Penmai eMagazine August 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine August 2016.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி எந்த பதக்கமும் வாங்கவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர்கள் பற்றி தொடர் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

நமது வீரர்களும், வீராங்கனைகளும் தங்கள் உடலுழைப்பு, ஊக்கம் மற்றும் உயிரை அர்ப்பணித்து விளையாடுகிறார்கள். மிகச் சிறந்த பயிற்சி வசதி, பணம், தட்டிக்கொடுக்கும் சமுதாயம் இல்லாத பட்சத்திலும் முடிந்தவரை விளையாடி வருகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குற்றாலீஸ்வரன் என்ற இளம் நீச்சல் வீரரை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது, அவரது இளவயது சாதனையினால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனால் அவரை ஊக்குவிக்கத் தவறிய அரசாங்கம், அவருக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கவில்லை. இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் தன் சொந்த சேமிப்பைப் பயன்படுத்தி பல போட்டிகளில் பங்கேற்றார். அப்போதும் அவரை ஊக்குவிக்கவில்லை நம் அரசாங்கம். அவர் இந்தத் துறையை விடுத்து இன்று வெளிநாட்டில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இதுபோல் இந்தியாவை விட்டு வெளியேறிய பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள் பல்வேறு துறையில்.

நம் ஊரிலுள்ள குருவிக்காரர்களை ஊக்குவித்தால் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நாம் தான் முதலில் வருவோம் என்று ஒருவர் சொல்லக் கேட்டேன்! இதில் யாரையும் ஏற்றத்தாழ்வு சொல்லாமல் இந்த வாசகத்தைக் கேட்டால் உண்மை பொதிந்து தான் உள்ளது... நாம் தான் ஏற்கவும் மறுக்கிறோம், ஊக்குவிக்கவும் மறுக்கிறோம். எல்லா இடத்திலும், தேர்விலும் அரசியல்... உண்மையான திறமைக்கு இங்கு மதிப்பு இல்லை!

விளையாடுபவர்கள் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கவேண்டும்... அரசாங்கம் தான் மிகவும் சிரத்தை எடுத்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யவேண்டும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழ்... விளையாடுபவர்கள் விளையாட்டை சிரத்தை எடுத்து விளையாடுகிறார்கள்... ஆனால் அரசாங்கம் இங்கு விளையாட்டாக இருக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள நம் அனைத்து இந்திய வீரர்களின் திறமையை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும். வெற்றியும், தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம். இந்தத் தரத்திலேயே அவர்களால் இவ்வளவு சாதிக்க முடிகிறதே என்று நாம் பெருமை கொள்ள வேண்டும். நல்லவை சொல்லி வாழ்த்த முடியவில்லை என்றாலும் அல்லவையாவது சொல்லாமல் இருப்போம்...

அனைவருக்கும் இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்!


...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!


Read it and drop your comments here!!!
 

Attachments

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
morning independence function nadatharadhukku munnaadi, download panni , quick aa read um scan pannittene... girija is a good girl.....

eppodhum pola penmai emag varum dhinam andru konjam kai thuruthuruppu adhigamaagavae irukkiradhu...

dear penmai, superb thalaiangam....
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
girijavoda 5 vazhai reecipies, neeya naana contribution penmai yil vandhu iruppadhu kuriththu mattatra magizhchchi....

i love penmai and its e-mag...:yo::yo:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#5
ஆகஸ்ட் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன்.அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.
எமக்கு தனிப்பட்ட தகவல் கொடுத்த நண்பர் ஜி. கே அவர்களுக்கு நன்றி.

:thumbsup​
 

Attachments

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#7
arumayana thalayangam ilavarasi, romba azhaga soli irukeenga, d/l panniten fulla padichittu varen. Thanks for tagging me karti
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#8
My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

Welcome again!!!


:pray1:​
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#9
வழக்கம் போல மற்றுமொரு சிறந்த தலையங்கம்.
ஒலிம்பிக்கில் விளையாட தேர்வு செய்ய படுவதே, அவர்களிடம் திறமை இருந்த காரணத்தால் தான். பதக்கங்கள் பெறமுடியாததால் அவர்களைக் முழுமையாக குற்றம் சொல்ல முடியாதே.
சமையல் முதல் குழந்தைகள் நலன் வரை, சகல விசயங்களும் அருமை.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#10
உண்மை இளவரசி.........
ஒவ்வொரு ஊரிலும் உள்ள தலைவர்கள் தங்கள் ஊரிலுள்ள திறமைசாலிகளை அடையாளம் கண்டு, முறையான பயிற்சியளித்து வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....:thumbsup.

நன்றி கார்த்தி :).
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.