Penmai eMagazine April 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here,
Penmai eMagazine April 2016.

உங்களோடு சில நிமிடங்கள்,
பல பள்ளிகளில் கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. பல நண்பர்கள் மற்றும் உறவுகளின் கேள்வி, "லீவு விட்டாச்சா? எப்படி மேய்க்கறீங்க பசங்கள!" என்று. அதற்கு பதில் சொல்வதற்குள் அடுத்த யோசனை, இங்க நல்ல summer class எடுக்கறாங்க எங்க தங்கை அவளோட பெண்ணை அங்கதான் அனுப்பி இருக்கா. நீங்களும் சேர்த்துவிடுங்களேன். காலையில் போன சாயந்திரம் தான் அனுப்பறாங்க! போன்ற உப யோசனைகளோடு பலரது கருத்துகள் சாதாரணமாகிவிட்டது.

இங்கு குழந்தைகள் ஆடு, மாடுகள் அல்ல மேய்ப்பதற்கு. அவர் நம் பிள்ளைகள். கோடை விடுமுறை, அவர்களின் வசந்தகாலம். இதில் நாம் நம் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறேன் என்று, நீச்சல், கம்ப்யூட்டர் கல்வி, ஸ்போக்கன் இங்கிலீஸ், இந்தி, அபாகஸ், கிராமர் அணைத்து பயிற்சி வகுப்பிற்க்கும் அட்டவணை போட்டு அனுப்பிவிடுவது தவறான பழக்கம். பெற்றோரின் கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிப்பது தவறு.

இதுபோன்ற கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு பதில், நாம் எப்படி நம் சிறு வயதில் நிம்மதியாக தெரு பிள்ளைகளோடு விளையாடித் திரிந்தோமோ அதேபோல் அவர்களையும் அனுபவிக்க விடவேண்டும். நம் சொந்த மண்ணிற்குச் சென்று அவர்களின் தாத்தா பாட்டிகளுடனும், உறவினர்களுடனும் விளையாடி மகிழட்டும்.

அப்படி உறவினர்கள் வீட்டிற்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ள பெற்றோர்கள், இந்த விடுமுறையில் அவர்களுடன் சேர்ந்து வரைவது, பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் விளையாடுவது, மரம் நடுவது, காய்கறி செடிகள் நடுவது, சிறு சிறு கைவேலைப் பொருட்கள் செய்வது போன்ற செயல்கள் மூலம் அவர்களின் எண்ணத்திற்கும் மதிப்பளித்து அவர்களுக்கு பிடித்தமான செயல்களை செய்தும் விடுமுறையை பயனுள்ள முறையில் குழந்தைகளுடன் அனுபவிக்கலாம். குடும்பத்துடன் சேர்ந்து சிறிய சுற்றுலா போன்றவைகளுக்குச் சென்று வந்தால் அவர்கள் மனம் மட்டும் இல்லாமல் நாமும் புத்துணர்வு பெறுவோம்.

குழந்தைகள், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும்போது தான் `என்டார்பின்' என்ற ரசாயனம் உடலில் அதிகமாக சுரக்கும். இந்த ஹோர்மோன் தான் வலி நிவாரணிபோல் செயல்பட்டு மூளையை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மூளையின் அறிவுத்திறன் அதிகரிக்கும்!

வாழ்வில் கல்வியும், பணமும் மட்டும் எல்லாவற்றையும் தந்துவிடாது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி போன்ற உறவுகளின் அன்பிலும், பாசத்திலும் திளைக்கட்டும். நகரத்து வாழ்கையின் நெரிசலிலிருந்து சிறிது நாட்கள் அவர்கள் மூளை இளைப்பாரட்டும். இப்படி இல்லங்களில் வளர்க்கப்படும் பிள்ளைகள் நாளை அன்பிற்கும் பாசத்திற்கும் தான் முதல் இடம் கொடுக்கும். பெற்றோர்களுக்கு எது சிறந்த முதியோர் இல்லம் என்று தேடாது.
...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,469
Likes
148,286
Location
Madurai
#2
Perfect Thalaiyangam Kaa.. Hi 5 Cover Pic மங்களகரமா இருக்கு :) e-Mag Came out very Well.. Cheers Contributors :)அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Thanks illavarasi, Tamizh puthandu vazthukkal. As usual kallakkal thalayangam. yes. indha kala kuzhandhaigal edhayellam izhakkirargalnu azhaga solli irukeenga. Thalayangathin Mudivurai arumayana punch. :thumbsup:thumbsup:thumbsup:thumbsup.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#4
வழக்கம்போல யோசிக்க வைக்கும் அசத்தலான தலையங்கம்...

இந்த சம்மர் கிளாஸ் எதுக்கு...? நிஜமாவே பிள்ளைகள் அவங்க விருப்பதோட தான் போறாங்களா...? இல்லே பெற்றோர்களின் விருப்பம் அவர்கள் மேல் திணிக்கப்படுதா..? இதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள் தான்..!

இப்படியே பிள்ளைகளை நான்கு சுவருக்குள் அடக்கி ஒடுக்கி... பின்வரும் நாட்களில் அவர்கள் ஒரு இயந்திரமாகவே மாறி விடுகிறார்கள்... அன்பு, பண்பு, பாசம் எல்லாமே தொலைந்து போகுது... இதெல்லாம் எங்கே போய் முடியுமோ...!
 
Joined
Mar 14, 2016
Messages
61
Likes
279
Location
Palani
#5
பெண்மை குடும்பத்திற்கு,

நன்றி. நான் பெண்மையில் சேர்ந்தது மிகச் சமீபத்தில் தான். இருப்பினும் என் கட்டுரை (Finger Puppets with your kids) இந்த மாத மின்-இதழில் வெளியானதைப் பார்க்கும் போது பெண்மை குழு எவ்வளவு பாரபட்சமின்றி பணியாற்றுகின்றனர் என்பது எனக்குப் புலனாகிறது. முதல் முறை எழுத்துக்கள் பிரசுரம் ஆகும் சுகமே அலாதி தான். அதை கொடுத்த பெண்மைக்கு என் மனமார்ந்த நன்றி. @gkarti Thank you so much for tagging..

அடுத்து,
இந்த மின்இதழ் பற்றி ஒரு சில வரிகளாவது சொல்லாவிடில் எனக்கு இன்றைய தினம் முழுவதாக முடிவு பெறப் போவதில்லை. அருமையான, இன்றைய தேதிக்கு மிகவும் அவசியமான தலையங்கம். குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தன்மைகளை ரசிக்காமல், பந்தயக் குதிரைகளை ஓட்டத்திற்கு தயார் செய்வது போல நாம் இருக்கிறோம். dance, vocal, drawing, and you name the course, we have a summer camp for that. today most businesses are based on monetary profits and not much care is given to the littleone's actual improvement. I have seen some parents sending their son/daughter forcefully to vocal music classes as an impact from popular tv shows. But that was not how the way we were brought up sisters. Imagine how we used to wait eagerly for the annual exams to get over and the holidays to begin. With all the cousins assembling at Grandma's house and what a wonderful time we had for the full summer.
Dont you think that we are denying all the small happiness that our children actually deserve? Instead of putting them in summer camps, let us spend some time with our loved ones. after all, our whole world is just them.


Love,
Priya Kathirvel @madhuksharaa

my on going serial story - காதலன்_நாளை_வருவானோ
 
Last edited:

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#6
Akka epothum pola athiradi thalaiyangam. Penmai kuzhuvinaruku Vazhthukal


En amma appa avanga childhood stories kekum pothu naan feel pani iruken nama childhood onnumay illa....evlo memories iruku parents ku nu.....ipo en childhood la evlo parava illai polavay nu thonuthu ipo iruka generation children pakum pothu......Race horses thana ka ipo kutties la

// நகரத்து வாழ்கையின் நெரிசலிலிருந்து சிறிது நாட்கள் அவர்கள் மூளை இளைப்பாரட்டும் //

Netriyadi illa sister...ipdi thodar azhuthangalala thaan ipo tholvi manapanmai, tharkolai pondra manam varutham tarum nigazhuvugalai seithiyaga padikum soozhnilai....

Sriramanavami, akshaya trithiyai, puthandu nu prosperous ah kalai kati iruku magazine 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#7
ஏப்ரல் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன்.தேர்வு நேர உணவுகள், தமிழ் புத்தாண்டு செய்திகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் 70 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.(பி.கு. எமக்கு தகவல் கொடுத்த, நண்பர் ஜி. கே அவர்களுக்கு நன்றி.)

 

Attachments

Last edited:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#8
Arumaiyaana thalaiyangam. :thumbsup
Kulanthaigalin ilamai kaalam inimaiyaaga amaivathu, petrorgalaana namathu kaigalil thaan irukkirathu.

 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#9
Cover pic. superb :thumbsup. Thalaiyangam semma semma. Romba correct nga. Pullaingala avanga vayasu ku yetho chinna chinna kurumbu settaigal, azhgana vilayattukalodu future la avanga childhood days aa ninachu parkum pothu sweet memories aa irukkanum adhu parents ana namma kaiyla thaan irukku. Articles about Akshaya tritiyai, tamil new year & foods to be taken during exams were too good.

Hats off to the Penmai team :thumbsup :thumbsup
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#10
சூப்பரா சொன்னிங்க இளவரசி..பசங்க என்ன ஆடா மாடா மேய்க்க???நாம் எப்படி வளர்ந்தோமோ நம் குழந்தைகளையும் அப்படியாப்பட்ட சூழ்நிலையில் தான் வளர்க்கணும்..அவர்களக்கும் பாசம் நம்மீது நிச்சயம் குறையாது...தலையங்கம் மிக அருமை...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.