிரி சொல்லணும்......புரியிற மாதிரியும் சொல்லணும்......VR சார் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?

(உங்க மைன்ட் வாய்ஸ்: ஹையோ ஹையோ .....திறமைன்னு ஒண்ணு இருந்தாதான வளர்த்துக்கொல்வதை பற்றி பேசணும்.......)

பெண்மையின் புண்ணியத்தில் கொஞ்சம் எழுத கற்றுகொண்டிருக்கிறேன்.......
( நீங்கல்லாம் வேற உசுப்பேத்தி விடுறீங்க......)


பெண்மையின் பலவிதமான போட்டிகளில் பங்கெடுக்கும் போது என்னோட creativity கு அது தீனி போடுகிறது. எனக்கும் உற்சாகமாக இருக்கிறது......

(உங்க மைண்ட் வாய்ஸ் : எங்களுக்கு சோதனையா இருக்குது......)


இங்கிருக்கும் தோழமைகளின் உற்சாகப்படுத்தும் தன்மை ,சின்ன சின்னதாய் நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை காட்டவும், நாமே மறந்து போன சில விஷயங்களை ஞாபக படுத்தவும் செய்கிறது.அப்படி ஒன்றுதான் நான் வரைவது.......மறுபடியும் செய்யும் எண்ணத்தை பெண்மைதான் தூண்டியது.........

(உங்க மைண்ட் வாய்ஸ்: அடப்பாவி ! நாங்க புலம்புறது உனக்கு உற்சாகபடுத்துற மாதிரியா இருக்கு........)


பெண்மையில் தோழமைகளின் வித விதமான சமையல் குறிப்புகளை கண்டு வியந்திருக்கிறேன்........இங்கு வெளியான ஓட்ஸ் தோசையும் ,குடமிளகாய் சட்னியும் என் தாத்தா,பாட்டிகளுக்கு செய்து கொடுத்து அசத்தி இருக்கிறேன்.

(உங்க மைண்ட் வாய்ஸ்: ஐயோ பாவம் !!! சாப்பிட்டதுக்கப்புறம் என்ன கதி ஆனாங்கலோ......)


வெகு சில சமயம் பிரச்சனைகளுக்கு சில suggestions கொடுத்து இருக்கிறேன்.....பிரச்சனைகளை ஆராயும் இந்த தன்மை என்னுடைய மன முதிர்ச்சியை அதிகரித்துக்கொள்ள உதவி இருக்கிறது......

(உங்க மைண்ட் வாய்ஸ்: கடுப்பை கெலப்பாத...)


பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!

(உங்க மைண்ட் வாய்ஸ்: சும்மா வாஸ்கோடகாமா ரேஞ்சுக்கு இப்போ பில்ட் அப் குடுப்பா பாரு....... )

பெரிய கூட்டு குடும்பத்தில் அன்போடும் ,அரவணைப்போடும் வளர்ந்தவள் நான் . மூன்று தாத்தாக்கள் , ஒன்பது அத்தைப்பாட்டிகள் என்ற மூத்த தலைமுறைகளின் மூன்றாம் தலை முறை நான். என் தாத்தாவிற்கு மட்டும் என் அப்பாவையும் சேர்த்து , ஆண் மூன்று ,பெண் 5 என எட்டு பிள்ளைகள்.ஒரு வீதி முழுக்க அருகருகே எங்களின் வீடுகள். இப்படி மற்ற இரண்டு தாத்தாக்களுக்கும் உண்டு.என் வீட்டில் என்னையும் சேர்த்து ஆறு பேர். இப்படி ஜெவாகிய நான் ஜே ஜேவென்று வளர்ந்தவள். படிக்க வெளியூர் வந்த போது கூட வீடெடுத்து தங்கி ஒருவர் மாற்றி ஒருவர் எங்களுடன் ஷிப்ட் போட்டு தங்கி பார்த்துக்கொண்டார்கள்.தனிமை என்ற வார்த்தை என் அகராதியில் இருந்ததே இல்லை.

முதல் முதலில் வேலைக்கு வந்த பிறகுதான் தனிமையை உணர்ந்தேன். வேலை முடித்து வீடு திரும்பும்போது........என் முகத்தில் அறையும் தனிமை.......வலை வீசி தேடிய போது......எதேச்சையாய் கண்ணில் பட்டாள் பெண்மை. தயக்கத்துடன் தான் வந்தேன். பதிவுகளை பகிர ஆரம்பித்தேன். சிறிய தவறுகள்........ ஆலோசனை சொல்லப்பட்டது.......


பின் போட்டிகளில் பங்கெடுத்தேன்.........சில பரிசுகளும் கிடைத்தது......பிறகு குட்டி கதைகள்......பெண்மையின் டாப் 50 contributors 2014 ல் என் பெயர் .......அதோடு டாப் 10 innovative thread starters 2014ல் என் பெயர்.......டாப் 10 special contest participants of 2014 என பெண்மை என்னை கட்டி அணைத்துக்கொண்டது. குரு என்ற பட்டமும் கொடுத்தது......தனிமையை இனிமையாக்கி ,அழகான நட்புக்களுடன் என்னை கோர்த்து விட்டது ...... தனிமையின் கணம் தாங்காமல் தான் வந்தேன்.......இனி துணை இருந்தாலும் எனக்கு அவள் மடி தேவை. ஒரு அரைமணியாவது எட்டிபார்க்காமல் எனது நாள் முழுமை அடைவதில்லை.....அவளின் தோளில் சாய்ந்து ஆயுள் முழுதும் பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்.......

பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?

(உங்க மைண்ட் வாய்ஸ் : உன்னோட மொக்கைல இருந்து பெண்மை எங்கள காப்பாத்தணும்.......)

தனிப்பட்ட அடையாளங்களை பகிர்வதை தவிர்க்கலாம்.மற்ற படி இங்கு மிகவும் பாதுகாப்பாகத்தான் உணர்கிறேன்.


நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.

(உங்க மைண்ட் வாய்ஸ்: உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்தணும்.......)

நேரடியா பெண்மையிலேயே தமிழில் type செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்........

முக்கிய நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகள் பற்றிய விபரங்கள் ......(உதாரணமாக சென்னையில் சர்க்கரை வியாதிக்கு மருத்துவம் பார்க்க எங்கு செல்லலாம்.....இருதய நோய்க்கு சிறப்பு மருத்துவத்திற்கு எங்கு செல்லலாம் என்பது மாதிரி.....) அடங்கிய ஸ்டிக்கி thread இருந்தா நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்.

பின் குறிப்பு: அன்புள்ள இளவரசி மேம், @Penmai

பெண்மையின் இந்த போட்டி எனக்கு ரொம்ப பிடித்தது.......பெண்மைக்கும் எனக்குமான ஒரு நேர்காணல் மாதிரி உணர்ந்தேன்.......

இந்த போட்டியில் எல்லா தோழமைகளும் பங்கேற்று தங்கள் உணர்வுகளை சொல்லும் வகையில் பொதுவாக அமைந்திருப்பது சிறப்பு.......எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பெண்மை இப்படி எல்லோரையும் கை கோர்த்து ஒரு போட்டியை வைத்தது மிகபொருத்தமானதும் கூட......மிக்க நன்றி மேம்.

முடிப்பதற்கு முன்..........(யப்பா......விட மாட்டேங்கறாளேன்னு நீங்க எல்லோரும் சொல்றது கேட்குது.......)

அலுவல் காரணமாக மஸ்கட் செல்லவிருக்கிறேன் தோழமைகளே ........அங்கு சென்ற பின் வேலை நிலவரம் எப்படி என்று தெரியவில்லை......அதனால் இப்போதே ஒரே மூச்சில் எழுதி போஸ்ட் செய்கிறேன்.....(நன்றி விமல் சிஸ் ......)

பிழை இருந்தாலும் நீங்கள் பொறுத்து கொள்வீர்கள் ,எனக்கு தெரியும்.....
(ஹி,ஹி.....வித விதமா எப்படியெல்லாம் சோப்பு போடுறான்னு நினைக்கிறீங்க......சரியா சொல்லிட்டேனா .....)


எங்கு சென்றாலும் இங்கு வந்தே தீருவேன்..........

(உங்க மைண்ட் வாய்ஸ்: காசிக்கு போனாலும் ஏதோ விடாதுங்கறமாதிரி.......என்ன கொடுமை சரவணா.........)


உங்களின் அமோகமான வாழ்த்துக்களுடன் ......விடை பெறுவது உங்கள் ஜெ....ஜெ.....ஜெ...... with Echo effect .......

(உங்க மைண்ட் வாய்ஸ்:இது ஒண்ணுதான் குறைச்சல்.......)



என்னை அறிந்த என் தோழமைகளே .......பங்காளி பொங்கலுக்கு ஊரில் இருப்பேன்....கவலை வேண்டாம்......
@Alagumaniilango @bharathi saravanan @deepikarani @durgasakthi @gkarti @jv_66 @kodiuma @Mary Daisy @Parasakthi @rifan @saidevi @salma @sarayu_frnds @shansun70 @Sriramajayam @Subhasreemurali
@sumathisrini @sumitra @umasaravanan @Vimalthegreat @kkmathy @S.B.Chaithanya @saveetha1982 @laddubala @lathabaiju @rathidevi Deva
 
Last edited:
Joined
Feb 26, 2012
Messages
5
Likes
9
Location
bayonne
#10
Did Penmai Change any of your Character? If So, Pen Down here...


Yep..


I don't read novels earlier but after I joined penmai and kept on browsing, novels section get my attention. Over the span of years, I hav read almost all of the novels of ramanichandran, muthulakshmi, Lakshmi and few others. And you might ask what character change is there? I am a short temper person but now when my mood is out, I open a novel in my ipad and gave a cooling time for me. I guess this is the best n bestest therapy. With out penmai, this isn't possible in my life:)




How does Penmai succour & help you to evolve your Skills?




I hav wrote a short novel. For people in penmai, it don't look lik a big deal..but for me it is. I get a gud inspiration from serial writers on penmai on framing the plot for my story. For a baby who learnt walking, he wil be proud of his steps.. Same story with me. I am just taking my baby steps!!




Write Down a few lines about your Journey in Penmai!




I joined penmai on 26 march 2012 wen I was living in Bayonne Nj. By that time my daughter was 2 years. I joined this penmai forum to find friends in newjersey, then to browse through moms forum. In the beginning my visit to this page is very limited.. But now this page login is more than my facebook login in a day!!!




How can Women across Our Penmai Globe follow Precautionary measures for their own Protection? OR What are Safety Precautionary measures to be followed by Women across Our Penmai globe?




1.Don't add friends whom you don't know or person of mutual friend in any social networking sites
2. Don't post too much of your details online
3. Never post a picture in watsapp cox anyone having ur phone no or people trying a random phone no can save ur photo to their phone. Same with facebook, twitter, Instagram etc etc
4. Never add location details to the photo especially when u r loading ur kids pic.. Child abduction made easy through this.. It's better to turn off location locator.


What changes in Penmai do you expect? - Technical features or General changes if any, Pen down here...


I wish I see groups based on country/ location under some tab country ( or something else ) so that if I post something under chennai, I wil have correct audience n my query wil be quickly answered rather than people of all location viewing my question but don't know the answer.. Eg. Which is the best school in this area.. If it's New Jersey, people of that location check the tab of the place frequently and question wil hav correct audience.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.