Penmai eMagazine January 2017!

Penmai

Administrator
Staff member
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine January 2017.

ஒரு இனத்தை அழிக்க போர்செய்து அழிப்பதுதான் வழி! ஆனால் அந்த இனத்தை அடிமைப்படுத்த அவர்களின் கல்விமுறை, கலாச்சாரம், நம்பிக்கை போன்றவற்றை அழிப்பதே! ஆம்... நம்மை அடிமைப்படுத்தி நம் தேவைகள் ஒவ்வொன்றிற்கும் அந்நியர்களிடமும் அந்நிய நிறுவனங்களிடமும் கையேந்துகின்றோம்! நம்மைப் பொருளாதார அடிமைகளாகவே வைத்துள்ளனர்!

நம் நாட்டில் கிடைத்த வேப்பங்குச்சியில் பல்துலக்கி, மண் மற்றும் இரும்புப் பாத்திரங்களில் சமைத்து, கேழ்வரகு கூழ் குடித்து, கைக்குத்தல் அரிசியில் சமைத்து, வாழை இலை மற்றும் ஆல இலையில் சாப்பிட்டு, காலார நடந்து, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கோ, கோயிலிற்கோ சென்று வந்து எட்டு மணிக்கெல்லாம் தூங்கி, வைகறையில் வீட்டுத் தொழுவத்தில் பால் கறந்து, அதை உண்டு வாழும் வரை நம் ஆரோக்கியமும், நம் வாழ்கை முறையும் நன்றாகத் தான் இருந்தது.

அந்நிய நிறுவனத்தின் பொருட்களை விற்க முடியாமல் நம் நாட்டின் எல்லா நல்லவைகளையும் களைந்துவிட்டு, அல்லவைகளையெல்லாம் திணித்து விட்டனர்! வேப்பங்குச்சி இடத்தை பற்பசை பிடித்தவுடன் வலுவிழந்து போனது நம் ஈறுகள் மட்டுமல்ல... நம் வேர்களும் தான்! மண் சட்டியிலும், இரும்பு மற்றும் உலோகப் பாத்திரத்தில் சமைத்தவரை நம் உடலுக்கு இயற்கையாவே கிடைத்த இரும்பு மற்றும் இதரச் சத்துக்கள் போய் non-stick தவாவினால் வந்தது ஆரோக்கியக் கேடுதான். கேழ்வரகுக் கூழின் இடத்தை ஓட்ஸ் பிடித்ததும், கைக்குத்தல் அரிசியை பாஸ்மதி பிடித்ததும், நீரிழிவு நோய்க்கான காரணம்! இங்கே அனைத்துமே வணிகமயமே! பற்பசையை நமக்குக் கொடுத்துவிட்டு, இன்று மாட்டுச்சாண வரட்டியையும், வேப்பங்குச்சியையும் online-ல் வர்த்தகம் செய்கின்றனர்! பாட்டி, குச்சியில் செய்த இலைத் தட்டை கணினியில் வடிவமைத்து விற்கின்றனர்! நாம் நம் பண்பாட்டை மறந்து பிளாஸ்டிக் குடுவையிலும், தட்டுகளிலும் உண்டு கேன்சரை வரவழைத்துக்கொண்டு, அதனைப் போக்க அவர்கள் உற்பத்தி செய்யும் பல கோடி மதிப்பிலான மருந்துகளை உண்டு நம் உடம்பையும் நம் சந்ததிகளையும் அழிகின்றோம்.

ஜீவகாருண்யம் பற்றி நமக்கு PETA கற்றுத்தந்து தான் நமக்கு நம் விலங்குகளுக்கான இரக்கம் பிறக்கப்போவதில்லை, அது நம் பண்பாட்டிலே ஊறி உள்ளது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே ஜீவகாருண்யம்! மாட்டின் தோலால் ஆன கைப்பைகளையும், காலணிகளையும் போட்டுக்கொண்டு, தோலுக்காக மாட்டைக் கொல்வதை பார்த்துக்கொண்டே, மாடு ஈன்றெடுக்கும் கன்று ஆண் என்றால் அதனை பராமரிப்பது பயனில்லை என்று கன்றிலேயே கொன்றுவிட்டு, பெண் ஜெர்சி பசுவின் வயிற்றில் ஓட்டை போட்டு அதனுள் செயற்கை நொதிகளைப் பயன்படுத்தி, பால் உற்பத்தியைப் பெருக்கி, அதை நம் நாட்டில் வணிகத்திற்காக விற்பதல்ல! கன்றுக்கு போகத்தான் மீதமுள்ள பால் என்று உண்டு வாழும் நாம் எங்கே! ஜல்லிக்கட்டிற்கு என்று ஒரு சித்தாந்தம் மாட்டின் இறைச்சி ஏற்றுமதிக்கென்று ஒரு சித்தாந்தம் என்று வாழும் இவர்கள் எங்கே!

விழித்துக் கொள்வோம்... நம் மரபிற்கு மாறுவோம்! இயன்றவரை இயற்கையான மற்றும் நம் மண்ணிற்கு சொந்தமானப் பொருட்களை பயன்படுத்துவோம்!
...உங்கள் தோழி இளவரசி

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
PC - Saraniya Karpooravalli Bajji
 
Last edited by a moderator:
#2
அருமையான தலையங்கம்.
நாம் ஒற்றுமையாக செயல்பட்டால், எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம். நம் நாட்டின் விளையும் உணவுகளை உண்போம், இங்கே உற்பத்தியாகும் பொருட்களையே உபயோகப் படுத்துவோம் என்ற கொள்கைகளை மேற்கொள்ளுவோம்.


ஒரு மத்திய அரசாங்கம் ஒரு மாநிலத்தை ஓரங்கட்டுவது என்பதை இப்போது தான் கண்கூடாக பார்க்கிறேன். அவர்கள் என்ன நம்மை ஒதுக்குவது. நாம் அவர்களை ஓரம்கட்டுவோம். ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று உறுதி எடுத்து கொள்ளுவோம்.
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#3
தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை ஒட்டி வெளிவந்திருக்கும் பெண்மை மின்னிதழின் முதல் பக்கம் முதல் இறுதி வரை, தமிழின் இனிமையும், சர்க்கரைப் பொங்கலின் சுவையும் கலந்து அருமையான கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்ததுள்ளது. அதிலும் தலையங்கம் அருமை! உங்கள் கருத்துக்கள் உணர்த்துவது மறுக்க முடியாத வேதனையான உண்மை!

அட்டைப்படம் முதல் பக்கங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக வடிவமைத்த பெண்மை மின்னிதழ் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.

பெண்மை தளத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
 

Sriramajayam

Registered User
Blogger
#4
ஜனவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 80 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


 

gkarti

Super Moderator
Staff member
#6
Goosebumps!! தலையங்கம் அருமை அருமை க்கா.. ஒவ்வொரு வரியும் மறுக்க முடியாத உண்மை! நாம் சுதாரித்துக் கொண்டதே அவர்களால் பொறுக்க முடியவில்லை.. இனி களமிறங்கி செயல்பட வேண்டும்.

Magazine செம சூப்பர்.. களைகட்டுது!! படங்கள் designs அழகு.. :thumbsup

Kudos to all the Contributors.. Happy Pongal Makka :)
 

Sriramajayam

Registered User
Blogger
#7
என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வருக..

:pray1:​
 

Aruna.K

Penman of Penmai
Blogger
#8
பெண்மைக்கு வணக்கம்,

அருமையான இதழ்... நீயா நானாவின் தலைப்பு இன்றைய தேதிக்கு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

நல்ல தொடக்கம் பல நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் அல்லவா...இந்தத் தொடக்கமும் அவ்வாறே அமைய வாழ்த்துக்கள்...

பெண்மைக்கு மட்டும் அல்ல, எனக்கும் இந்த வருடத்தின் முதல் இதழ் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்ததை நினைத்து
மகிழ்ச்சி, அதை விடவும் பூரிப்பு, அதை விடவும் திருமணம் முடிந்து குழந்தையுடன் வெறும் சமையல் கட்டில் நான் முடங்கிவிடவில்லை என்ற சந்தோஷம், என் எழுத்துக்களின் மூலமாக என்னை மீட்டெடுத்துக் கொண்டேன் என்ற திமிர், பிறர் என் எழுத்துக்களை வாசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற பெருமிதம், இத்தனை கொடுத்த பெண்மை தளத்திற்கு நன்றி என்ற ஒரு சொல்லின் மூலம் என் மனதின் ஆனந்ததைக் கூற இயலாது. என் சிறுகதையை (முதற் முயற்சி சிறுகதையாக இருந்த போதிலும்) அதை பதிவு செய்த பெண்மைக்கு நன்றிகள் பல.

என் பணி தொடரும்.... உங்களுடன்...


Congrats @VALLUVAN-BABU for your beautiful insight about things....Keep up your good work...

Congrats @UPPILI SRINIVAS for the Best Artist award....

 
Last edited:

Ammu abi

Well-Known Member
#9
Starting page la irundhu ellame super including cover page so colourful.thalaiyangam romba naerthiyaga namadhu urimaiyai unarthum vidhamai amaindhathu.:) :) pongal madhriye inimaya irundhathu.
 
#10
Wow... the magazine looks gr8. There is something for everyone in it. A way to a mans heart is his stomach nu solvanga avlo asathalana recipes, neeya naana, pasanga drawings, stories nu ellame super. Looks so endearing and colourful. And the editorial is brilliant. It is a keeper for sure.Thanks for tagging Karthi.
 
Last edited:
#12
Thanks for tagging me karti, sorry pa net down nale one montha forum pakkame vara mudiyale. ippo than d/l pannen padichittu varen

always penmai rocks .
 

gowrymohan

Registered User
Blogger
#13
இனத்தை அடிமைப்படுத்த அவர்களின் கல்விமுறை, கலாச்சாரம், நம்பிக்கை போன்றவற்றை அழிப்பதே!
உண்மை உண்மை உண்மை..........
அருமையாகச் சொன்னீர்கள் இளவரசி :thumbsup.

இலகு வாழ்வுக்கு பழக்கப்பட்ட மக்கள் மாறுவது கடினமே... இளைய தலைமுறையினரையாவது பள்ளிப் பாடங்கள் ஊடாக மனமாற்றம் ஏற்பட முயற்சி செய்யலாம்...:)

நன்றி கார்த்தி [MENTION=41663]gkarti[/MENTION] :).
 

rosei

Penman of Penmai
Blogger
#14
நிகழ்காலத்துக்கு மிகவும் தேவையான ஆசிரியர் தலையங்கம் மட்டுமன்றி ஆக்கங்களையும் , சமையல் குறிப்புகளையும், இன்னும் பல பயனுள்ள தகவல்களையும் கொண்டு மிக அழகாக வந்திருக்கு மின்னிதழ்.

வாழ்த்துக்கள் பெண்மை .

கார்த்திம்மா :hug::hug:

கௌரி அக்காவின் மொடக்கொத்தான் ரசம் ...ஹ்ம்ம் எனக்கு இப்பவே வேணும் ..என்ன செய்யலாம்? ஹ்ம்ம் :worried:
 

girija chandru

Penman of Penmai
Blogger
#18
just now downloaded our penmai e-mag.

Thalaiangam miga azhagu.... kurippaaga, munnor unavu murai, ippodhaiya unavu murai.... migavum rasiththaen...

indha maadham bad girija thaan penmai kku onnume contribute pannalaiye ..... nu oru varuththathodu thaan pages paarththen.... thank you penmai, for boosting me in my spirits, always !!!! hayya,hayya, girijavoda kitchen kurippugal ellaame vandhu irukku... adhu mattum illai, first girija peru thaan.... (chinna chinna sandoshangal vaazhkkaiyil mukkiyam paa.....)


ellaa pakkangalume kalakkals.... keep it up penmai team....

each month, penmai team !!!! hats off to penmai !!!
 
#19
penmai e magazine introduction is superb. thought provoking lines and messages each and every indian ought to know all these things are happening here. we must make our nation like KUBA AS Fidelcastro did and brought constructive measures for the sake of his people. All the politisian have to be dedecated and must serve for the people. CURRUPTED MIND WILL ALWAYS THINK OF THEIR OWN ISSUES. THEN HOW CAN THEY SERVE FOR PEOPLE.
 

VaSun

Registered User
Blogger
#20
HI Karthi @gkarti..
Thanks for tagging and thanks a lot emagazine team for including my bro's art in kids corner... He was too happy on seeing it..:humble::hug:

Thalaiyangam asususal pakka... loved it like always...
ADutha issue'vey vara pogudhu..ippo poi solren la...
 
Last edited:

Important Announcements!