Penmai eMagazine February 2016

Penmai

Administrator
Staff member
#21
லக்ஷ்மியின் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு மட்டுமே சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்ற இழிநிலைக்கு நம் சமூகம் தரம் தாழ்ந்துவிட்டதை நினைக்கும் போது நெஞ்சு குமுறுகிறது அக்கா.
செழுமைக்கு தாங்கள் தான் காரணம் என்று பெருமை பேசும் அரசியல் தலைவர்கள் மக்களின் சிறுமைக்கு பொறுப்பேற்க மறுத்து தட்டி கழிப்பதை பார்த்து நமக்கு பழகிவிட்டது.

எப்போதும் போல் இந்த மாதத்தின் தலையங்கமும் விழிப்புணர்வை தூண்டுவதாக இருக்கிறது
.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி விமலா! லக்ஷ்மியின் ஆசிர்வாதம் பெற்றவர்கள் சரஸ்வதி கூடத்திற்குள் நுழைய மட்டுமே முடியும். அருள் கிடைப்பது அரிதே! அவளின் கடைக்கண் பார்வையின்றி கிடைக்காதல்லவா!அருமையான தலையங்கம் இளவரசி.........பெண்களின் போராட்டத்துக்கு இதான் முடிவு என்று சொல்லாமல் சொல்லியது போல் அரசாங்கமும் நீதி மன்றங்களின் தீர்ப்பும் இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறதே...மனுவை தள்ளுபடி செய்த நீதி மன்றம்..கல்லூரி நிர்வாகம் ஊமையா இருக்கு...ஏழை பெற்றோர்கள்...என்னதான் நடந்தது என்று இன்னும் நமக்கு தெரியவில்லை...ஒரு புறம் துதி பாடும் மந்திரிகள்...பேசாத முதல் அமைச்சர்..யாரிடம் முறையிடுவது???
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி செல்வி! முறையான வழிகாட்டுதல் இல்லாத அரசும் அரசாங்கமும் இருக்கும் வரை இது போல் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ஆனால் மக்களை எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது மாட்டிக்கொண்டு பெரும் அவமானம் ஏற்படும். (இப்போது அனிதா அவர்களின் நடவடிக்கை போல!)
 

Penmai

Administrator
Staff member
#22
arumayana thalayangam illavarasi,vizhipunarvai erpaduthuvadhu pola irukku.thirudana [arthu thirundha vitta thiruttai ozhikka mudiyadhu enpadhai pola inthe madhiri gunam padaithavargal thirundhinal than nam nattai kappatra mudiyum.panam pathum seiyum enbadhu pola needhiyaye vills\ai koduthu vangi vidugirargal. endru marum indha nilai?????
Thanks for you comment kothai sister. Yes they need to be changed by themselves or else they will caught by public for their shameful acts.

அருமையான தலையங்கம்

கற்றது கையளவு

கல்லாதது உலகளவு தான்

கல்வி விற்பனை பொருளாக இருக்கும் வரையில்
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி. :)

Hey hey adutha magazine out...

Super writeing ka... :thumbsup elarudaiya manadhilum irukira kelvingal avai..!! Edhu elam epo marumo theriyala!! :pray1:

Wowieee... Enoda review um vandhuruku.. adhuku special thanks... Karti sonna mdiri cover pic arumai... Adhoda ella page layum BG color n images attagasama irunduchu... :cheer: Congrats to other contributors too... :cool:

TGT karti ponne! :)
Welcome and Thanks for your comments!
 

Penmai

Administrator
Staff member
#23
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி தேன்மொழி. எது மனிதனுக்கு நிலையான இன்பத்தை கொடுக்கும் என்பதை அறியாமல் மதுவில் மூழ்கி கிடக்கிறது ஒரு கூட்டம் அதை கட்டுப்பாட்டில் வைக்க தவறிய அரசும் அதற்க்கு ஆதரித்து காவலார்கள் துணையோடு ஆதரிக்கும் வரை இந்த நிலை மாறாது!

எவ்வளவு அறிவார்ந்த, பண்பட்ட தமிழ் குடி நம்முடையது! இப்படி குடிக்கு அடிமையாகி அறிவை மழுங்கி கொண்டுள்ளது. ஏதேனும் நல்ல மாற்றம் ஏற்பட்டு கல்வியின் தரம் உயர்ந்தப்படவேண்டும். :)


வழக்கம்போல அருமையான நெத்தியடி தலையங்கம்... சூப்பர் இளவரசி க்கா.... :thumbsup
Tag செய்ததற்கும் நன்றி கார்த்தி... :cheer:

நம் நாட்டில் கல்வி நிலையங்களை விட, டாஸ்மாக் கடைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சொல்லி மாளாது...! பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இடிந்து போன கட்டிடங்களோடு சரியான மின்வசதி, இன்னபிற வசதிகள் இன்றி இருட்டில் தவிக்க... டாஸ்மாக் கடைகளோ பட்டொளி வீசி பாரினில் ஜொலிக்கிறது...! இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது...! அதுசரி, அறிவை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் என்றைக்கு தனியார் வசம் வந்ததோ, அன்றே அதன் பெருமையை இழந்து மண்ணாகி விட்டது. இன்று அது படிப்பின் அருமையும் பெருமையும் தெரியாத அமைச்சர்களின் கையிலும், மதுபானஆலை உரிமையாளர்களின் கையில் தான் உள்ளது... அதனால் தான் அந்த தள்ளாட்டம்...!

தருமபுரியில் மாணவிகள் மூன்று பேர் பேருந்தில் வைத்து கொளுத்தப்பட்டார்களே ... கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பல குழந்தைகள் மாண்டார்களே...! அதெல்லாம் ஒரு கனவை போல நாம் மறந்து விடவில்லையா...!! அதை போல இந்த சித்த மருத்துவ கல்லூரி மாணவிகளையும் மறந்து விடுவோம்... நமக்கு தேவை நீதியா என்ன...?? தேர்தலின் போது, அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் ஐந்நூறோ ஆயிரமோ தானே..! அது கிடைக்கும் வரையில் நம் மக்களுக்கு பிடித்த அம்னீஷியா நோய் குணமே ஆகாது...!

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கட்சியிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு, நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க முடியாமல் வாய்மூடி இருப்பதே மக்களின் வாடிக்கையாகி போன பின்பு, கல்வி நிறுவங்களின் தரம் எப்படி இருந்தால் தான் என்ன...? எத்தனை மாணவிகள்/மாணவர்கள் இறந்தால் தான் என்ன..?

இந்த மாத eMagazineம் கலக்கல்... எல்லா பகுதிகளுமே நன்றாக இருக்கிறது.... :thumbsup
 
#25


Welcome Durgaramesh. :) Did she saw her art in the magazine?? Hope she enjoyed the moment!
My daughter has soooooo enjoying the moment she tell I post lots of drawings in kids zone my second daughter and my son challenge to my first daughter my drawing also come in Penmai hope they also try again thank u to all Penmai and Penmai friends.Happy friends
 

stulip0110

Registered User
Blogger
#26
கலக்கல் மேகசின் .....


டாக் செய்ததிற்கு நன்றி கார்த்தி .....


சுப்பர் தலையங்கம் அண்ட் நீயா நானா பகுதி
மின் இதழும் மெருகு ஏறி கொண்டே போகிது ...
தொடர்ந்து இது போல இன்னும் சிறப்பாக வர வாழ்துக்கள்
 

Penmai

Administrator
Staff member
#28
arumaiyaana thalaiangam

vedhanaigalai mattumae sumakkiroam adikkadi....

vishayangal illaamal schools, colleges edharku? yerudhae yaarai emaatra kattidangal??/ uyir ballikku yaar solvaar uththaravaadham??/

feb emag was superb, as usual....

orae oru varuththam... griija alpaththirku.... girija's name is not anywhere.... (dec jan romba kammi posts.... january lae kooda girij, un peru vandhadhe maa.. have content....at heart...)
adhu ennavo, emag eduththaal, mudhalil fullaa puratti, namme peru vandhu irukkaa nu paarkkaradhu pazhakkamaa poyvittadhu...

congrats to all the superb contributors...!!!

movie review was good... recipies are great !!

innum menmelum pudhiya merugugaludan penmai emag milira, annai bagavathy arul puriyattum !!
Thanks for your valuable comments. :)
 

Penmai

Administrator
Staff member
#29
hai gkarti
thanks for tagging me.
இறந்த பின்னும் கூறு போடுகிறார்கள் எவ்வளவு உண்மை, எவ்வளவு கொடுமை, இறந்த பின்னும் நிம்மதி இல்லை. நேற்று தொலை காட்சியில் இறந்த மாணவியின் உடலை தோண்டி எடுத்து, கொண்டு செல்வதை பார்த்த பொழுது, என் மனதில் ஓடிய எண்ணங்களை,உங்கள் எழுத்துக்களில் படித்த பொழுது மனம் கனத்து விட்டது.
உயிருடன் இருக்கும் பொது ஏற்ற தாழ்வுகளை காட்டி, பிஞ்சுகளின் மனதை கூறு போடுகிறார்கள்.

Education board should be autonomous body and the education should be compulsory to all the children. No politician whatsoever his power should not be able to interfere in the education system. Then only the kumbakkonam or fire on the bus or the vemula case in andhra would repeat, or this kallakurichi will ever repeat.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி. பிரேதப் பரிசோதனையிலும் தெரிந்து செய்யும் தவறுகள். இங்கே கருவறை முதல் கல்லறை வரை அனைத்திலும் ஆளும் வர்கத்தின் கோரப்பிடி!

மாற்றத்தை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கிறோம்!.
 

Penmai

Administrator
Staff member
#30
அருமையான தலையங்கம் இளவரசி @Penmai

எப்போதும் போல இந்த மாத இதழும் நன்றாக வந்துள்ளது. வர வர மாத இதழ்கள் மெருகு கூடிக்கொண்டே போகிறது.

Kudos to all Penmai Support Team:thumbsup:thumbsup
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி Chitra sister. :)

வழக்கம்போல் தலையங்கம் நச்.....அருமை இளவரசி...
கல்லூரி பெண்களின் நிலை படிக்க கொடுமை..முடிவு??

இந்த மாத மின்இதழ் சுபெர்ப்..என் சமையல் குறிப்புக்கள் இடம் தந்தமைக்கு நன்றி பெண்மை குழு...
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி உமா. :)
 

Penmai

Administrator
Staff member
#31
பெப்ரவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். மாசி மகம் செய்திகள், நாட்டுக் காய்கறிகள் சமையல் குறிப்புகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் விஸ்வநாதன். :)

As usual sl one ka :)

Thalaiyangam aathangama iruku :(

Poruthu poruthu iruntha eri mithikka than seiranga... Innum election la ennalam pakka kaathutu irukomo therila ka...

Congrats whole penmai team for the effort :thumbsup
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி sriju. உண்மை தான் இப்போதே ஆரம்பித்துவிட்டது தேர்தல் களம்! மக்களின் கையிலே அனைத்தும் உள்ளது, அனால் தேர்ந்தெடுக்க கூட நல்ல தலைமை இல்லையே!
 

Penmai

Administrator
Staff member
#32
அருமையான தலையங்கம் இளவரசி
tag பண்ணியதற்கு நன்றி கார்த்தி

என்று கல்வி தனியார் மாயம் போனதோ அன்றே அது ஒரு வியாபாரம் ஆக பார்க்க படுகிறது.அமைச்சர்களும் சாராய சாம்ராஜியத்தை சேர்ந்தவர்களால் கல்லூரி நடத்தப்படும் கொடுமை தமிழ் நாட்டில் மட்டுமே.
தரமே இல்லாதவர்களால் நடத்தப்படும் கல்வி கூடங்களில் என்ன தரத்தை எதிர் பார்க்க முடியும்.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ஸ்ரீமதி. உண்மை தான் தரம் மட்டும் ஒழுக்கம் இல்லாதவர்களிடம் இருந்து என்ன தரமான கல்வி வழங்கப்படும்.

TFT Karti... Emagazine is looking great... As usual thought provoking editorial Ila mam...
Thanks for your valuable comment Priya. :)
 

Penmai

Administrator
Staff member
#33
எப்பவும் போல சிறப்பான மின்இதழ் பெண்மை டீம் ..

அருமையான தலையங்கம் இளவரசி சிஸ் .கல்வி நிறுவனங்கள் பெருகி கல்வியின் தரம் குறைந்து வருகிறது ..பணம் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக கல்வி நிறுவனகளை தேர்ந்தெடுத்தது தான் கொடுமையிலும் கொடுமை ..இதற்கெல்லாம் எப்பொழுது விடிவுகாலம் வருமோ..

tag செய்ததற்கு நன்றி கார்த்திகா ..
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி உமா. வளர்ந்த நாடுகளை போல கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து கல்வியை அரசுடமையாக்கப் பட வேண்டும்! ஆனால் விடியல்? :)
 

Penmai

Administrator
Staff member
#34
My daughter has soooooo enjoying the moment she tell I post lots of drawings in kids zone my second daughter and my son challenge to my first daughter my drawing also come in Penmai hope they also try again thank u to all Penmai and Penmai friends.Happy friends
So happy to know about your kids happiness and eagerness. Sure... ask them draw and share here, it will come in the future magazine. :) Kudoos to dear kutties talen. :)
 

Penmai

Administrator
Staff member
#35
கலக்கல் மேகசின் .....


டாக் செய்ததிற்கு நன்றி கார்த்தி .....


சுப்பர் தலையங்கம் அண்ட் நீயா நானா பகுதி
மின் இதழும் மெருகு ஏறி கொண்டே போகிது ...
தொடர்ந்து இது போல இன்னும் சிறப்பாக வர வாழ்துக்கள்
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி Swapna.

thanks for the magazine
Welcome [MENTION=119428]rni123[/MENTION]. :)