Penmai eMagazine December 2016

Penmai

Administrator
Staff member
#1
Dear friends,

Download Penmai eMagazine here,
Penmai eMagazine December 2016.

இரண்டு மாதங்களாகவே ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது ஒரு சோதனைகள் மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. கறுப்புப்பணம் ஒழிக்க பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததை அடுத்து வங்கியின் வாசலிலும் ATM வாசலிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டு இருக்கின்றனர். பல ATM-களில் பணம் இல்லாத நிலையிலும் மக்கள் அவர்களின் அன்றாட வாழ்கையின் பாதிப்புகளை சகித்துக்கொண்டு நிற்பது மாற்றத்தை நோக்கி மட்டுமே.

நம் மாநிலத்தின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் இறப்பு, அதனைத் தொடர்ந்து அரசியலில் ஏற்படும் மாற்றங்களும் கட்சியினுள் அடுத்து யார் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தப் போகின்றனர் என்ற குழப்பங்கள்.

எந்த அரசியல் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்து, தனக்கென ஒரு குடும்பத்தையும் உருவாக்கி கொள்ளாமல் தமிழக அரசியலில் தனி இடத்தைப் பிடித்து துணிச்சலாக பல நல்நடவடிக்கை எடுத்து தன்னம்பிக்கையோடு எதிர்ப்புகள் பற்றிக் கவலை கொள்ளாமல் தனக்கென கொள்கைகள் அமைத்து நிரந்தர இடத்தை பிடித்தவர். சிலகாலம் வழிதவறி சென்றாலும் பாதை மீண்டு நற்பயணம் சென்றபோது அவரின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பது துரதிஷ்டமே.

இவை ஒருபுறமிருக்க, "வர்தா" புயலின் சீற்றத்தில் நம் தலைநகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 10,000-க்கும் குறைவில்லாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து, பல வீடுகள் புயலின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டு, பல லட்சம் வாகனங்கள் சேதமடைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி உள்ளது. இந்த நிலையில் மக்களிடம் demonetization காரணமாக பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது நடுத்தர குடும்ப மக்களுக்கு பெரும் கவலை அளிக்கும் நிலையே.

மக்கள் ரூ.2,000-திற்கு நாள்தோறும் கால்கடுக்க நிற்கும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் பல முக்கியப் புள்ளிகளிடமிருந்து கோடிக்கணக்கில் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்வது, நம் நாட்டின் ஊழல்வாதிகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு தடையாக இருக்கின்றனர் என்றே காட்டுகிறது. அனைத்திலும் மாற்றத்தை எதிர்ப்பார்த்து மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருகின்றனர்.

பிறக்கும் புதிய வருடம் நல்ல முறையில் பிறக்கட்டும்!


...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Sriramajayam

Registered User
Blogger
#2
டிசம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

gkarti

Super Moderator
Staff member
#3
True that Kaa! Well Written - Editorial.. 'Go Cashless' Nallathan irukku, But Intha Cyclone la Grrr.. December Month Namaku Rasi Ilaiyo.. :(

BTW Xmas Special Magazine, Superb Like! Balls & Santa, Kalakkal :thumbsup Cheers to all the Contributors.. :)

Happiie New Year in Advance Makka.. :whistle:
 

girija chandru

Penman of Penmai
Blogger
#4
Ippo thaan download seidhen... december e-mag.

meeting porene... ippo paidkka mudiyaadhe... sari... nalaikku morning feedback kodukkiren...

thalaiangam superb.....

rendu madhangalaaga, dog padaadha paadu pattu, salary irukku, aana illai ngra nilaimaile.... 18000 4 murai draw seidhu, house owner, provision ellaar kitteyum, atm card ennai paarthu sirikka, cheque leave ellaam design designaa waste aagi, pichchai kaara vaazhkkai vazhndhu kondu irukkiren .....kaari thuppal vaangum en pondra middle class will only suffer.... karuppu panam pidipattadho illayo, gnaan ariyen parabaramae !!! 
#5
மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தியே மற்றுமொரு அருமையான தலையங்கம். :thumbsup
இயற்கை பேரிடர் ஒரு பக்கம், பண நோட்டு விவகாரம் ஒரு பக்கம் என்று தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர் மக்கள். சீக்கிரமே சரியாகும் என்று நம்புவோமாக... :pray1: பிறக்கும் புது வருசம் நல்லதையே கொண்டு வரட்டும்....
 
Last edited:

Sriramajayam

Registered User
Blogger
#6
என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி


மீண்டும் வருக!!!

:pray1:​
 

gowrymohan

Registered User
Blogger
#7
பிறக்கவிருக்கும் புது வருடம் ஊழல்வாதிகள், சுயநலவாதிகளின் மனதில் நல்மாற்றதத்தையும் இயற்கையின் ஒத்துழைப்பையும் தரும் விதமாக மலரும் என நம்பிக்கையுடன் இருப்போம்.

நடப்பைச் சொல்லும் தலையங்கம். அருமை இளவரசி :thumbsup.
 

girija chandru

Penman of Penmai
Blogger
#8
அனைத்து பக்கங்களும் அருமை, அழகு, நல்ல விஷயங்களை குறித்து கொள்ளும்படியான இதழாக அமைந்து இருக்கிறது டிசம்பர் இதழ் !!!

நல்வாழ்த்துக்கள் !!! பெண்மை குழுமம் !!

கிரிஜா வின் ஒரு சமயல் குறிப்பு, மற்றும் நீயா நானா இந்த இதழ் பெண்மை யில் வந்து இருக்கிறது.

(கிரிஜாவின் மனம் :-
====================
ஏனோ இந்த டிசம்பர் இதழில் கிரிஜா சரியான முறையில் பங்கெடுக்காதது போன்ற ஒரு உணர்வு...பரவா இல்லை..... முனைவர் பட்டம் தேர்வுகள் (Ph.D English Exams - novmber 23rd - research methodology,25th - approaches to literature and 28th - fiction (special paper) bahrathiyar university...) காரணம் ஆகலாம். பள்ளியின் வேலை பளுவும் காரணம் ஆகலாம்.... அடுத்த இதழ் பார்த்துக் கொள்வோம்.... இன்னும் சிறப்பாக பங்கெடுப்போம் என்று உறுதி கொள்ளணும் கிரிஜா..... உருளைக்கிழங்கு ரெசிப்பீஸ் எழுதியது உகந்தது ஆகவில்லை போலும்.... அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது kaaranam ஆகி இருக்கலாம். .... ஒதுக்கப் பட்டதாய் நினைக்காதே ...

பாதங்கள் பயணிக்க தூரங்கள் அதிகம் உண்டு..... நல்லதை மட்டுமே நினை... )

May the coming issues of our Penmai e-mag glow in its loveliest blossoms !!!!:pray1::yo:
 

Aruna.K

Penman of Penmai
Blogger
#9
அன்பு பெண்மை வாசகர்களுக்கு,
அருமையான மாத இதழ். இதில் என் பங்கும் சிறிதளவு இருக்கிறது என்று நிலைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய தினம் என்னைப் பொருத்தவரையில் இனிமையாக உதயமாயிருக்கிறது.
என் "நீயா நானா" கருத்தையும் , உருளை ரெசிப்பிகளையும் சேர்த்துக் கொண்டதற்கு பெண்மைக்கு நன்றி.
அடுத்த மாதத்திற்கான தலைப்பு - மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், சமூக பொறுப்புகளும் கூடிய தளமாக பெண்மையை கொண்டு சொல்லும் உங்கள் கடமையுணர்வு பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்.
என் பங்களிப்பு நிட்சயமாகத் தொடரும்.
 

Aruna.K

Penman of Penmai
Blogger
#10
அன்பு பெண்மை வாசகர்களுக்கு,
அருமையான மாத இதழ். இதில் என் பங்கும் சிறிதளவு இருக்கிறது என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய தினம் என்னைப் பொருத்தவரையில் இனிமையாக உதயமாயிருக்கிறது.
என் "நீயா நானா" கருத்தையும் , உருளை ரெசிப்பிகளையும் சேர்த்துக் கொண்டதற்கு பெண்மைக்கு நன்றி.
அடுத்த மாதத்திற்கான தலைப்பு - மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், சமூக பொறுப்புகளும் கூடிய தளமாக பெண்மையை கொண்டு சொல்லும் உங்கள் கடமையுணர்வு பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள்.
என் பங்களிப்பு நிட்சயமாகத் தொடரும்.
 

rosei

Penman of Penmai
Blogger
#13
பொருத்தமான ஆசிரியர் உரை.

மின்னிதழ் எப்போதும் போலவே அருமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நான் இனித்தான் வாசிக்க வேண்டும் .

கார்த்திம்மா
:hug::hug:
 
#15
as usual arumayana thalayangam illavarasi. vardha puyal nale pona net connection day before yesterday than sari achu. appuram konjam busynale dec madha penmai mag ippo than d/l pandren. thanks for tagging me karti. pirakkum pudhu varudam nalla padiya irukka iraivanai venduvom.
 

PriyagauthamH

Registered User
Blogger
#17
As usual a fantastic magazine covering a variety of topics... Congratulations Penmai team...

On that note - I remember Penmai did sapling plantation before nu en nyabagam... I think it is time for that now in Chennai esp with the loss of so many trees... Don't mistake me... Neenga ungalaal mudindhadhai eppodhum seivadhaal, enaku thondriyadhai mention pannen...

Keep up the great work Team Penmai and Wishing and Hoping for many more wonderful magazine editions this year too...:thumbsup:thumbsup
 

Important Announcements!