Penmai eMagazine February 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine February 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,

காதல்… இந்த ஒற்றை வார்த்தை யுகங்கள் பல கடந்து இன்றும் வாழ்வது உண்மை அன்பிற்காக மட்டும் தான். காதல் தீண்டாத இடம் இல்லை எனலாம், ஆனால் அதன் உண்மை தன்மையே அதனை நிலைபெற வைக்கிறது.

ஆதாம் ஏவாள் அன்பும் காதல் தான்...
அரங்கன் மீது ஆண்டாள் கொண்டதும் காதல் தான்...
கண்ணன் மீது ராதை, மீரா கொண்டதும் காதல் தான்...
அய்யன் சிவன் மீது அப்பர் கொண்டதும் காதல் தான்...
மகனின் சிறு காயத்தை கண்டு துடிக்கும் அன்பும் காதல் தான்...
மகளின் பிரிவில் அப்பாக்கள் விடும் சிறு கண்ணீரும் காதல் தான்...
இணை இறந்தால் மரணத்தை முத்தமிட துடிக்கும் அன்றில் பறவையின் அன்பும் காதல் தான்...
ஒவ்வொரு முறை இந்தியா வெல்லும் போதும் மயிர் சிலிர்க்கின்றோமே அதுவும் காதல் தான்... இப்படியே காதல், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, காதலன், காதலி, கணவன், மனைவி, தோழன், தோழி, காக்கை, குருவி என்று பல பரிணாமங்களில் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கு எப்படி இருந்தாலும், உண்மையான காதல் மட்டும் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது.

ஒருவர் மற்றவரின் குறைகளை மறந்து, உறுதியுடன் இறுதி வரை நேசிப்பது, மற்றவரின் உரிமையை மதித்து நடப்பது. இதுவே உண்மைக் காதல். இவை இல்லாக் காதலே, பழிவாங்கியோ, அவமானப்படுத்தியோ காதலை நித்தம் மரணிக்க வைக்கிறது.

நாம் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை. மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த உயர்ந்த குடி நம் தமிழ் குடி. ஆம், காதலுக்கும் ஒழுக்கம் வகுத்தான் நம் தமிழன்... இது பண்பாட்டின் சிகரமன்றி வேறென்ன!

காதலோடு ஒவ்வொரு நொடியும் இவ்வையத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.



Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathisrini akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
இந்த மாதம் penmai e-magazine வெகு அருமை ... நன்றி
 

Amrudha

Friends's of Penmai
Joined
Aug 4, 2014
Messages
378
Likes
1,204
Location
Madras
#4
தலையங்கம் அருமை மேடம். வண்ண வண்ணப் பக்கங்கள் .. நன்றி

படித்ததும் கருத்திட வருகிறேன் .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,721
Location
Madras @ சென்னை
#6
[TABLE="width: 500, align: center"]
[TR]
[TD="align: center"]
[/TD]
[TD]
பெப்ரவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். காதல் மற்றும் காரடையான் நோன்பு சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.



பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.
[/TD]
[TD="align: center"]
[/TD]
[/TR]
[/TABLE]

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.