Penmai eMagazine January 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine January 2016.

உங்களோடு சில நிமிடங்கள்,

ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. விலங்கு உரிமை மற்றும் பாதுக்காப்பு என்ற பெயரால், தடை கோரும் அமைப்புகளுக்கு இந்த கிராமப்புற விளையாட்டைப் பற்றியும் தெரியாது, தமிழர்களைப் பற்றியும் தெரியாது, தமிழ் கலாச்சாரம் பற்றியும் தெரியாது. மேலும் இது போன்ற விளையாட்டைத் தடை செய்யக் கோருவதில், நம் நாட்டின காளை வகைகளை அழிக்கும் உள்நோக்கம் மட்டுமே இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ போன்ற பல வெளிநாடுகளில் காளைப் போர் முக்கிய விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் முற்றிலும் வேறுபட்டவை.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, விலங்கு வதை என்ற பெயரில் தடை கோருவது தவறு, அப்படி விலங்கு வதை என்றால் தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதையும், இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கு அவை அடிமாடாக வண்டிகளில் தலைகீழாகக் கூட தொங்கவிட்டுச் செல்வதை தான் முதலில் தடுக்க வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படுவதானால் அவற்றிற்கு குழு ஏற்படுத்தி கட்டுப்பாடுகள் விதித்து கலாச்சாரம் காக்கவேண்டுமே தவிர இப்படி அழிக்கக் கூடாது.

கபடியில் ஒரு மனிதனை பலர் சேர்ந்து பிடிக்க முயற்சிப்பார்கள். இதனை வதை என்று நாம் சொல்ல முடியுமா.? கபடி எப்படி விளையாட்டோ, அதேபோல்தான் ஜல்லிக்கட்டும். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் மரபோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு.

ஏன் இவர்கள் குதிரைப் பந்தயம், யானைகள் வைத்து விளையாடும் விளையாட்டிற்கெல்லாம் தடைகள் வாங்காமல் இருகின்றனர்? ஜல்லிக்கட்டு போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை தடை செய்வதன் மூலம் காளைகளின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கம் நாளடைவில் குறைந்து நம் உள்நாட்டின் பால் தேவைக்கு அந்நிய நாட்டில் கையேந்த வைக்க வேண்டும். இதைத் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!

 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,460
Likes
148,283
Location
Madurai
#2
//ஜல்லிக்கட்டு போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை தடை செய்வதன் மூலம் காளைகளின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கம் நாளடைவில் குறைந்து நம் உள்நாட்டின் பால் தேவைக்கு அந்நிய நாட்டில் கையேந்த வைக்க வேண்டும். இதைத் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.//

அனைத்தும் ராஜதந்திரம் Kaa.. Well Said.. Perfect Write Up!

Design 's Awesome.. Yup I loved that BG for "Recipes" :) Greato! Thanks for it!

Contribute Panna Makkalku Nandrigal :grouphug:
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#4
Super e - magazine!!! Nice write up for jallikatu ka.... kudos for all the members who hav contributed... :thumbsup :) thanks for selecting me too... :) ;)
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#5
அசத்தலான தலையங்கம்...கவர் பேஜ் ரொம்ப நல்லா இருக்கு மின்இதழில்...
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#6
super thalayangam,asathalana jallikkatu patriya vilakkam. arumai. congrats to penmai team.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#7
சமீபமாக சமூக வலை தளங்களிலும் , ஊடகங்களிலும் ஜல்லிகட்டை பற்றியே அலசப்பட்டதால், நானும், சிம்பு பாடல் சர்ச்சைக்கு பிறகு இவர்களுக்கு ஏதோ ஒரு பரபரப்பான தீனி கிடைத்ததாகவே நினைத்திருந்தேன். அதுவும் "தமிழன்" "தமிழினம்" என்று தன்மானத்தை சீண்டும் வார்த்தைகள் இருந்ததால், இதுவும் ஒரு தமிழக அரசியல் நாடகமோ என்ற சந்தேக கண் கொண்டு தான் என்னால் பார்க்க முடிந்தது......


இந்த தலையங்கத்தை படித்த பிறகு, எது தான் உண்மை என்று இணையத்தில் சிறிது தேடிப்பார்த்தேன். ஜல்லிக்கட்டும் , காளைகளும் நம் கலாச்சாரத்தை தாண்டி நம் வாழ்வியலோடு எந்தளவுக்கு பிண்ணிப்பிணைந்து உள்ளது, அதோடு ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தால் அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் சிறிதளவு அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் பின்னணியில் உள்ள அரசியல் + பன்னாட்டு நிறுவனங்களின் நாடகமும், இவர்கள் விடும் முதலை கண்ணீரும் தெளிவாகவே உணர முடிகிறது.


இது போன்றதொரு விழிப்புணர்வு செய்தியை( வழக்கம் போல்) தலையங்கமாக அமைத்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.


மேலும் இதைப்பற்றி உண்மையை தெளிவுபடுத்தும் காணொளியை இங்குள்ள தோழமைகளுடன் பகிர்கிறேன்.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#9
ஜனவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். உழவர் திருநாள் தைப்பூசம் செய்திகள், மழை மற்றும் குளிர்கால உணவுகள் டிப்ஸ், மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


(பி.கு. எமக்கு தகவல் கொடுத்த, நண்பர் ஜி. கே அவர்களுக்கு நன்றி.)
 

Attachments

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#10
nalla thalaiyangam.. rrasiththaen.

en pudhiya laptop il nan mudhan mudhalil indru download seidhadhu jan penmai e-magazine. (indru thaan laptop vaanginen.... kuzhandhai mandhu...pudhiyadhai thottu thottu agamagizhgiradhu...spiritual thoughts endru oru pudhu thread indra naalin gnabgamaga thuvanginen.

indru download siedha emag il,mudhalil giirja ehdai padippaal?right ! right !!! thalaiangam... padichuttaenae.... superb superb...
aduthadhaa alpam girija edhai theduum????? right... right !!! december,january rendu maasamaaga penmai kkae varalaiyae.....
en writeup onnum irukkaadhae nu kavalaiyoda thedinaal...........

ha ha ha, girijavoda karpooravalli bajji irukku iruukku !!!!!! delighted.... rendu maasama avvalavu ffrustration,prachnaigal,,,,,health... etc., now,girija is BACk!!!! expect lots of kadis,posts.... happpy girijs is happy !!!

hats off to penmai emagazine...... merugu kooduggiradhu...!!! kannu padama irukka thrishti suththi podaren....!!!!!:pray1::pray1::yo::typing:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.