Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,143
Likes
14,771
Location
California
#21
தோழமைகளே,
வழக்கம் போல உங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன் , என் கருத்து நீண்.................டு விட்டதற்காக.
நான் எழுதுவதை(கருத்துக்கைளை பகிர்வதை ) தொடங்கியதே சமீபத்தில் தான் என்பதால், இன்னும் தட்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன். சுருக்கமாகவும், கோர்வையாகவும் எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். பல சமயம் முடியவில்லை. போகப்போக என்னை செதுக்கி சீராக்கிவிடுவீர்கள் , என்று நம்புகிறேன். அதுவரை, பொறுமைக்கும் , பெருந்தன்மைக்கு பெயர் பெற்ற நீங்கள்:confused1:, தயவு செய்து உங்கள் தலைவிதியை ஏற்றுக்கொண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்:eek:h:.


முக்கிய எச்சரிக்கை :
- பக்கத்தில் முதலுதவி பெட்டியை வைத்துக்கொண்டு படியுங்கள். சுவற்றில் முட்டி மோதி வரும் ரத்த காயத்திற்கு கட்டு போடும் நிலைமை வரலாம்.
- தயவு செய்து ஆபீஸ் லேப்டாப்போ , கணவரின் லேப்டாப்போ பயன் படுத்தாதீர்கள். இதை படித்து முடிக்கும் தருவாயில் அதை உடைக்கும் நிலை வரலாம்
- கர்பிணிகள் வாசிக்கும் போது சத்தமில்லாமல் வாசியுங்கள், உங்கள் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு.
- யாராவது வாழ்ந்து முடித்தவர்கள் , உயிர் பிரியும் தருவாயில் ரொம்ப கஷ்டப்பட்டா, அவர்களுக்கு வாசித்துக்காட்டுங்கள். இதில் இரு நன்மைகள்...1) உயிர் சீக்கிரம் பிரிந்துவிடும் 2) நேராக சொர்க்கத்திற்கே சென்று விடுவார்கள் (வாழ்வின் கடைசி நிமிடங்களில் கொடுமையை அனுபவித்து விட்டதால்...:rolleyes:)


மன்னிக்கவும் மக்களே... மீண்டும் ஒரு தவறு நேர்ந்து விட்டது....
இந்த எச்சரிக்கையை, கட்டுரைக்கு முன் போட்டிருக்க வேண்டும்...... இனி காலம் கடந்துவிட்டது ...:pray:
 
Last edited:

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,148
Location
Hosur
#23
Penmai 7th Birthday Contest - You and Penmai!!!

PENMAI:
I choose to join because it's perfect for me. It's an escape, a place I can go to hide. It's a friend, when I feel out casted from everyone else. It's a journal, when the only story I can tell is my own. It's a book, when I need to be somewhere else. It's control, when I feel so out of control. It's healing, when everything seems pretty messed up.
And it's fun, when life is just flat-out boring
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,344
Likes
25,870
Location
Sri Lanka
#24
தோழமைகளே!
இதோ எனது பதிவு....

உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா?

ஆம். சுற்றி நடக்கும் அநியாயங்களை பார்த்து/கேட்டு மிகவும் கோபமும் கவலையும் அடைவேன். நெருக்கமானவர்களுடன் இதுபற்றி கதைத்து ஆதங்கமடைவேன். அவ்வளவுதான்.
ஆனால் பெண்மையில் இணைந்தபின் கவிதை எனும் பெயரில் எனது மனதில் எழும் உணர்வுகளை கொட்டுகிறேன். எனது எழுத்துகள், வாசிப்பவர்களில் ஓரிருவருக்காவது நல் வழி காட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது, திருப்தியும் கிடைக்கிறது.
இயற்கையை ரசிக்கும் பழக்கமும், அதைப்பற்றி சிந்திக்கும் ஆர்வமும்
பெண்மையில் எழுதத் தொடங்கியபின்புதான் உண்டானது.

எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?

பெண்மை நடாத்தும் போட்டிகளும், தோழமைகளின் ஊக்குவிப்பும் கருத்துக்கள், கலந்துரையாடல்களும் எனது திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.

பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்

எனது பொழுதுபோக்கு கதைகள் வாசிப்பது. நாவல்கள் பெறுவதற்காகவே நான் பெண்மையில் இணைந்தேன். நாளடைவில் நாவல்கள் கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் நிலைக்கு பெண்மை என்னை உருவாக்கிவிட்டது. அதில் திருப்தியும் மகிழ்வும் அடைந்தேன். நாளடைவில் பெண்மையில் பதியப்படும் எல்லாக் கவிதைகளையும் வாசித்து எனக்கும் எழுதும் ஆர்வம் வந்துவிட்டது. இன்று எனது மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதுவதற்கு தளம் அமைத்துத் தந்த பெண்மைக்கு நன்றி.


பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?

Private Messages மூலம் உரையாடுவதை தவிர்க்கலாம். வெளிப்படையான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானவை.
தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி பகிர்வதை தவிர்க்கலாம்.

நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.

காலத்திற்கு காலம் பெண்மை புதுமை அடைந்துகொண்டு வருவதால் மாற்றங்கள் தேவை என்று நினைக்கத் தோன்றவில்லை.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,480
Likes
12,889
Location
chennai
#25
உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா? ஆம் எனில் அதை இங்கே எழுதுங்கள்!

ஆமாம் அக்கா பெண்மை என் குணாதிசியங்கள நிறையவே மாற்றி இருக்கு . முன்னாடிலாம் நான் ரொம்ப சோகமா இருப்பேன் . வீட்ல எப்பவும் தனிமைல தான் இருப்பேன் .அதிகமா யார்கிட்டையும் பேச கூட மாட்டேன் . அப்படி இருந்த என் வாழ்க்கைய பெண்மை தான் மாத்திச்சு . நான் என் வாழ்க்கைல ரொம்ப சந்தோசமா இருந்தேனா அதுக்கு ஒரு முக்கிய காரணம் பெண்மை .அது ஏன் எப்படின்னு பின்னாடி சொல்றேன் கா .

எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?

பெண்மை எல்லாரோட திறமைகளையும் வெளி கொண்டு வர ரொம்பவே உதவுது .எனக்குனு எதுவும் பெரிசா சொல்லிக்குற மாறி திறமை இல்லை .இருந்தாலும் எல்லாரோடைய திறமையும் வளர்த்துகொள்றதுக்கு இங்க நெறைய த்ரெட் இருக்கு .கதை, கவிதை, பேச்சு திறன் , ஓவிய திறன் சமையல் திறன் ,இப்டி எல்லாரோட எல்லா திறமைகளையும் உலகத்துக்கு வெளிப்படுத்துற மிக பெரிய உதவி தளமா பெண்மை இருக்கு . எல்லாரோட திறமைகள பார்த்துட்டு எனக்கும் கவிதை , கதை எழுதனும்னு ஆசையா இருக்கு .கூடிய சீக்கிரம் எழுத முயற்சி பண்ணுவேன்.

எனக்கு தமிழ்னாலே சின்ன வயசுல இருந்து ரொம்ப ரொம்ப பிடிக்கும். தமிழ்ல எதாச்சும் கட்டுரை,கதை, கவிதைன்னு படிக்க ரொம்ப ஆர்வமா இருப்பேன். அதே மாறி தமிழ்ல எதாச்சும் எழுதுறது ரொம்ப பிடிக்கும். ஆனா நான் காலேஜ் சேர்ந்த பிறகு காலேஜ்ல தமிழ் மொழி கிடையாது. அதுனால என்னால தமிழ்ல எதுவும் படிக்கவோ எழுதவோ வாய்ப்பே கிடைகல. ஆனா பெண்மைல சேர்ந்த பிறகு என்னோட தமிழ் திறமைய வளர்த்துகுறத்துக்கு பெண்மை ரொம்பவே உதவுச்சு.இங்க பெரும்பாலும் தமிழ்லையே எல்லாமே இருக்குறதால படிக்க ரொம்ப பிடிச்சு
ருக்கு. நானும் அப்ப அப்ப தமிழ்ல எதாச்சும் டைப் பண்ணி போடுவேன் .

பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!

முதல் முதலா நான் நாவல்கள் பத்தி தேடுனப்பதான் இணையதளத்துல பெண்மை எனக்கு அறிமுகம் ஆச்சு . அப்போலாம் பெண்மைல நாவல்கள் டவுன்லோட் பண்ண லிங்க் இருந்துது .அப்போ தான் நான் நிறைய நாவல்கள் டவுன்லோட் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன் .எனக்கு கதை படிக்குறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் .கதை படிக்கும் போது என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியாது . வேற ஒரு உலகத்துல சந்தோசமா இருப்பேன் .என் கஷ்டம் கவலை எல்லாத்தையும் மறந்து ஜாலியா கதை படிச்சு அவ்ளோ சந்தோசமா இருந்தேன் . நான் அப்போ தான் காலேஜ் சேர்ந்த புதுசு .கிளாஸ்ல யார்கிட்டையும் பேசவே மாட்டேன் . என்னோட பள்ளி காலத்துல இருந்தே அப்படி தான் , அப்படி இருந்த என்னோட குணம் கொஞ்சம் கொஞ்சமா பெண்மை ஆள மாறிச்சு , எல்லார்கிட்டயும் நல்லா பேச ஆரம்பிச்சேன் , பழக ஆரம்பிச்சேன் .

அப்புறம் பெண்மைல தொடர் கதை எழுதுற திரி ஆரம்பிச்சாங்க . நிறைய பெண்மை தோழிகலாம் சேர்ந்து மொத்தமா ஒரு கதை எழுதுனாங்க . அதை படிக்க ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு .நாலஞ்சு பேர் சேர்ந்து எழுதுறதால ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு . .எப்போடா அடுத்த பகுதி போடுவாங்கன்னு ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருந்து படிப்பேன் .

அதுக்கப்பறமா பெண்மைல நிறைய எழுத்தாளர்கள் தொடர் கதை எழுத ஆரம்பிச்சாங்க , எனக்கு தான் கதை படிக்குறதுனா உயிர் ஆச்சே .அதுனால அப்ப இருந்து என் முழு நேரமும் பெண்மை ஓட கதை பகுதில தான் இருப்பேன் .இப்படி தான் பெண்மை ஓட என் அழகிய பயணம் ஆரம்பிச்சுது . அதுக்கப்பறம் பெண்மைல மெம்பெர் ஆனேன் . அப்போலருந்து என்னோட வீட்ல இருக்க எல்லா நேரமும் பெண்மைல தான் இருப்பேன்.
அப்புறம் எல்லா கதையும் படிச்சு கமெண்ட் போட ஆரம்பிச்சேன் .அப்படியே எனக்கு நிறைய நல்ல தோழிகள் கிடைக்க ஆரம்பிச்சாங்க. இப்போ அப்டியே கதை படிச்சுட்டு கமெண்ட் பண்ணிட்டு, பாட்டு திரி,தகவல் திரின்னு பெண்மையால என் லைப் ஜாலியா போய்ட்டு இருக்கு. எப்போமே எப்போ
டா லீவ் விடுவாங்க, பெண்மை வரலாம்னு ஆர்வமா காத்துட்டு இருப்பேன்.எவ்ளோ வேலை இருந்தாலும் தினமும் ஒரு தடவையாவது பெண்மை பக்கம் வராம இருக்கமாட்டேன்.என்னைவிட்டா பெண்மை பத்தி பேசிட்டே இருப்பேன் ,எனக்கும் பெண்மைக்கும் அவ்ளோ இருக்கு.இப்படி ஒரு அழகான தளம் உருவாக்குனதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கா. பெண்மைக்கு நான் ரொம்பவே கடமை பட்டுருக்கேன்.அப்புறம் பெண்மை பத்தி பேச எனக்கு ஒரு நல்லா அருமையான சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்ததுகாகவும் ரொம்ப நன்றி கா.

பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?

பொதுவாவே இணையதளத்துல பெண்களுக்கு பாதுகாப்பு கம்மி தான். ஆனா நம்ம பெண்மைல அப்டி இல்ல. இத்தனை நாள் வரை பெண்மைல இருந்துருக்கேன்,ஆனா இதுவரைக்கும் பெண்மைல எனக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை. என்னை பொறுத்த வரை பெண்மை ரொம்பவே பாதுகாப்பா தான் இருக்கு.

ஆனாலும் இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களோட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக அவங்க புகைப்படம், முகவரி இதெலாம் பப்ளிக்ல பகிராம இருக்கலாம்.

நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்

தொடர் கதை பகுதியவே ரெண்டா பிரிச்ச நல்லா இருக்கும். அதாவது கதை திரிகள் எல்லாம் ஒன்னா வர மாறியும் கமெண்ட் திரி எல்லாம் ஒன்னா வர மாறியும் பிரிச்சா , எல்லா கதையும் படிக்க சுலபமா இருக்கும். கமெண்ட் திரி நிறைய இருக்குறதால எல்லா கதைகள் திரியயும் தேட கொஞ்சம் கஷ்டமா இருக்கு அக்கா.

 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,017
Likes
37,656
Location
karur
#26
உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா?

ஆம் கூண்டு கிளியாக இருந்த என்னை பட்டாம்பூச்சியாக மாற்றியது.
தொடக்கத்தில் இருந்தே சில பல கட்டுபாடுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட இங்கு வந்த பின்பு தான் எனக்கு கருத்து சுதந்திரம் கிடைத்தது. எனக்குள் இருக்கும் என்னை உணரவைத்து நிமிர்வுடன் இருக்க வைத்தது இந்த பெண்மை.

எனது பிரச்சனைக்கு வழிதேடி வந்த நான் இன்று ஒரு சிலரின் பிரச்சனைக்கு கருத்து சொல்கிறேன் என்றால் அதற்கு பெண்மையே காரணம்.

பேச்சு மட்டுமே வாழ்வாதாரமாக இருந்த எனக்கு எழுதும் திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து ஊக்குவித்தது இந்த பெண்மை.


எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?

பொழுது போக்கிற்காக சில பல கருத்துகளை கூற அதையும் பெண்மை

தோழிகள் கைதட்டி உற்சாகபடுத்த கருத்துகள் அப்படியே வளர்ச்சி

அடைந்து கவிதைகளாக மாறி பின்னர் கதை எழுதும் அளவிற்கு

என்னை உயர்த்தியது இந்த பெண்மை.


கம்பனின் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல தான் இந்த

பெண்மைக்குள் வந்துவிட்டால் முடங்கிக்கிடந்த திறமைகள் எல்லாம்

புயல் போல வெளிப்பட்டு நமக்கு ஒரு அடையாளத்தை

கொடுத்துவிடுகிறது. நீயா நானா என்னை அப்படி மாற்றிய த்ரட்டில்

ஒன்று. கல்லூரியில் இது போன்று பங்கு பெற்ற அனுபவம் உண்டு.

ஆனால் திருமணத்திற்கு பின் எனது கருத்துகள் சபை ஏறாமல் போக

முடங்கி கிடந்த உணர்வுகள் எல்லாம் இந்த த்ரட் வந்தால் துள்ளி

குதித்து வெளிவரும்.


இங்கு பல போட்டிகளில் பங்கு எடுத்த போதுதான் ஒருவரின்

திறமைக்கு வயதும் அனுபவமும் ஒரு பொருட்டு அல்ல. முயற்சி

மட்டுமே மூலதனம் என்பதை புரிந்து கொண்டேன்.


உண்மையாக சொல்வது என்றால் நான் கதை எழுத ஆரம்பித்தன்

காரணம் ஒவோவ்று த்ரேட்டாக சென்று அப்போது மொக்கை போட்டு

கொண்டு இருந்தேன். நமக்கு என்று ஒரு திரெட் இருந்தால் இன்னும்

அதிகமாக தோழிகளுடன் பேசலாம் என நினைத்து தன் விளைவு நான்

கதை எழுதும் ஒரு நிகழ்வு.( என்ன மக்களே ... அடிபாவி அதுக்காக

எங்களுக்கு இவ்ளோ பெரிய கொடுமைய கொடுத்திட்டியே

அப்படின்னு நீங்க கொலைவெறி ஆகிறது எனக்கு புரியுது.....பட்

இதான் உண்மை....) அதான் எப்பவும் என் ஸ்டோரி திரெட் விட

என்னோட கமெண்ட்ஸ் திரெட் எல்லாருக்கும் பிடிக்கும்...ஹிஹிஹி

நம்ம இந்த ஏரியாவுக்கு வந்தததே அதுக்குதானே.....கூடி சேர்ந்து கும்மி

அடிக்கிறதுல இருக்க சுகம் வேற எதில வரும் சொல்லுங்க....பெண்மையில் உங்கள் பயணம் ......

பெண்மையில் எனது பயணம் ரயில் சிநேகம் போல் ....நினைத்து நினைத்து பார்த்து இன்புறும் ஒரு இனிமையான பயணம்.

பத்து வருடகாலம் ஒவ்வொரு செங்கலாக அடுக்கி நான் கட்டிய எனது கனவு கோட்டை ஒரே நாளில் இடிந்து தரைமட்டம் ஆக கனவுகள் எல்லாம் கண் முன் சிதைந்து கிடைக்க உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பு இல்லையா என மனம் நொந்து வாழ்க்கை சூறாவளியில் சுழற்டபட்டு கரை ஒதுங்க இடம் தேடி தத்தளித்த போது வெறும் கட்டையாக என் கையில் பெண்மை அகப்பட ஆதரவிற்காக பிடித்த நான் பின்னர் சிறிது நாட்கள் சென்ற பின்னர் ஏதோச்சையாக அதன் உள்ளே செல்ல அப்போது தான் தெரிந்தது என்னை போல் பலரும் அதில் பயணித்திருக்க நிழல் தேடி அதில் நானும் ஐக்கியமானேன்.

கனவுகள் சிதைந்து நம்பிக்கை இழந்து நமக்கு எதுவும் வராது, தனித்திறமை என்பதே நமக்கு கிடையாது என நான் தளர்ந்திருந்த நேரத்தில் நான் பயந்து பயந்து பதிந்த சில பதிவுகளை தோழிகள் பாராட்டி வாழ்த்த குறுகி இருந்த என் தோள்கள் சற்று விறப்படய எனது கருத்துகளை சுதந்திரமாக வளம் வர ஆரம்பித்தது.

பல இடங்களில் பாராட்டி சில இடங்களில் தவறுகளை சுட்டி காட்டி மேலும் அதை சரி செய்யும் வழிகளையும் நட்புடன் அவர்கள் சொல்லும்போது உண்மையாக சொல்கிறேன் தோழிகளே அந்த நேரம் இந்த பெண்மை எனக்கு தாயாக தான் தெரிந்தாள்.

கவிஞர் வாலிக்கு எப்படி கண்ணதாசன் வரிகள் உயிர் கொடுத்ததோ அது போன்ற நிகழ்வும் இந்த பெண்மை எனக்கு தந்து இருக்கிறது.

எனது கனவுகள் சிதைந்து கிடந்த இடத்தில் மீண்டும் ஒரு விதையை துணிவுடன் நட்டு தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து அந்த விதை விருட்சமாக மாற எனது பயணத்தை தொடக்கி வைத்தது இந்த பெண்மை தான்.

சோதனைகள் கடந்து சாதனைகள் நோக்கி செல்லும் எனது பயணத்தில் பெண்மையின் பங்கு பெருமளவில் இருக்கிறது.


பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பெண்மையில் இப்போது இருக்கும் rules& regulation எனக்கு போதுமானதாக தெரிகிறது.

அறிமுகம் இல்ல நபர்களிடம் பிரைவேட் சாட் செய்ய வேண்டாம். ஓபன் த்ரெட்டில் பேசி நம்பிக்கை வந்த பின் பிரைவேட் மெசேஜ் பண்ணுங்கள்.


நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்.......


கல்வி தொடர்பான தகவல்கள் ஆலோசனைகள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

மேலும் பெண்களின் சுய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் தகவல்கள் எதிர்பார்க்கிறோம். நமது தோழிகள் பலர் தொழில் துறையில் இருக்கலாம். அவர்களது அனுபவத்தை கூட பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில் துறையிலும் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன....அதை பெண்கள் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்பன போன்ற விபரங்கள்.

டீன் ஏஜ் பெண்களுக்கான பிரச்சனைகள், அவர்களை அம்மாக்கள் எப்படி கையாள்வது என்பன போன்ற விபரங்களுக்கு தனி திரெட் ஓபன் செய்து அது சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் அதில் பார்த்தால் கிடைக்குமாறு செய்யலாம்.
 
Last edited:

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,401
Likes
28,926
Location
London
#28
உங்களின் குணாதிசயத்தை பெண்மை மாற்றியமைத்ததா? ஆம் எனில் அதை இங்கே எழுதுங்கள்!
கண்டிப்பாக... நல்ல விதத்தில் வந்த மாற்றம் என்று சொல்ல வேண்டுமெனில், சில ஆண்டுகள் நான் இந்திய செய்திகள் எதையும் படிக்காமல், அறிந்துக் கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருந்தேன்... என்னை சுற்றி நடக்கும் தினப்படி விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தேன்... இங்கே பெண்மைக்கு வந்த பின்னர், எப்படியும் எதாவது ஒரு செய்தி கண்ணில் பட்டு விடும்... இப்போது நான் பிறந்து, வளர்ந்த நாட்டில் நடப்பவற்றை தொடர்ந்து கவனித்து கொண்டு வருகிறேன்... இதற்கு இங்கே தினமும் பல்வேறு செய்திகளை போடும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

வேறு விதத்தில் வந்த மாற்றமெனில், இணையத்தின் மீது வந்து விட்ட பற்று/பைத்தியம்... ஆம்...கிடைக்கும் பொழுதுகளை இங்கே கழிக்க ஆரம்பித்தேன்... தேவைக்கு அதிகமான நேரத்தை செலவிடுவதை உணர்ந்து, இப்போது தான் முயன்று இந்த பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.....

எந்தெந்த வகையில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பெண்மை உறுதுணையாய் நின்றது?


தனிப்பட்ட முறையில் பல வருடங்களாக ஒரு சமையல் ப்ளாக் துவங்க எனக்கு விருப்பமாக இருந்தது... வடிகட்டிய சோம்பேறியான நான், அதற்கான ஆயத்த வேலைகள் செய்து விட்டு , அப்படியே கிடப்பில் போட்டு இருந்தேன்... பெண்மையில் அனைவரும் தங்கள் கைவேலைகளை போடுவது, அவ்வப்போது சமையல் குறிப்புகள் போடுவதை பார்த்து நானும் எனக்கு தெரிந்த, நான் புதிதாக முயலும் சமையல் செய்முறைகளை இங்கே போட ஆரம்பித்தேன்... இன்று வரை அதை தொடர்கிறேன்...

அது மட்டுமல்ல, இங்கே வித்தியாசமான தலைப்புகளில் துவங்கப்படும் பல்வேறு பயனுள்ள திரிகள், விவாத தலைப்புகள், மாதம் ஒரு புது போட்டி... இவை எல்லாமே நமக்குள் ஒளிந்திருக்கிறது என்று நாமே அறியாத பலவகை திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருக்கிறது...

சிறுகதை எழுதத் தூண்டியது, ஜெயா அக்கா போடும் மாதம் ஒரு சிறுகதை தலைப்பு...

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கொலு, கோலம் போட்டிகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... முன்னதில் பங்குக் கொள்ளவும், பின்னதில் அடுத்தவர் கைவண்ணத்தை கண்டு ரசிக்கவும்...

அதே போல் பாடல்களை கேட்டு ரசித்தது மட்டுமல்லாமல் பெண்மையில் இருக்கும் பல்வேறு பாடல் சம்பந்தப்பட்ட விளையாட்டு திரிகளில் பங்குக் கொள்வதும் விருப்பமான ஒன்றாகி விட்டது...
அடுத்தவரை ஊக்குவிப்பதிலும், உற்சாகப்படுத்துவது, தூண்டுவதில் பெண்மையின் அங்கத்தினர்களுக்கு இணை அவர்களே...

வாசிப்பது, அடுத்தவரோடு விவாதிப்பது, மற்றவர்களின் திறமைகளை கண்டு களிப்பதில், பிறரின் நகைச்சுவை நிரம்பிய பதிவுகளை படித்து நானும் மகிழ்வது, இப்படி பெண்மையால் எத்தனையோ தினமும் என் வாழ்க்கையில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது...


பெண்மையில் உங்கள் பயணத்தைப் பற்றி சில வரிகளில் பகிருங்கள்!
எல்லோரையும் போல் நேரத்தை போக்க நாவல்கள் தேடி தான் நானும் இங்கே வந்ததே...

பெண்மையில் உறுப்பினர் ஆவதற்கு சில மாதங்கள் முன்பே நான் சைலென்ட் வாசிப்பாளராக நாவல் டிஸ்கஷன் திரியை கவனித்துக் கொண்டு இருந்தேன்...
இங்கே அறிமுகம் இல்லாதவரோடு கூட நட்பு பாராட்டி, அடுத்தவர்களுக்கு அவர்கள் திறமையை வெளிப்படுத்தும் போது உற்சாகப்படுத்தி, மேலும் மேலும் ஊக்கமும் கொடுக்கவும், நாமும் நமக்கு தெரிந்ததை பிறர் பயனடைய பகிர்வோமே என்று நானும் சில பதிவுகளை போட்டேன்... அப்படியே பெண்மையில் என்னையும் இணைத்துக் கொண்டேன்...
பெண்மையை பயன்படுத்த துவங்கிய இந்த சில ஆண்டுகளில், எண்ணற்ற நட்புகள் பெற்று இருக்கிறேன்... முகம் அறியாதவர்கள் பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

அதே போல் கல்லூரி காலத்தில் கவலையற்று சிரித்து பேசி மகிழ்ந்திருந்தோமே... அந்த அளவுக்கு வெட்டி அரட்டை அடிப்பது முதல் ஒருவரை ஒருவர் கிண்டலும் கேலியுமாக காலாய்த்து மகிழ்ந்து இருக்கிறோம்... சில அன்பான நெருங்கிய நண்பிகளையும் கொடுத்து இருக்கிறது பெண்மை...

முயன்று பார்க்க தயங்கும் புது விடயங்களை நம் பெண்மை தானே... செய்து தான் பார்ப்போமே... என்று தயக்கத்தை களைந்து பங்கு பெற செய்ததும் பெண்மையே... நன்றி பெண்மை...

பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கலாம்?

தெரியாதவரோடு ஜாக்கிரதையாக பழகவும்... சொந்த விஷயங்களை பொதுவில் வெளியிட வேண்டாம்... சிலர் கதை லிங்க் கேட்டு யோசியாமல் தங்கள் ஈமெயில் முகவரியை தருகின்றனர்... அதை தவிர்க்க வேண்டும்...
நீங்கள் பெண்மையில் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் - தொழில் நுட்பத்தில் அல்லது பொதுவான மாற்றம் ஏதேனும் வேண்டியிருப்பின்.

பக்கத்தின் ஆரம்பத்தில் பக்க எண்ணை குறிக்கும் பெட்டியை சொடக்க முடிந்தால் நன்றாக இருக்கும்...

முழு பக்கத்தை ஸ்க்ரோல் செய்வதற்கு பதில் டாப்... பாட்டம் ஆரோ (arrow) பட்டன் இருந்தால் நன்றாக இருக்கும்...

அதே போல் நான் கவனித்த வரையில் நிறைய பேர் ரெஜிஸ்டர் செய்யாமல் கேள்விகள் கேட்கும் வசதி இருக்கிறது... அப்படி செய்பவர்கள், அந்த திரியை கண்டுபிடிக்காமல், மீண்டும் அதே கேள்வியை எழுப்புகின்றனர்... அதற்கு பதில் அந்த ask question ஐ அங்கே கேள்விக் கேட்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணமாக... பெண்மையில் ஒரு தனி பகுதியாக வேறு முறையில் மாற்றி அமைக்க முடியுமா...?

இன்னொன்று பத்து போஸ்ட் போட்டால் தான் PM வரும்... இதில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்... பெரும்பாலும் வழக்கமாக வரும் மெம்பர்கள் நேரமின்மை மற்றும் ஊருக்கு செல்வது போன்ற காரணத்தினால் ஒரு மாதத்தில் அப்படி போட முடியாமல் இருக்கலாம்... PM பார்க்க, போஸ்ட் போட வேண்டும் என்று கடமைக்கு போஸ்ட் செய்வது காட்டிலும் அவர்கள் பெண்மை ரெபுடேஷன் (ஃபிரெண்ட், சிட்டிசன்) வைத்து நேரடி அனுமதி கொடுக்கலாமே...?


அதே போல் இது ஸ்டோரீஸ் செக்ஷனில்,... மலர் @
malbha லேட்டஸ்ட் நாவல் போர்ட் என்னும் திரியை தொடர்ந்து நடத்துகிறார்... அதில் வெளிவரும் புது நாவல்களை பற்றி தகவல்களை தருகிறார்... ஆர்வக் கோளாறில் அதே நோட்டிஸ் திரியை நோவல் ரிக்வஸ்ட் திரியாக பலர் பயன் படுத்துகின்றனர்... மலர், நிஜமாகவே பொறுமைசாலி... :cheer::thumbsup... அப்படி கேட்பவர்களுக்கு அவரும் சலிக்காமல் இந்த திரியில் கேட்காதீர்கள் என்று ஒவ்வொரு முறையும் மெஸ்சேஜ் போடுகிறார்... அதற்கு பதில் அவருக்கும் அந்த திரியை அவர் மட்டுமே திறக்க, மூட வசதி செய்துக் கொடுக்கலாம்...

எனக்கு ஏதேனும் விவரம் தெரிய வேண்டி இருந்தால் நான் பெண்மையில் ஒரு முறை அதை பற்றி தேடி விடுவேன்... அப்படி இருக்க, இங்கே சிலர் ஏற்கனவே பல முறை கேட்கப் பட்டு, விடையும் அளிக்கப் பட்ட கேள்விகளுக்கு, மீண்டும் மீண்டும் அதே கேள்விகளைக் எழுப்புகின்றனர்... உதாரணம் தாய்பால் சுரப்பது, தலைமுடி சம்பந்தமான கேள்விகள் etc... அதனால் இது போல் most searched topics ஒன்றாக திரட்டி சுலபமாக search இல் எளிதில் கண்ணில் படும் படி செய்ய முடியுமா...?

என்னடா எல்லாம் நிறைகளாக இருக்கிறதே... குறை இல்லையா...? குறை என்பதை விட ஒரு கருத்து...
ஒரு சிறு வேண்டுகோளை வைக்க ஆசைப்படுகிறேன்... புது tagging முறை எனக்கு பிடிக்கவில்லை... இதற்கு முன்னர் எந்த தயக்கமும் இல்லாமல் எல்லா புது, பழைய திரிகளில் மிக சுதந்திரமாக வலம் வந்துக் கொண்டு இருந்தேன்... இப்போது tagging வந்த பின்னர் அந்த freedom குறைந்த உணர்வு வருகிறது... சில திரிகளில் நாம் tag செய்யப்படாத போது, நுழைந்து கருத்துக்களை சொல்ல சங்கடமாக இருக்கிறது... வேண்டாத விருந்தாளியாக நுழைகிறோம் என்ற எண்ணம் வருகிறது... இதை இங்கே சொல்லி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை... ஆனால், வெறும் நிறை மட்டுமே சொல்லி, வானத்தில் ஏற்றி வைப்பது இல்லை நட்பு... குறைகளையும் சொன்னால் எல்லோருக்குமே நன்மையில் முடியும்... யார் மனதையாவது வருத்தி இருந்தால் மன்னிக்கவும்...
 
Last edited:

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,452
Location
France
#29
அன்புள்ள நண்பர்களே!!!

வணக்கம். நலம்தானே? முதலில் பெண்மைக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன்.

கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலள் வாழ்க! வாழ்க!

மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட பெண்மை நீ வாழ்க! வாழ்க!

திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட் செல்வி நீ வாழ்க! வாழ்க!

இயல் இசை நாடகம் முத்தமிழ்
காக்கின்ற தலைவி நீ வாழ்க! வாழ்க!

நெட் மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவி வாழ்க! வாழ்க!

நின் கொடை வாழ்க! படை வாழ்க! குடி வாழ்க!
குலம் வாழ்க! நலமும் பல்லாண்டு வாழ்க!


(மானசீகமாக கண்ணதாசன் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதி இருக்கிறேன். ஹி ஹி ஹி காப்பி அடிக்கிறதுதான் நமக்கு(!?) கை வந்த கலை ஆயிற்றே.)

பெண்மைக்குள் வந்த பிறகு என் குணாதிசயம்:

24 மணி நேரமும் பரபரவென அவ்வை சண்முகி மாதிரி ஆபிஸ், வீடு, வீட்டு வேலைகள், வார விடுமுறைகள் என்று இயங்கிக் கொண்டிருந்த நான், என் கணவனின் பணி நிமித்தம் ஃப்ரான்ஸ் செல்ல வேண்டி இருந்தது. ஆபிஸ் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஜாலியாக பொழுதை கழித்தேன் . ஒரு மாதத்திற்க்கு மேல் முடியவில்லை. பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என்பார்களே அதைப் போலதான். பேச ஆளில்லை, செல்ல கோவில் இல்லை, மணம் வீச மல்லி இல்லை, படிக்க தமிழ் இல்லை, பண்டிகை இல்லை, விருந்துண்ண விருந்தினர்கள் இல்லை, சொல்லவே வார்த்தை இல்லைங்க :( :( :( . அப்படி ஒரு சூழ்நிலையில்தான் நான் பெண்மை பக்கம் வந்தேன். புத்தகங்களை தேட வந்த நான், அழகான மங்கையாக பெண்மை திகழ்வதும், நிறைய போட்டிகளும், பரிசுகளும், விவாதங்கள், பயனுள்ள பகிர்தல், சொந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனையும் இவளுக்குள்ளே இருந்தது. நேரம் போனதே தெரியாமல் படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்த நான் பெண்மையில் வைக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வெல்ல ஆரம்பித்த உடன் என்னுடைய தன்னம்பிக்கை மாறியது. ஏனெனில் நான் எழுதி அதிக பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்ற ஒறே இடம் பெண்மைதான். அந்த தன்னம்பிக்கையை வளர்த்த இடம் பெண்மைதான். அது ஒரு பெரிய மாறுதல் என்னுள்.

என் திறமையை வளர்த்த பெண்மை:


ஒன்றல்ல , ரெண்டெல்ல பலப்பல. அம்மா என்றாலே அன்பு என்போம். அது போல் அம்மா அருகில் இல்லாத காலங்களில் அதிகமாக நாடியது பெண்மையைதான். என் அம்மாவோடு நான் பேசும் பொழுதெல்லாம் சொல்லும் வார்த்தை நேரத்தை வீணாக்காதே என்பதுதான். அதேப்போல் பெண்மைக்குள் வரும் பொழுதும் அதே உணர்வுதான். மற்ற தோழிகளை பார்த்தால், நாமும் இவர்களைப் போல எழுத வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கொடுத்தவள் இவள்தான். வெறும் கூட்டு புழுவாய் இருந்த என்னை,உனக்கும் சிறகுகள் வரும், வண்ணங்கள் வரும் வண்ணத்து பூச்சியாய் மின்னுவாய் என்று என் எழுத்து திறமையையும், சிந்திக்கும் திறன் மற்றும் வாசிப்பை அதிகப் படுத்தியவளும் இவள்தான்.

பெண்மையில் என் பயணம்:

பெண்மையில் என் பயணம் அது சிலிர்க்க வைக்கும் அனுபவம். ஏனெனில் அம்மாவைப் பற்றி எழுதி, என் ஆசிரியர் பற்றி எழுதி, நம் பெண்கள் அணியும் புடவையைப் பற்றி எழுதி அனைத்திற்க்கும் பெண்மை என்னை ஆரத்தழுவி , முத்தமிட்டு பரிசுகளை அள்ளி வழங்கினாள். நான் என் அம்மாவைப் பற்றி எழுதியதை என் தாயிடம் படித்து காண்பித்த போது என் தாய் அழுதது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இப்பொழுதும் என் கண்கள் கலங்குகிறது. அதேப் போல் என் ஆசிரியரிம் அதை சொல்லிய பொழுது, அவரும் பெருமையாக ஒரு சிரிப்பு சிரித்தார். இந்த உணர்வுகள் எல்லாம் பெரியதாக சாதித்தவர்கள் உணர்த்திருப்பார்களோ என்னவோ , நான் அதை ரசிக்கிறேன், ஆனந்த்மாய் உணர்கிறேன். என்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக நான் இரண்டு வருடங்கள் அதிகமாக எழுத முடியவில்லை. ஆனால் பெண்மைக்குள் பிரவேசிக்காமல் இருந்ததில்லை. தினமும் அவளை சந்திக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும், ஆசிரியர் சுஜாதா அவர்கள் சொல்வது போல் எப்படி பட்ட கதையாக இருந்தாலும் அதில் கருத்தில்லாமல் இருக்க கூடாது ,அதேப் போல் என் எழுத்து தோற்றுப் போய் இருக்கும் நண்பனுக்கு வழிகாட்டியாக, வேதனையில் இருப்பவருக்கு அது நல்ல ஆறுதலாக, சமூக அக்கறை கொண்ட எழுத்தாக கொடுப்பேன். அதற்க்கு நிச்சயம் பெண்மை என்னை ஊக்குவிப்பாள்.

பெண்மை இணைய உலகில் உலவும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக செய்ய வேண்டியது:

1. உங்கள் இரகசியங்களை முகமறியாதவர்களிடம் பகிராதீர்கள் தயவு செய்து
2. உங்கள் குடும்ப சூழ்நிலைகள், புகைப்படங்கள், பாஸ் வோர்டு, பின் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களை தயவு செய்து பகிராதீகள்.
3. தெரியாத ஆணோ அல்லது பெண்ணோ அவர்களுடன் சாட் செய்யும் பொழுது அதிகமாக சொந்த விஷயங்களை பகிராதீர்கள். முடிந்தவரை சாட் செய்வதையே தவிர்த்து விடுங்கள்.

நான் எதிர்பார்க்கும் பெண்மை:

பெண்மை என்றுமே எதிர்பார்ப்பிற்க்கு மேல் செயல்படுவாள். அவள் என்றுமே தோழியாய், தாயாய், ஆசானாய் இயங்கிக் கொண்டிருக்கிறாள். நான் எதிர்பார்ப்பது

1.எத்தனை எத்தனை சாதனைப் பெண்கள் இத் தரணியில் அவர்களுக்கான திரியை ஏற்படுத்தி ஏதாவது ஒரு சாதனைப் பெண்ணைப் பற்றி மாதம் மாதம் வரும் புத்தகங்களில் கொடுக்கலாம். ஏனெனில் அவர்கள் கடந்து வந்த முள் பாதை நிச்சயம் அனைவருக்கும் அது வழிகாட்டும். அது மற்ற பெண்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்.
2. புதிய புத்தகங்களைப் பற்றிய அலசலை மாதம் தோறும் கொடுக்கலாம்.
3. கொஞ்சம் அரசியல் விஷயங்களைக் கூட அலசலாம்.

நாங்கள் எல்லாம் தெரிந்தவர்களாக மிளிர என் தோழி, சிநெகிதி பெண்மை நிச்சயம் கை கொடுப்பாள்.

தமிழ் எப்படி திகட்டாத தெல்லமுதோ அதே போல், பெண்மையும் தித்திக்கும் நிலவுதான். அவள் நீடுழீ வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி.

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,030
Likes
17,171
Location
Coimbatore
#30
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்!

பெண்மை 7வது பிறந்தநாள் சிறப்பு போட்டியில் உங்கள் அனைவரின் பதிவுகள் எங்களை உற்சாகபடுத்தும் வகையில் இருந்தது. பெண்மையுடனான உங்கள் ஆழ்ந்த அன்பை வரி வடிவத்தில் அழகாக விளக்கி உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் பெண்மையின் சார்பில் எங்கள் நன்றிகள்.

உங்கள் அனைவரின் திறமைகளை வளர்த்துக்கொள்ள, குணாதிசயத்தை மாற்றியமைத்த, எங்களுடனான உங்கள் இனிமையான பயணத்தை அழகாக விளக்கி உள்ளீர்கள்.

பெண்மை இணைய உலகில் பெண்களுக்கான பாதுகாப்பிற்கான உங்கள் அனைவரின் கருத்துகள் மிகவும் சரியானது. அதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இங்கு பழகும் உறுப்பினர்களுடன் உங்கள் கருத்துகள் வெளிப்படையாக இருப்பது அனைவருக்கும் நலம், தொலைபேசி மற்றும் ஈமெயில் மூலம் உரையாடுவதை தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கான பாதுகாப்பு வளையத்தை நீங்களே வரைந்து அதற்குள் உங்கள் இனிய இணைய பயணத்தை தொடருங்கள்.

பெண்மையில் நீங்கள் எதிர்பார்கின்ற முக்கிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இதில் ஒரு சில மாற்றங்களை நாங்கள் ஏற்றுகொள்கிறோம் மேலும் ஒரு சில மாற்றங்கள் செயல்படுத்த எங்களுக்கு சிறு கால அவகாசம் வேண்டும். அதற்குரிய காலத்தில் மாற்றங்களுடன் பெண்மை மிளிர்வாள்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.