Penmai eMagazine July 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine July 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,
சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் தோற்றுவிக்கப்பட்டது நல்ல பயன்பாட்டிற்கே, ஆனால் இன்று அதன் திசை மாறி பயணிக்கிறது. இளைஞர்கள் மிகச் சரியான வழிகளில் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே சமுதாயத்திற்கு அழிவை தராது. இதனை கண்காணிக்கும் அவசியமும் பெற்றோர்களது மிக முக்கிய கடமை.

உலகத்தின் எந்த மூலையில் உள்ள மனிதனும் இணையத்தின் உதவியோடு தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இந்த சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவுகிறது என்பது மறுப்பதற்கில்லை. அக்கம்பக்கத்து வீடு, பள்ளி, கல்லுரி நட்பு என்று மட்டுமே இருந்த நம் தோழமை உறவுகள் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாக உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் மூலமாக இளைஞர்கள் பலர் தங்கள் தனித்திறமையை மேம்படுத்துகின்றனர், அவர்களுக்கான அங்கீகாரமும் எளிதில் கிடைக்கிறது. மேலும் உடல் நலம்,படிப்பு, சட்டம், வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் சமூக சிந்தனைக் குறித்த விழிப்புணர்வு என்று சமூக வலைத்தளங்கள் தன் சிறப்பான சேவையை ஆற்றி வருகிறது. ஆனாலும், ஜாதி, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் பதிவுகள், நாகரீகமின்றி தாக்கி எழுதப்படும் பதிவுகள், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பதிவுகள், தனிமனித ஒழுக்கமீறல்கள் என்று அதன் மறுபக்கம் மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது. இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒரே முறையில் வளர்க்கப்பட்டவர்களோ, ஒரே கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்களோ இல்லை. வெவ்வேறு நாகரிகம்,மொழி, வாழ்க்கை முறையைக் கொண்டவர்களே. பொழுதுபோக்கிற்காக என்று கண்டுபிடிக்கப் பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் அதன் நோக்கத்தையும் தாண்டி செயலாற்றுவதே சமூக வலைத்தளங்களின் நற்பெயரை கேள்விக்குறியாக்கியுள்ளது!

Whatsapp மற்றும் Facebook-ல் நேரம் காலம் தெரியாமல் பல மணிநேரம் விரயம் செய்வதால் உடல் மற்றும் மனம் இரண்டுமே பாதிக்கப்படுவது உண்மை. இன்று பெரியவர்களைவிட பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களை குறைச் சொல்லும்முன்,பெரியவர்கள் பயன்படுத்தும் அளவைக் குறைக்கவேண்டும், அல்லது அவர்கள் முன் பயன்படுத்துவதையாவது குறைக்கவேண்டும். நேரில் பார்த்து பழகிய நட்புகளும் உறவுகளுமே துரோகம் செய்யும் நிலையில், யாரென்று தெரியாதவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நமக்கு அளித்திருக்கும் பொன்னான வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது.

மாற்றம் ஒன்றே மாறாதது! தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது,இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணிக்கிறது. மாற்றம் வரும்போது, அதை மனிதன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதன் தீமைகளைக் களைந்து, நன்மைகளை எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். வாழ்கை மிக நீண்ட அழகிய பயணம். அதனை முழுவதும் உறவுகளுடனும், பிள்ளைகளுடனும், நல்ல நட்புகளுடனும் மகிழ்வாகப் பயணிப்போம்.

பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.
...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
thanks for sharing the infos about whatsapp n facebook usage, nice sharing, and yosikka vaikkum thalayangam.. good keep rockng.:thumbsup:thumbsup.

Thanks karti for tagging me.:cheer:
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#4
Wonderful Write Up Kaa.. Loved it! :angel:

And Many Thanks for the Mag.. :)
Welcome and Thankyou. :)

thanks for sharing the infos about whatsapp n facebook usage, nice sharing, and yosikka vaikkum thalayangam.. good keep rockng.:thumbsup:thumbsup.

Thanks karti for tagging me.:cheer:
Welcome ka. :) Yes nowadays many peoples are addicted to it, recent news made me to write about this. Thanks for your input. :)
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,212
Likes
29,193
Location
Canada
#6
Very nice magazine ...useful informations ...whatsapp & facebook பற்றிய தகவல்கள் அருமை ..இந்த வரிகள் மிகவும் பிடித்தது ..

பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.

வாழ்த்துக்கள் பெண்மை டீம் !!!:biggringift::humble::cheer:

சுமதி அக்கா @sumathisrini tag செய்ததிற்கு நன்றி !

 
Last edited:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#8
Thank you so much editors who selected my poems Thank you so much @Penmai
Thank you so much karti for tagging me @gkarti
Welcome Chaithanya :)

Very nice magazine ...useful informations ...whatsapp & facebook பற்றிய தகவல்கள் அருமை ..இந்த வரிகள் மிகவும் பிடித்தது ..

பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.

வாழ்த்துக்கள் பெண்மை டீம் !!!:biggringift::humble::cheer:

சுமதி அக்கா @sumathisrini tag செய்ததிற்கு நன்றி !

Thank you Uma! :)

பிடித்த வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. :) பலர் வாழ்கையின் பயணத்தையும், தம்மோடு பயணிக்கும் உறவுகளையும் இந்த நிறுத்தத்திலேயே அதிக நேரம் நின்றுவிடுவதால் வாழ்கையை இழந்துவிடுகின்றனர். எதற்கு, யாருக்கு, எப்போது, முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிவதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, கணவன் - மனைவி இருவரின் கலந்துரையாடல்கள் காணாமல் போய்விட்டது. உண்மையில் இந்த ஸ்மார்ட் போன்கள் உறவுகளுக்கிடையில் தடுப்புச்சுவராகவே இருக்கிறது. இதனை சித்தரிக்கும், சில படங்கள்!

THE MORE YOU CONNECT - THE LESS YOU CONNECT

 

Attachments

Last edited by a moderator:

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,212
Likes
29,193
Location
Canada
#9
உண்மை சிஸ்.....கருத்துள்ள படங்கள் ...யோசிக்க வேண்டிய விஷயம் ..Welcome Chaithanya :)Thank you Uma! :)

பிடித்த வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. :) பலர் வாழ்கையின் பயணத்தையும், தம்மோடு பயணிக்கும் உறவுகளையும் இந்த நிறுத்தத்திலேயே அதிக நேரம் நின்றுவிடுவதால் வாழ்கையை இழந்துவிடுகின்றனர். எதற்கு, யாருக்கு, எப்போது, முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிவதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, கணவன் மாணவி இருவரின் கலந்துரையாடல்கள் காணாமல் போய்விட்டது. உண்மையில் இந்த ஸ்மார்ட் போன்கள் உறவுகளுக்கிடையில் தடுப்புச்சுவராகவே இருக்கிறது. இதனை சித்தரிக்கும், சில படங்கள்!

THE MORE YOU CONNECT - THE LESS YOU CONNECT

 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#10
ஹாய் இளவரசி அக்கா


நேரில் பார்த்து பழகிய நட்புகளும் உறவுகளுமே துரோகம் செய்யும் நிலையில், யாரென்று தெரியாதவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நமக்கு அளித்திருக்கும் பொன்னான வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது.


பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.
அருமையான வரிகள்..... ஆழமான வரிகளும் கூட....!
உண்மைதான்.... முகமறியா நட்புகளை நம்பி ..... நம் முகத்தை தொலைத்து விட்டோம்...! ஆனால் அதிலும் ஆறுதலாக பல பொய் முகங்கள் இருந்தாலும்..., நமக்கென்று சில நிஜ முகங்களும் இருக்கிறதே....! அது இந்த சமூக வலைத்தளத்தில் கிடைத்த ஒரே நல்ல விஷயம்...!

சமூக வலைத்தளங்களால் நன்மையை விட தீமைகள் தான் அதிகம் என்று அனைவருக்கும் தெரிந்தும்..., அதைவிட்டு வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்...! அவர்களாக மாறினால் தான் உண்டு...!


நீங்க சொல்வது போல..., இந்த நிறுத்தங்கள் வெறும் இளைப்பாற மட்டும் தானே தவிர..... குடியிருக்க அல்ல...!!

அருமையான மெசேஜ் சொல்லி இருக்கீங்க.... நன்றி...!

இந்த மாத emagazine படித்துவிட்டேன்.... அனைத்துமே அருமை...!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.