Penmai eMagazine July 2018

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,084
Likes
17,404
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine July 2018.

Penmai-eMagazine-July-2018.jpg


உங்களோடு சில நிமிடங்கள்...

ஹிமா தாஸ் நம் இந்திய தேசத்தின் மற்றொரு தங்க மங்கை!

சர்வதேச தடகளப் போட்டிகளில் நம் இந்தியக் கொடியை ஏந்தி தலைநிமிர்ந்து காண்பதற்கு நம் இந்தியா நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்தது.

தேசப்பற்று என்பது நம் இரத்தத்தில் ஊறியதை நிரூபிக்க வேறெந்த நிகழ்வும் வேண்டாம், ஹிமாவின் சாதனையும், போட்டியில் வெற்றி பெற்றவுடன் மூவர்ணக் கொடியைத் தேடியதும், பின்னர் அவருக்கு பதக்கம் அணிவித்து நம் தேசிய கீதம் ஒலித்தவுடன் அவரை அறியாமல் வந்த ஆனந்த கண்ணீருமே போதும்.

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இவரின் இந்தச் சாதனை அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை.

கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த ஹிமா, கால்பந்து போட்டியில் விளையாடும் அவரின் வேகத்தைப் பார்த்த உள்ளூர் பயிற்சியாளர் ஹிமாவை அத்லட்டில் கவனம் செலுத்துமாறு ஆலோசனைக் கூறியதைத் தொடர்ந்து அவரின் கவனம் ஓட்டப்பந்தயத்தில் தொடங்கியது.

விளையாட்டுகளுக்கான மாவட்டச் சந்திப்பில்தான் பயிற்சியாளர் நிப்பான் தாஸ் பார்வையில் பட்ட ஹிமா அவரின் அறிவுறுத்தலில் தனியாக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். காற்றைப் போல் வேகமாக ஓடும் திறமை இவளைத் தவிர வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை என்று வியக்கிறார் பயிற்சியாளர் நிப்பான். இரண்டே ஆண்டு பயிற்சி மட்டுமே பெற்று தன் திறமையால் இன்று விளையாட்டு உலகத்தில் சாதித்து காட்டியுள்ளார்.

சாதனையாளர்கள் நம் நாடெங்கும் சிதறிக்கிடக்கிறார்கள் அவர்களுக்கு தேவை பணமோ, பொருளோ அல்ல... நல்ல வழிகாட்டுதல்களே!

...உங்கள் தோழி இளவரசி

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!
 

Attachments

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,087
Likes
142,218
Location
Madras @ சென்னை
#4
ஜூலை மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 61 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

z-smileys-flowers-719593.gif

 

z-smileys-flowers-719593.gif

 

z-smileys-flowers-719593.gif

 


எமக்கு தகவல் கொடுத்த நண்பர் ஜி. கே அவர்களுக்கு நன்றி.
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,401
Likes
28,928
Location
London
#6
தலையங்கம் அருமை. பல்வேறு விஷயங்கள் குறித்த உபயோகமான தகவல்களோடு எப்போதும் போல மின்னிதழ் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணியில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
#7
அருமையான தலையங்கம்.. இந்தியாவுக்கு கிடைக்கும் வெற்றிகள் ஆரிது என்ற வருத்தம் இருந்தாலும் இது போன்ற வெற்றிகள் அந்த வருத்தத்துக்கு சரியான மயிலிறகு.. இந்த மாதத்து EBOOK அருமை.. tag பண்ணதுக்கு நன்றி கார்த்தி..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.