Penmai eMagazine August - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine August 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

இந்தியாவின் 68வது சுதந்திர தினம் இன்னும் இரண்டு நாட்களில். நாம் மருத்துவம், விண்வெளி, பொருளாதாரம், ராணுவம், அணு ஆயுத உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, உணவு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பலவற்றில் முன்னேற்றம் பெற்றிருந்தாலும், லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சம கல்வி, சுற்றுச்சூழல் சீர்கேடு, நதிநீர், வறுமை, தீவிரவாதம் போன்ற பல தலையாய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியாமல் நாம் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறோம். முக்கிய குற்றங்களைத் தடுக்க இந்தியாவில் சட்டங்கள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதில் இன்னமும் பல சிக்கல்களே இருக்கின்றது. தீவிரவாதத்தால் “சுதந்திர தின” விழாவைக்கூடத் நம்மால் தகுந்த பாதுகாப்பின்றி சுதந்திரமாகக் கொண்டாட முடியவில்லை.

"பாரதம்" என்றாலே உயர்ந்த கலாச்சாரம் மேலோங்கியுள்ள நாடு என்று உலகம் முழுவதும் அறியப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த உயர்ந்த கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்குச் சான்று, சமீபத்தில் புதுதில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை, சென்னை ஐ.டி துறை பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம், மற்றும் பெங்களூர் பள்ளி சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாம் சுதந்திரமாக நமது இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுதந்திரத்தை சிலரால் மட்டும் தான் உணர முடிகிறது. பலரும் அடிமைத்தன மனோபாவத்திலிருந்து விடுபடுகிறார்களா என்றால், அது கேள்விக்குறியே. அரசும், ஆட்சியும் அங்கு நடக்கும் நிர்வாகமும் நம்முடையது என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இல்லை. இந்தியக் குடிமகனான ஒவ்வொருவருக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை உள்ளது. ஆனால் கேட்பவர் சிலரே. தேர்தலில் போட்டியிடுபவரை "தலைவா" என்றழைத்துத் தலைவணங்குகிறோமே தவிர, நமக்காகப் பணிசெய்யும் சேவகர் தான் அவர்கள் என்று உணர மறுக்கிறோம்.

பல நூறு ஆண்டுகளாக அன்னியர்களிடம் அடிபட்டுக் கிடந்த நம் இந்தியா, பல நல்ல உள்ளங்களின் உயிர் தியாகத்திற்குப் பின் சுதந்திரம் பெற்று இன்று ஜனநாயக நாடாய் வீறு நடை போட்டு எழுந்து நிற்கிறது. இந்தத் தருணத்தில் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்துத் தியாகிகளுக்கும் நம்முடைய வீர வணக்கத்தினை செலுத்துவோம்.

“அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்”


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Super Moderator team who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,441
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
ஆகஸ்ட் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!graphics-flowers-431623.gif
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#4
Hats off to the team and Penmai for once again bringing gem of an edition of emag. The mammoth effort of the team is always reflected in the magazine as it turns out a super success month after month.

CONGRATULATIONS TEAM AND THANK PENMAI FOR GIVING ALL OF US A CHANCE TO EXHIBIT OUR TALENT
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,441
Likes
140,708
Location
Madras @ சென்னை
#5

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,925
Location
Chennai
#6
Hi Penmai,
August idhazh superb as usual. Naan penmaiku dhinamum vara mudiyamal ponaalum indha idhazh oru chinna thoguppu maadiri anaithu vishayathaiyum thanakkul thinithukkondu ennai aachayapaduthivittadhu.
vaazhthukkal.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
Hi Ilavarasi Mam and Moderators

Last month emagazine was really wonderful and informative. Thank you very much.

The content in the book is very useful. Thank you Friends.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.