Penmai eMagazine December 2014

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai emagazine December 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

வாழ்கையின் இன்பம் மற்றும் துன்பம் இவ்விரண்டு நிலையிலும் வழிநடத்தும் ஒரு மந்திரம் "இதுவும் கடந்து போகும்"... இந்த மந்திரம் கீதையில் கண்ணன் விஜயனுக்குச் சொன்னது. வாழ்கையில் வெற்றிகொள்ள எண்ணம் உள்ள அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வாசகம். இதனை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டால் வாழ்க்கையின் இன்பம் துன்பம் அனைத்தும் சமமாக தெரியும்.

வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் பல மனிதர்களாலும், எதிர்பாரா நிகழ்வுகளாலும் நம் தன்னம்பிக்கை மற்றும் மன அமைதியை இழந்து தளர்ந்து விடுகின்றோம். பூட்டுகள் தயாரிக்கப்படும் போதே அந்த பூட்டுக்களோடு சேர்ந்தே சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை மறந்து விடுகின்றோம்.

தோல்வியே வெற்றிக்கு முதல்படி, மனம் தொல்வியுறும் போதெல்லாம் இந்த மந்திர வாசகம் தோல்வியில் இருந்து மீட்டு வழிநடத்தும். தோல்வி கண்டு துவண்டுவிட வேண்டாம், உடலிலே நோய் ஏற்பட்டாலும் சரி, உள்ளங்களில் பிரிவு ஏற்பட்டாலும் சரி, தோல்வியோடு உறவாடுவோம்.

வெற்றியில் மனம் கர்வம் கொண்டிருக்கும் போதும் இந்த மந்திர வாசகம் நல்வழிப்படுத்தும். நடுவழியில் விட்டுச் செல்லும் தீவினை செயல்களில் இருந்து நம்மை நல்வழிப்படுத்தும். வாழ்கையில் நல்ல மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்களிடம் தாழ்மையாக நடந்து கொள்ள உதவும். தீய மனிதர்களை சந்திக்கும்போதும் மன அமைதியை இழக்காமல் இருக்க முடியும்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும், மனிதர்களும் நமக்கான வாழ்கைப் பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டே செல்கின்றனர். நாம் தான் பல நேரங்களிலும் கவனிக்க மறக்கின்றோம், சில நேரங்களில் கவனித்தாலும் கற்க மறுக்கின்றோம்.

மகிழ்ச்சியோ வருத்தமோ வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை. இதுவும் கடந்து போகும்... மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. இயற்கையின் விதியும் கூட...

தோழமைகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#2
டிசம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். மார்கழி மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.




பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#6
wow hats of to penmai team members given a such good article really i loved it fantasatic way to go :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.