Penmai eMagazine August 2017

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,986
Likes
16,985
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine August 2017.

உங்களோடு சில நிமிடங்கள்...
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஜிப்மர், ராணுவ மருத்துவக் கல்லூரி போன்ற தனித்தனி தேர்வுகள் அனைத்தையும் களைந்து, நீட் தேர்வு எழுதினாலே இந்தியாவில் உள்ள அத்தனை மருத்துவக் கல்லூரிகளிலும் சேரலாம் என்பது மிக நல்ல ஒழுங்குமுறை.

நம் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் தேசம்... மொழி, உணவுமுறை, உடை, பண்பாடு மற்றும் கல்வி,என்று நாம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒரே கல்வியில் படிக்காத மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை கொடுப்பது அறிவீனத்தின் உச்சம். இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வுகள் நடத்த வேண்டும் என்றால்... முதலில் அவர்களின் பாடத்திட்டங்கள் 1 ஆம் வகுப்பில் இருந்தோ அல்லது 6 ஆம் வகுப்பில் இருந்தோ இந்தியா முழுவதும் சமச்சீரான கல்விக்கொள்கையை கடைபிடித்து, அனைவரின் கல்வித் தரத்தையும் சமமாக்கிக் கொண்டு பிறகுதான் தேர்வுகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.

நீட் தேர்வு அறிவித்த நாள் முதல் இன்று வரை, தேர்வு குறித்த குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய அரசின் இந்த நீட் தேர்வினால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மிகக்குறைந்த அளவிலேயே தேர்வுபெற்றனர்.

தொழில்நுட்பக் கோளாறால் நீட் தேர்வுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை, நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவர்களுக்கு கடுமையான சோதனைகள், சட்டையை கிழித்துக்கொண்டுச் சென்ற பரிதாபங்கள்,மாணவிகளில் கம்மல், ஹேர்பின், கொலுசு போன்றவற்றை அணிந்து கொண்டு தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பாஸ்போட் சைஸ் போட்டோ கெடுபிடி, மாற்றி அமைந்த வினாத்தாள்கள் என்றுஅலைந்து திரிந்து, சிரமப்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இவர்களின் சட்டங்கள், விதிமுறைகள் அனைத்தும் இந்த இளம் மாணவர்களிடம் மட்டுமே கடுமையாக திணிக்கப்பட்டது.

மத்திய அரசால் மாநில அரசின் கல்விக்கொள்கை மேல் திணிக்கப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து... நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு தற்காலிகவிலக்கு அளிக்கத் தயார் என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.

மாற்றங்கள் இன்றி முன்னேற முடியாது... மாற்றங்கள் மலரட்டும். ஆனால் மொட்டுக்களின் கனவுகளை போசுக்கிவிட்டல்ல! பள்ளிகளின் தரமான கல்வியை முதலில் உறுதி செய்துவிட்டு! மாற்றத்திற்கு வித்திடுவோம்!

...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#2
ஆகஸ்ட் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


 

Attachments

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
716
Likes
2,015
Location
Chennai
#5
Wonderful design! Contents are very nice! Worth sharing n reading!

Happy to see my Recipes and (blog) write-up!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
அருமையான தலையங்கம். இன்றைய மாணவர்கள் தான், நாளைய நாட்டின் தலைவர்கள் என்பதை அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் உணர வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும் உணர வேண்டும்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#7
பெண்மையின் மின்னிதழை மேலோட்டமாக படித்து பார்த்து விட்டேன்.
வழக்கமான அங்கங்களுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. கலர் புல்லாக பார்க்கவே அழகாக இருக்கிறது. குழலூதும் கண்ணன், எல்லா பக்கத்திலும் sooo cute.
சிறு கதை, சிறப்பு கதை, தொடர் கதை கடைசி பாகம், படிக்கணும்.
முக்கியமான சூப்ப டிப்ஸ் எடை குறைப்பது + உணவு வகைகளை படிக்க வேண்டும். ;)
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
Wonderful editorial message about The Medical entrance Exam NEET! It has reflected the minds of lots of people. Thank you!
 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#9
அருமையான தலையங்களம் இளவரசி :thumbsup.

சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையில் அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், பட்டப்படிப்பு அனுமதி என்பனவற்றில் இனம், மொழி வேறுபாடின்றி மாணவர்களை சரிசமனாக கருத வேண்டும்.

நன்றி கார்த்தி :).
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,135
Likes
14,748
Location
California
#10
Arumaiyaana thalaiyangam. Naan oorukku ponabodhu sila high school students engineeringkum neet thervu vandhidumonnu beedhiyil irukkiraargal. Neet training courses innum graamathu pillaigalukku ettaakaniyaaga ulladhu. Courses are not affordable for people in middle class and below. One taxi driver was talking about the difficulties of getting his daughter into engineering college. College fees itself high , on top of that donations and this and that fees. As once said in a movie," pidungraanunga..... pidungraanunga.... pidungikitte irukkaaanunga" . They are playing on parents emotions of getting a bright future for their son/daughter.

Maybe the protest for this Neet could be a small spark for a deeper education system reform. Our education system has become so commercial, that we forgot it is our right and basic need that should be protected and provided by our government. Hope this doesnt turn out to be another cheap trumpcard played between central and regional politics.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.